Tuesday, February 23, 2010

ஒருத்திக்காய் நனையாமல் இருக்கும் சுவர்கள்

அவளுடைய மஞ்சளின் நுன்மேனிகளில்
இன்னும் கட்டுண்டு கிடக்கும்
கற்பு குலைந்த கம்பளிகள்
 
அவள் பருகி மறுதலித்த
என்னுடல் கொப்பளங்களில் கருத்தரித்த
நிமிடங்களை அடைகாக்கும் மெத்தைகள்
 
ஒவ்வொரு காலையிலும்
நீயா நெற்றியில் சூடு பரப்புவது ??
என்று பால்காரன் விரல்களில்
ஏமாந்து போகும் அழைப்புமணி பொத்தான்கள்
 
நீ எப்போதாவது உதட்டழகை மறைக்கப்
பூசும் உதட்டுச் சாயங்கள்
மூண்டு கிடக்கும் அலைபேசி த்வாரங்கள்
 

இன்றும் நீ மூட்டிய கனலை
விதைத்துக் கொண்டு உன் ரேகைகளாய்
பிரகாசிக்கும் விளக்கின் திரி முனைகள்
 
உன்னால் தன்னுடல் பிரிந்த
துளசி இலைகள் இன்னும்
உனக்காய் உயிர் பிரியாமல்
திருமேனிகளின் திருவடியில்
 
முதுகுப் புறங்களில்
நீ வருடுவதில்லை என்று
முகங்களில் மொங்கோளியக் கண்களில்
கதிர் மறுக்கும் சாலரச் சீலைகள்

எனக்குள் ஆர்கிமெடிஸ்
அழைத்துவரும் உன்னுடன், மட்டுமே
நனையக் காத்திருக்கும்
குளியலறை சுவர்கள்

பெற்றவர்கள் அழைத்தார்கலென்று
என் கண்மறைவில் பிள்ளை பெறுவதற்க்காய்
கை கடிகாரம் போல்
என்னை கழற்றி வைத்துப் போன உன்னை
இவைகளோடு அற்றிணையாய் நின்று விளிக்கிறேன்
வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும்
நேரங்களை பிதிக்கி
உன்னை நொதித்து கொண்டிருக்கும்ஒருவன்

மனசாட்சி : பண்றதெல்லாம் பண்ணிபுட்டு, கவிதை வேற

Sunday, February 21, 2010

3 IDIOTS - காற்றில் தொங்கும் கேள்விகள்( மாற்றுப் பார்வை )

இந்தப் படம் வெளியான உடனேயே இந்தப் பதிவ போடணும்னு நெனச்சேன், இன்னும் சிலர் இந்தப் படத்த இன்னும் பாக்கலேன்னு சொன்னாங்க, அதனால இத இத்தனை நாள் தள்ளி போடுறேன். இந்த கருத்துக்களை படிச்சிட்டு இந்தப் படாத பார்த்த கண்டிப்பா படத்தில் நிலைக்கும் நகைசுவை ரசிக்கும் திறன் இருக்காது. இந்தப் படம் முழுக்க முழுக்க இந்திய கல்வித் தரத்தை அது விதைக்கும் சமுதாய நிரல்களையும் சாடிய முதல்ப் படம் என்று நமக்கு தெரியும் இந்தப் படத்தில் சில பொருள்களை இயக்குனர் சில கட்சிகளில் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது, என்பார்களே அது போல் கை ஆண்டு இருக்கிறார். இங்கே பகிரப் படும் கருத்துக்கள் உங்களுக்கும் தோன்றியவை என்றால் மிகவும் மகிழ்ச்சி இல்லையென்றால் இந்தப் பதிவு உங்களுக்குதான் வாழ்த்துக்கள்.


ஆசிரியர்களைப் பற்றி: பொம்மன் இராணி ஏற்று நடித்த வீறு சஹாஸ்ரபுதே என்ற பாத்திரம். அரச காலத்து COUCHவகை கட்டிலில் OPERAவகை இசையில் உறங்கும் கட்சி - இன்னும் பழங்காலத்தில், மேற்கத்திய மோகத்தில் இன்றைய ஆசிரியர்கள் நின்று கொண்டிருப்பதாக இந்த கட்சி வெளிப்பாடு இருக்கிறது. பல இடங்களில் இவர் வெளி நாட்டிற்க்கு செல்வதைப் பற்றி மேன்மையாக பேசுவதையும் காட்டி இருக்கிறார்.
மிக முக்கியமாக ஆமிர்கான் இரண்டு வார்த்தைகளை( Farhanitrate Prerajulisation) குடுத்து தேடச் சொல்லும் கட்சி. ஒரு புரட்சியான கேள்வியை நிறுத்தி விட்டு அவர் ஓடி விடுகிறார். அதே கல்லூரியில் பல வருடங்களாக பாடம் நடத்தி வரும் ஆசிரியர். தனக்கு தெரிந்ததை மிக தெளிவாய் முன் வைக்கும் VEERU SAHASRBUDDHE பத்திரம் இந்த இடந்தில் மழுங்கி நிற்கும். ஒரு பாடபுத்தகத்தை மாணவர்களை விட அதிகம் படித்தவர் ஆசிரியராக இருப்பார், இருந்தும் இந்த இரண்டு வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் இல்லை என்று இந்த பாத்திரம் தைரியமாக சொல்ல வில்லை. இப்படி தன்னன்பிக்கை இல்லாத படிப்பு தேவையா ? - என்ற தொக்கி நிற்கும் ஒரு கேள்வியை இந்தக் காட்சி செருகிச் செல்கிறது.

பட்டமும் படிப்பும்: வேலைக்காரன் படத்தில் ரஜினி அறிமுகப் பாடல் 'வேலை இல்லாதவன்தான்' - இன்று வரை மனோவின் மிக முக்கியமான பாடலாக கருதப் பட்டு வரும் இந்தப் பாடலில் இரண்டு வரிகள் - படிச்சவுங்க வாங்குற பட்டம் காகிதம்தான் காகிதம்தான்; படிக்காதவன் விடுற பட்டமும் காகிதம்தான் இதன் கருத்துப் பதிவு இந்தப் படத்திலும் உண்டு. ஆமிர்க்ஹான் 'ராஞ்சோத் தாஸ் ஷ்யாமல் தாஸ் ஜானஜாத்' என்ற பெயரில் படித்து போரியல் இல நிலைப் பட்டம் பெறுவார், இவரை அதே பெயரில் தேடிச் செல்லும் நண்பர்களுக்கு அந்த பட்டம் அந்தப் பெயருள்ள இன்னொருவரிடம் இருப்பது போல் காட்டப் படும். இதில் நகைச்சுவை மழித்து விட்டு பார்த்தால், இன்றைய பட்டங்கள் வெறும் பெயருக்கு பின்னால், நமது வீட்டு வரவேற்ப்பரையில் தொங்க விட மட்டும் பயன் படுகின்றன - இன்றைய படிப்பிலும் பட்டங்களிலும் அறிவு தூண்டுதளுக்கான, சிந்தனைகளுக்கான ஊற்று - இவற்றுக்கான வெகுமதிகளாய் இன்றைய பட்டங்கள் இல்லை என்பதையே இந்த காட்சிகள் பதிவு செய்கின்றன

Education just begins with Books; misfortunate in this subcontinent it also ends there

Wednesday, February 10, 2010

நீலப்படங்களும் ( BLUEFILMS)சில நாத்திகர்களும்

நாத்திகம் பகுத்தறிவு - போலிகள் ஜாக்கிரதை - பகுதி 7

இந்த பதிவை படிப்பதற்கு நீங்கள் நீலப் படங்கள் பார்த்திருக்க வேண்டியதில்லை, சில நாத்திகப் போலிகளின் கட்டுரைகள், அல்லது சில கூட்டங்கலாவது பார்த்திருக்க வேண்டும்.
உலகின் எல்லா நாடுகளிலும் இன்று சட்ட அனுமதியுடனோ, சட்டத்திற்கு புறம்பாகவோ நீலப் படங்கள் தயாரித்து வெளியிடப் படுகின்றன. அன்றைய காஸ்செட் கடைகள்முதல் இன்றைய திருட்டு வீ சி டீ மார்க்கெட்கள் வரை நீங்கள் வாங்குவதற்காக, சென்ற படங்களை வாங்கி முடித்த பின்னர் அல்லது வாங்காமல் காலிக் கையுடன் செல்லும் பட்சத்தில் " வேற ஏதாவது வேணுமா சார் ?? " என்று இந்தப் படங்கள் நமக்கு விற்கப்படும். இந்தப் படம் வாங்குவதற்காகவே சென்று அந்த கடைசி கேள்விவரை கடைகாரர்களை இம்சிப்பவகளும் உண்டு. மற்ற மொழித் திரைப் படங்கள் அறிமுகத்திற்கு, முன்னமே இன்றைய சூழலில் மற்ற மொழி நீலப் படங்கள் அறிமுகம் ஆகி விடுகின்றன, இல்லையேல் அதன் சமகாலத்தில் அறிமுகம் ஆகி விடுகின்றன. சிலருக்கு மீசையுடன் முளைக்கும் இந்த மோக முள், திவாரி ஆகியும் விடுவதாக இல்லை என்பது உண்மை, இந்த வகைபடங்களில், XXX, PORN, HARDCORE, SOFT PORN, BDSM, BONDAGE, INCEST, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

இந்த வகை படங்கள் எல்லாமே பாலுணர்வை சார்ந்த பதிவுகள் என்று கருத்துள்ளவரா நீங்கள்?. இன்னொரு முறை சிந்தியுங்கள் இதில் பேசப் படுவது பாலுனர்வா ?. இந்த வகைப் படங்களில் சில பாலியல் கல்வி படங்கள் வரவில்லை என்பது என் கருத்தல்ல. அனால் இவை அனைத்தும் பாலுணர்வு சார்ந்த படைப்புகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவை அனைத்துமே ஒரு பெண்ணின் உடல் அவயங்களை பற்றிய கொச்சையான கண்ணோட்டங்கள் இன்னும் சரியாகச் சொன்னால் ஒரு பெண்ணின் 'மார்பை' வைத்து மட்டும் இவை சுழல்கிறது. ஒவ்வொரு உடல் உறுப்புகள் காண்பிக்கப் படுவதை வைத்து அந்த படங்கள் தரம்(??) பிரிக்கப் படுகின்றன, ஆனால் எல்லாப் படங்களுக்குமே மிக முக்கியமான விற்பனை அடிபடையாக அமைவது, ஒரு அல்லது சில பெண்களின் மார்பகம் மட்டுமே. இது ஒரு விதமான ஆணாதிக்க சிந்தனை என்பதை விட, இது துளித்துளியாக ஊட்டப்படும் மனநோய். பெண்ணின் மற்ற உடல் உறுப்புகளும், ஆணின் உடல் உறுப்புகளும், காட்டப்பட்டாலும் , இந்த வகை படங்கள் எல்லாமே பெண்ணின் மார்பை முன்னிறுத்தியே சந்தயிடும். இதன் மறைமுக வெளிப்பாடே இன்றைய உலக திரைப்படங்களில் பெண்ணின் மார்புசார்ந்த உடை - குறைப்பு. இவை பாலியல் சார்ந்தவை அல்ல, இவை வக்கிர போதனைகள் என்பதற்கு இவை சான்றுகளே.
இது போலவேதான் இன்றைய சூழலில் சில பல நாத்திகப் போலிகளின் கருத்துக்களும் பகுத்தறிவு என்று தோற்றத்தில் பார்பன வெறியர்களை தயார் செய்து கொண்டு இருக்கிறது. பெண்ணின் மார்பு என்று ஒரே கோட்பாட்டில் விற்கப்படும் நீலப் படங்களைப் போல் இவர்களின் ஒரே சந்தயிடும் கருத்து பார்பன எதிர்ப்பு. இந்த படங்கள் பாலியல் அறிவு என்ற போர்வையில் வருவது போல் இவர்களுக்கும் பகுத்தறிவு என்பது முகவுரை. இந்த அடிபடையில் இவர்கள் விதைப்பது வெறியும் நாளைய நிலைக்கு மனநோயும். இந்தப் போலிகளின் கருத்துப் பதிவுகளுக்குள் போய் பார்த்தால் இவர்களை எல்லா பார்பனர்களும் எதிர்ப்பது போல் தெரியும். இந்த எதிர்ப்பில் உணர வேண்டிய இரண்டு விடயங்கள். 1. இவர்கள் தங்களை எதிர்பவர்கள் எல்லோரையுமே பார்பனர்கள் அல்லது பார்பன சிந்தனையாளர்கள் என்று தனதாகவே, ஜாதி சான்றிதல் வழங்கி விடுவார்கள். அவர்கள் தன கருத்தை பதிந்ததற்கு, அவர்களின் ஜாதி அடிபடையில் அவர்களை எதிர்க்கும் ஒரு தேர்ந்த அரசியல் யுக்தி. ஜாதி சமூகதிர்க்குக் கேடு என்று உரக்க சொல்லிவிட்டு, பார்பனர்களை எதிர்ப்போம் என்று வீரமுழக்கம் செய்வார்கள். 2. இவர்கள் பார்பன எதிர்ப்பாளர்கள் - மற்ற யாருக்கும் இவர்களை எதிர்க்கும் தேவை இல்லை. மேல்சாதி அடக்குமுறைகளை உடைப்போம் என்று கர்ஜனை செய்து விட்டு பார்பன எதிர்ப்பை மட்டும் விதைக்கும் வீரர்கள். இவர்களுக்கே தான் பார்பனர்களை மட்டும்தான் எதிர்க்கிறோம் என்று உண்மை புரிந்த நிலையில் , இவர்களை எதிர்க்கும் அனைவரையுமே பார்பனர்கள் என்றே அணுகும் மனப்போக்கு உள்ளவர்கள் இன்றைய பகுத்தறிவுப் போலிகள்.
தன்னை மாவீரன் என்று மார்தட்டி, -  சிங்கமாக, புலியாக உருவகம் செய்து கொள்ளும், நரி அல்லது ஒரு ஓநாயின் சுய இன்ப சிந்தனை மட்டுமே .

ஒரு நாள் கிணற்றின் நீர் துர்நாற்றம் அடித்து கொண்டு இருந்தது. அந்தக் கிணற்றில் ஏதோ விழுந்திறக்க வேண்டும் என்று பார்க்கையில்,. ஏதோ ஒன்று மிதப்பதை உணர்ந்து கொண்டு, எப்படி எடுப்பது என்று பல வித பொறியியல் யுக்திகளை ஆராய்ந்தேன். அம்மா என்னிடம் கிணற்று வாலியை வைத்தே எடுத்து விடலாம் என்று மிக எளிமையாக ஒரு தீர்வு சொன்னார். அப்படியே செய்தோம். ஒரு இறந்து போன குருவியின் உடல் வெளியில் எடுத்தோம். இந்த குருவியின் அழுகிய உடலின் வாசனை இந்த கிணற்று நீரை பாலாக்கி விட்டதே, இனிமேல் அந்த கிணற்று நீரை எப்படி பயன்படுத்துவது என்று கேட்ட பொழுது, மீண்டும் அம்மா சொன்னது இப்பொழுது அந்தக் கிணற்றின் நீர் அந்த துர்நாற்றம் இல்லாமல் இருக்கும். இப்படித்தான் நமது சமுகத்தில் ஒரு அழுகிய கீழ்த்தரமான சிந்தனை விழுந்து விடுகையில் அவை பழகவொண்ணா துர்நாற்றங்களை அது நமக்கு விளைவிக்கிறது. அந்த சிந்தனையை அகற்றி விட்டால் அது மீண்டும் புழங்குதளுக்கு ஏதுவாகி விடுகிறது. இந்த எடுத்துக்காட்டில் அதை சிந்தனி என்று சொல்லாமல் அவற்றை பார்பனர்கள் என்று பார்பவர்கள் - இன்றைய போலி நாத்திகர்கள்.இவர்கள் இதையேதான் மற்றவர்களுக்கும் காட்டுகிறார்கள்,. இவர்களுக்கு அதன் உண்மை விளங்கிய பின்னரும் தன்னுடைய உள்நோக்கிர்காக அதையே மற்றவர்களுக்குப் போதிக்கிறார்கள். தன்னை எதிர்க்கும் அந்தன குடும்பத்தை சார்ந்த சிலரை மறைமுகமாக எதிர்ப்பதற்கு இவர்களை நமது அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது கண்கூடானது. இவர்கள் பகுத்தறிவுவாதிகளும் அல்லர் இவர்கள் பேசுவது நாத்திகமும் அல்ல. நாத்திகரின் எடுத்துகாட்டு மனோவியலின் தந்தையாக வணங்கப்படும் - SIGMUND FREUD.

இவர் கடவுளை நம்ப வில்லை, சமயங்களுக்கு உடன் படவில்லை . அதற்கெல்லாம் மேலாக அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்க வில்லை. ஆக்கப் பூர்வமாக சிந்தனைக்கு வித்திட்டார்.

நீங்கள் நாத்திகரா ? அல்லது, ஜாதி மத (எதிரி), வெறியரா ?

Thursday, February 4, 2010

QUOTA - என்னும் ஒரு ஈன அரசியல் கும்மி.

பார்த்தீர்களா எப்படி ஒரு பார்பனீய சிந்தனை - என்று இந்தப் பதிப்பை குறிப்பிடுவோர்களுக்கும், பின்னூட்டம் போடப்போகும் பகிரவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களும், ஒரு ஒலி( ?? ) மயமான அரசியல் எதிர்கால வாழ்த்துக்களும்.

இன்றைய இந்திய அரசியல் திட்டத்தில் மிகவும் முக்கியமான் இடத்தை வகிப்பது இந்த 'இடஒதுக்கீடு' சார்ந்த சிந்தனை.முன்மொழியப் பட்ட காலத்தில், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும், ஒடுக்கப் பட்ட சமூகத்தினருக்கும் முன்னுரிமையை நிலைநிறுத்தி சட்டமாக இயக்கப் பட்டது இந்த இட ஒதுக்கீடு. அன்றைய காலகட்டத்தில் இது இல்லையென்றால் இன்று சில மக்கள் சுதந்திரம் என்பதின் உண்மை கூட தெரியாமலே வாழ்ந்திருப்பார்கள் என்பது உண்மையே. ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது எப்படி இருக்கிறது. ஒரு சரியான கருவி தவறான முறையில் பயன் படுத்தப்படுகிறது என்பதையும் மறுத்து விட முடியாது. இந்த ஒரு வார்த்தையினால் எவ்வளவு அரசியல் மாற்றங்களை, எத்தனை கலவரங்களை நமது நாடு சந்தித்திருக்கிறது என்பது உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
BOMBS DONT KILL; BUT BOMBERS - மக்களை அணுகுண்டுகள் கொள்வதில்லை ஆனால் அதை வைக்கும் மணிதன் என்று கேளிக்கையான ஒரு வரி உண்டு. இதில் உள்ள உண்மையை இந்த இட ஒதுகீடிர்க்கும் பொருத்திவிடலாம். ( அங்க யாருங்க - இட ஒதுக்கீட்டை எப்படி அணுகுண்டோட ஒப்பிடுறான் பாருன்னு கேக்குறது - உங்களுக்கு முடிச்சு போடுறத தவிர வேற வேல இல்லியா ???.) இது அரசியல இல்லை உண்மையிலேய இன்று அது சரியாக பயன்படுகிறது என்பதை விளக்கி உங்களுக்கு கொட்டாவி வரவைக்க வேண்டாம். சில கேள்விகள் மட்டும். முன்வைப்போம் அதுக்கு நம்ம சமுக மேம்பாட்டிற்கு பாபாபாபாபாபாபாபாபாபாபாபாடுபடும் தோழர் தோழிகள் விளக்கம் அளித்து என் மரமண்டைகளுக்குப் புரிய வைக்கட்டும்.
காலவரையறை
இந்த இடஒதுக்கீடு கடந்த 60 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வரையறுக்கப் பட்டிருக்கு ??? இதற்க்கு ஏதாவது கால வரையறை உள்ளதா? இன்னும் 50 வருடம், 100வருடம், 1000வருடம் என்று எங்காவது ஒரு வரையறை???. நமது அரசியல் அமைப்பில் காலவரையறை இல்லாத ஒரு திட்டம் இது !!!!. காலவரையறை இல்லாமல் எப்படி இதை செயல்படுத்தப் போகிறோம் ??? பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேறும் வரை - ஆஹா என்னே ஒரு முன்னேற்ற சிந்தனை, நல்லது - எத்தனை ஆண்டுகளில் அவர்களை நாம் முன்னேற்றம் அடைய செய்யப் போகிறோம் ?? , அதற்க்கு என்னவெல்லாம் எதுவாய் செய்யப் போகிறோம் ??, அது செயபடாத பட்சத்தில் மாற்று என்ன ??, இது செயல் இழந்த பட்சத்தில் யார் பொறுப்பு ??. அவருக்கு என்ன தண்டனை( செயல் படுத்த முடியாமைக்கு அவர் சரியான அடிபடையில் காரணம் சொல்லவில்லை என்றால் )??. ஒரு நீண்ட கால திட்டத்தை சிறு சிறு கால வராக பிரித்து அதற்க்கு எய்துவாய் செய்யலாம். அவவப்போது அதன் நடவடிக்கைகள் வெளியிடப் பட்டு அதன் முன்னேற்றங்கள் கண்காணிக்கப் படவேன்டாமா?. 
ஜாதி ஒழிப்பு - ஜாதிகளின் முன்னேற்றம் .
இந்த திட்டம் கடந்த வருடங்களுக்கு முன்னால் உருவானது அன்றய சூழ்நிலையில் இருந்த ஜாதிகளின் பொருளாதார அடிப்படையில் அவைகள் ஒவ்வொரு நிலையிலும் வைக்கப் பட்டு வகுக்கப்பட்டன. அதற்குப் பின்னால் இந்த அட்டவணை முழுமையாக எப்போது புதுபிக்கப் பட்டது??.இனி எப்போது செய்யப் படும் ??. இனிமேல்தான் செய்யப் போகிறார்கள் என்றால் ஏன் ஒரு முறை கூட செய்யவில்லை. ??ஜாதிகள் இல்லாத சமுகம் அமைப்போம் !! இன்றும் ஜாதி உள்ளன - பிறப்பின் அடிப்படையில். சரி இந்த அடிப்பையில் 60வருடங்களுக்கு முன்னால் பிற்படுத்தப் பட்ட ஒரு சமுகம் இன்று முன்னேறி இருக்கிறது என்றால் அவர்களை வேறு பிரிவன் கீழ் ஏன் கொண்டு வருவதில்லை ???. இன்று வரை தங்கள் ஜாதியும் பிற்படுத்தப் பட்ட ஜாதி என்று ஆக்கப் பட வேண்டும் என்று பல ஜாதிகள் போராட்டம் நடத்தப் பட்டு வருகின்றனவே. ??ஒரு ஜாதி அமைப்பு கூட நாங்கள் முன்னேறி விட்டோம் எங்களை முன்னேரியவர்களாய் மாற்றி பதிவு செய்யுங்கள் என்று போராட்டம் நடத்தினார்களா ?. ஒரு ஜாதி/மரபு கூட முன்னேறவே இல்லியா. - இந்த திட்டம் என்ன செய்கிறது ???
முன்னேற்றம்
முன்னேற்றம் என்றால் என்ன ? எதை நாம் அடிபடையகக் கொண்டு இவர்கள் முன்னேறியவர்கள் இவர் இன்னும் முன்னேறவில்லை என்று வரையறுக்கிறோம். கல்வி, உணவு,சொத்துக்கள், சிந்திக்கும் நிலை, எதனை முன்னிறுத்தி இந்த முன்னேற்றத்தின் சக்கரம் சுழல்கிறது. மாதம் இவ்ளோ ரூபாய் சம்பாரிக்கும் ஒரு குடும்பம் முன்னேறி விட்டது, இவ்வளவு படித்த ஒரு குடும்பம் முன்னேறி விட்டது, இவ்வளவு ஒரு நாளைக்கு உண்ணும் குடும்பம், இவ்வளவு சிந்திக்கும் ( ?? ) ஒரு குடும்பம் முன்னேறி விட்டது ?? இதன் அடிப்படையில் முன்னாளில் முன்னேறியதாக அறிவிக்கப் பட்ட ஒரு சமுகத்தின் ஒரு பிரிவினர் அல்லது ஒரு குடும்பத்தினர் இருந்தால் அவர்களுக்கு இந்த அடிபடையில் முன்னிரிமை வழங்க முடியுமா. ???.
பொது

இவ்வளவு முக்கியமான வாழ்வியல் அடிப்படைக்கு வழி வகுக்கும் ஒரு விஷயத்தை பள்ளி பாடப் புத்தகங்களில் ஏன் நாம் பாடங்களாக விளக்கமாக படிப்பதில்லை???. சிறு வயது முதல் இதன் புரிதல் ஏன் மக்களுக்கு வழங்கப் படுவதில்லை ?? இதை செய்து விட்டால் நம் நாட்டிற்க்காக உழைத்து ஓடா.......ய்த் தன் வாழ்கையை தேய்த்து கொண்டிருக்கும் சமுக சேவர்கள் வேலை இன்னும் சுலபமாகி விடுமே. ?? பாலியல் கல்வியை விட இதை பற்றிய அறிவு முக்கியம் அல்லவா ??.
முடிவுரையாக அல்ல ஒரு வாழ்த்துரையாக இது அமைக
இது நிச்சயமாக முன்னேற்றத்திற்க்காக வழி வகுக்க வேண்டும் என்றால் வெறும் மேடை பேச்சுக்கள் / வோட்டு பிச்சை என்பதை விட்டு சீரான திட்டம் வரையறுக்கப் பட வேண்டும். அது இல்லவே இல்லை என்பதைத்தான் இந்த கேள்விகள் விளக்க உதவும்.இந்த கேள்விகளை ஒரு மட்டமான ஜாதி வெறி சாயம் பூசுவோருக்கு முன்னர் கூறியது போல் நமது அனுதாபங்கள் மட்டுமே. மத்தபடி இந்த முறை இன்றளவும் ஒரு பினவைப்பரையாக; ஜாதியை அப்படியே ஒரு நிரந்தர பிரச்சனையாக வைத்திருக்க மட்டுமே உதவுகிறது. இந்தப் பதிவின் நோக்கு இந்த முறை வேண்டாம் என்பதல்ல, இன்றளவும் சரியாக பயன் படவில்லை, 60வயதாகியும் இந்த குழந்தை இன்னும் தவழக் கூட வில்லை. இதற்க்கு காரணம் பார்ப்பனீய ஆதிக்கம் என்றோ இல்லை ஏதாவது ஒரு சாதியினரையோ நீங்கள் குறிப்புடுவோர் என்றால் இந்த பதிப்பை முதலிலிருந்து மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

Monday, February 1, 2010

ஸ்டார்-விஜய்TV கோபிநாத்க்கு ஒரு(குதர்க்கமான) திருமண வாழ்த்து

நாளைய சமுதாயத்தின் பகுத்தறிவு சிங்கம் நம்ம ஸ்டார் த வ கோபிநாத் அவர்களுக்கு திருமணம் ஆகப் போவதாக எங்கயோ படிச்சேன்.  அதாங்க சூட் மட்டும் போட்டு தமிழ் பண்பாட்டை கா.......க்கும் மரமண்டை மறதமிழன். சட்டைக்குள்ள பிதிக்கினு நிப்பாரே - அவரேதான். என்ன தேதி, எங்கு என்றெல்லாம் தெரியாது ஆனால் நிச்சயமாக ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்கிறார் என்பது தெரியும். அதென்ன பெண் அப்படீன்னு கேட்டால்-  377 பிரிவின் சுதந்திரங்களை, இந்த பகுத்தறிவு சிங்கம், ஏதும் பயன் படுதலைங்க்ரத உறுதி செய்யதான்.....

ஆகா நம்ம அலகிய ( இது எழுத்துப் பிழை இல்லை ) தமிழ் மகனுக்குன் திருமணமாம் - வாழ்த்துக்கள். இனிமே நீயா நானா இல்ல - நீயும் நானும்.
இவர் நீயா நானாவில் பேசிய சமுதாய புரட்சிகளை நீயா நானாவில் மட்டும்தான் செய்வாரா இல்ல சொந்த வாழ்கயிலுமா ? சொந்த வாழ்கையிலும் இவர் பகுத்தறிவு செய்வார் என்றால் இப்படி செய்வாரா ???

1. தான் மணக்கப் போகும் பெண்ணுக்கு இவர் தாலி என்னும் வெறும் நகை போடுவதாக இல்லை. அப்படியே இவரை கட்டாய படுத்தினாலும் இவருடைய சொந்தகளில் இருந்து வேறு ஒரு பெண் அந்த தாலியை அந்த கல்யாணப்பெண்ணுக்கு வெறும் சடங்காக செய்வார்.
2.  அவள் ஒரு சிறந்த பகுத்தறிவு வாய்ந்த பெண்மணி என்பதை நிரூபிக்க, திருமணத்தின் அன்று இல்லையென்றாலும், வருங்காலத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி மூலம் தான் மணந்த அந்த பெண்ணிடம் எல்லோர் முன்னிலையிலும் அந்த தாலியை கழற்றித் தரச் சொல்லி, அவருக்கு சிறந்த பெண்மணி விருதும், பாராட்டுக்களும் பெற்றுத் தருவார்.
அந்தோனி இந்த கோப்பை மிஸ் பண்ணிடாதீங்க. இந்த வர்ஷத்தோட ஹை TRP இதுக்குதான்.
ஸ்ரீராம் இதுக்கு HONK KONG டீம் எந்த தடையும் விதிக்காதுன்னு நினைக்கிறேன். இதுக்கு நீங்க யாரிடமும் நீங்க பொது மன்னிப்பும் கேட்க வேண்டாம். நீங்க கூலிக்கு மாரடிக்கும் பகுத்தறிவு ஊருக்கு தெரியவா போகுது. MARRIAGE முழு COVERAGEஆ இல்ல வெறும் முஹுர்த்தம் மட்டும்தானா ??

வருங்கால நிகழ்ச்சிகளில்


" வெங்காயம் உரித்தால் அதிக நெடி இருக்குமா இல்லை வெள்ளப்பூண்டு உரித்தால் அதிக நெடி இருக்குமா "

" கபோதி என்பது தமிழ் வார்த்தையா " போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான புரட்சிக் கருத்துக்களில் அந்த பெண்மணியை நீங்கள் பேச அழைக்கலாம்.  
 
படிக்கிறவங்க யாரவது கல்யாணம் ஆயிடுச்சுன்னு ஒரு தகவல் குடுத்தா- புளி'யான்கொட்டை வழங்கும் " குத்த்தம் - கும்மி அடிச்சது ஆரு- பிம்பிளிக்கி.... பிளாக்கி..... " என்று ஒரு நிகழ்ச்சி தொகுப்போம்