Thursday, December 31, 2009

நாத்திகம், பகுத்தறிவு, - போலிகள் ஜாக்கிரதை [ பகுதி - 1 ]

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


என்னுள்ளும் எனக்கு வெளியிலும் இயற்கையாக, இயக்க சக்தியாக, உண்மையாக, உறுதுணையாக இருக்கும் கடவுளை வணங்கி இந்த பதிப்பை துவங்குகிறேன். இந்த பதிப்புக்கு முழு தலைப்பென்றால் அது நாத்திகம், நாத்திகர்கள், பகுத்தறிவு, பகுத்தறிவுவாதிகள், கடவுள், நம்பிக்கை, Communism, கட்டுடைத்தல், இன்று, போலிகள், இன்ன பிற என்பது மட்டும்தான்.
மேல் குறிப்பிடப் பட்ட கடவுள் என்னும் சக்தி கோயிலுக்குள் இல்லை. இதை வணங்கும் சடங்குகளில் உடன்பாடு இல்லாமை நாத்திகம் என்பதாம். இது தவறா ? இந்த சிந்தனை திராவிடம் சார்ந்ததா? இதக்கு பதில் இல்லை. -  இது கடுவுளுக்கோ, அவனை வணங்குபவர்கு எதிரானது கூட இல்லை. தீ என்னும் கடவுள் சுடும் என்பது சொல்லப் படுகையில் அதை சோதித்துப் பார்க்கும் தன்மை நாத்திகம். 
கடவுள் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள் நாத்திகர்கள் என்றால், அதில் நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்கள் இன்று கோயிலுக்குள் உண்டு ( அதிகம் ) என்பது இன்றைய சூழ்நிலை. கடவுள் என்பதில் நம்பிக்கை இருந்திருந்தால் கோயில் கருவறைக்குள் அந்த காமுகன் ஒரு இழி செயலை செய்திருக்க மாட்டான். அவனை நாத்திகர்களோடு ஒப்பிடுவது கூட மடமையே. நிலையும் இடமும் புரியாமல் தன்னுடைய உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தவனை நாய் என்பேன், அதனினும் கீழ் அற்றினை. இதில் கடவுளையும், அதன் நம்பிக்கையை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தம், மடாதிபதிகள், குருக்கள் முதல் சரக்கு அடித்து விட்டு சாமி ஆடும் பெண்கள் வரை அனைவரும் அடங்குவர்.
நன்மை தீமைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கருத்தும், நிலைப்பாடும் நாத்திகம். நம்பிக்கை உள்ளவன் தேடும் பொருளை இல்லை என்று மறுத்து விட்டு அந்த தேடலை செய்யும் இன்னொரு சாரர் நாத்திகரென்றால் அது மிகை அல்ல.
இன்றைய சூழலில் நாத்திகம் தேடல் என்ற நிலையிலிருந்து வழுவிழந்து ஒரு அவநம்பிக்கையாக, ஒரு வகுப்புவாத சிந்தனையாக, குறிப்பாக வெறும் தொழ்பொருள் ஆராய்ச்சியாக கிடக்கிறது . என்னுடைய நண்பன் கொஞ்சம் கோவக்காரர், வாழ்கை போராட்டங்களில் வ்ரக்தியின் காரணமாக தன்னுடைய போராடும் துணிவோடு, கடவுள் நம்பிக்கையும் கை விட்டார். இன்னொரு பெண் தொடர் போராட்டங்களுக்கு இடையில் தன்னுடைய கணவனை இழந்தார் கடவுள் இல்லையென்று வீட்டில் உள்ள எல்லா சாமி படங்களையும் எரித்தார். இருவருமே தன்னை நாத்திகர்கள் என்று அடையாளப் படுத்துகின்றனர். இவர்கள் நாத்திகர்கள் இல்லை - அவ நம்பிக்கையாளர்கள். 
இப்படி பட்ட அவநம்பிக்கயாலர்களம், மற்றும் ஒரு வகுப்பினரையோ , ஒரே வகுப்பினரையோ எதிர்த்து திராவிட கழகத்தில் சேர்ந்தவர்கள் அதிகம், அது மட்டுமில்லாத அரசியலை உட்காரனியாய் வைத்து சேர்ந்தவர்கள் அதிகமென்பதை, தி. மு. க தெளிவாக பறைசாற்றியது.  இன்று சட்டப் பேரவையில் பெரியாரின் சில நல்ல சிந்தனைகளை அடகு வைக்கும் நிலைக்கு தி. கா தள்ளப்பட்டதற்கு இவர்கள்தான் காரணம். தன்னை மற்றவர்களை விட தனி என்று காட்டிக் கொள்வதற்காக, சமகாலத்துடன் தான் உடன்படாதவன் என்பது போன்ற மாய தோற்றத்தில் (SHAKESPEARE தன்னுடைய ALL THE WORLD IS STAGE கவிதையில் கூறும் )  BUBBLE REPUTATION - ஒரு தற்காலிக புரட்டான புகழுக்குகாக, ஒரு இருத்தல் இயலுக்குகாக, நொடிந்த தமிழில் வெட்டி பந்தாவுக்காக தன்னை நாத்திகரென்று சொல்லி கொள்வது 50களின் ஆரம்பத்திலிறிந்து BLOGகிலக்கணம் வரை நமது சகிப்புத் தன்மையை தினமும் அதிகரிக்கிறது.

சமுகத்தில் மண்டிக் கிடக்கும் மூடன்களை சுட்டிகாட்டுவது, சீர்திருத்துவது அவசியம் என்று தந்தை பெரியார் கூறினார், இன்று அவர் இருந்திருந்தால் முதலில் சுத்தம் செய்யப் பட வேண்டிய இடமாக தனது கழகமும் கட்சியாகிப் போன அவலத்தில் வருந்துவார். ஒரு வகுப்புவாத சிந்தயாலர்களின் கூடாரமாக இருப்பதைக் கண்டு நிச்சயமாக மனமுடைவார். சமுக நல்லினக்கத்திர்க்காக நெய்த நல்ல ஆடையை இந்த போலிகள் சுயநலத்திற்கு அணிவதை வன்மையாக கண்டிப்பார்.
இன்றைய கூற்றின் படி நீ நாத்திகனா அப்படியானால் அந்தணர்களை மட்டும் திட்டு, அவர்களின் சடங்குகளை மட்டும் சாடு, அவர்களின் அடையாளங்களை எதிர். ஏனென்றால் மொத்த சமுதாயத்தில் இந்த நம்பிக்கை அடிப்படையில் உள்ளவர்களை பற்றி பேசுகையில் எதிர்பதற்கு ஆல் இல்லை இன்னொன்று தனது சட்டசபை கனவுகளில் எந்த பாதிப்பும் இருக்கப் போவதில்லை அது தி. மு. க அல்லது ஆ, தி, மு க வாக இருந்தாலும் சரி.
இந்த போலிகள் பற்றியும், பகுத்தறிவு, அதற்க்கும் இவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்.
இந்த பதிவு உங்களை சுட்டுவது போல் தெரிந்தால் ஆம் இது உங்களைப் பற்றிதான் கீழே பின்னூடங்கள் போட்டு உங்கள் பெயர்களை பதிவு செய்வது தங்களின் முடிவு. அவற்றில் நாகரிக குறைவிருப்பின் அவற்றை வெளியிடும் முடிவு என்னுடையது. முதுகெலும்பு (பெயர்) இல்லாதவர்கள் முதலில் தைரியம் தேடுங்கள்.

Tuesday, December 29, 2009

மிகப் பெரிய பதிவராகி அதிக ஹிட்ட்சுகளை பெறுவது எப்பூடி

என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு எப்பூடிடா சீக்கிரமா பெரிய பதிவர் லிஸ்ட்ல வர்றது ஹிட்ச அதிகரிக்கிரதுன்னோ ஒரு சந்தேகம் வரும். அதுக்கு ரொம்ப ஈசிஆனா வழி, நம்மள விட அதிகமா ஹிட்சும் அதிக போல்லோவேர்சும் உள்ள வலைபூக்களை வெல்ல வழிமுறைகள்



1. ஒரு இடமும் தேதியும் குறிச்சி ஒசாமாவுக்கு சொல்லி அனுப்பிட்டு , இந்த பெரிய பதிவர்கள் எல்லாரையும் அங்க ஒன்னுகூட்டி ஒரு கூட்டம் போடலாம். இலங்கைல நடந்த யார்ட சொல்லனும்னு உங்களுக்கு சொல்லவா வேணும்
 
2. இந்த வலைபூகளை கடத்த சீனால / கொரியால ஒரு கூட்டமே இருக்காம். இவுங்களோட வலைபூ லிஸ்ட் எல்லாம் எடுத்து மொத்தமா ஒரு மெயில் அனுப்பிடலாம்.அவன் கமெண்ட்ஸ் போடுற மாதிரி அவோனோட மொழில ஒரு வைரஸ் போடுவன் இவுங்க அச்செப்ட் பண்றாங்களோ இல்லியோ அம்புட்டு பதிவையும் அது சாப்ட்ட்ரும். இவுங்க கெணத்த  காணும்னு தேட வேண்டியதுதான்

3. இவுங்க வீட்டு விலாசத்த தேடி சன்pictureஇன் காவிய படைப்புகளை மட்டமான பிரிண்ட் திருட்டு VCD வாங்கி தெனம் ஒன்னு அனுப்பலாம். நீங்க நல்ல பதிவுகள் எழுதுறத நிருத்தர வரைக்கும் இந்த வன்முறை தொடரும்னு துண்டு சீடோட.

4. இன்னும் சூப்பரா பசங்க பட ஸ்டைல்ல இவுங்க ப்ளாக் பேர்ல காசு வெட்டி போடலாம்


இது கடைசி ஆனா ரொம்ப கஷ்டம்ங்க விட்ருங்க வேணாம்

இவுங்களோட ப்ளோக்ல இருக்குற விடாமுயற்சி, உழைப்பு, நவீனத்துவம், சிந்தனை, தரம் இவற்றை நமதாக்கி 2010இல் இவர்களில் ஒருவராக முயற்சி செய்யலாம்.

Monday, December 28, 2009

உண்மையிலேய உலகம் அழிகிறதா ??


தென் துருவம் நிலை மாற்றிக் கொள்ளும்
இமயம் குன்றாகும்,
மாறாய் அன்று, கடல் உங்களைக் காணவரும்

எல்லா வரலாறும் சுழியம் ஆகும்
சாதனைகள் எல்லாம் சாம்பலாகும்
       சேகரித்த எல்லாமே தீர்ந்து போகும்
       எல்லைகள் பொய்த்து போகும்

எல்லோரும் தீர்ந்து போவோம்
பூமி அழியும்

சரியாய் சொல்
பூமி அழிவதாய்த் தகவல் இல்லை

விரல் தாண்டிவளர்ந்த
நரக்களிவுகளை, - பூமி
வெட்டித் தீர்க்கும், மென்று செரிக்கும்
 
மானிடம் அழியும்,
மனிதன் தான் அழிவான்
பூமி பரிணமிக்கும்,
தன்னை புதுபித்துக் கொள்ளும்.

மீண்டும் பசுமையாய்,
சுத்தமாய் தன்னை ஸ்ரிச்டிக்கும்

மீண்டும் சுழலும்
பரிணாம வட்டம்
 
கால்தடம் இல்லாத பாக்டீரியாக்கள்
கால சுழற்சியை கருத்தரிக்கும்
குரங்குகள் வரை அது நாகரிக்கும்
 
இது போதுமென்று
பரிணாமம் கனவுகளை
மறுதலிக்கும்
 
வளர்ச்சிப் பசியில் இந்தமுறை
அஜீரணம் வேண்டாமென்று
அறைவயிற்றிலேயே பந்திமுறிக்கும்
 

கன்னித்தன்மை அடையாமல்
குட்டைப்பாவாடை நாட்களிலேயே
நிறுத்திகொள்ளும்
மனிதக் கனவு மட்டும்
மறந்தும் காணாது

Sunday, December 27, 2009

சிற்றின்ப மருத்துவச்சியின் முனங்கள்

அன்றைய முழு இருட்டுக்
காலம் வாழ்கையை
விட்டு விட்டு
என் வயதை சரியாய்
செப்பனிட்டது

ஒரு நாற்றம் பிடித்த
சடங்குடன் பெண்ணென்று
பிரகடனப் பட்டேன்

கழுத்துக்கு கீழ்
கறை ஒதுங்கும் கண்களில்
அப்பன் கண்ணும் ஒரு ஜோடி

மண்ணீரல் விற்றும்
மயக்கம் அருந்தும்
மலங்காட்டு மனிதனவன்

உயிர் முரண்டும்
உடல் செய்ய ஏதுமில்லை
சாராய சிந்தைக்கு
ஊருகையாய் என் உடலளிதான்

சடலத் தீயில்
தீக்குளிக்கும் சீதைப்
பட்டியலில் இன்றெல்லாம்
என் பெயரும்

இருட்டின் முனைபிடித்து வரும்
குருட்டு உயிர்கள்
ஒரு உறைக்குப் பின்னால்
ஒளிந்து உமிழ்ந்து தள்ளும்

கொடுமை மூண்டுவரும்
அழுக்கு மேகங்கள்
சில குட்டை நிமிடத்தில்
அரை மழை பொழிந்து செல்லும்

இன்னும் வலிக்கிறது
மறுப்புடைத்து நுழையும்
கருப்பு உறுப்புகளின்
நெருப்பு நிகழ்வுகள்

செண்பகப் பரப்பில்
கூட்டங்கூட்டமாய் கோடுகள்போடும்
வெட்டாத விரல்களின்
கூரிய முனைகள்

காலிடையில் ஒரு கதகதப்பு
வானம் பார்க்க
சமுதாயம் உமிழ்ந்த
சளைவா சூட்டின் மதமதப்பு
 
பத்தினிகளே நீங்கள் காக்கும்
கற்பு பூதத்தின் உயிர் மந்திரங்கள்
எங்கள் கூடுப்புறாக்களின்
இதயங்களில் காக்கப்படுகின்றன

அமிலம் அரைத்து
வீசும் உங்கள் உடைந்த
பார்வைகளை இழையிடுங்கள்
எங்களுக்கும் பெயர் பெண்தான்

எங்களை அடைப்புக் குறிகளில்
                          மட்டும் திணிக்கும் வரிகளில்
               சுத்தமான சமுகம் - ஒரு சுய இன்பக் கனவுதான்

நண்பர் பேனாமூடியின் ஒரு பதிவில் உயிர்த்த அரக்க வரிகளிவை

Saturday, December 26, 2009

விஜய் ரசிகனிடம் மன்னிப்பு கேட்கிறேன்

என்னோடைய வலைப்பூவில் AVATAR 2வில் விஜய் என்ற தலைப்பில் ஒரு பதிவு இரண்டு நாட்களுக்கு முன்னாடி போட்டேன். இன்னிக்கி அதையும் மதித்து ஒரு பின்னூட்டம், ஒரு மின்அஞ்சல், இரண்டுமே ஒரே நபரிடமிருந்து , ஒரே எழுத்துக்களை தாங்கி;  அவை, சுத்தாமான இரண்டாவது அர்த்தத்தில் மட்டும் வந்திருந்தன, தங்கையின் உடல் கூறுகள் பற்றியும், ஏனபிற சந்தேகத்துக்கு இடமின்றி முழுமையாக பச்சை நிறமே பாடல்தான். அதில் முதுகெலும்பு ( பெயர் ) இல்லை ஆனாலும் ஒரு விஜய் ரசிகனின் நிமிர்வு இருந்தது. வேட்டைக்காரன் படம் ஒரு முழு வெற்றிப்படம் என்ற குறிப்பு மட்டும் பகிரும் தரத்தில் இருந்தது.

இப்படி ஒரு ரசிகன் விஜய்க்கா !!!!!!  என்ற பொறாமை, சொல்லொண்ணா திகைப்பு மட்டும் என்னுள். இதை போல் ஒரு பின்னோட்டம் எப்பூடியிலும் பார்த்த நினைவு ( இவ்ளோ வக்கிரமா இல்ல ).
வேட்டைக்காரன் விஜய்க்கு வெற்றிப் படமா என்றால். ஆமா . . .  நிச்சயமாக விஜய்க்கு ஒரு வெற்றிப் படம்.  விஜயின் படம் மட்டும் அல்ல. இது விஜயின் தெளிவான நிலைப்பாடு. எடுத்துகாட்டுக்கு எதிர் வீட்ல ஒரு அப்பா தேர்வு முடிவுகள் வந்த உடனே அந்தப் பையன வெளுப்பார் ஏண்டா இவ்ளோ கம்மியா எடுத்தன்னு.??? அந்தப் பையனும் இவ்ளோதான் என்னால முடியும்னு சொல்லிட்டான். அப்புறமும் அடி, ஒதை. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதே போல் இவ்ளோதான் என்னால முடியும்னு தன்னை மாற்றி கொள்ள தயாராக இல்லாத விஜயை பொறுத்த வரை இதற்க்கு முந்தைய படத்தில் பேரிடி வாங்கிய விஜய்க்கு நிச்சயமாக வேட்டைக்காரன் வெற்றி படமே.
ஏன்னா எப்பவுமே 32, 34 எடுத்து பைல் ஆகுற மாணவன் 43, 45 எடுப்பது அவனைப் பொறுத்த வரையில் வெற்றிதான்.  தன்னுடைய இலக்கு சினிமா அல்ல என்று அரசியல் வழிபுகும் விஜய்க்கு இது வெற்றியே - J.K. ரித்தீஷ்இன் நாயகன் போல.
வெற்றி என்றால் ஒரு தோல்வியும் அதில் உண்டு , அப்ப விஜய் ஜெயித்தார் என்றால் யார் தோற்றார்கள், - விஜயின் ரசிகர்கள். எப்பூடி ?மீண்டும் எடுத்துக் காட்டு
ஒரு சைவ ஹோட்டல், அதுல போய் மட்டன் கீமா, அயிரமீன் கொழம்பு கேட்டா என்ன ஆகும். அதுதான் இந்தப் பாவப்பட்ட ரசிகர்களின் நிலைமையும். கிடைத்ததை, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் செய்கின்றனர்.
இப்படி வெந்த மன நிலைமையில் இருக்கும் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். ஏனைய பதிவர்களும் இந்த மன்னிப்பில் பங்குகொல்வார்கள் என நம்புகிறேன்.

மனசாட்சி : - இதுக்கு நீ மன்னிப்பே கேட்ருக்கவே வேண்டாம்டா

Thursday, December 24, 2009

3 IDIOTS - திரை விமர்சனம்

* * * * * *****கிறிஸ்துமஸ் நல்வாழ்துக்கள்**** * * *********

இதே போல் ஒரு குளிர்காலத்தில் தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆமிர்கானின் " தாரே சமீன் பர்( 2007 ) " வெளியாகி அவருக்கு ஏக பாராட்டுகளையும் " கோடிகளையும் அள்ளித்தந்தது. இந்த முறை அவர் களத்தில் இறங்கியிருப்பது வெற்றி ரெட்டயர்கள் விது வினோத் சோப்ரா மற்றும் ராஜ்குமார் ஹிரானியுடனான கூட்டணியில் 3 IDIOTS . அக்கா மாலா விற்ற ஆமிர்க்ஹான் இப்படி படங்களை நடித்து தன்னுடைய பாவங்களை தீர்த்துக் கொள்கிறார்( கப்சி ஊத்தியா ? ? ? ). சினிமாவில் இது ஒரு குறிஞ்சிப் பதிவு. சிந்திக்கவும் வைத்திருக்கிறது ( இது எப்பேலேந்து ). .

பார்ஹான் ( மாதவன் ) , ராஜு ( ஷார்மன் ) தனுது தொலைந்த நண்பன் ராஞ்சோ ( ஆமிர் கான் ) பற்றிய துப்பு கிடைக்க அவனை தேடச் செல்கின்றனர். ( 5ஸ்டார் படம் மாதிரியோ ன்னு நெனச்சு ஏமாந்துட்டேன் ). செல்லும் வழியில் டார்ட்டாய்ஸ் கொளுத்தி பின்னுக்க போகுது படம். ஒரு பொருளியில் கல்லூரி அதில் இந்த மூவரும் படிக்க அங்கு இயக்குனர் பதவியில் வைரஸ் (எ ) வீரு சஹாஸ்ரபுதே ( பொம்மன் இராணி ) இருக்கிறார். மிகக் கண்டிப்பான இவருக்கு நம்ம பயபுள்ளைகள கண்டா ஆகவே மாட்டேங்குது, குறிப்பாக ரன்சோவுக்கும் இவருக்கும்.

ராஞ்சோ விரல்களை சிறகாக்கி வேறு ஏதோ உலகத்தில் பயணிக்கிறான். இந்த கல்வித் திட்ட முறையை மாத்தணும், தேர்வு முறைகளை குப்பைல போடுங்க, என்றெல்லாம் பேசி வைரஸின் கோவத்தை இண்ணுமதிகறிக்கிறான். இருந்தும் தேர்வுகளில் முதலிடம் பிடித்து தான் தப்பித்தாலும் , கடைசியாய் வரும் நண்பர்களை காபதர்காக என்ன வேணும்னாலும் செய்யத் தயாராகிறான். இதற்கிடையில் பீயா ( கரீனா ), வீருவின் மகள் ராஞ்சோவுடன் காதல்வயப்படுகிறார். வேறு ஒருவரோடு நிச்சயம் ஆன பின்பும், ஒரு கனவுப் பாட்டு ஆடுகிறார். ( எவ்ளோ புதும ??? ). சூடா டி, காப்பி, சமோசாசாசாசாசாசாசாசா.
ஒரு நாள் சல்பேட்ட சிந்தனையில் பார்ஹான் - " நீ விரும்புவது பொறியியல் இல்லேன்றப்ப நீ எப்படி இதுல நல்ல மதிப்பெண் எடுப்ப?". ராஜூ இவ்ளோ பயந்து சாகுறியே இதுனாலதான் உன்னாலயும் முடியலேன்னு சொல்ல. அவுங்க ரெண்டுபேரும் ராஞ்சோ நீ பீயாட்ட உன்னோட காதல சொன்னா நாங்க எங்கள மாதிக்கிறோம் என்கின்றனர். ராஞ்சோ வீருவின் வீட்டில் பீயாவிடம் காதலை சொல்லும்போது ராஜுவும், பார்ஹானும் போதையில் வரும் கோவத்தில் வைரஸின் வீட்டுவாசல்ல உச்சா போய்டுறாங்க. சனியன் மறுநாள் காலேல சமுக்காளம் விரிக்கிறது. வீரு ராஜுவிடம் ஒன்னு குத்தத்த ஒத்துகிட்டு வீட்டுக்கு கெளம்பு , இல்ல ரான்சொவ போட்டு குடுன்னு சொல்ல. ஒப்ராஹ் இசையின் பின்னியில் தற்கொலை முயற்சிக்கிறார். மருத்துவமனையில் இரண்டு மாதங்களில் தன்னுடைய படிப்பு குறித்த பயத்தை வெல்கிறார் ராஜு. பார்ஹானும் தான் விரும்புவது இதுவல்ல, தான் ஒரு காட்டுவிலங்குகளின்  ஒளிப்பதிவாளர் ஆகணும்னு, தன்னுடைய தந்தையை சம்மதிக்க வைக்கிறார். இந்த மாற்றங்களுக்கு காரணமான ராஞ்சோ கல்லூரின் இறுதி நாளோடு குறிப்புகள் இல்லாமல் காணமல் போகிறார்.
ஒர்ருவா கொசுவத்தி சுருள் எம்புட்டு நேரம் எறியும். பீயவின் நடக்கவிருக்கும் திருமணத்தை ஆட்டய களச்சு பார்ஹானும், ராஜுவும் தன்னுடைய பயணத்தில் ரன்சொவை லடாக்கில் கண்டுபிடிகின்றனர். ஆபரேடர் லையிட்ட போடுறார். முழு பணமும் வசூல் - நிறைவான படம்.

ராஜு ஹிரானி ஒரு பொருள் சார்பதிவின் பொறுப்புடன் செயல் பட்டு இருக்கிறார். அதே போல் இதை ஒரு முழு பொழுதுபோக்கு அம்சப் படமவகவும் நகர்த்தி, நம்மை கவர்கிறார். இரட்டுற மொழிதல் இல்லாமல் நகைசுவை வசனங்கள் பாராட்டுதலைப் பெறுகின்றன. சாந்தனு மொயிற்றாவின் இசையும் சி.கே. முரளீதரனின் ஒளிப்பதிவும் எழில் சேர்கின்றன. . கரீனா ஊறுகா அளவுதான் ஆனாலும் ஆவக்காய். ஷார்மன், மாதவன் தன்னுடைய கிடைத்த வாய்ப்பை தவறாமல் பயன்படுதுகின்றனர். இது தவிர படத்தில் வரும் எல்ல ஏனைய கதாபாத்திரங்களும் அவரவர் கதாபாத்திரத்தை நிறைவாய் செய்கின்றனர், குறிப்பாய் ஓமி ஒரு படிப்ஸ்சாய் வளம் வந்திருக்கிறார்.
பொம்மன் இராணி முன்னாபாயின் ஆஸ்தானவின் அதே பாத்திரப் படைப்பு என்றாலும், இங்கு எங்கிலும் அதன் நிழல் விழாமல் நடிதுருகிறார். எங்கோ பார்த்த அந்த கண்டிப்பான, துளியும் கருணை இல்லாத ஒரு கல்லூரி ஆசிரியரை துளி சினிமா ஜவ்வதுடன் இயல்பைத் தர முயற்சித்திருக்கிறார்.


பாலிவுட்இன் Mr.Perfect படம் முழுவதும் ஆட்சி செய்கிறார். ஆனாலும் கழுத்துக்கு கீழ் மட்டும்தான் ஒரு கல்லூரி மாணவன் தென்படுகிறான், நம்ம முரளி, சின்னிஜெயந்த் மாதிரி ரொம்ப நாளாவே காலேஜ்லயே இருக்கார். பிட் அடிச்சாவது இனி பாஸ் ஆகா வேண்டும்.
மொத்தத்தில் ஒரு நல்ல கிறிஸ்துமஸ் பரிசு மட்டும் அல்ல நல்ல புதுவருட பரிசாகவும் அமையும் என்பது திண்ணம்.

DVDகேக்கற சனத்துக்கு ஒரு நல்ல சேதி, இந்த படம்தான் இந்திய ... முதல் முறையாக !!!! YOUTUBE - ல வெளியாகுது ஆனா இன்னும் மூணு மாசத்துல.

அவதார் பா போல மாற்றுப் பார்வை ( கோண கண்ணால் ) பார்கலயான்னு கேட்ட ??? இருக்கு அடுத்த பதிவில்....

Englishla படிக்க

Wednesday, December 23, 2009

AVATAR 2வில் விஜய் !!!!!!!!

வேட்டைக்காரனின் அமோக வெற்றியில் பிரமித்த கமேரோன்
AVATAR 2வில் விஜயை ஒப்பந்தம் செய்திருக்கிறார்
 
விஜயின் திறமைகளுக்கு நிகராக 3D ஒன்றுமில்லை
என்று இந்த படத்தை 2D யில் இயக்குகிறாராம்
 
உங்களுக்காக ஒரு FIRSTLOOK

 
 
 
 
 
 
 
 
 
 
இந்தப் பதிவு விஜயை நையாண்டி செய்வதாக இல்லை,
நல்ல சினிமா இரவல் கேட்க்கும் ஒரு தமிழ் சினிமா பைத்தியத்தின் பதிவு

Tuesday, December 22, 2009

சினிமா - வரலாற்றின் சுந்தரகாண்டம் - கவிதை

இருட்டுக்குள் இருப்பது இருள் அல்ல
இது ஒலியின் ராஜாங்கம்,
ஒளியின் நட்டுவாங்கம்
சினிமா - இதுவும் வினைதொகைதான்
மூன்று காலங்களையும் உணர்த்தும்

கடந்த நூற்றாண்டின் அழகிய தேடல்
கண்டுபிடிப்புகளுக்கும், கலைக்கும்
நடந்த கலப்பு திருமணம்.
குஞ்சு மீன் தின்று வாழுமாம் சில வகை தாய் மீன்கள்
நாடகத் தாயெய் உண்டு
வாழ்கிறது இந்த குஞ்சு மீன்


இந்த திரைச்சீலை மாராப்பை,
விலை பேசுவதாக மானப்படுவோரே
நிர்வாணப் பட்டு கிடந்த சில சமுகதிர்ற்கு
தன்னையே கிழித்து
தாவணியாய் ஈந்தது இந்தப் பேகன் தான்

வெளிச்சமும், விளக்கும் புனிதமான போக்கில்
இருளுக்கும் சுயமரியாதை தந்தது - சினிமா
எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசும்,,
இது உருவம் இல்லாத பாரதி



நம்மை ஒரு நாற்காலியில் கட்டிப் போட்டு
நமது உடன்பாடு இல்லாமலே
அழவும் வைக்கிறது,
சிரிக்கவும் வைக்கிறது



முன்னங்காலை மட்டும் தூக்கி
உண்ணப் பழகினோம்
காலூணாமல் நடக்கப்
பழக்கியது தாய்திரை சீலை

வரலாறு வேகம் பிடித்து
ஓட காலம் குடுத்த
கையூட்டு

இது கனவுக் கம்பளி
மூடி உறங்கி எழும் பொழுது
உயிர் சோம்பல் முறித்து
விழிக்கிறது

கடவுள் அறிவித்துக் கொல்லாத மதம்
தெரிந்தும் கையில் படுவதில்லை
எனினும் நாத்திகறில்லை இதற்க்கு


பக்தன் வேடத்தில் பாதகர் மட்டும்
இந்த திருட்டு வி சி டி;
ஐயோ மலினம்
மலிவாய் கிடைக்கிறது என்பதால்
மலம் உண்பது போல்.
தன் மனைவியுடனே , என்ன கள்ள உறவு

Sunday, December 20, 2009

நச் - இது தமிழ் வார்த்தையா ? ? ?


நச்சுனு இருக்கு ன்னு ஓர் பின்னோட்டம் ( கண்டிப்பா என்னோட பதிவுல இல்ல ) படித்தேன். சிறு பொறி

நச் - இது வெறும் சத்தமா?  இல்லை வார்த்தையா ? .
உம்மா. . . . . இச்சு. . . . இச்சு. . . .சதக். . . சதக். .. . போன்ற சத்தங்களை இன்றெல்லாம் நல்ல சொல் வழக்கில் பயன்படுத்தி வருகிறோம், இவை அனைத்தும் ஒரு செயல்பாட்டின் சார் சத்தங்கள் என்று எளிதில் கூறிவிடலாம் . அப்படி இந்த ‘நச்’உம் ஒரு சார்ந்த சத்தமென்றால் எந்த செயலை சார்ந்தது ??
ஒரே கன்பூசன் - வேல இல்லேன்னா இப்படிதான்

இல்ல தேங்காய் ஸ்ரீனிவாசன் ( சிலுக்கு சிக்கன் ஜிக்கு ) , சின்னி ஜெயந்த் ( கில்பான்ஸ், சில்பான்ஸ் ) போன்ற பண்டிதர்களின் தமிழ் கொடையில் இதுவும் ஒன்றா ?? என்று இந்த ‘நச்’சுக்கு பின்னாடி கிளம்பினேன் ( தம்பி மேட்டருக்கு வாப்பா ).

நச் ஒரு தமிழ் வார்த்தை அல்ல . நச் இது செயல் சார்ந்த ஒரு சத்தமும் அல்ல. வழக்கிலுள்ள ஒரு தூய சொல் அனால் தமிழ் சொல் அல்ல

இது ஒரு ஆங்கில வார்த்தை. NACH ( இது ஜெர்மானிய வார்த்தை ன்னு நெனைக்கிறேன் ) இல்ல . . . . NUDGE என்பதுதான்அந்த வேர் வார்த்தை ( அட கொக்கமக்க !!!!!!!! ).
Nudge ஒரு வினைச்சொல் இதன் அர்த்தம் ,ஒன்றை புகுத்துதல் ( மென்மையாய் ) அல்லது இடித்தல் போன்ற பொருளில் இந்த சொல் ஆங்கிலத்தில் ( இது தமிழ் சொல்லா ??) இன்றும் பயன்படுத்தபடுகிறது. மிகக் குறிப்பாக மற்றவருடைய கவனத்தை கவரும்விதமாக செய்யும் ஒரு செயலை உரைக்கும் ஒரு வார்த்தை.

இதே வழக்கில் தான நாமளும் பயன் படுத்துரோம். . . . .

இத இப்போ தமிழ் படுத்தி எழுதுனா நஜ்ஜுனு இருக்குப்பா(இப்படிலாம் எழுதுனா நாமளே சொல்லிக்க வேண்டிதான் )

இது சரியில்ல . . உண்மை என்னன்னா. . . . . . அப்படீன்னு யாராவது பின்னூட்டம் போட்ட நிச்சயமா இத நான் மாத்திக்க தயார்

வெறுமன. . . . . . இது சரியல்ல ன்னு சொல்றவங்க என்ன மன்னிக்காம திட்டி பின்னூடமும் போடலாம் ,உங்களுக்கும் நன்றி
மண்டையன் சொல்: - ஆமா இந்த கில்மா எப்பூடி வந்துச்சு ? ? ?

Friday, December 18, 2009

இரட்டுற மொழிதலும் – AVATARஉம்

நீங்கள் தேவையான அளவு இந்நேரம் அவதார் படத்தின் கதையை, அதன் கோப்பு, சிறப்பம்சங்கள் பற்றி எல்லாம் படித்திருப்பீர்கள் அனால் இது வேறு ஒரு சிந்தனையை உங்களுக்கு அறிமுகம் செய்யும் ஒரு சிறு முயற்சி

அமெரிக்க மற்றும் சில முதல் நிலை நாடுகள் தங்களுடைய பொருளியில் நோக்குகளுக்காக , வளர்ந்து வரும் நாடுகளுடன் செய்யும் முறைகேடுகள் பற்றிய கருத்துப் பதிவு -  - அவதார் ( பெயர் மாற்றம் செய்யப் பெற்ற PROJECT 880 ) திரைப்படம்.
இந்த கதை உறவான காலகட்டத்தை( 12 வருடம் முன்பு ) பார்த்தால் அமெரிக்க உலகப் பெறுநாடுகளின் துணையுடன் அல்லது ஒப்புதலுடன் ஆப்கான், ஈராக் போன்ற நாடுகளிலும் ஆப்ரிக்கா வில் உள்ள சில பகுதிகளிலும் தன்னுடைய உள்ள நோக்குக்காக செய்த வெளி வராத தவறுகளின் பதிவு
ஒரு கனிம வளத்துக்காக( எரிநெய் - பெட்ரோல் - மற்றும் ஏனைய கனிமங்கள் ) un obtained – unobatanium ( dictionary பார்க்க ) இன்னொரு நாட்டிற்க்குள் அராய்ச்சி எனும் பெயரில் புகுந்து பின் அங்குள்ள மக்களின் குடயுரிமைக்கு வேட்டு வைக்கும் ஒரு கூட்டம் - இதுதான் அவதாரில் நாம் காணும் காட்சிகள்.
மேற் கூறிய நாடுகளில் இன்று வரை அமெரிக்காவும் துணை சக்திகளும் புகுந்து கொண்டு செய்யும் அழி செயல் எல்லோர்க்கும் வெளிச்சம். அதே போல் அந்த இடங்களில் அராய்ச்சி செய்யும் பேர்வழி என்று இந்த சக்திகள் நடத்தும் ஊடுருவல் பற்றி இந்த திரைப்படம் வெட்டவெளிச்சம் ஆக்குகிறது. இது மட்டுமல்லாமல் அந்த நாடுகளின் கலாச்சார சீரழிவுக்கும் திட்டம் தீட்டும் இந்த கூட்டத்தை வெளிப்படையாக நாம் பார்க்க முடிகிறது

தனக்கு உடன்பாடில்லாமல் இன்றும் ஈராக் போரில் இடுபடுத்த பட்டிருக்கும் போர்விரர்களின் மன நிலை கதாநாயகனின் தினசரி ஒலியுட்டப் பதிவுகள் ( Daily Video recording ) தெள்ள தெளிவாக்கி விடுங்கின்றன

அங்கு சென்று கல்விப் பணி நடத்துவது போன்ற உள்ள நோக்குடைய காட்சிகள் இதில் சொல்லப்படுகிறது . 'நாவிகளில்' ஒருவராக மாறி அவர்களை அடிமை படுத்த நினைப்பது, என்பதெல்லாம் தெளிவாய் இந்த ஊடுருவலை காட்டி இருக்கிறது. அமெரிக்கர்களை விட உடல் வனப்பில் உயரமான ஆப்ரிக்கர்கள்,ஆப்கானியர்கள் இந்த படத்தில் நாவிகள் உடல் கூறு எடுத்துக்காட்டுகள்.


மிகச் சிறப்பாக நாவிகளுக்கு வால் இருப்பது, இந்த மேல் ஆதிக்க சிந்தனைகளின் படி இன்னும் குரங்காய் வாழ்பவர்கள் ஆப்ரிக்கா மக்கள் என்று பொருள் படுகிறது

இந்த சிந்தனைக்கு இன்று நமது தேசமும் விதி விலக்கல்ல. இதற்குத் துணையாக சீனா போன்ற நாடுகள் இருக்கின்றன . எடுத்துக்காட்டாக இந்த திரைபடத்தில் விமானங்கள் எல்லாமே தாங்கி செல்லும் குறி DRAGON - சீனா .

இவர்கள் இறுதிக் காட்சியில் நின்று தாக்கும் விமானமும் DRAGON என்ற பெயருடன்தான் இயங்கும். ஒரு முறை அல்ல இரண்டு முறையும் தாக்க செல்லும் விமானம் முதலில் அதன் குறி DRAGON லிருந்துதான் பதிவு செய்யப் படுகிறது. சும்மா ஒரு 3D பதிவு என்றால் அமெரிக்காவின் சின்னமான கழுகை ( THE ROYAL EAGLE ) தாங்கி வந்திருக்கும் ( மற்ற அமெரிக்க படங்களை பார்க்க. . . . . )

இவ்வாறாக இந்த காரியங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது என்று நேரடியாக கூறாமல் 3D இல் கூறி தன்னுடைய அவதார் மூலம் ஒரு இரட்டுறமொழிதல் பதிவு நடத்தி இருக்கிறார் கமேரோன். இதற்க்கு முன்னர் வந்த 300 திரைப்படத்தின் ரெட்டை அர்த்த பதிவுக்கு இந்தப் படம் ஒரு நல்ல பதில் என்றால் அது மிகை அல்ல

இந்த படத்தில் சரியாக கட்ட படாத முனைகள் பற்றி இன்னொரு பதிவில் சந்திக்கிறேன்

இராமேஸ்வரம் - ஒரு கவிதை கால்நனைப்பு

தமிழகத்தின் தனித் தீவு . . . . . .

வாருங்கள் அழைத்து செல்கிறேன்

இன்று ‘ கலாம் ’ தீவாக உங்களுக்கு தெரியும்.
காலம் எங்களை
கண்டு கொல்லாத நாட்கள்
எனக்கும் கலாமுக்கும் தான் தெரியும்

முதுகுப் புறமாய்
ஓடிப் பார்த்தால்
மூச்சு திணறுகிறது
இந்தத் தீவின் கருப்பு நாட்கள்.

ஒரு இருபது ஆண்டுகள் முன் வரை

உலகம் இவர்களை
தொடர்பு கொள்வது
நாளைக்கு இரண்டே முறை . . .
அந்த காலம் கடந்த பாலம்,
கடக்கும் இரயில் வண்டிகள்
அது தபாலோ , பசும் பாலோ


அந்த இரயில் நின்றால்,
இந்தத் தீவு
மணிக்கட்டு அறுத்துக் கொள்ளும்.


எடிசன் கண்டுபிடிக்கும் பொழுது குறிப்பில்
இவர்களுக்கு வேண்டாம்
என்று எழுதினான் போழும். . .



சுய அறிவோடு மின்சாரம்
தன் பனி நேரங்களை
தானே நியமித்து கொள்ளும்
இந்த தீவு மக்களின்
விரல்களை எண்ணினால்
இந்த இருள் விழுங்கிய
கலாம்கள் எண்ணிக்கை தெரியும் . .



கழிப்போடு கடல் பார்க்க செல்வோருக்கு,
இந்த தீவு மக்களை
கடல், தான் வந்து பார்க்கும்
ஈரப் பொழுதுகள்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை

இவைதாண்டி

சிலரிடம் ஓட காலணிகள் இல்லை,
சிலருக்கு கால்களே இல்லை

இருந்தும் ஓடினோம் . . .
அன்று வரலாற்றின்
ஓட்ட பந்தயத்தில்
நாங்களும் கலந்து கொண்டோம்,

இல்லை

இது கண்ணீர் வடிக்க
அனுதாபக் கட்டுரை இல்லை
வீர வணக்கம்
அதனால்த் தானோ
அன்று அந்த வீரத்துறவி
முழக்கமிட்டுத் திரும்பி
கால்பதிக்க எங்கள் நிலம் தேர்வு செய்தான்           

Wednesday, December 16, 2009

இன்றுகூட முடிந்துபோன இலையுதிர் காலம்

காலியாய் கிடந்த
கடற்கரை மணல் நிமிடங்களில்
கால்தடம் பதித்து நடந்துவிட்டாய்.            
                                                               அழியாமல் அடம்பிடிக்கும்
                                                                அவை,   சில நேரங்களில்
                                                                 என் நினைவலைகளை
                                                                     அரித்து விடுகின்றன


நடந்து செல்லும் பொழுகளில்
தடை செய்து போனாய்
என்வரிகளில் நிறுத்தர் குறியீடுகளை             
                                                                  நிறுத்தங்கள் இல்லாத
                                                                 ரயில்வண்டி பயணமாக
                                                                               இன்றும்
                                                              உன் நினைவுக் காட்டாறு

எங்கோ. . . . . என்றோ. . . . . . .
என் உள்ளுயிர் கிணறுகளில்
நின்று கதறிய காதல் கடிதங்கள்
நீ செவிடாய் இருந்தால் கூட
கேட்டிருக்கும்                                   பின்னால் வருபவன்
                                                நானென்பதால் உண்கால்களுக்கு
                                                               உடனே நீ நத்தைகளை
                                                          அறிமுகம் செய்த உண்மை
                                                               எனக்கும் தெரியும்

எதிரில் அமர்ந்து,
ஏதோ இதற்காகவே வந்தவள் போல்,
ஆண் அகலிகையை என்னை
உறைவித்துப் போவாய்                       ஒரு ராமன் கூட
                                                                 அந்த வழியில் வராத
                                                                 நாட்களின் பதிவுகள்
                                                             உனக்கென்ன தெரியும்
நிமிடத்தில் பூக்கும்
குறிஞ்சிப் பூ சிரிப்பில்
எனகென்று நேர்ந்து நீ
உதிர்த்த கொசுறு முத்துக்களை
கோர்காமல் வைத்திருக்கிறேன்                  
                                                    மாற்றானின் உரிமைக் கயிறு
                                                     சுமக்கும் உன் தோள்களுக்கு
                                                  அந்த முத்துமாலைகளை இனி
                                       அணியும் திராணி இல்லை என்பதனால்

நினைவுகளின் நித்திலம் நீ
என் கவிதைகளை எனக்காய்
பிரசவித்தவள் நீ
உன்னை எப்படி வெறுக்க முடியும்


மறந்தும் கூட என்னை
நினைத்து என்றாவது நீ
கண்ணீர் சொறியாதே             இன்றுகூட முடிந்துபோன
                                                             இலையுதிர் காலம்
                                         உன் சாயலில் இன்றும் முளைக்கும்
                                                       என் வார்த்தை இலைகளை
                               உதிர்க்க தவறி விட்டன. - இந்த வருடமும்

Monday, December 14, 2009

இந்த "போபால்" வீதிகளில்

விலைமகள் வீட்டிற்க்குள்
நிர்வாணப் பட்ட உணர்வும் ,

தனியனாய் நடந்துசென்றாலும்,
துரோகதேசத்தின் வழித்தோன்றலை
இந்த விழிகள் வரவேற்பது
போன்ற ஒரு குற்ற உணர்வும்,
நம்மை சூழ்ந்துகொள்கிறது
இந்த "போபால்" வீதிகளில்

தென்துகலோடு, பாண்டிக்காரிகளின்
பிஞ்சுகால்களின் புது
நகங்களும் சேர்ந்து விழுகின்றன.

துர்யோதனன் என்றாலும் சரி
நடந்தால் போதுமென்று
தவமிருக்கும் குந்திகளின் கூட்டமிங்கு

இங்குள்ள அண்ணப் பறவைகள்
கழிவுகளை குடிக்கப் பழகிவிட்டனவாம்

படைப்பின் கடவுள் பிரம்மன்நென்றால்
தயக்கமின்றி ரத்து செய்
அவன் தரச் சான்றிதழை.

நாகரிகமாய் சொல்வதென்றால் கூட
இது தொழில் புரட்சிகளின்
வயிற்றுப்போக்கு நிகழ்வு

சட்டபூர்வமாக
யூனியன் கார்பைட் நிகழ்த்திய
சோதனைக்குழாய் கொலை

நாடாளுமன்ற ஒப்புதலுடன்
இவர்கள் குடியுரிமை
நாடுகடத்தப் பட்டிருக்கிறது

ஒரே ஒரு உதம்சிங்க்
கடன் கேட்கிறது
வாரன் அன்டேர்சன் நிகழ்த்திய
இந்த ஜாலியன்வாலா பாக்

டாலர் வரங்களில் அமெரிக்க தரிசிக்கும்
இந்திய காதுகளுக்கு- வாரன் அன்டேர்சன்;
இந்த ஒற்றை தலை ராவணன்
சுதந்திரமாய் சுற்றிக் கொண்டிருப்பது
நியூயார்க் வீதில்களில்தான்

அவனை பிணமாகவோ
அல்லது பிணமாகவோ
இழுத்து வாருங்கள்

வாசிப்பவர்களுக்கு குறிப்பு
இந்த வார்த்தைகள் எங்காவது
கவிதைபோல் தெரிந்தால்
என்னை மன்னிக்க . . .

இது உயர்நீதிமன்றந்தில்

அல்ல அல்ல. . . . . .
உயர்நீதிமன்றத்தின் மீது
வரையப் பட்ட
மான நட்ட வழக்கு

Sunday, December 13, 2009

அது ஆரோவா ????? அஞ்சலியா




நிச்சயமாக இந்த வருடத்தில் வந்த திரைப்படங்களில் அருமையான படம் என்ற இலக்கணங்கள் பா ( ஹிந்தி ) க்கு உண்டு.
அமிதாப்பை காண முடியாத அளுவுக்கு கதை நயம், ஒப்பனை,
மெருகேறிய அபிஷேக் இன் நடிப்பு,
காட்சியின் அழுத்தங்களில் தொய்ந்து விடாத பால்கியின் இயக்கம்,
Old wine in a new Bottle என்றாலும் இன்றும் கேட்க தமிழ் போல் அழகாய் இசயராஜ,



சுட்டிடத் தேர்வுகள், பி.சி யின் காட்சிக்கோப்பு என்று முழுக்க முழுக்க பணம் வசூல்.



ஆணால் இந்த ஆரோவுக்குள் எங்கோ நமது அஞ்சலி ஒளிந்திருப்பது போல் ஒரு நெருடல். ஒப்பிடுகையில்
1. அஞ்சலி ஆரோ இருவருமே மனக்கோளாறு உள்ள பிள்ளைகள்
2. அஞ்சலியின் மனவளர்ச்சி குறைவு, = ஆரோவின் மனவளர்ச்சி அவனுடைய வளர்ச்சியை விட அதிகம்.
3. அஞ்சலி தன்னுடைய கடைசி நாட்கள் வரை தாய்க்கு
தெரியாமல் தந்தையால் வளர்க்க படுகிறாள் = ஆரோ தன்னுடைய கடைசி நாட்கள் வரை தந்தைக்கு தெரியாமல் தாயால் வளர்க்கப் படுகிறான்
4. இரண்டு கதை காலங்களும் பிள்ளைகளின் இறுதி நாட்களைப் பற்றியும்,
5. மிக குறைவாய் மருத்துவ ரீதியாக அணுகிய திரைப் படங்களாம்
6. பி. சி + இசயராஜ
7. தாய், தந்தைக்கு இடையே நெருடலான பிரச்சனைகள்

இப்படி சில இடங்களில் ஆரோவுக்குள் எங்கோ அஞ்சலி ஒளிந்திருப்பது போல் எனக்கு ஒரு மாயை

நீங்க என்ன சொல்றீங்க ????


ஜொள்ளன் : ஏம்பா இது ரெண்டுலயும் அம்மாக்கள் டக்கர் அத விட்டுட்ட ........

Saturday, December 12, 2009

கவிஞன் என்றோர் கவிதை

அகன்ற கூர்மையில் எழுத்துக் குறி சொல்பவன்.
சமூக மாற்றத்தின் தூண்டுகோல்
சமகால மருமழர்சியின் அளவுகோல்

காலத்தோடு காமம் கொண்டு
கருத்துகளோடு உறவு கொண்டு
வரிகளை கருக் கொள்பவன். . . .

ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேல்
கருக்கொள்ள முடிந்த ஒரே ஜீவராசி

பாராட்டுகள் ஊற்றி வளரும் கற்பனை வ்ருட்சம்
விமர்சன ஆழகாலம் விழுங்கும் நீலகண்டர்கள்
தன்னையே கடைந்து அமுதம் தேடும் வினோதன்

மனிதம் உடலில் வரிப்பால் சுரக்கும் மார்பு
மக்களின் கால்தடம் தேடுவதற்காய்
தலைகீழாய் நடக்கும் அதிசயப் பிரசங்கி.
கண்களால் கடல் குடிக்கும் அண்ணம்.
அரசிடம் வரிச் சலுகைக்கு ஈனப்படாத குடிமகன்

===========================================
ஒரு கவிஞனுக்கு மரண தண்டனை விதிப்பதென்றால்
அவன் விரல்களை முடமாக்கி, வாயெய்க் கட்டி
வெற்றுக்காகிதம் ஒன்றை அவனிடம் வைத்து விடுங்கள்.
உருக்கொள்ள முடியாத கருத்துக்கள் அவனை கொன்றுவிடும்.
தவிர மகாகவி என்றால் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்
கோவில் யானைகள் பார்த்துக் கொள்ளும்
கோவில் யானைகள், பார்த்துக் கொல்லும்.