Thursday, January 28, 2010

VEER - திரை விமர்சனம்


சில வெகுஜன ஊடகங்களால் கொள்ளப் பட்ட ஒரு படத்தை நீங்கள் இதுவரை பாதிருக்கிருரீர்கள ? ஒரு படத்தை பார்த்துவிட்டு தேட்டரவிட்டு வெளில வரும் போது உங்களுக்கு 'இந்தப் படம் ஏன் ஓடலேன்னு......... தொநிருக்கா' ? அந்த உணர்வு VEER படம் பாத்துட்டு வெளில வரும்போது  ஏற்ப்பட நான் உறுதி அளிக்கிறேன். வீர் - இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து வெளிவந்து தொபுக்கடீர் ஆனா 6ஆவது ஹிந்தி படம்( இதில் SHARUKHகோடா ஒரு படமும் - DULHA MIL GAYA அடக்கம் ), தொடர்ச்சியாக மண்ணைக் கவ்விய சல்மானின் 3ஆவது படம் ( போக்கிரி ரீமேக் - WANTED ஹிட்டுக்கு அப்புறம் ). இந்த வருடத்தின் சிறந்த படம் என்று வீர்-படத்தை சொல்லவே முடியாது - அனால் ஊடகங்கள் விமர்சிக்கும் அளவிற்கு மட்ட ரக திரைப் படம் என்றும் நாம் ஒத்துக் கொள்ள முடியாது.
வீர் முழுக்க முழுக்க ஒரு வரலாற்றுப் படம், எல்லா வரலாற்றுப் படங்களுக்கும் உள்ள ஜலேபி சுத்துக்கள் இதிலும் உண்டு. இந்த படத்தில் பேசப்படும் காலம் -1875. இடம் இன்றைய -Baluchistan. இந்த இடங்களில் வாழ்ந்து வந்த பழங்குடியினரான பின்டாரிகளை[PINDARIS] ஒரு அண்டை நாடு மன்னன் [ ஜாக்கி ஸ்ரோப்ப் ] ஆங்கிலயர்களிடம் அடகு வைக்க முயல்கிறார். அவுங்க வெகுண்டு எழ ஒரு இளைஞன்[மிதுன் சக்ரபர்த்தி ] தலைமையில்  போராட, ஆங்கிலேயர்கள் தன்னுடைய பீரங்கி முனையில் அதை தகர்கின்றனர். தன்னை ஏமாற்றி விட்டான் என்று அந்த மன்னனின் வலது கையை அந்த இளைஞன் வெட்டிவிடுகிறான், அங்கிருந்து தப்பித்து தன கூட்டத்தை சந்திக்கிறான். ஆங்கிலயரையும், அந்த மன்னனையும் தன கரங்களால் வெட்டி கூறு போடுவேன் இல்லையேல் மடிவேன் என்று சூளுரைக்கிறான்; தன்னுடைய சில சகாக்களுடன் வேறு புலம் எய்துகிறான். அங்கு அவனுக்கு வீர் [ சல்மான் ] பிறக்கிறான். தன்னுடைய தினப்படிக்காக இவர்கள் வழிப்பறி செய்து பிழைகின்றனர்.
இந்த சூழலில் வீரரும் அவனுடைய தம்பியும் வழர்ந்து அவர்களும் வழிப்பறி செய்கிறார்கள். சல்மான் என்ட்ரி. ஒரு ரயில் வண்டியில் ஆங்கில பொருட்களை கவர்கின்றனர். அப்போ இன்னொரு பெட்டியில் ஒரு இந்திய ராஜ குடும்பம் இருப்பதைக் கண்டு அதுக்கும் போறாங்க. அங்க செம அழகான அரசிலன் குமாரியை- யசோதராவை சந்திக்கிறார். சாரின் கான் என்ட்ரி. பாத உடனே காதல் வயப் படுகிறான் வீர். சில நாட்களில் அங்கிலயர்களை பற்றி தெரிந்து கொள்ள, கல்வி கற்க ப்ரிடைனுக்கு அனுப்ப படுகிறான். அங்கே வீரோட ஆங்கில எதிர்ப்பும், கைல்கூளிகள் எதிர்ப்பும், யசோதராவை சந்திப்பு அவளுடன் காதலும் வழுக்கிறது. யசோதரவின் சகோதரர்கள் - ஆங்கில கைகூலிகளை, ப்ரிடைனில் கொன்று விட்டு தாயகம் திரும்புகிறான். டி போண்டா வட பச்சிசிசிசிசிசிசிசிசிசிசிசி.
மீண்டு வந்த வீர் யசோதராவை மணக்கிறான், போராடி ஜெயிக்கிறான், தன்னையும் ஈந்து அமரப் படுகிறான். படம் முடிஞ்சுது.
ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஹீரோ வீரமா[ எந்த வித வியாதியும் இல்லாம, காதலுக்காக இல்லாம ] சாகுறான். பிண்டாரிகள் என்ற வழிப்பறி செய்யும் குழுக்களின், கதைக் களம் -  நம் பாராட்டுகள். இந்த பிண்டாரிகள் பற்றி ஒரு தகவல், இவர்கள் கவைப் போர் வீரர்களும். தன்னுடைய போரற்றளுக்கு மிகவும் பெயர் போன இவர்கள் உடன்படிக்கையின் பெயரில் பல மன்னர்களுக்கு போரிட்டு உள்ளனர். போர் வெற்றி பெற்றால் முதல் 5நாட்கள் கவரப் படும் பொருட்கள் இவர்களுக்கு சொந்தம் என்ற உடன்படிக்கையில் இவர்கள் மற்ற மன்னர்களுக்கு போர் புரிந்ததா வரலாற்றுக் குறிப்பு. ஹிந்தி பஞ்சாபி, லாட்தி[ இந்த பழங்குடியினரின் வழக்கு மொழி ] போன்ற மொழிகளின் தழுவலுடன் வந்த மொழியாக்கம் நிச்சயம் அருமை. இசை அமைப்பாளர் கூலிக்கு கம்பி மீட்டிருக்கார். கேமராமேன் சாரின் க்ஹனை மட்டும் பாத்து ஜொள்ளு ஊத்திருக்கர். இவுங்களோட சேந்து தன பங்கிற்கு எடிட்டர் மாரடிதிருக்கிறார். இந்தப் படத்தின் உடையில் வல்லுநர் [ COTUME DESIGNER - கரெக்டா ?? ] மட்டும் என் கையில கெடசாரு........ அவருடைய உடையில ஒரு வழி பண்ணிருவேன் நூற்றாண்டின் ஹீல்ஸ் செருப்பு, பிரிட்டிஷ் கௌன், அரச கால உடைகள், போர்கல உடைகள் என்று எல்லாமே காமெடி பண்ணி இருக்கிறார் .
HIGH HEELS - முதன் முதலில் 1660 Nicholas Lestage என்பவரால் பதினான்காம் லூயிக்காக வடிவமைக்கப் பட்டது. ஆனால் ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு புரட்சியில் வழக்கொழிந்து போய், மீண்டும் 1960கலீல் உலகப் புகழ் அடைந்தது. இது கதையின் சூழலுக்கு காலத்திற்கு எப்புடி சேரும் ????
BRITISH GOWN -  HIGH TEA PARTY GOWNS, BALL ROOM DANCE FROCKS போன்ற பொது இடங்களில் அணியப்படும் அணைத்து கௌன் வகைகளும் முழுக் கைகளுடன் இல்லையேல் கூடுமான வரை முழுக்கைகளை மறைக்கும் விதமாக உரைகளுடனாவது இருக்கும்[ ஐரோப்பாவின் அன்றைய தட்ப வெப்பம் காரணமாக / ஆனாதிக்கம்னும் சொல்லலாம் ]. படத்தில் பெரிய மிஸ் - பெருவாரியான கெளன்கள்-  அர கைகள், இன்னும் அபத்தமாய் சில வற்றில் கைகளே இல்லை.

இன்னும் பல இடங்களில் LKG,UKG பிள்ளைகள் அளவிற்கு சறுக்கி சந்தோசப் பட்டிருக்கிறார். ஹாலிவுட் உடயியல் வல்லுனர்கள் இது போன்ற ஒரு வாய்பிற்காக காத்திருக்க, கிடைத்த ஒரு தங்கமான வாய்ப்பை மெகா சீரியல் உடைகளை வைத்து சமாளித்திருக்கிறார். உங்களுடைய அடுத்த கேளிவிக்கு பதில் வீர் ஒரு மெகா பட்ஜெட் படம். இயக்குனரை மனமார பாராட்டி நன்றியும் சொல்கிறோம். சாரின் கான் - ஒரு வளம் வருவார் ( சல்மானின் கனவுக் கன்னி KATRINA மார்க்கெட் இழந்தால்!!! ). ரசிக்கவும் முடியும் சில நேரங்களில் சகிக்கவும் வேண்டும் என்ற சல்மானின் கோட்பாட்டில் இந்தப் படம் விதிவிலக்கல்ல.
ஜோதா அக்பரின் வெளியீடு தேதியில் வெளியிடும் அதே சூட்சுமத்தை கொண்டு வந்த இந்தப் படம் வெற்றி இல்லை. ஆனாலும் தோல்வி இல்லை

Sunday, January 24, 2010

கோலிவூட்ம் - ஆஸ்காரும் ( மீண்டும் ரஹ்மான் )


The OSCAR FEVER is On - என்று ஆங்கிலத்தில் சொல்வர்கள், அதற்க்கான நேரம்தான். நம்ம SUN TV ரேகோ ஸ்டைல்ல சொன்னா இனிமே வருவது ஆஸ்கார் வா..ரம். ஆஸ்கார் என்ற விருதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு, நம்பிக்கை இல்லை. தானே அறிவித்து தானே புகழ் ஆறம் சூடிக்கொள்ளும், அமெரிக்காவின், இடிஅமின், தன்மையாகவே இதுவும் நோபெல் பரிசும் எனக்கு தெரியுது ( இதுல உள்ளூர் அரசியல் நெடி இருக்குதே). ஆனால் ஒரு, சினிமா பைத்தியம் என்ற முறையில் ஆர்வம் உண்டு. ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டு திரைப் பட ( ACADEMY AWARD FOR BEST FOREIGN LANGUAGE FILM )வரிசையில் நமது இந்தியத் திரைப்படங்கள் போட்டியிடுவது ஒரு வகை. அவற்றில் வருடா வருடம் இந்திய அளவில் உள்ள ஏனைய நாட்டுக்கட்டைகளை - அதாங்க மத்த வூட் - டோலி வூட், போலிவூட் போன்ற மற்ற மொழி திரைப்படங்களுடன் போட்டியிட்டு நமது தமிழ் படங்கள் தேர்வுசெய்யப்படும். அடுத்து OSCARரில் நமது தமிழ் கலைஞர்கள் வேறு மொழி,  வேறு நாட்டு திரைப்படங்களில் பணிபுரிந்த நமது கோலிவூட் கலைஞர்கள்.

இதில் 1957 முதல் இன்று வரை 8 தமிழ் திரைப்படங்கள் இந்திய அளவில் ஆஸ்கார் பரிந்துரைக்கு தேர்வு செய்யப் பட்டு இருக்கின்றன. ஆனால் இதில் ஒன்று கூட இன்றுவரை வெளிநாட்டு திரைப்பட வரிசையில் நியமிக்கப் ( NOMINATE )  பட்டதில்லை. ஆனா இந்தப் பட்டியலில் 'ஜீன்ஸ்' படம் இருப்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி இல்லை. அதையும் கடந்து 'அப்படி என்னத்த கண்டுடாங்க இதுல' என்ற கேள்வி கூட உண்டு. அதே வருடம் வெளியான "1947-Earth" ( ஹிந்தி ), SAAZ ( ஹிந்தி ), தாயி சஹேபா ( கன்னட ) களியாட்டம் ( மலையாளம் )  ஹவுஸ்புல் (தமிழ்). இதில் கடைசியாக சொல்லப் பட்ட மூன்று படங்களும் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல விருதுகளால் அங்கீகரிக்கப் பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. இதே ரீதியில் 'இந்தியன்' படத்தில் கூட எனக்கு உடன்பாடு கிடையாது.  ஊருக்கு நூறு பேர்( 2001) வெயில்(2006) நவரசா(2004) வேதம் புதிது , தண்ணீர் தண்ணீர்(1981), உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், தில்லான மோகனாம்பாள், மூன்றாம் பிறை, போன்றவை சமகாலத்தில் தேர்ந்தெடுக்கதமையும் வியப்புதான்.

அடுத்து வேறு மொழிப் படங்களில் அல்லது வேறு நாட்டு படங்கலில் போலிவூடார்கள் 'எப்படி பாத்தாலும் நம்ம பயக' வகையறாக்கள். மீண்டும் கமல் . சாகர்- ஹிந்தி- 1985,  சுவாதி முத்யம் - தெலுகு( சிப்பிக்குள் முத்து )- 1984, போன்ற ஆஸ்கார் பட்டியல் படங்களில் தன்னுடைய பாத்திரத்தால் வலு சேர்த்தவர். அடுத்த படிய நேர நம்ம ரஹ்மான் நான் என்ன பெரிய சொலீரப் போறேன் உங்களுக்கு தெரியாததா SLUM DOG MILLAINORE பத்தி. அது இல்லாம LAGAAN, RANG DE BASANTI,  INDIAN, JEANS, போன்ற பட்டியலில் இடம் பிடித்த மற்ற திரைபடங்களில் இவரடுய பங்களிப்பு மிகவும் குறிப்பிட தக்கது. இவர் இந்த வருடமும் COUPLE RETREAT என்ற ஆங்கில திரைபடத்தில், நியமனப் பட்டியலுக்கு தனுடைய இரண்டு பாடல்கள் மூலமாக போட்டியிடுவது சந்தோசமே . அதுல ஒன்னு தமிழ் பாட்டு சாமியோ. 
" இந்தியா - ஆஸ்கார் " என்று இன்னும் இந்த மட்டேற விக்கோ வஜ்ரதந்தி போட்டு விளக்கி திரும்ப வந்து BLOGகுறேன். இப்போதைக்கு டிரைவர்,  ஸ்டாப் வந்துருச்சு பிரேக்க போடு.
ஆமா இளையதளபதி 2011ல விருதுப் படங்கள் நடிக்கப் போராரமே, அதுல எத்தன ஆஸ்கார் ?????. ( என்னமோ தெரில எவ்ளோதான் தென்னமரம் பத்தி எழுதுனாலும் அதுல மாட்டை கட்டலாம்நு சொல்லாம முடிக்க முடியல)

Wednesday, January 20, 2010

தமிழகத்தில் 'நாத்திகம்' என்பதே ஒரு மதம்

நாத்திகம் பகுத்தறிவு - போலிகள் ஜாக்கிரதை பகுதி - 5சென்ற நூற்றாண்டின் நடுவில் தமிழகத்தில் நீதிக் கட்சியிலிருந்து விலகிய சிலரும், காங்கிரசிலிருந்து விலகிய சில ராஜாஜி எதிர்ப்பாளர்களும், திராவிடம் தாங்கிய ஒரு இயக்கம் இந்த திராவிடக் கழகம். இன்று இது கழகம் என்ற நிலயுயர்ந்து கட்சியாகி தமிழக அரசியலில் இரண்டு திராவிட கட்சிகளின் தாயாக விளங்கும் ஒரு கட்சி - திராவிட கட்சியாகும். திராவிடம் என்ற அடிப்படையில் இன்று ஊருக்கொரு கட்சி ஜாதிகொரு கட்சி என்ற நிலையில், நாத்திகம் என்று ஒரு நேர்கோடு வறைந்தோமே ஆனால் அதில் தமிழகத்தில் இன்று நிற்கக்கூடிய ஒரு ஒரே அமைப்பு திராவிட ட்சியாகும். பெரியார் காலத்தில் தோன்றிய இந்த அமைப்பு அவருடைய காலத்திற்கு பின் வழுவிளக்க தொடங்கி இன்று அரசியல் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிழலில் இருப்பது நாம் அறிந்ததே. நாத்திகம் என்ற கோட்பாட்டை பேசுகையில் தி மு கா வையோ அ தி மு கா வையோ பற்றி பேசுதல் அந்தந்த கட்சி உறுப்பினர்களே உடன்படாத ஒன்று. பெண்ணுரிமை, தமிழ் வளர்ச்சி, திராவிட உரிமை, தனித் தமிழகம், ஹிந்தி மறுப்பு, தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்டோர் உரிமைகள், சுய மரியாதை, ஈழம் வரை இந்த கட்சியின் கோட்பாடுகள் ஏனைய தமிழக கட்சிகளுக்கு இணையாக இருந்தாலும் இந்த கட்சியின் துவக்கம் நாத்திகம் என்பதும் குறிப்பிட தக்கது.
------------------------------------------------------------------------------------------------------------

சமயங்களில் கடவுள் என்ற பெயரின் கட்டளையின் கீழ் நடை பெறுகின்றன , தி க வும் பெரியார் என்ற பெயர் கட்டளையை பயன்படுத்துகின்றது.
சமயங்கள் எல்லாவற்றுக்கும் அடையாளங்கள் உண்டு, சிலுவை, குல்லா அணிதல் தாடி வைத்து கொள்ளுதல், திருநீறு அணிதல், பூணூல், போன்று கருப்பு சட்டை அணிதல் என்று இவர்களுக்கும் ஒரு குறியீடு உண்டு.இவர்களுடைய கொடி கூட ஒரு குறியீடே
பெரியாரின் படங்கள், பெரியாரின் சிலைகள் என்று இவர்களுக்கும் உருவ வழிபாடு உண்டு.
பெரியாரை போற்றும் இவர்கள், அவருடைய எழுத்துக்களை வேதமாய் பின்பற்றுவதும் போதிப்பதும் உண்டு. சமயப் பிரச்சாரங்கள் போல் இவர்களுக்கும் பிரச்சாரங்கள் உண்டு.
சமய சடங்குகளான திருமணங்களை ஆரம்ப காலங்களில் இவர்கள் எதிர்த்தாலும் இன்றைய சூழலில் திருமணம், பெயர் சூட்டு விழா, பூப்புனித நீராட்டு விழா போன்ற சமய சடங்குகளை தனக்கு பிடித்த உச்சாடனங்களுடன் நடத்துகின்றனர்.
போதகர்கள், பின்பற்றாளர்கள், வெறியர்கள், போலிகள் என்று எல்லா நிலை பகுப்புகளும் இவர்களுள் உண்டு. மொத்தத்தில் இது கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் பிறந்த ஒரு மதம். மற்ற சமயங்களை எதிர்க்கும் ஒரு அரசியல் மதம்.
எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கைகள் உண்டு இவர்களும் அதில் விதி விலக்கல்ல.

Monday, January 18, 2010

SUZUKI HAYABUSA - பெயர்க்காரணம் - மாற்றுப் பார்வை


எனக்கென்னமோ தெரிலங்க சில மட்டேற நேரா பாத்தாலும் உள்குத்து இருக்கோன்னு தோணுது. அப்படி நம்ம அவதார்,  300 மாதிரி இந்த மேட்டர் ஒரு காலத்தில் பைக் பயித்தியமா ( பைக் இல்லாம பயித்தியமா மட்டும் ) சுத்துனப்ப, சீல்தலை சாத்தனார் ஆகி கண்டுபுடிச்சது. ரொம்ப முக்கியமா பைக் ஆசை, அறிமுகம் இல்லாதவங்களுக்கு கூட இது புரியணும்னு கொஞ்சம் கூடுதல் முயற்சி செய்துள்ளேன்.
புரிஞ்சுது இல்லேன்னு கமெண்ட்ஸ் போட்டு சொல்லிட்டு போங்க ( கட்டணம் ஏதும் இல்லை. முற்றிலும் இலவசமாக ).

சுசுகி ஹயபுசா இன்றைய பைக் - ஓட்டாமல், மெல்லமாய் பறக்கும் இளைஞர்கள், ( ஐயோ பெண்ணியம் ) இளைங்கிகளும் விரும்பும் ஒரு வார்த்தை உண்டென்றால் அது நிச்சயமா - ஹயபுசா. ஜப்பானிய சுசுகி நிறுவனத்தின் மிக சிறந்த உலகப் புகழ் பெற்ற ஒரு படைப்பாக கடந்த 10 வருடமாக இந்த பைக் வளம் வருகிறது. 'SPEED IS THE NAME OF THE GAME ' என்ற தாரக மந்திரத்தை முன்வைத்தே 1999ல் வெளி வந்த இந்த பைக் அதிக பட்சமாய் ஒரு மணி நேரத்திற்கு 188 முதல் 194 மைல் வேகம் வரை அதாவது 300 -312 கீ மீ வேகத்தில் ஓடும் ( பறக்கும் ). இன்று வரை SPORTS BIKE வகைகளில் இதற்கென்று ஒரு தனி இடத்தை இந்த பைக் தக்க வைத்து கொண்டே வந்திருக்கிறது. இதே பெயரில் ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு விண்கலம் ஒன்றும் ஏவப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. நம்ம ஊருகளில் ஊருக்கொரு K.K நகர் J.J நகர் இருப்பதுபோல் ஜப்பானில் இந்தப் பெயரில் ஜட்டியிலிருந்து, சில்லி சிகென் கடை, விண்கலம் வரை HAYABUSA - இந்தப் பெயர் ஜப்பானியம் ஆனால் இந்த பெயரை இந்த பைக்க்கு வச்சது அப்படி சாதாரனமா வந்ததில்ல. இதுல ஒரு உள்குத்து இருக்கு அதப்பத்தி தெரிஞ்சுக்குரதுக்கு முன்னாடி ஹோண்டா BLACKBIRDபத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்.

அமெரிக்காவின் உலக நண்பன் ரஷ்ய போல SUZUKIயின் பரமநண்பன் ஹோண்டா நிறுவனம். இந்த வருடத்துடன் தனுடைய 100ஆண்டை வெற்றிக் களிப்பில் கொண்டாடும் இந்த குழு ( ஹோண்டா இரண்டு சக்கர வாகன நிறுவனம் அல்ல ஹோண்டா குழுமம் ), தன்னுடைய இன்னொரு நண்பன் கவாசாகிக்கு எதிராக, 90களில் முடிவு செய்து 1996இல் களத்தில் இறக்கிய ஸ்போர்ட்ஸ் வகை பைக் ஹோண்டா SUPER BLACKBIRD. இது மணிக்கு 177மைல் அதாவது 285கீ மீ வேகத்தில் டுர்ர்ற்ற கூடிய இரண்டு சக்கர வாகனம் ( விமானம் ). இதே பெயரில் இதன் சமகாலத்தில் உலகத்தின் மிக வேகமான ஒரு போர் வகை விமானம் ஒன்றும் இருந்தது.

இப்போ படத்தோட கிளைமாக்ஸ் எதுக்காண்டி HAYABUSAன்னு பேரு வச்சாங்க ?

HAYABUSA - ஜப்பானிய மொழியில் உயரமாகப் பறக்கும் பறுந்து / கழுகு என்ற பொருள்படும். இந்த பறுந்து எவளவு தூரதில் இருந்தாலும் மிகத் துல்லியமாக வேட்டையாடும் அதுவும் கருப்பு வகை காகங்களை வேட்டையாடும் திறன் பெற்றவை. எப்படி,,,,,,,,,,,,,,,,,, கருப்பு வகைப் பறவை - BLACKBIRD. ஹயபுசா BLACBIRDய் அமெர்க்க ஐரோப்பா போன்ற, இந்த வகை பைக்குகளின் முன்னணி சந்தையில் வேட்டைஆடியது இன்று வரை வரலாறு . உலகின் மிக வேகமான பைக் என்ற பட்டதை 'கவசாகி'யிடமிருந்து ஹோண்டா தட்டியது அதே பட்டதை இந்த ஹயபுசா மூலமாக 'ஹோண்ட'விடமிருந்து சுசுகி சுட்டது உலகறிந்தது . சொல்லி அடிகிரதுன்ன இதுதான். வச்ச பேர காப்பாத்துரது நாளும் இதுதான். 

இது இளைய தளபதிக்காக எழுதப் பட்டது என்று நீங்கள் நினைத்தால் அது வெறும் தற்செயலாக நிகழ்ந்த ஒன்றே ;-()  :-))

Friday, January 15, 2010

CHANCE PE DANCE - திரை விமர்சனம்


இந்தப் படம் இந்தியாவில் ஏன் உலகத்திலேயே ஒரு புது முயற்சி - அப்படீன்னு சொன்னா நானோ இல்ல அப்படி சொல்றவரோ இதுவரைக்கும் ஒரு படம் கூட பாததில்லைன்னு அர்த்தம். சினிமாவில் கதாநாயகன் ஆகும் கனவுள்ள ஒரு இளைஞன், ஏழ்மையான குடும்பம்,  ஒரு காதலி, உழைப்பு, ஏமாற்றம், சோகம், வெற்றி. சினிமாவில் இது புது கான்செப்ட் இல்லை. இதை மீறியும் படம் - பார்க்கலாம். பபில் கம் திரைக் கதையை தாண்டியும் படம் சில சின்ன சின்ன வெளிப்பாடுகள் மூலம் காமெராவும் இசையும் நமக்கு கொரட்ட வராம பாத்துக்குது . SHAHID KAPOORகாக எழுத்தப் பட்ட கதை என்று இயக்குனர் KEN GHOSH சொல்வது படத்தின் சில இடங்களில் நம்மால் உணர முடிகிறது. கடைசி நடனக் கட்சியில் தன்னுடைய EIGHT PACK AB உழைப்புவரை இவருடைய பணி இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்கது.


நிச்சயமாக டிஸ்கோ, பிரீஸ்டைல், நடனங்கள் சார்ந்த STEP UP, DIRTY DANCING படங்கள் நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தாலோ, இல்லை, தெலுங்கில் அல்லு அரவிந்தின் நடனங்களை நீங்கள் பார்த்திருந்தாலோ, இந்த பழம் நிச்சயம் புளிக்கும். ஜெனீலியாவின் பாலிவுட் கனவுக்கு இந்த படம் வழு சேர்க்கவில்லை, ஆனால் இன்னும் அழகாவே தெரிகிறார். தனது நடனத் திறமை வெளிப் படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பையும், இவர்  முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது வருத்தமே.உங்களுக்கு மேற்கத்திய டான்ஸ் பிடிக்குமா இந்த படம் உங்களுக்கு பிடிக்கும், எனக்கும் அந்த விதத்தில் இந்தப் படம் பார்க்க பிடித்திருந்தது. நிறைவு இல்லை, இம்சையும் இல்லை. இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து வெளியான நான்காவது ஹிந்தி படம், சரியாக சொன்னால் வெளியாகி வெற்றியடையாத நான்காவது ஹிந்திப் படம்.

CHANCE PE DANCE - வேற படம் டிக்கெட் கெடக்கலேன்ன கண்டிப்பா போங்க
இந்த வருடத்தில் நடனத்தை மையமாக வைத்து ஹ்ரிதிக்கின் KITES படமும் வரும் என்று உங்களுக்கு தெரியும்ல .
பாலா அண்ணேன் இதுக்கெல்லாம் மாற்றுப் பார்வை இல்லை, ஆனால் விரைவில் 3- IDIOTS படத்தின் மாற்றுப் பார்வையுடன் சந்திக்கிறேன்.

Thursday, January 14, 2010

ஹிந்து சமய ஆத்திகக் கோளாறுகள்

நாத்திகம் பகுத்தறிவு - போலிகள் ஜாக்கிரதை [ பகுதி - 5 ]


அடுத்து சமயங்களை நடாத்தும் பணியில் சமயம் சார்ந்த பணியில் , கோயில் மற்றும் அதனை சார்ந்த பணியில் உள்ளவர்களைப் சொல்ல வேண்டும். முந்தைய பகுதியில் கூறியது போல் சமயகுருமார்களுக்கு உள்ள பணிகளின் பொறுப்புகள் இவர்களுக்கும் உண்டு. சமய கட்டுமானங்களில் பனி புரியும் அனைவரருக்கும் அதை சரியாக பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. சமயம் என்பது மனிதனை மனிதனாக வைக்கும் ஒரு நிரல், அந்த நிரலில் நேரடியாக தொடபுடைய அந்தணர்கள், சமயப் பணியில் உள்ளவரால், கோயில் மற்றும் அது சார்ந்த பணியில் உள்ள அனைவருக்கும் சரிவர நடத்தும் பொறுப்பு உள்ளது. குருமார்களை விட சமயம் என்ற நோக்கில் மக்கள் எதிர் கொள்வது இவர்களைத்தான். ஒரு கம்பெனியின் வர்த்தக மேம்பட்டு துறை( SALES ) உள்ளவர்கள் நேரடியாக அந்த கம்பெனியின் வாடிக்கையாளர்களை சந்திக்கும் , அந்த அமைப்பின் முகமாக(  FACE OF THE FIRM ) செயல் படுகிறார் இதை கருத்தில் கொண்டே பல கம்பெனிகள் இவர்களுக்கான உடை கட்டுப்பாடுகளை ( CLEAN SHAVED, TIE, POLISHED SHOES ) வைத்திருப்பது நாம் அறிந்ததே. வெறும் பணம் சம்பாதிக்கும் அமைப்பிற்கே இவ்வளவு கோட்பாடுகள் என்றால், இவர்கள் சமயம், மனிதனுக்கு ஒழுக்கங்களை, மன அமைதியை, பண்பாட்டை, நிலை நிறுத்தும் பணியில் உள்ளவர்களுக்கு பன்மடங்கு பொறுப்புகள் அதிகம். கட்டுப்பாடுகளும் அதிகம். தன் நடவடிக்கைகள் ஏனைய மனிதர்களுக்கு உதாரணமாக இருக்கும் படி நடக்க வேண்டும். அவர்களை விட பிறப்பால் உயர்ந்தவன் , பெரியவன் என்ற வரட்டுத் தனமான, மடமையான நிலைப்பாடுகளை விட்டுவிட்டு உயரிய, நல்ல நெறியை ஏனைய மக்களுக்கு வாழ்ந்து புகட்டும் கடமை உண்டு. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் சமயத்தின் நிழலாகவே கண்காணிக்கப் படுகிறது என்பத மனதில் கொண்டு செயல் பட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு. இது செய்வதற்கு தயார் என்றால் மட்டும் நீங்கள் இந்த பணிகளை ஏற்றுக் கொள்ளுங்கள், வெறும் பணத்திற்காக இங்கு புகுவதென்றால், உங்களுடைய பொருள்சார் தேவைகளுக்கு சமயத்தை அடகு வைக்க எந்த உரிமையும் இல்லை. இதைத் தவிர அனேக பொருள் ஈட்டும் பணிகளில் ஈடுபடுங்கள். சமயத்தின் பெயரில் களங்கமாவது தவிர்க்கப்படும். 

அடுத்து நாம் பகிரப்போவது சமயர்கள், வழிபடுவோர்கள், பக்தர்கள். உங்கள் மனதிற்கு ஏற்றார் போல் ( ஹிந்து சமயத்தவர்களுக்கு மட்டும் பொருந்தும் ) எந்த தேய்வதை வேண்டுமானாலும் நீங்கள் வழிபடலாம், எந்த சமயகுருவையும் நீங்கள் பின்பற்றலாம், எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் நீங்கள் செல்லலாம், அணைத்து சமயம் சார்ந்த நூல்களை நீங்கள் படிக்கலாம், அனால் நீங்கள் இவற்றை எல்லாம் மனிதனாக இருப்பதற்கு இடையூறு செய்வதாய் இருந்தால் வேண்டாம், உங்கள் கடமைகளுக்கு, சமூகப் பொறுப்புகளுக்கு எதிராக இருந்தால் அவற்றை செய்யாதீர்கள், அன்பை போதிக்காத ஒன்று சமயமாக இருக்கவே முடியாது, நலஒழுக்கத்தை உங்களுக்கு கட்டளை இடாத ஒரு தெய்வம் வெறும் கல் அல்லது அது ஒரு பிம்பம் மட்டுமே. சமயக் கோட்பாடுகளில் சிந்தனைகளில் செயல்பாடுகளில் உங்களுக்கு புரிதல் பண்பு, அமைதி தென்படவில்லை என்றால் அவற்றோடு உங்களை ஒத்துப் போக வேண்டிய அவசியம் இல்லை. சமயம் என்ற பெயரில் தன்னை வருத்தி, மற்றவர்களை இன்னலுக்கு உள்ளாக்கி எந்தக் கடவுளும் மகிழப் போவதில்லை.


பெண் பக்தர்கள் எத்தனை விரதம் இருப்பீர்கள் ?, உங்களுடைய கஷ்டங்கள் தீர தெய்வங்கள் உதவும் என்றால் அவற்றை சரிசெய்யும் வழியை தேர்வு செய்யும் அறிவை, உங்களுக்கு இறைவன் தந்ததை மறக்காமல் செயல் படுங்கள். உங்களுடைய சோம்பேறித் தனைகளுக்கு இறைவைனை இழுப்பதை நிறுத்துங்கள்.

அடுத்து மலைகளுக்கு மாலை போடும் சாமிகள், இவர்கள் செய்யும் செயல் இறைவன் காட்சியளித்தாள் கூட " ஏய், என்னைய வச்சு காமெடி கேமடி பண்ணலியே " என்று கேட்கத் தோன்றும். மாலையை கழற்றிய உடனே மது அருந்தும் உங்களுக்கு , இன்னும் மோசமான நிலையில் மலாயுடனே புகைக்கும் உங்களுக்கு விரத்தங்கள் எதற்கு, ஐயப்பனோ, முருகனோ நீங்கள் வரவில்லை என்றால் நிச்சயம் மலையிலிருந்து கீழே வந்துவிடப் போவதில்லை.  விரதங்கள் அனுஷ்டிக்கும் மனநிலையில், கட்டுப்பாடு உங்களுள் இல்லையென்றால் போக மறந்த வாக்குப் பதிவாக நினைத்து விட்டுவிடுங்கள்.

இந்தப் பகுதியை நிறைவு செய்யும் ஒரு வரி " இறைவனை குழந்தையின் மனதுடனும், அறிவியல் அறிஞனின் மூளையுடனும் அணுகுங்கள் " . உங்களுக்கு சமயம் எளிதில் விளங்கும், சமயம் உங்களுக்கு இடராக இருக்காது" .
 
அடுத்த பதிவில் மீண்டும் நாத்திக , பகுத்தறிவு போலிகள் மேல் சவுக்கு சுழலும்

Wednesday, January 13, 2010

இந்த நாட்களில் கொண்டாடப் படும் ஏனைய கொண்டாட்டங்கள்


அனைவருக்கும் பொங்கல் மற்றும், கலைஞர் தின நல்வாழ்த்துக்கள்.
நம் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவின் வேறு இடங்களில் வேறு சில திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவை வருமாறுலோஹ்ரி ( LOHRI - JAN 13 )  - மொழிபெயர்ப்பு செய்தால் தாலாட்டு என்று அர்த்தம்படும் இந்த திருவிழா பஞ்சாப் மாநிலத்தில் அருகில் உள்ள வேறு சில மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. குளிர் காலம் முடிந்து விட்டது என்பதை கொண்டாடும் விதமாகவும் நெருப்பை வணங்கும் விதமாகவும் லோஹ்ரி கொண்டாடப்படுகிறது. இதுக்கெல்லாம் திருவிழவன்னு கேக்க தோணிச்சுன்னா நீங்க இது கொண்டாடப் படும் இடங்களில் குளிர்காலங்களில் ஒரு அஞ்சு நாள் இருந்தா தெரியும். நகரங்களின் ஒன்று கூடும் இடங்களில் தீ வளர்த்து மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது இயல்பு. இந்த வருடம் ஜனவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. நம்மபக்கங்களில் தலை தீபாவளி மாதிரி இந்த பகுதிகளில் புதியதாய் திருமண மாணவர்களுக்கு லோஹ்ரி மிக முக்கியமான கொண்டாட்டம். இதில் அறிவடையை வணங்குவதும் ஒரு பகுதியாக உள்ளது. வீட்டில் உக்காந்த படியே இதைப் பார்க்க VEERAZARA ( hindi ) படத்தைப் பார்க்கவும்
 

சங்கராந்தி SANKRANTI / SANKARANTI  - சூரியன் தட்சினாயனதிளிருந்து , உத்த்ராயனதிர்ற்கு மாறுகிறது என்பதை நினைவு கோரும் விதமாக சங்கராந்தி கொண்டாடப் படுகிறது . இது வேகோ சிறப்பாக மகாராஷ்ட்ராவில், கர்நாடகாவில் ஓர விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினங்களில் எள்ளில் மிட்டாய், நம்ம கடலைமிட்டாய் மாதிரி செய்து பகிர்ந்துண்டு மகிழ்கின்றனர். இதே பெயரில் ஒர்ரிசா, மத்யப்ரதேஷ், மணிப்பூர், ஆந்திரா கோவாவில் கூட கொண்டாடுகின்றனர். இவை அனைத்தும் அறுவடையை கொண்டாடும் விதமாக மேல் கூறிய சூரியனை வணங்கும் விதமாகவும், விவசாயத்தில் உதவும் சில விலங்குகள், மாடு, காவலில் பயன்படும் நாய்க்கு கூட தன்னுடைய நன்றி தெரிவிக்கின்றனர்.
 

போகாலி பீகு BOHALI BIHU  - இது இந்தப் பெயரில் அசாமில் கொண்டாடப்படும் பொங்கல்
 
உத்ராயண் UTHRAYAN - குஜராத்தில் இந்த தினத்தில் பட்டம் விட்டு சிறப்பை கொண்டாடுகின்றனர் .இந்த பட்ட திருவிழா காண உலகத்தின் பல இடங்களில் இருந்தும் மக்கள் குவிகின்றனர் . இந்த திருவிழா ராஜஸ்தானிலும் பட்டம் விட்டே கொண்டாடப் படுகிறது

மக்ஹே சங்கராந்தி MAHE SANKRANTI - நேபாளி பொங்கல். இது தவிர மகாபாரத்தின் பீஷ்மர் இன்றைய தினத்தில் தானே தேர்ந்து இறந்ததை நினைவு கோரும் விதமாகவும் இங்கு இது நடை பெறுகிறது

Tuesday, January 12, 2010

300 மாற்றுப் பார்வை


என்னோட அவதார் விமர்சனத்துல இது 300 படத்துக்கு பதில்ன்னு சொல்லிருந்தேன். அது எப்புடின்னு யாருமே கேக்கலேன்னு கொஞ்சும் மனவருத்தப்பட நெனச்ச நேரத்துல "அல்வா" மாதிரி ஒரு நண்பர் அது எப்புடின்னு கேட்டுவிட்டார்.
ஆனா அவதார் அளவுக்கு பெரிய சூட்சமம் இதுல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. இந்தப் படம் ஒரு உண்மைக்கதை. ஸ்பர்ட வீரர்களின் வீரகாவியம்.
கிரேக்க வரலாற்றின் மீது உலக சமாதனப் ப்ப்புறாவுக்கு -  உனக்கேன் இவ்வளவு அக்கறை, யாருக்கும் இல்லாத அக்கறைன்னு பராசக்தி ஸ்டைல்ல கேட்டா  இங்கதான் மேட்டர் ஆரம்பம்.

கிரேக்கம் ஐரோப்பா முழுவதையும் உவமபடுத்தி உள்ளது. பெர்சியா இன்றைய ஈரான் என்றாலும் உருவகம் புஷ் விலாஸ் ஸ்பெஷல் நெய் அல்வா 'இராக்'தாங்க. இத வச்சு நீங்க எவ்ளோ வேணும்னாலும் இத பில்ட்அப் பண்ணலாம். இது வரை ( படம் வெளிவந்த காலம் 2007 ) வரை அனுப்பிய போர் வீரர்கள் போதாது இன்னும் வீரர்களை அனுப்ப வேண்டும் என்று ஒரு பெண்( CONDOLEZZA RICE )  போராடுகிறார். ஐரோப்பா நாடுகள் இதுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கேட்டு கொள்வது போல். உண்மை வரலாற்றில் தந்திரமானவன் என்றாலும் நிஜ வீரனான XERXES மேல் சதாம் உருவகம் செய்யப் பட்டு பெண்களுக்கான அணிகலன்கள் எல்லாம் அணிவிக்கப் படுகிறான். இந்த போரை முதலில் ஆதரித்து, தற்பொழுது எதிர்க்கும் ஐரோப்பாவில் உள்ள நாடுகளை அருவருப்பானவர்கள் EPHIALTES போல் சித்தரிக்க படுகிறான். பின்பு அவனே பெர்சியா படைகளையும் நடத்தி வரும் கோமாளியாகவும் சித்தரிக்கப் படுகிறான். குறிப்புசொல் - தந்தை பெயருக்காய் போராட வேண்டும் என்று அவன் சொல்வது.  தந்தை நாடுகள் - ஐரோப்பாவில் ??????.

ஆபரடோர் லைட்ட போடுப்பா. ஆட்டம் முடிஞ்சு

இது முதல் முயற்சி கூட இல்ல இந்த படத்தின் எழுத்துப் பதிவு GATES OF FIRE 1992 கூட இதே போல் ஒரு காரணப் படைப்பு.

இது என்னடா வம்பா போச்சு எல்லாத்தையும் இப்படியே பேசுறானேன்னு நீங்க சொல்லக் கூடாது. மின்னலே பட மாதவன் சொல்ற மாதிரி அமெரிக்காநாலே அப்படியே எனக்கு அன்பு பொங்கிதாங்க வருது.

இந்த மேட்டர் ஏற்கனவே தீபாவளி வேடிகுப்ப மாதிரி எங்கும் பரவி இருக்கு . அப்படி இருக்க இதுக்கு முன்னாடியே யாரவது இத பதிவா போட்ருந்த ( கழுதைய ) மன்னிச்சு விட்ருங்க. வேணும்னா இத பொங்கல் சிறப்பு மீள்பதிவா நெனசுகுங்க.

இந்த மாதிரி இல்லேன்னாலும் இது போல 3-IDIOTS, CURIOUS CASE OF BENJAMIN BUTTONலும் சந்திப்போம்

Saturday, January 9, 2010

ஆத்திக அவலங்கள்

நாத்திகம், பகுத்தறிவு - போலிகள் ஜாக்கிரதை பகுதி - 4


நாத்திகப் போலிகளை மட்டும் இந்தப் பதிவின் மூலம் எதிர்த்து இந்த முயற்சியை முடித்து விட்டால், அது என்னுடைய கடமையில் ஒன்றை நாளைக்காய் ஒத்திபோட்டது போல் இருக்கும். இந்த பதிவை போடாமல் சுயத்திற்கு சுத்தப் பட்டவனாய் என்னால் இருக்க முடியாது. நாத்திகப் போலிகள் சாடுவது எல்லாமே தவறு என்று சொல்லி சமயத்தின் பெயரில் உள்ள அவலங்கை மூடி மறைத்தால் எனக்கும் போலிகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும். இது ஒரு நடுநிலைவாதி என்பதற்காக கூட நான் செய்யவில்லை. நல்ல சமய நம்பிக்கை உள்ளவன் என்ற முறையில் ஆத்திகப் போலிகளை பற்றி பேசுவது என்னுடைய கடமை. என்னுடைய என் காயங்களை மறைத்தால் என்னுடைய உடலைத்தான் அது பாதிக்கும். இன்றைய சூழலில் இருக்கும் சமயங்களில் நன்மைகள்; நன்மைகளை மட்டும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது நமது கடமை. அது சமய நம்பிக்கையால் மட்டுமே முடியும். எல்லா சமயங்களுக்கும் எல்லா சமயத்தினர்க்கும், எல்ல கடவுளர்க்கும் இது தகும். அதே போல் இன்றைய சூழுக்கு ஏற்ப தன்னை பண்படுத்திக் கொள்வது நமது கடமையாகும்.
இந்த பதிவில் அணைத்து சமயங்களில் உள்ள அவலங்களை பற்றி பேசுவது என்னுடைய கட்டாய கடமையாம், அதே சமயத்தில் மற்ற சமய நம்பிக்கைகளை பற்றிய அறிவு இன்மை காரணமாக என்னுடைய சமய அவலங்களை பற்றி மட்டும் பேசுகிறேன். சக கவலை உள்ள ஏனைய சமய நண்பர்கள் யாரேனும் உங்கள் மனதார உதவும் தருவாயில் அதையும் சேர்த்துப் பதியும் கடமையை செவ்வனே செய்வேன்.
எனக்குள் இருந்த இந்த கருத்து, சரி என்பதை பதியச் செய்த தோழி கார்த்திகா அவர்களுக்கு எனது நன்றிகள்.

கடவுளின் நம்பிக்கை சந்தயிடுவதர்க்கு அல்ல - கடவுளின் நம்பிக்கை, மனிதனின் மன அமைதியை, உறுதியை, உண்மையை நிலைப்படுதளுக்கான ஒரு நன்நெறி. இன்றைய நல்லவைகளை நாளைக்காக கொண்டு செல்லும் ஒரு நிரல் - அதை கழிவுகள் சுமக்கும் கூடாக ஆத்திகப்போலிகள் மாற்றிவிட்டனர் இந்த கூடத்திற்குள் நின்று இது வரை எதிர்காமையால் இதற்க்கு மறைமுகமாக உடன் பட்டவனாகிறேன். ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையிலோ, ஒரு மனிதனுக்கும் அவனுடைய கடமைக்கும் இடையிலோ, ஒரு மனிதனுக்கும் அவனுடைய சமுதாய பொறுப்புகளுக்கும் இடையிலோ எந்த மதமும் , கடவுளும் குறுக்கிடுதல் அது தன் நிலையிலக்கிறது. அந்த நொடி முதல் அது சமுதாய சீர்கேடுகளின் பட்டியலில் சேர்கப்படுவதே முறை.


இந்த கட்டமைப்பில் நாம் முதலில் இதற்க்கு நெறிப்படுத்த வேண்டியர்கள் , சமய நம்பிக்கையின், காக்கும் கடமை உள்ளவர்கள், சமயங்களை காலத்திற்கு ஏற்றவாறு செப்பனிடும் கடமையில் உள்ள சமயகுருக்கள், ஹிந்து சமயம் இன்று உள்ள சூழலில் எத்தனை குருக்களுக்கு ஹிந்து சமயத்தின் தத்துவங்களில் பயிற்சியும், புரிதலும் உண்டு என்பது கேள்விக்குரியது. இது அவர்களுடைய சமய அடிப்பயிலான அறிவினை சோதித்து சொல்ல வேண்டும் என்பதல்ல, அவர்களுடைய சமூக வெளிப்பாடு, சிந்தனைகள், சுய ஒழுக்கம் இவர்ற்றை வைத்தே அன்றும் இன்றும் என்றும் நிர்ணயம் செய்யப்படுகின்றன தன் நிலையிலிருந்து வழுவும் இயல் நிலை மனிதனுக்க தண்டனை என்றால் பாரதி கூறியது போல் படித்தவன் தவறு செய்தால் ஐயோ என்று போவான். அது சம்யகுருமார்களின் கடமையில் இருக்கும் யாரும் தவறு செய்தால், சராசரி மனிதனை விட, தெய்வ நம்பிக்கையில் தவறு செய்தவனென்று, [ Sacrilege ] அடிப்டையில் தண்டனைகள் வழங்கப் பட வேண்டும். இதுதான் இன்றைய நிலையில் இருக்கும் இந்த வகை  அவலங்களை தவிர்க்கும் ஒரே நெறிமுறை. நெறிபடுத்தும் அறிவோ பொறுப்போ இல்லையென்றால் மறவுரியையாவது அவனம் செய்யாமல் விட்டு விடுங்கள். அதற்க்கு அடுத்த படி தன் சுயலாபதிர்க்காக தவறான நம்பிக்கைகளை விதைப்பது, சரியானவற்றை விதைக்காமல் விட்டுவிடுவது இதவும் மேல் கூறிய வகை தவறுகளே.


மேலும் முகமுடிகள் கிழிப்போம்

Friday, January 8, 2010

SUPERMAN ஜெட்டியில் அரசியலா ????


HUNTER என்ற உலகத் தரம் வாய்ந்த சிறந்த திரைபடம் வெளியாகும் முன்னதாகவே SMS முதல் GRAPHICS வரை சிக்கி மிளகு இரநூறு ஆகிப் போன தமிழக Superman விமர்சன படுவது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்பே இல்லை( அப்படியா ????? ). இதே போல் உலக அரங்கில் இன்னொரு கதாநாயகனும் துவைத்து தொங்கவிடப் படுகிறார் என்றால் அது நிச்சயமாக SUPERMANஆகா மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் நம்ம superman கரும்பு ஜூஸ் மசினில் சிக்கும் காரணங்களை ஒப்பிடும் பொழுது SUPERMAN சக்கயாகும் காரணங்கள் உலக அரசியல் சார்ந்தவையாக இருக்கிறது. நம்ம Superman ஈழத்துக்கு போராடுவது போலா என்று கேட்பவர்கள் எப்பூடி  என்று கேட்டால் சரியாக இருக்கும்.
இன்னும் முப்பது வருடங்களில் தன் நூறு வருண்டங்களை தாண்டும் அமெரிக்க காமிக்ஸ் ரக மாவீரன் சூப்பெர்மேன். இன்று வரை அமெரிக்கர்கள் கடந்து உலக ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு அடையாளத்தை 1938 முதல் இந்த கதாபாத்திரம் நிறுவி வருவதை யாராலும் மறுக்க முடியாது. தன் சக ரக கதாபதிரங்கலான BATMAN, SPIDERMAN  போன்ற கதாபத்திரங்களை விட ஈர்க்கும் தரமும் காலத்தில் மூத்தவனும் இந்த சூப்பெர்மேன். நமது இந்திய சக்திமான், க்ரிச்ஷ் கதாபாத்திரங்கள் கூட SUPERMAN கட்டமைப்பில் இருந்ப்பதும் குறிப்பிட தக்கது. ஏனைய அமெரிக்க கதானயர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு சூபெர்மேனுக்கு உண்டு , அது சீரிய அமெரிக்க அரசியல் எதிர்ப்பு.

என்னுடைய பூவிழுந்த கண்ணில் அவதார்இல் PAAவில் வேறு ஏதோ தெரிவது போல் SUPERMAN பெருவாரியான அமெரிக்கர்களுக்கு ஒரு கம்முனிச சிந்தயாகவே தெரிகிறான். உடல் நிறம் என்னமோ நாவிகள் போல் நீளம் என்றாலும் SUPERMAN அணிந்திருக்கும் சிவப்பு ஜட்டியும் மார்பில் தாங்கி இருக்கும் சிவப்பு S சின்னமும் கம்முனிச சிந்தனையை இவர்கள் உறுதி செய்யும் முதல் காரணிகள். SUPERMANனை உருவாக்கியவர்களில் JOESHUSHTER இன் மூதயர்கள் ரஷ்யாவை சார்ந்தவர்கள் என்பது இவர்களது இரண்டாவது வாதம் . MAN OF STEEL என்ற அழைப்பு பெயர் SUPERMANக்கு உண்டு இதே பெயரில்தான் ஸ்டாலினும் புகழப்பட்டார் என்பது என்னை போன்ற உலக அரசியல் கத்துக்குட்டிகளுக்கும் விளங்கும். இன்னும் ஒரு படி மேல் சூபெர்மன் KRYPTON என்னும் உலகத்தை சேர்ந்தவன், அந்த உலகத்தில் அவன் ஒரு சாதரன மனிதன்தான். அவனால் ஒன்னுமே செய்ய முடியாது. சரி அது எங்களுக்கு தெரியுமே என்றால் ஒரு துண்டு சீட்டு - கர்ய்ப்டன் ஒரு பச்சை நிற உலகம் , அமெரிக்க பணம் டாலர் - பச்சை நிறம். பணம் இருக்கும் பணத்தால் கம்முனிச நன்மையை முடக்குகிறார்கள் என்று சொல்வது போல் இவர்களுக்கு தோன்றுகிறது.
இது வெறும் TRAILERதான் கண்ணா , மெயின் பிச்சர் இன்னும் உண்டு.

சித்தப்பு சூது எங்களுக்கும் தெரியும் என்று இதற்க்கு போட்டியாக இன்னொரு கூட்டம் சுபெர்மன் ஒரு நாஜி சிந்தனை என்கிறார்கள். SUPERMANனின் S இவர்கள் கண்ணில் நாஜிக்களின் swastika சின்னத்தின் இன்னொரு பாரிமானமாகவே தெரிகிறது.
தன்னை மற்றவர்களை விடவும் சட்டதை விட உயர்ந்தவனாகவும் தன்னை கருதிகொள்ளும் தனமும் ஹிட்லருக்கும் சுபெர்மைணுக்கும் உண்டு என்கிறது இந்த கூட்டம்.

இந்த சூழலில் SUPERMAN படங்களுக்கு இயக்குனர்கள் தயங்குகிறார்கள். எது எப்படியோ இந்த வருடம் நமக்கு SPIDERMAN - 4 விருந்து மே மாதம் உறுதி
ஆமா இந்த SPIDERMANம் சிவப்பு டிரஸ் தானே ?????

Wednesday, January 6, 2010

நாத்திகத்தில் சாதிவெறியின் புதைகுழி

நாத்திகம், பகுத்தறிவு, - போலிகள் ஜாக்கிரதை பகுதி - 3.


இதற்க்கு முன்னதான இரண்டு கட்டுரைகளும், நாத்திகம், பகுத்தறிவு பற்றி பேசி இருந்தேன். இந்த இடத்தில் ஒரு குறிப்பு சமயத்தின், கடவுளின் பெயரில் இன்றைய ஆத்திகப் போலிகள் வயிறு வளர்க்கின்றனர் - உண்மை. தமிழக நாத்திகப் போலிகளும் கடவுளை வைத்துதான் வயிறு வளர்க்கின்றனர் என்பதும் மறுக்க முடியாது. இன்றைய சூழலில் மனிதன் தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் விற்றுப் பிழைக்கிறான் என்பது நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கல்வி, தண்ணி, உடல், மன அமைதி, சுதந்திரம், சுயம், எல்லாத்தயுமே விற்று பிழைக்கும் நிலைக்கு இன்றைய மனிதன் உந்தப் பட்டிருக்கிறான், இதில் கடவுள் விதிவிலக்கல்ல. இது சாட வேண்டிய நிலை நிச்சயமாக அனால் இந்த நாத்திகப் போலிகள் இதை ஒரு சாரர்,  ஒரே ஜாதி சார்ந்த ஒரு வெறுப்பு கக்கும் முயற்சியை செய்வது மிகவும் வேதனைக்குரியது.
நாத்திகம் என்பது சிந்தனை சார்ந்த விஷயம், இன்றைய சூழலில் இது ஒரு மனநோய் வடிவில் நம்பிக்கைகளை விட்டுவிட்டு நம்புவோரை எதிர்க்கும் ஒரு அவல நிலையில்தான் தமிழகத்தில் இருக்கிறது. நம்பிக்கை எதிர்பிற்கும், நம்புவோரை எதிர்பத்ரக்கும் என்ன வேறுபாடு ?. எனக்கு பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லை. அதற்காக பெரியாரை பற்றி பேசுவது மடமை. இதற்க்கு ஒரு படி மேல் சென்று பெரியார், அவர் சார்ந்த ஜாதி, அவரை சார்ந்த மக்கள், அவர் தோற்றுவித்த அணைத்து அமைப்புகளையும் சாடுவது பேடிகளின் செயல். பெரியாரை பிடிக்கவில்லை என்பதற்கும், பெரியாரின் கொள்கைகளை பிடிக்கவில்லை என்பதற்கும் அனேக மைல்கற்கள் தூரம் உண்டு. இதையும் தாண்டி ஒரே ஜாதியினரை இதற்க்கு காரணம் கட்டி அவர்களை , பகிரும் தரத்தை தாண்டி சாடுவது , ஜாதிவெறி என்று மட்டுமே சொல்ல வேண்டும்.

போலிகளின் குறிப்புகளில் அந்தணர்களை, மிகவும் நேர்ந்து, ரசித்து திட்டுவார்கள், இல்லையேல் அந்த அடையாளுதுடன் இறுக்கம் சிலரை மட்டுமே சாடுவார்கள். ஐரோப்பிய சிந்தனையாளர்கள் குறிப்பினை மேற்கோள் காட்டி பேசும்போது கூட இவர்களால் வேறு மதங்களை , அவற்றில் உள்ள மூட நம்பிக்கைகள் பற்றி பேசும் தினவு இல்லாதவர்கள். தன்னுடை எழுத்துகள் முழுவதும் அந்தன ஜாதி வெறியை கக்கும், முடிக்கையில் ஏனைய மதங்களிலும் இத்தகைய நிலை உள்ளது என்று ஒரு வரியில் கூறி தான் பொதுவானவன் என்று காட்டிக் கொள்வார்கள். இதற்க்கு காரணம் ஒன்று தினவு அல்லது மனதிடம் இல்லாமை, அதற்கடுத்த நிலையில் தனுடைய இன்றைய / நாளைய அரசியல் உள்நோக்குகளுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாதென்று ஒரு தெளிவான முடிவு.  மூட நம்பிக்கைகளை முழுவதும் எதிர்பவர்கலேன்றால் , சில தோள்களில் தொங்கும் மஞ்சள் துண்டின் ரகசியங்கள் பகிரும் சிந்தனை ஏன் இல்லை.
எல்லாமதம் , கடவுள் சார்ந்த சிந்தனைகளை சோதிப்பவன் , முன்னர் கூறியது போல எதிர்பவன கூட இல்லை - நாத்திகன். அந்தணர்களை மட்டும் சாடும் சாதிவெறியர்கள் நாத்திகப் போலிகள் , இந்த கூடத்திற்குள் மாட்டி கொண்ட சில உண்மையான நாத்திகர்களின் நிலை " நெனச்சது ஒன்னு ; நடந்தது ஒன்னு ; அதுனால முழிக்குது அம்மாக் கண்ணு" பாடல்தான். எதிர்ப்பு என்பதற்கும் சாடுவது என்பதற்கும் , கொலைக்கும் வீரத்திற்கும் உள்ள அளவு வேற்பாடு. காந்தியின் எதிர்ப்பை விட காந்தியின் எதிர்ப்பின் முறைதான் மிகவும் பேசப்பட்டது.

Tuesday, January 5, 2010

330அடி உயரம், திகட்ட திகட்ட வானம், ஒரே அந்தரம், ஒரு கவிதைபணி நிமித்தமாக இந்த உயரங்களில் நின்ற போது எனக்குள் நோதித்தவை

இந்த நொடியிலிருந்து

தன்னை கீறிய கோட்டுக்குள்
அடைத்து கொண்ட
ஜனநாயக நிலகிழாருக்கு
நான் சொந்தமில்லை


இனி தூரங்களின் காதலனில்லை
உயரங்களின் தூதுவன் நான் 
 
இனி எங்கு சென்றாலும்
காற்றின் கலாபம் -
வரட்சி பேதங்கலில்லை
வகுப்பு போதனைகள் இல்லை

இதழில்லாலாமல் யார் யாரோ
முத்தமிடுகிறார்கள்.
உடலில்லாமல் சிலர்
உரசிக் கொண்டிருந்தனர்


உயரங்களின் வன்புணர்ச்சி
பயங்களுக்கு பெயரிட்டு
உப்பின் முத்துக்களை
உமிழத் தொடங்கின
உடல் சுரப்பிகள்.

முதுமைசூடாத மேகங்கள்
முயல் முகத்துடன்,
முனியன் அரிவாள் போல் ஒன்று
வெண்நீல நெருப்பாய் ஒன்று
அத்தனையும் முகங்கள்
எதுவுமே முகமுடிகள் இல்லை

தரைவாழ் நரர்கலே

இரவலாய் ஒரு நுரையீரல் அனுப்புங்கள்
புல்லறுக்க வரும்
புறாவிடம் அனுப்பிடுக

நீவிர் யாரும் வர வேண்டாம்
வேறுபாட்டின் நிரல்களின்
ஜீரண சக்தி வானத்திற்க்கு இல்லை

என்னோடு நின்று பார்த்தல்
ஒரு உண்மை புரியும்
வாய் முடி இருக்கும்
பூமியே வகுப்புவாத சிந்தனை
வளங்கள் ஓரிடம்
வெடிக்கும் மலைகள் ஓரிடம்
யாரோ திணித்த சுதந்திரம்
எனக்கு வேண்டாம்
இனம் முடிந்து கொள்ளும்
சமாதானமும் வேண்டாம்
இங்கேயே விட்டு விடுங்கள்
இது கனவாயினும்,
என்னை எழுப்ப வேண்டாம்

Sunday, January 3, 2010

வரலாறு தொலைக்கும் நகரங்கள்


அண்மையில் பணி நிமித்தமாக நாக்பூர் நகரில் சில நாட்கள் தங்க வேண்டியதாக இருந்தது. நாக்பூர் நமது இந்திய நகரங்களில் முன்னேற்றப் பாதையில் ஓடிகொண்டிருப்பதாக பறைசாற்றும் பெரிய நகரங்களில் தூய்மையான நகரம். இந்த நகரத்திற்கு இன்னும் சில முக்கியமான குறிப்புகளும் உண்டு. நமது தேசத்தில் மையப் புள்ளி என்று கூற வேண்டும் என்றால் அது நாக்பூர். நமது தூரங்களின் கனகீடுகலான ZEROமைல்கல் இங்கிருந்துதான் துவங்குகிறது. நாக்பூர் நமது நாட்டின் ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப் படுகிறது . இங்கு விளையும் கொய்யாக்களும் மிக சிறப்பான சுவைகளை கொண்டவையே.
ஒரு மாநிலத்தில் பொதுவாக ஒரே ஒரு RBI கிளைதான் இருக்கும் அனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மும்பையில் ஒன்று, கூடுதலாக நாக்பூரிலும் ஒன்று உண்டு. அரசியல் ரீதியாக இந்த இடத்தில்தான் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறினார். இங்குள்ள தீக்ஷ பூமி என்னும் இடத்தில்தான் அவருடைய நினைவு மணிமண்டபத்தில் அவருடைய சாம்பல் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆசியாவின் மிகப் பெரிய மதமாற்ற   ஸ்தலமாக நாக்பூர் விளங்குகிறது. வருட வருடம் புத்த பூர்ணிமா அன்று அம்பேத்கர் மதம் மாறிய அதே இடத்தில் வேறு சில மதத்திலிருந்து புத்த மதத்தை பெரும்பாலானோர் தழுவுகின்றனர். முன்னாபாய் M.B.B.S, 3-IDIOTS போன்ற திரைப் படங்களின் இயக்குனர் ராஜு ஹிரானியும், ஸ்வதேஸ் படத்தின் நாயகி காயத்ரியும் இந்த ஊர்காரர்கள்.
HALDIRAMS ( நொறுக்குத் தீனி ) இந்த ஊர்காரர்கல்தான்
இந்தியாவின் மிகப் பெரிய பன்னாட்டு விமான நிலையம் இங்கு பல கோடி செலவில் அமைக்கப் பட்டு வருகிறது. இந்திய வரலாற்றின் மிகப் பெரிய பொது நல திட்டம் MIHAN என்ற பெயரில் அது செயலாக்கப் பட்டு வருகிறது. நமது நாட்டின் மையப் புள்ளி என்பதால் இந்த திட்டம் நாக்பூரின் தலையெழுத்தை புரட்டி போடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏனைய இந்தியாவின் மற்ற திட்டங்களை போல் இந்த திட்டமும் நீண்ட நாலா பின்னடைவை சந்தித்து வருகிறது. தெரிஞ்சுகிட்டே ஏன்னு கேக்க கூடாது அதான்அரசுத் திட்டம்ன்னு சொல்றேன்ல. துவங்க வேண்டிய இந்த விமான நிலையம் இன்றைய நிலையில் துவங்குவது மிகவும் கடினம்.
நீவிர் சென்று வந்த சுற்றுலா பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை வரைகன்னு பழகுன பழக்கம். அப்படில்லாம் விற்ற முடியாது.

இந்த ஊரில் உற்று நோக்குபவர்களுக்கு ஒரு வியப்பு காத்திருக்கும் ஒரு தெருவுக்கு மிகச் சாதரணமாக 8 முதல் 10 வரை பல் மருத்துவர்கள் உண்டு. எதுக்கு இத்தனை பேர்? . இங்க என்ன RBI மாதிரி பல்லும் அதிகமான்னு கேட்டா-  இல்லங்க. இங்கு பல் உபாதைகள் அதிகம். ஆரஞ்சு சாப்ட்ரதுனாலயன்னு கேட்டா அதுவும் இல்ல, கொய்யாவும் இல்லைங்க. நமது சென்னை பான் பீட கடைகளில் கிடைக்கும் 'மேவா' வகையில் குட்காவின் பெரிய பெரியப்பாவும் சுண்ணாம்பின் தலை மகனுமான கற்றாரே என்னும் லாகிரி வஸ்து இதற்க்குக் காரணம். இங்குள்ள சுள்ளான் முதல் இந்தியன் தாத்தா வரை இதற்க்கு அடிமைகள். இந்த வகை மாட்டர்கள் வேறு இந்தியாவில் எங்குமே கிடையாது என்று இதனை குடிசைத் தொழிலாக செய்பவர்கள் சவால் விடுகின்றனர். ஒரு கில்மா குறிப்பு நாக்பூரின் தட்பவெப்ப நிலை நவம்பர் முதல் FEBRAURY வரை மிக குளுகுளுவென்று இருக்கும் அதனால் எல்லா கட்சி தலைவர்களும் கட்டாயமாக இங்கு வருகிறார்கள். காதகுடுங்க நம்ம மகாராஷ்டிராவின் பெரிய தலை பிள்ளைகளில் 40சதவிகிதத்தினர் இங்குதான் CODING செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று சட்ட வல்லுனர்கள் SSHSHHH.  ஆதலால் வருடத்தின் இந்த நேரத்தில் BANNERகளின் விற்பனையும் ஹோர்டிங்க்ஸ்களின் விற்பனையும் மேகம் முட்டி மண்டை வீங்குமாம்.
இம்புட்டையும் சேக்கும்போது இந்த ஊருக்கு ஏன் நாக்புர்ன்னு பேரு வந்துச்சுன்னு ஒரு கேள்வியில் தொக்கினேன் , வரிசையாக இங்க ஏதாவது விமர்சையான நாக தெய்வத்தின் கோயில் இருக்கான்னு கேட்டேன். அப்படி ஏதும் கோயில் இங்கு இல்லை. பின்ன ஏன் நாக்பூர் ன்னு பேரு எதாவது நாக் என்ற பெயரோ, அடைமொழியோ, பெயரின் ஒரு பகுதியோ கொண்ட ஏதாவது தலைவரின் சுட்டுப் பெயரா- இல்லை. இப்படி தோண்ட தோண்ட இல்லை என்ற பதில் மட்டும் வந்தது. அனால் இங்குள்ள மக்களில் அதிகம் பேருக்கு ஏன் என்ற காரணம் தெரியவில்லை. கூடவே கொண்டு போயிருந்த விக்கோ பேஸ்ட் போட்டு துலக்க ஆரம்பித்தேன், இங்கு நாக் என்னும் நதி ஓடியதாம் அதை சார்ந்து வளர்ந்த நாகரிகம் என்பதால் இந்த ஊருக்கு நாக்பூர் என்று பெயர். இந்த நாக் நதியும் ஓடாயாகிப் போய் கூவத்தின் முகச் சாயலில் இன்று இருந்து வருகிறது. அதை விட வருத்தம் பெற்ற தாயின் பெயரை இந்த நகர மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து வருகிறார்கள் என்பதே. இது என்ன பெரிய பொருட்டன்னு கேட்டா. நிச்சயமாக . இம்சை அரசனின் நகைசுவையாய் வந்தாலும் அந்த வசனம் மிகவும் முக்கியமானது " வரலாறு முக்கியம் அமைச்சரே ". அதை நாம் சரியாக பதிவு செய்யாததுதான் நமது மிகப் பெரிய மடமை. அது இங்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெரும்பஞான நகரங்கள், ஏனைய அடையாளங்களின் நிலையும் இதே அவலம்தான்.

Saturday, January 2, 2010

CALENDAR - நாட்காட்டி வரலாறு; அதற்க்கு முன்னாள் ??

இன்றைய சூழ்நிலையில் மனிதனிடம் ஒரு நாள் என்ன நாள் என்று கண்டு பிடிக்க CALENDAR அதாவது நாட்காட்டி வேண்டும். நாட்காட்டி இருந்தாலே பலருக்கு இன்றைய நாள் என்னவென்று தெரியாது. இன்று நாம் பயன்படுத்தும் CALENDAR என்னும் சொல் நாட்களை கணக்கில் கொள்ளும் வழக்கத்தை குறிப்பதே. இந்த காலெண்டரை அறிமுகம் செய்தவர் போப் கிராக்ரி ( POPE GREGORY )  என்பவரே , அதனால் இந்த முறையை உலகெங்கிலும் உள்ளவர்கள் கிரகோரியன் ( GREGORIAN ) காலேண்டர் என்று அவருடைய பெயரிலேயே அழைகின்றனர். 
அப்படின்னா இவருக்கு முன்னாடி ஒரு நாளே கெடயாதா ? ஒரு மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதியின் நாளை எப்படி கனகிட்டர்கள்.

இதை இந்திய முறைப்படி பஞ்சாங்கம் என்பார்கள். இதில் வரும் அனைத்துமே துல்லியமாக கணக்கிடப் பட்டவையே. எண்களின் அடிபடையில் நெய்யப்பட்ட முறையே இந்த பஞ்சாங்கம். அதை இந்த 2010 ஆங்கில வருடத்திற்காக மொழி பெயர்த்தால் ??? ( எண் கட்டுமானங்களை மட்டுமே விவரிக்கும் விளக்கம் )

இதுல எங்க நாள் இருக்கு ? இதுக்கப்புறம் ஒரு குட்டி கூட்டல் அதுகப்புறம் ஒரு வகுத்தல் நாள் என்னன்னு உங்களுக்கு தெரிய வரும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஒவ்வொரு நாளுக்கும் மாதத்திற்கும் ஒரு எண் கொடுக்கப் பட்டிருக்கிறது அதே போல் 2010 இக்கு 6 என்னும் எண் கொடுக்கப்பட்டுள்ளது .
ஷ்ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே
 
ஒரு தேதி தேர்ந்தேடுங்கள் அந்த மாதத்தின் குறிப்பு எண்ணையும் இந்த வருடத்தின் குறிப்பு எண் 6யும் அதனுடன் கூட்டிக் கொள்ளுங்கள் இப்போது அதனை 7 ஆள் வகுத்து வரும் மிகுதியை நாட்களுக்கு கொடுக்கப் பட்ட எண்ணில் ஒப்பிட்டால் அந்த நாள் கிடைத்து விடும்..
எடுத்துகாட்டு 22 மார்ச் என்ன கிழமை.
22 + 2 ( மாதத்தின் எண் ) + 6 ( வருடத்தின் குறிப்பு எண் ) = 30 / 7 அதன் மிகுதி ( REMAINDER ) - 2.  வரிசையில் 2காண நாள் திங்கட்கிழமை
 
செக் செய்யவும்


அந்த கூட்டுஎண் [7,14, 21, 28 , 35 ] சரியாக வகுபடுகையில்- மிகுதி இல்லாமல்
அதனை 0 கொள்க இப்போது 0 காண நாள் - சனி

எடுத்துகாட்டு 3 - ஏப்ரல்
3 + 5 ( மாதத்தின் எண் ) + 6 ( வருடத்தின் குறிப்பு எண் ) = 14 / 7 அதன் மிகுதி ( REMAINDER ) - 0. வரிசையில் 0காண நாள்  சனி
இந்த பகுத்தறிவு போதுமா ???