Wednesday, March 31, 2010

ENGLISH IS A FUNNY LANGUAGE - எப்படி ?? பகுதி - 4

எல்லா மொழியிலும், சமுதாய கலாசார மற்று சில காரணங்களினால், வேற்று மொழி வார்த்தைகள் கலந்து விடுவது உண்டு. எந்த மொழியும் இதற்க்கு விதி விலக்கல்ல. அந்தந்த மொழிக்கென்ற தனித் தன்மையை, கட்டமைப்புகளை, இலக்கணத்தை, இந்த கலப்பின் காரணியாக எந்த மொழியும் சிதைத்து கொள்வது அல்ல, ஆங்கிலத்தைத் தவிர. இந்த முறையில் ஆங்கிலத்தில் உள்ள பெருவாரியான வார்த்தைகள் பிரெஞ்சு சார்ந்தவை, இலக்கணம் பெருவாரியாக லடினம் சார்ந்தவை, அதன் ஏனைய கட்டமைப்புகள் பெரிதும் ஜேர்மனிய மற்றும் பழைய நோர்ச்க் மொழியின் அடிப்படையில் அமைந்தவை, ஆங்கிலப் பெயர் பட்டியல் ரோமானிய வரலாற்றை சார்ந்தது, அறிவியல் சார்ந்த பெயர் பட்டியல் கிரேக்க மொழியை தழுவி இருக்கும். இது சரியா? தவற? என்பதை விட முக்கியம், இதில் ஆங்கிலம் எந்த மொழியின் அடிப்படையில், அல்லது ஆங்கிலதிர்க்கான கட்டமைப்பு எது? . இன்று வரை அப்படி எதுவுமே இல்லை. ஒரு மூலத்தை அல்லது வேர்போருளை நிறுவ செய்யப்பட்ட முயற்சிகள் ( GREAT VOWEL SHIFT, ANGLISIZING, SPELLING REFORMS ) அனைத்துமே தோல்வியில் முடிவடைந்தன. இந்த முயற்சிகள் கூட கூடுமான வரையில் ஆங்கிலம் இந்த மொழிகளில் வாங்கிய கடன்களை திரை மறைவிற்கு கொண்டு செல்லும் முயற்சியாக முடிவடைந்தன.

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்
தீவு என்ற சொல்லிற்கான ஆங்கில சொல் - ISLAND. சில நூறு ஆண்டுகள் முன்வரை தொன்மையான ஆங்கில சொல்- IGLAND, இதற்கான பொருளுடன் புழக்கத்தில் இருந்தது.  லதினத்தில் INSULA என்பது தீவு என்று பொருள் தரும் சொல்லாகும். இடைப்பட்ட ஆங்கில மொழிக் காலங்களில் IGLAND சொல்லை லாடின INSULA சொல்லுடன் தொடர்பு படுத்த INSULAவில் மூன்றாம் இடத்தில இருந்த 'S'ஐ எடுத்து IGLANDஇல் இரண்டாம் இடத்தில சேர்த்தனர். உச்சரிப்பு சீலம் காரணமாக இரண்டாம் இடத்தில உள்ள 'S' உச்சரிப்பில் மௌனமாக்கப்பட்டது. இது இன்று நமக்கு விதியாக இதன் வரலாற்று காரணிகள் படிப்பிக்க படாமலே கற்பிக்கப் படுகிறது. DETTE என்ற தொல்லாங்கில சொல்லில் B நுழைக்கப் பட்டு அதை இலத்தின DEBITUM சொல்லுக்கு தொடர்பு படுத்த முயற்சி செய்ததும், DEBT ஆனது. இன்றும் இந்த DEBT சொல்லை நாம், தொல்லாங்கில சொல்லின் உச்சரிப்புடந்தான் பயன்படுத்துகிறோம்.

மொழியின் சொல் பயன்பாடு ஒவ்வொரு காலத்திலும் ஒரு நிலையில் இருக்கும், வள்ளுவர் எழுதிய திருக்குறள் படிக்க நமக்கு ஒரு விரிவுரை தேவைப்படுகிறது. பரிமேல் அழகர் விரிவுரைக்கே இன்னொரு விரிவுரை தேவைப் படும் நிலையில் இருக்கிறோம். ஆயினும் நமது இலக்கணங்கள், நமது சொற்களை சிதைக்கும் நிலைக்கு நாம் (இன்னும்) செல்லவில்லை. எத்தனையோ பழைய சொற்களை தொலைத்து விட்டோம், இதே வேலையில் பல புதிய சொற்களை பயிர் செய்யவும் நாம் தவறவில்லை. ஜன்னல், சன்னல், சாளரம் இவை மூன்றுமே நமக்கு பழக்கமான சொற்களே இதில் சாளரம் மட்டுமே தமிழ். ஜன்னலுக்காய் நாம் சாளரத்தை மாற்றி அமைக்கவில்லை. மாறாக ஜன்னலை, சன்னலாய் தமிழ்படுத்தி இருக்கிறோம். இந்த சொற்களின், உச்சரிப்பு, இலக்கணம், பயன்பாடு எதையுமே நாம் சிதைத்து விட வில்லை.

ஆறிரண்டு திங்கள்

JANUARIE            JULIE
FEBRAURIE          AUGUST                      
MARCHE          SEPTEMBRE
APRIL  OCTOBRE / OCTOMBRE
MAI              NOVEMBRE
JUIN             DECEMBRE
இப்படிதான் நூறு ஆண்டுகள் முன்புவரை கூட ஆங்கில மாதங்கள் எழுதப் பட்டு வந்தன. இவை அனைத்துமே ரோமானிய சொற்கள். உச்சரிப்பிர்க்காய் எழுத்துக்களை மாற்றி அமைக்கும் முறை ஆங்கிலத்தில் மட்டுமே உண்டு. இது நாம் முதல் பகுதியில் கதைத்த, சுதந்திரம் என்ற பெயரில் வழங்கிய தான்தோன்றித் தனத்தின் விளைவு மட்டுமே. தழுவலான அல்லது ஒரு செயற்கையான உச்சரிப்பு புகுத்தல் காரணமாக இந்த மாதத்திற்கான பெயர்களின் எழுத்துக்கள் மாற்றி அமைக்கப்பட்டு, நம் கையில் கொடுக்கப் பட்டு இருக்கிறது. இதை சூழலுக்கு ஏற்ற வகையில் மற்றம் கொள்தல் என்று மார்தட்டி கொள்ளலாம். ஆயினும் இதன் உண்மை, சிதைவு என்பது வெகு கண்கூடு. இந்த சிரமத்தை இன்னும் அதிகமாக்க இன்றைய ஆங்கிலேயே பட்டறைகள் கைகொண்டுள்ள ஆயுதம் - நவீனமயமாக்கல். குறுஞ்செய்திகளின் மேலோங்கு பொருளாக வார்த்தைகள் சங்கு நெரித்து கொள்ளப் படுகிறது.

HOW ARE YOU - "OW`W`U "
I WILL SEE YOU LATER - " I LL C U L8R"
Will Be right BAck - " BRB "  என்று நீட்டி முழக்கி கொண்டே போகலாம் .

இதே காலத்தில் வேற்று மொழிகளில் உள்ள முழு சொற்றோற்றோடர்களை அப்படியே எடுத்து பயன்படுத்துதல் இன்னும் சிக்கலை இடியாப்பம் ஆக்கி விடுகிறது.

KUDOS ( GREEK ), ADIOS AMINGO ( SPANISH ) ASTA LA VISTA

என்று இவைகளும் தொடரும். இதனால எல்லாம் இந்த மொழி அழியுதுன்னு நீங்க சொல்ல முடியாதுன்னு சொல்ற நண்பர்கள் பொறுக்க; அடுத்த பகுதி வரை.

Monday, March 29, 2010

ரேடியோ`வ கண்டுபிடிச்சது யாரு? - சரித்திர இருட்டு

மொதல்ல யாரு தொலசாங்கலோ அவுங்க கிட்ட கேட்டா தெரியும் ( எட்ரா அந்த அருவாள!!! ) .

ரேடியோ`வ கண்டுபிடிச்சது யாரு ?
மார்கோனி, இது கூடவாடா தெரியாது ங்கொய்யா.
குக்லில்மோ மார்கோனி, 25, ஏப்ரல், 1874 இவர் பொலொக்ன, இத்தாலியில் பிறந்தார். 2, ஜூன் 1896 அன்று ரேடியோவை தன் கண்டுபிடிப்பாக, தனது சிந்தனையின் காபுரிமைக்காய் ஆங்கிலேய காப்புரிமை சட்டத்தின்[பதிவு எண் - 12, 309 ] படி பிரிட்டனில் பதிந்தார். அமெரிக்காவிலும் பதிந்தார். 1901 ஆம் ஆண்டு மர்கோனியின் ஒரு சோதனைக்கூடத்திலிருந்து ஒரு தொலைதூண்டுதல் ஒலி மூலமாய் ( இன்னும் ரேடியோ முளுமையடாயாத நிலை ) அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வேல்டிடம் இருந்து ஏழாம் எட்வர்ட்க்கு அனுப்ப பட்டதாய் ஒரு வாழ்த்து செய்தி அனுப்ப பட்டது. அதன் பின் 1909ஆம் ஆண்டின், ரேடியோயவை கண்டுபிடிததற்காய, இயற்பியலுக்கான நோபெல் பரிசு இவருக்கு வழங்கப் பட்டது. 1912 இல் கடலுக்குள் மூழ்கிய TITANIC கப்பலிலிருந்து காப்பாற்ற பட்டவர்கள் நன்றி பாராட்ட ஒருவர் உண்டு என்றால் அது மார்கோனி மட்டுமே என்ற புகழுடன் மார்கோனி இன்றும் நமது புத்தகங்களில் ரேடியோவின் தந்தையாக இருந்து வருகிறார்.

அது சேரி... ரேடியோ`வ கண்டுபிடிச்சது யாரு ???
என்னடா வம்பா போச்சு " கால்ல வர கத கேட்டு சோனியாவும் ராகுலும் இந்தியர்கலல்ன மாதிரி போச்சு. நிகோல டெஸ்லா, இந்தப் பெயரை இதுதான் நீங்கள் முதல் முறையாக எதிர்கொண்டிருபீர்கள். 10, ஜூலை, 1856 ஆம் ஆண்டு ச்மிஜன் ஆஸ்திரியாவில் பிறந்தார் இந்த செர்பியர். 1882ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்று, 1884 பின் ஆம் ஆண்டு இவர் எடிசனுடன் பணிபுரிய அமெரிக்க வந்தேருகிறார். ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சி நிறைவு செய்தால், 50,000 அமெரிக்க டாலர்கள் தருவதாய் சொல்லி, எடிசன், அப்பறம் பிம்பிளிக்கிபிளாக்கி சொல்லி விடுகிறார். 1886 இல் எடிசொனிடம் இருந்து விலகி சுயமாய் ஒரு தொழில்பட்டறையும் ஆராய்ச்சியும் தொடர்கிறார். கூலிவேலையும் செய்கிறார், தனுடைய கண்டுபிடிப்புகளுக்கு பணம் சேர்கிறார். 1895 இல் ரேடியோவை ஒலி நீட்சி இயக்க தத்துவத்தை நிரூபிக்கிறார். மார்கோனி காப்புரிமைக்கு பதிந்த சிந்தனையின் அதே இயக்க தத்துவம் இது என்பது குறிப்பிட தக்கது.

என்னங்கட சொல்றீங்க
இன்னும் ஒரு படி மேல் போய் மார்கோனி பதிந்த காப்புரிமை பத்திரத்தில் அவர் பயபடுதியதாக சொல்லப்படும் அலைவரிசை சுருள் ( COIL) - டேஸ்லCOIL, ஆண்டேனவும்தான். 1915இல் டேஸ்ல மார்கோனி பயன்படுத்தியது தன்னுடைய சிந்தனையே என்று கோரி வழக்கு தொடுக்கிறார். போதிய பண வசதி இல்லாமையால் பல முறைகள் இந்த வழக்கு கை விடப்பட்டு, டேஸ்லாவால், பல முறை மீண்டும் பதியப் படுகிறது. இறுதியில் 1943இல் அமெரிக்க நீதி மன்றம் டேஸ்லவை ரேடியோவின் கண்டுபிடிப்பிற்கு உரிமை படுத்துகிறது. இந்த தீர்ப்பு வரும் பொழுது டேஸ்ல இந்த உலகில் இல்லை. அதே வருடம் ஜனவரி 7ஆம் தேதி டேஸ்ல இறந்துவிட்டார் என்பது வருத்தமான விஷயம். இன்று நம் பயன்பாட்டில் இருக்கும் எந்த ஒரு நவீன சாதனமோ அதில் ஒரு புள்ளியாவது டேஸ்ல கை பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  இயற்பியலின் எல்லா கோட்பாடுகளையும் டேஸ்ல ஆராய்ந்தார். மின்காந்தவியல்( ELECTRO MAGNETISM ), காந்தஇயக்கதத்துவம் ( ELCTROMECHANICAL ), அணு இயற்பியல் (NUCLEAR PHYSICS ), ஒலித்தூண்டல், ராடார், தொலைஇயக்கமாட்சி( TELEFORCE ) , மாற்றுமின்சாரம்( ALTERNATE CURRENT ) , புவிஈர்ப்பு தத்துவம் ( GRAVITY ), என்று இயற்பியலின் எந்த திசை நோக்கி நடந்தாலும் அங்கு ஒரு கைப்பிடி அளவேனும் டேஸ்ல, நிற்கிறார். 1912இல் ஒரு முறை, 1915இல் முறை உலகறிந்து நோபெளுக்கு பரிந்துரை செய்யப் பட்ட டேஸ்லவிற்கு, இன்று வரை நோபெல் கிடைக்காதது அளப்பெரும் வியப்பு

இப்போதான் காதலுக்கு மரியாதை மினி கேக்குறாங்க ஏன் இப்பிடில்லாம்??
டேஸ்ல மேலும் தன்னுடைய ஆராய்ச்சியின் எல்லைகளை விரிவு படுத்திக் கொண்டிருந்த வேளைகளில் மார்கோனி அந்த சிந்தனையை சந்தையிட்டு மிகப் பெரும் பணம் ஈட்டினார். பிறப்பினால் பணக்காரர், அதன் பின் தொழில் முறை பணக்காரர், இது மட்டுமல்லாது இவருடைய தொழிற்பேட்டைகளில் முதலீடு செய்தவருடைய பணம், என்று டேச்லவுக்கு எங்கு திரும்பினாலும் பணம் கட்டிய கோட்டை நுழைவாயில் மறுத்தது, இதனுடன் போராட என்பதை விட, அன்றாட வாழ்விற்கே டேஸ்ல கை ஏந்தும் நிலையில் இருந்தார் என்பது உண்மை.

டேஸ்ல ஒரு செர்பியர் என்பது அன்றைய காலத்திற்கு, அவரை மறுக்க, மிக போதிய காரணமாக இருந்தது.

உலகு வணங்கிய எடிசனின் எதிர்ப்பு
 
மர்கோனியின் அரசியல் நட்பு, அவர் வகித்த பதவிகள், மேலும் இவை இரண்டும் அவர் பின்னே ஈர்த்த ஊடக தொடர்ப்பு.

ஒன்றோடுன்று தொடர்புடைய புத்தக பதிவர்கள், தான் ஒரு முறை பதிவு செய்ததை மாற்றி அமைக்கும் தேவை இன்றி இன்று வரை அதை நமக்கு படிப்பித்து வருகிறார்கள்.

HISTORIES are made and Written, and its Obsolete if not re-written.

Wednesday, March 24, 2010

நட்டரங் - மராத்தி - திரைவிமர்சனம்

எல்லா மொழி திரைப்படங்களுக்கும், இன்று தமிழில் விமர்சனங்கள் படிக்கக் கிடைக்கிறது. தமிழைத், தவிர ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஸ்பானிஷ், கொரியன், ஜெர்மன் ஏன் இன்னும் பெங்காலிக்கு கூட தமிழில் விமர்சனங்கள் கிடைக்கின்றன. இதில் ஒரே படத்திற்கு பல பேர் எழுதிய விமர்சனங்கள் கூட படிக்கக் கிடைக்கும். இது வரை ஒரு மாரட்டிய மொழி திரைபடத்திற்கு யாரும் விமர்சனம் எழுதிப் பார்த்ததில்லை. இது முதல் முயச்சி; எனக்கு தெரிந்தவரை. இல்லை என்று மறுப்பவர்கள் கமெண்ட்ஸ் குட்டிவிட்டுப் போகவும்.
அவதாரும் 3-முட்டாள்களும், இந்தியா முழுவதும் திரைகளை நிறைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் " ஆங்கோர் காட்டினில் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்று உண்டோ ". என்று இந்த மாராத்திய திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரன் திரைப்பட வில்லன் அதுல் குல்கர்னியின் மிகச் சிறப்பான நடிப்பில் zee டாக்கீஸ் தயாரிப்பில், இந்தப் படம் நாடகம் அதன் கலைங்கர்கள் பற்றிய மிக அழகான பதிவு.

குணா ( அதுல் குல்கர்னி ) , கட்டு மஸ்தான இந்த விவசாயிக்கு நாடகங்களில் ராஜா வேஷத்தில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பது கனவு. சேமிப்பிலாமல் - நாடகங்கள் பார்க்கும் இந்த கிராமவாசி  சில காலத்திற்குப் பிறகு தமாஷா வகை நாடகங்களில் நடிக்கவும் ஆரம்பிக்கிறான். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் நேரத்தில் ஒரு கேள்வியை/ சவாலை  எதிர் கொள்கிறான், இப்படி ஆணாக இருந்து ஆணாக நடிக்கிராயே, ஒரு திருநங்கைய ( NACHYA ) நடிக்க முடியுமா என்று சராசரியான ஒரு ஆணின் கேள்வியாக இல்லாமல் ஒரு நாடக காதலனாய் குண எனக்கு நாட்டியம் தெரியாதே என்கிறான். கதை அடுத்த பரிமாணத்தை அடைகிறது.

அந்த நாடக கூட்டத்தை சேர்ந்த ( மிக அழகிய ) பெண் குணாவிற்கு நாட்டியம் சொல்லித் தருகிறாள். இது அல்லாமல் குணா தன்னுடைய மிரட்டலான உடலை இழக்கிறான். கோலம் அழிகிறான். ஒரு நளினமான உடல் தோற்றத்தை அடைய முற்படுகிறான். தன்னை சுற்றி உள்ள பெண்களின் அசைவுகளை பார்த்து பழகவும் செய்கிறான். ஒரு நாள் திருநங்கை கோலத்தில் மேடையேருகிறான் குணா. குணாவின் சகாக்களும் நாடகத்தின் சிறப்பரிந்தவர்களும், அந்த நாடக குழுவை சார்ந்தவர்களும் குணாவைப் பாராட்டி மெச்சுகின்றனர். ஆனால் இப்படி ஒரு வாழ்கை தேவை இல்லை என்று குடும்பம் அவனுக்கு தடையாக இருக்கிறது. ஒரு நீண்ட நாடகப் பயணத்திற்குப் புறப்படும் குணா உறவுகள் தொலைக்கிறான்

குணாவின் பாத்திரம் அந்த நாடககுழுவிர்க்கு வலு சேர்க்கிறது. அந்த நாடக குழு அக்கம்பக்கங்களில் பிரபலமடைகிறது. சாதாரண குழுவாக இருந்த அந்த குழு பல இடங்களுக்கு சென்று நாடகம் நடத்துகிறது. புகழின் உச்சியில் இருக்கும் குணா தன்னுடைய திருநங்கை கோலத்திலேய வாழவும் துவங்குகிறான். அதற்காய் நொந்தும் கொள்கிறான் இடையில் அர்ஜுனன் பத்திரத்தில் மேடை ஏறுகிறான் குணா. இவன் ஒரு திருநங்கை - இவன் அர்ஜுனனாய் நடிக்க கூடாது என்று கலவரப் படுகின்றனர் பாமர ரசிகர்கள், நாடக மேடை தீக்கிரை ஆகிறது. அந்த வேலையில் குணா ஒரு பழைய பகை காரணமாக , அந்த ஊர் பெரிய மனிதாரால் கடத்தப்படுகிறான். ஒரு திருநங்கையாக வன்புணர்ச்சிக்கு ஆளாகிறான். சுயம் அழிகிறான் குணா தான் சேர்த்த பெயர் புகழ் அனைத்தும் கானல்நீராய் கலைகையில் ஊர் திரும்புகிறான். உறவுகள் மறுக்கின்றன. சுற்றமும் மறுக்கிறது. துணையாய் நின்ற நட்பும் கலைகிறது. என்னுடைய அனைத்தும் இந்த நாடகத்தில்தான் தொலைத்தேன், இதிலிருந்துதான் மீட்பேனென்று சூளுரைக்கிறான். இவன் வாழ்கையை தடம் மாற்றிய அந்த நாட்டியக்காரி மட்டும் இவன் துணை நிற்க மீண்டும் அதே பயணத்தை துவங்குகிறான். வெற்றி, சுபம்.

வடஇந்தியாவில் முன்னமே தனக்கென்று ஒரு அடையாளம், ஒரு முத்திரை வைத்திற்கும் அதுல் குல்கர்னி, இந்த படத்தின் மூலம் இன்னொரு நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டுஇருக்கிறார். CASTWAY - படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக TOM HANKS பக்தர்களாகி விடுவார்கள், அவருடைய உடல் எடையை கூட்டி , குறைத்து, கூட்டி என்ற உழைப்பிற்காக. அதன் பின் உலகெங்கும் இதை போல் முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் இந்தப் படத்தில் அதுல் குல்கர்னி ஒரு சராசரியான கட்டுமஸ்தான விவசாயியின் உடலையும் ஒரு நாடக திருநங்கையின் உடலையும் தத்ரூபமாக காணத்தந்து நிறைவு செய்கிறார். ஒரு திருநங்கையின் உடல் அசைவிலும், ஆணாக இருந்து கொண்டு திருனங்கயாய் வாழும் காட்சிகளிலும், குழப்ப நிலையில் நம்மையும் கட்டி கொண்டு அழுதுவிடுகிறார். தன்னுடைய முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு இந்த படத்தின் இயக்கத்திலும், காட்சி அமைப்பிலும் இயக்குனர் மகுடம் சூடி இருக்கிறார். இசை - ஒரு கிராமிய இசையின் பாந்ததுடன், மாராத்திய மண்ணின் அனைத்து கிராமிய இசையையும் கலந்து மீட்டி இருக்கிறார். லாவணி வகை நடனப் பாடல் தூள்.

மலையாளத்தின் 'சாந்துபொட்டு' படம் தமிழில் விக்ரம் நடித்து ராஜாவேஷமாக வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திறிகிறோம். விக்ரமிற்கு நட்ரங் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையும். எந்தப் படம் பார்பதாயினும் அந்த மொழியின் அறிவு வேண்டும். அதுவும் இந்தவகை கிராமிய மொழிப் படத்திற்கு கண்டிப்பாக தேவை.  ஆனால் நீங்கள் ஒரு நர்சினிமா காதலறேன்றால் இந்தப் படம் உங்களுக்குத்தான் - மொழி ஒரு தடையல்ல.

உங்களுக்கு இந்தப் படத்தின் ஒலித்தட்டு கிடைக்கவில்லைஎன்றாலோ , டோர்றேன்ட்டுகள் கிடைக்காத பட்சத்திலும். இந்த படம் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள், உங்கள் தொடர்புக்கான எண், அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரி பின்னூட்டவும் ( COMMENTS - உங்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும் ) , விரைவில் நான் சென்னை வருகையில் இந்தப் படத்தின் ஒரு காட்சி (ஆங்கில SUBTITLEகளுடன் )ஏற்பாடு செய்து, உங்கள் அனைவரையும் சந்திக்க எண்ணுகிறேன்.

Sunday, March 21, 2010

எதிர்நீச்சலும்( படம் ) ஹுசைனும், மொக்கை பகுத்தறிவும்

கண்டிப்பாக நாகேஷ் நடிப்பில் எதிர்நீச்சல் படம் என்னைக் கவர்ந்த ஒரு படம். பாலச்சந்தரின் இவ்வளவு நீண்ட நாள் சினிமா வாழ்விற்கு, இந்த திரைப்படம் ஆணிவேர். இந்தப் படத்தில் நாகேஷ் மிக ஏழையான மாதுவாக, அவருடைய நண்பர் அந்த நாயர் ( முத்துராமன் ). இவர்களுக்கு இடையில் ஒரு காட்சி, மாதுவிற்கு முன்பு மனநலம் பதிக்கப்பட்ட அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க அந்த பெண்ணின் பெற்றோர் பேசிக் கொண்டு இருப்பார்கள். அது காதில் விழுந்த மாது நாயரிடம் சென்று இந்த விஷயத்தைக் கூற, நாயரும் எப்பொழுதும் போல் கொதித்து எழுவான். அவுங்க, என் தலேல அந்தப் பொண்ண கட்டுறதுக்கு முன்னாடி நான் அந்தப் பொண்ண விரும்பிட்டா என்ன ? என்பது போல் இருவரும் பேசிமுடிப்பார்கள். செய்யு.... என்று நாயர் சொல்ல. மாதுவும் களத்தில் இறங்குவான்.
இது நம்மக்கு தெரிந்தது , இனிமேல் சொல்லப் போவதும் தெரிந்ததுதான் இந்நேரம் நீங்களே முடிச்சுப் போட்டு ரெடி ஆயிருபீங்க.
2006 எந்தக் கைகேயி இந்த கலையின் தலைமகனை காட்டுக்குப் போகவேண்டுமாய் வரம் கேட்டால்?
இப்ப சர்ச்சைக்குரிய ஓவியர் ஹுசைன், இந்தியாவை விட்டு தானே வெளியேறி மனம் வெறுத்து கத்தார் செல்கிறார். அங்கு குடிஉரிமை பெற்று விட்டார் என்று நமக்குப் படிக்க கிடைக்கிறது. இன்னும் அஞ்சு வர்ஷதுல இந்த தாத்தாவுக்கு நூறு வயசு. இப்படி தள்ளாத வயசுல தனது மொழியும் சுதந்திரத்தினை கருத்தில் கொண்டு இவர் கத்தார் நாட்டுக்கு செல்கிறாராம். இதுல ஒரே ஒரு மேட்டர் விட்டு போச்சுன்னா இந்த செய்திக்கும் மேல் சொன்ன காட்சிக்கும் உள்ள தொடர்புதான். இன்றுவரை இந்த மனிதர் மீது பல புகார்கள் பதிவு செய்யப் பட்டு இருக்கின்றன. ஈ பீ கோ 153A, 295A, 298, 146, 147 148 என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. இதில் இது வரை பல புகார்கள் ( விசாரிக்கப் படாமலே )தள்ளுபடி செய்யப்பட்டு  செய்யப் பட்டு இருக்கின்றன, இதுவரை பல புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில் ஒரு புகாரில் கூட ஹுசைன் தண்டிக்கப் படவில்லை என்பது குறிப்பிட தக்கது. இதுக்கு மேல ஒரு விஷயம் என்னன்னா, நிலுவையில் உள்ள புகார்களை பரிசீலிக்கும் நிலையில் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று நமது சட்ட ஆணையம் சொல்கிறது. இந்த நிலையில் தான் மேல் சொன்ன யுக்தியை ஹுசைன் பயன்படுத்தி இருக்கிறார். அவுங்களா நம்மள தண்டிச்சா சோத்துக்கு, சொத்துக்கு வழி இல்லாம போயிரும், சும்மா என்று கத்தருக்கு கம்பி நீட்டுகிறார் ஹுசைன் என்பது நமக்கு சொல்லப் படாத உண்மை. அது ஏங்க குறிப்பா 2006ல இவரு கத்தார் மொதல்ல ஒரு சாமிய வரஞ்சாறு சும்மா இருந்தாங்க, 2006ல தான இவரு தேசியத் தாயின் உருவத்தை நிர்வாணமாக வரைந்தார். இந்த முறை செமையாக சிக்கிக் கொண்டார். சமய உணர்வுகளை புண்படுத்திய குற்றத்திலிருந்து இவர் நிலை உயர்வு பெற்று தேசிய உணர்வினை புன்படுதியதர்க்காக இவர் மேல் வழக்கு தொடுக்கப் பட்டது. இந்த வழக்கும் மிக கட்சிதடமாக இவருக்கு எதிராக அமைய ஜூட்டானார் ஹுசைன்.

கலை, கலைக்கண்;
ஹுசைன்நின் இயக்கத்தில் வெளியான MEENAXI திரைப் படத்தில், இவரே எழுதிய பாடல் ஒன்று நூற்-உன்-அலா. அந்தப் பாடல் குர்ஆனில் இருந்த எடுக்கப் பட்ட வரிகள் இவை இறைவனை குறிக்கிறது . இவற்றை ஒரு பெண்ணை பற்றி பாடும் வரிகளாக பயன்படுத்தியது தவறு என்று இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. வெளியான அதே வாரத்தில் அந்தப்படம் திரை அரங்குகளில் இருந்து அகற்றப்பட்டது. ஹுசைன் மன்னிப்பு கேட்டார். எப்பவும் போல ஹிந்துக்களுக்கு மட்டும் சகிப்புத் தன்மையை போதிக்கும் ஊடகங்கள் இதை சொல்லும் அவசியம் இல்லையென்று நமக்கு சொல்லவில்லை இதே ஊடகங்கள் மேல் சொன்ன MEENAXI நேரங்களில் வேறு செய்திகளை பாராட்டிக்கொண்டு இருந்தன.

இன்னும் தொக்கி நிற்கும் சில கேள்விகள்
எதிர்ப்பை சந்தித்த தஸ்லிமாவுடன், சல்மான் ரஷ்டியுடன், ஓடி ஒழியும் ஹுசைனை எந்த விதத்தில் ஒப்பிடுகிறது பகுத்தறிவு பந்தல்கள். ? சமயம் சார்ந்த எதிர்ப்பு என்ற அடிப்படையில் மட்டுமா ??
பாரதமாதா படத்தை நிர்வாணமாக வரைந்தது அரசியல் சட்டப் படி ஜாமீன் மறுக்கப் பட்ட குற்றம். ஹிந்து சமயத்தை எப்பவும் போல் ஒதுக்கி விடலாம். தேசிய வரம்பு மீறலுக்கு என்ன செய்யலாம்?. பாரத மாதா என்பது ஹிந்துத்வா என்று சப்பை கட்டு கட்டுவோருக்கு ஒரு தொடுப்பு செய்தி முதன் முதலில் இந்த ஓவியம் வெளியானது MOTHER INDIA என்ற தலைப்பில்.
அதென்ன எப்பவும் சகிப்பு தன்மை ஒரு சாராருக்கு மட்டும் போதிக்கப் படுகிறது இந்த மதசார்பற்ற காங்கிரஸ் நாட்டில் ??
ஒரு நாட்டின் சின்னத்தை ( தேசியமாதாவை ) அவமானம் செய்த ஒருவரை இன்னொரு நாடு ஆதரிக்கிறது என்றால், இதை எப்படி எடுத்துக் கொள்வது ??.
ஒரு நாட்டில் இன்னும் பல புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில் இன்னொரு நாட்டில் குடியுரிமை எப்படி கிடைக்கும் ??
குடிஉரிமை இவர்க்கு கிடைக்க வேண்டுமென்று அனைத்து புகார்களும் முன்பு போல் விசாரணை இன்றி தள்ளுபடி செய்யப் பட்டனவா ??

Thursday, March 18, 2010

டாம் மற்றும் ஜெர்ரி`க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


இன்று வயது என்ற வித்யாசம் இல்லாமல் அனைத்து வயதினரையும் கவரும் ஒரு நிகழ்ச்சி உண்டென்றால் அது 'TOM and JERRY'ஆக இருக்கும். கார்டூன் வகை நிகழ்ச்சியை ரசிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுடைய எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களில், இந்த இரடையர் நிச்சயமாக இருப்பார்கள். இந்த இரட்டையர்களுக்கு இன்று வயது 70. வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க.


HAPPY BIRTHDAY TOM and JERRY. LONG LIVE.

TOM and JERRY சில சுவையான குறிப்புகள்

PUSS gets the BOOT ( 1939 )என்ற சிறிய கார்டூன் வகை நிகழ்ச்சியில் இந்த இருவரும் அறிமுகப் படுத்தப் பட்டனர். அந்த நிகழ்ச்சியில் சாம்பல் நிற பூனையின் பெயர் JASPER . அன்றைய எலிக்கு பெயர் ஏதும் கிடையாது.

William Hannah, இந்த கதாபாத்திரங்களின் பட்டய இயக்குனர் ஆவார். JOSEPH BARBERA இந்த கதாபாத்திரங்களின் கர்த்தாவும், FRED QUIMBY இதன் கதை ஆசிரியரும் ஆவர். என்பவர் இந்த இரட்டையர்களின் பட்டய தயாரிப்பாளர் ஆவார்.

1941ஆம் ஆண்டு MIDNIGHT SNACK என்ற தொடரில் முதன் முதலில் TOM and JERRY என்று இந்த கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப் பட்டன.  இந்தப் பெயர் HANNAH மற்றும் BARBERRA நடத்திய பெயருக்கான குழுக்களில் இருந்து தேர்வு செய்யப் பட்ட ஒரு பெயர்.

இன்று இரண்டு கால்களில் ( BI PEDAL ) ஓடும், TOM ஆரம்பகாலங்களில், நான்குகால் பாய்ச்சலாகதான் ஓடியது. 1945திற்கு பின்னர் முழுமையாக இரண்டு கால்களிலேய ஓடுகிறது என்பதும் குறிப்பிட தக்கது.


MAMMY என்ற TOMஇன் முதலாளியாக வரும் கதாபாத்திரம் ஆரம்ப காலங்கள் முதலே ஒரு கறுப்பின பெண்ணாகதான் சித்தரிக்கப் பட்டு வருகிறது. 1965 கலீல் இந்த கதாபாத்திரம் ஒரு மெல்லிய இளம் வெள்ளைப் பெண்ணாகவும், தடித்த நடுவயது பெண்ணாகவும் இருந்து, கடந்த பத்து வருடங்களில் நமக்கு காண கிடைப்பத்து மிகவும் தொன்மையான அந்த தடித்த கறுப்பின MAMMYஎன்பதும் குறிப்பிட தக்கது. இந்த தொடரில் இன்று வரை வசனங்கள் உள்ள கதாபாத்திரம் இந்த ' MAMMY' மட்டும்தான் என்பது குறிப்பிட தக்கது. இன்று SATELITE CHANNELகளின் இம்சையில் TOM and JERRY பேசுவது,  இந்த நிக்ழிசியின் சுவாரஸ்யத்தை குறைத்து விடுகிறது.
 
COMICS, துவங்கிVIDEO GAMES, PLAY STATION,  என்று குழந்தைகள் சார்ந்த பென்சில் ரப்பர், பள்ளிக்கூட பைகள் என்று எல்லாத்திலுமே நமக்கு TOM and JERRY காணக்கிடைக்கிறது.
 
இந்த தொடரில் ஒரு தடித்த BULLDOGவகை நாய் பார்த்திருப்போம், அந்த நாயின் பெயர் SPIKE. TOMஇன் நண்பனாய் ஒரு கருப்பு பூனை பார்த்திருப்போம் அதன் பெயர் BUTCH.
 
உலகின் பிரபலமான FORD MONDEOவகை கார்களின், விளம்பரதிற்க்காக 2003ஆம் ஆண்டு ஒரு விளம்பரத்தில் TOM and JERRYதோன்றினர்.  
 
மீண்டும் ஒரு முறை HAPPY BIRTHDAY TOM and JERRY. LONG LIVE.

Tuesday, March 16, 2010

ENGLISH IS A FUNNY LANGUAGE - எப்படி ?? பகுதி - 3

நான் சொல்றத நம்பலேன்ன பரவா இல்லைங்க பெர்னாட் ஷா( GEORGE BERNARD SHAW ), மிகப் பிரபலமான நாடக ஆசிரியர், மற்றும் மிகச் சிறப்பான பேச்சாளர். இன்று வரை இலக்கியத்திற்கான நோபெல் பரிசும்( 1925 ) பெற்று, ஆஸ்காரும் ( 1938 ) பெற்ற ஒரே மனிதர்.  இவர் தன்னுடைய சொத்துப் பத்திரத்தில், தன்னுடைய செல்வங்களில் இருந்து ஒரு பகுதியை, இன்றைய மதிப்பிற்கு - 3,67,233.13 பவுண்ட்களை ஆங்கிலத்தின் மேம்பாட்டிற்கு குறிப்பாக, தரமான ஆங்கில எழுத்துக்களை கண்டுபிடிக்க செலவிடும் படி ஒதுக்கி இருந்தார். ஆனால் அதிலிருந்து வெறும் 8600.00 பவுண்ட்கள் மட்டுமே இந்த பணிக்கு செலவிடப் பட்டது என்பது வருத்தமே. இவர் ஆங்கிலத்தைப் பற்றி சொன்ன ஒரு நகைசுவையான விஷயம். ஆங்கிலத்தில் FISH வார்த்தையை GHOTI உச்சரிக்க முடியுமா ?? . முடியும் எப்படி.

ENOUGH -  இல் 'GH' என்பது 'F' உச்சரிப்பைத் தரும்.
WOMEN -   இல் 'O என்பது 'I' உச்சரிப்பைத் தரும்.
NATION - இல் 'TI' என்பது 'SH' உச்சரிப்பைத் தரும்.  என்று நகைசுவையாக தன்னுடைய ஆங்கில மொழிக்கான காதலை நொந்து கொண்டார்.

என்ன கொடுமை சார் இது. ஏன் இப்படி ??? என்று நீங்கள் கேட்பவரானால். அதற்க்கு பதில் வரலாறில் உள்ளது. இன்று உலகிற்கு " ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழிக்கு உதாரனமாக படிக்கப் படும் ஆங்கிலேய வரலாற்றின் உண்மையான முகத்தை காட்டும் பழமொழி என்னவோ " சிவன் சொத்து குல நாசம்" ( சிவன் என்ற இடத்தில நீங்கள் எந்த கடவுளின் பெயரை வேண்டுமானாலும் போட்டுக்குங்க, அப்படியே நீங்க நாத்திகர் என்றாலும் உங்க பெயரையும் போட்டுங்க ) என்பதுதான். வெவரமா சொல்லு நைனா....

ENGLISH IS A BORROWED LANGUAGE.
எந்த மொழியாயினும் சரி பிற மொழி சொற்களின் கடவுகளை அது தவிர்க்கவே முடியாது. பண்பாட்டு மாற்றங்கள் இதை தவிர்க்க முடியாதவைகளாக மாற்றி விடுகின்றன. நான் முன்னமே கூறியது போல் நச் என்பது தமிழ் சொல் அல்ல, இதே போல் 'ஓசி' போன்ற வழக்கிலுள்ள சொற்கள் நல்ல உதாரணம்.  'த்ராட்ட்ல விட்டான்யா' என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறோம் , அதுவும் 'THWART' என்ற ஆங்கில சொல்லின் மருவல்தான். எல்லா மொழிகளிலும் இந்த வகை சொற்கள் இருக்கும், - மிகக் குறைவாக. இந்த வகை வார்த்தைகளும் மாற்றங்களும் நிகழும் பொழுது அந்த மொழிகள் சுயத்தை இழந்து விடுவதில்லை.   ஆனால் அங்கிலதிர்க்கு இவை பொருந்தாது. உலக வரை படத்தின் பெருவாரியான பகுதிகளில் கொலனிய அமர்க்களம் செய்த ஆங்கிலேயர்,  சென்ற ( வென்ற அல்ல) இடத்தில் எல்லாம் அங்குள்ள சில வார்த்தைகளை தனதாக்கி கொள்வர்,

காசு - CASH ஆனது;  கட்டுமரம் - CATTAMARAN; சுருட்டு - CHEEROOT ; கறி - CURRY ஆனது இதில் இன்றுவரை எனக்கு தெரிந்து ஆங்கிலத்தில் மட்டும் 164 மொழிகளில் இருந்து கடவு சொற்கள் இருக்கின்றன. இன்னும் சில வார்த்தைகளை ஏன் இப்படி உச்சரிக்கிறார்கள் என்று விளங்கவே முடியாத அளவிற்கு சிதைத்தே விட்டனர்,  - இந்து சமவெளி நாகரிகர்கள் என்பதைக் குறிக்க HINDOOவாகி அது இன்று HINDUவாக நிற்கிறது. 

இன்னும் இந்த MATTERல வசதிக்கேற்ப விம், சபீனா போட்டு விளக்கினால், இன்றைய தேவாலயங்களில் படிக்கப் படும் திருமண வாசங்களில்( MARRIAGE SERMON ) ஒரு எடுத்துக்காட்டு கிடைக்கும் கிறிஸ்தவ முறை படி மணப்பெண்ணும் மணமகனும் மோதிரம் மாற்றிய பின் அந்த பேராயர் (ஆங்கிலத்தில்) " I NOW PRONOUNCE YOU AS A MAN AND WIFE " என்பார் மீண்டும் படியுங்கள் HUSBAND and WIFE அல்ல MAN and WIFE . HUSBAND என்ற வார்த்தை HUSEBAND  என்ற MIDDLE ENGLISH பழக்கத்தில் இருந்தும், HUSBANDA என்ற OLD ENGLISH பழக்கத்தில் இருந்தும், HUSBONDI - OLD NORSE என்ற ஜெர்மானிய மொழி வழக்கு என்றும் கூறி சமாளித்து வருகிறார்கள்.

மெய்யாலுமே இந்த வார்த்தைகளுக்கு பொருள் மேலாளர் - மேனேஜர் என்ற அடிப்படையில் இருக்கும். அன்றைய கால ஆணாதிக்க சிந்தனை என்று இவற்றை ஒப்புக் கொண்டாலும் இதன் உண்மை இது இரண்டு சமஸ்க்ரித்த வார்த்தைகளின் ஒன்றைந்த பொருள் ஹஸ்த - கை;  பந்தன் - உறவு - பொருள் படும் வார்த்தைகள் HUS BAND`H ஆயின. அட நம்ம தலைவர் படம் " கை கொடுக்கும் கை'தாங்க ".  இந்த வகை வார்த்தைகளை பற்றி பேசுகையில் முதல் பகுதியில் நாம் பேசிய உச்சரிப்பு சுதந்திரம் பற்றிய கருத்தை மறந்து விடக் கூடாது. எழுத்துக்களுக்கு வேண்டிய படி உச்சரிக்கும் சுதந்திரம் வழங்கிய பின்னரும் ஆங்கிலத்தில் போதிய வார்த்தைகள் இன்மையால், இந்த மொழி சென்ற இடத்தில் உள்ள வார்த்தைகளை தனதாக்கும் நிலைக்கு தள்ளப் பட்டது. நாளடைவில் இந்த முறையை நம்பியே ஆங்கிலம் வளரத் தொடங்கி வளர்ச்சி என்ற OPTIMUM நிலை தாண்டி ஆங்கிலம், அழிவை நோக்கி பயணப் படுகிறது என்பது உண்மை.

இந்த தலைப்பில் பகிர்வதற்கு இன்னும் ஒரு பதிவு அளவேனும் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் படிக்கும் நீங்கள்( யாரவது ஒருவர்) வேண்டும் என்று COMMENTs சொல்லும் தருவாயில் அவற்றை பதிய தயாராய் இருக்கிறேன்.

Sunday, March 14, 2010

அப்பாடா IPL ஆரம்பிச்சுது, பிரணாப் மகிழ்ச்சி பெருமூச்சு......

                                                                                                                                       12-MARCH-10
நேற்று மதியம் வரை பிரணாப், கண்டிப்பாய் தலைச்சன் புள்ள பிரசவத்திற்கு மிரண்டு காத்திருக்கும் கர்பினியை போல் இருந்திருப்பார். எங்கட இந்த போதாத வயதில் கடைசி கடசியா கெடச்ச நிதி அமைச்சர் பதவியையும் பிடுங்கிடுவாங்கலோன்னு. இனிமே அவர் கவலை பட வேண்டாம். அநேகமாக பிரணாப் எங்காவது ஒரு வெளி நாட்டுப் பயணம் போய் வருவார். இந்த டென்ஷன் குறைய வேண்டாமா. அப்படி என்ன டென்ஷன். எப்பவும் போல வரலாறு முக்கியம் அமைச்சரே.. .. . . .

ஹ்ம்ம் ரெடி ... டார்ட்டாய்ஸ் கொசுவத்தி சுருள் சுத்துப்பா .. . . . .
பாகிஸ்தானின் ஆயுதம் ஏந்திய அமைதி தூதுவர் ( சட்டப் படி ஒருவரை தீர்பிற்கு முன் குற்றவாளி என்று கூறுவதும் சட்ட விரோதம். தெரியுமா ? ) அஜ்மல் கசவ் புண்ணியத்தில் நம்ம P.C ( Sonia`s Personal computer இல்லங்க) அதுவரைக்கும் காங்கிரஸ்க்கு இந்தியாவுக்கு நிதி அமைச்சரா,  வரவு செலவு கணக்கு  பாத்துகிட்டு இருந்த இவர, சிவராஜ் பாட்டில் பொரமண்டயில அடிச்சு பத்திவிட்டு, வீடுவிவகார துறை மந்திரியா ஆக்குனாங்க. புரியுது புரியுது இவர பத்திதானே . . .நம்ம தலைவர் கைப்புள்ள இவர பேட்டி எடுத்து தணியா பதிவு போடுவார் இப்போ கதைக்குப் போவோம். அப்ப, சிதம்பரம் பாத்துகிட்டு இருந்த, குமாஸ்தா வேலைய தூக்கி, தன்னுடைய எட்டாம் எட்டுல, இருந்துகிட்டு, வெளயுரவுத் துறை அமைச்சரா, எழாம் எட்டுல சுத்த வேண்டிய உலகத்த சுத்திகினு இருந்த இவருக்கு, நிதி அமைச்சரா, பதவி உயர்வு குடுத்தாங்க. அப்படி என்னங்க இவர் பண்ணிட்டாரு, இவருக்கு இந்த பதவி குடுத்தாங்க. இப்போ ஒரு ஜம்போ கொசுவத்தி சுருள்.... கடைசிகடைசியா இந்தியா, கிரிக்கெட் உலக கோப்பை வாங்கிச்சே அப்ப, அட கூலிக்கு மாரடிக்கிற 20/20 இல்லங்க உண்மையான உலக கோப்பை, 1982 அப்ப இவர்தான் பட்ஜெட் பைய அக்குள்ள வச்சுகினு, குமாஸ்தா வேல பாத்தாராம். 1984 வர்ஷம் உலகத்தின் சிறந்த குமாஸ்த என்று EUROMONEYயால் பாராட்ட பட்டாராம். அதுனால இவர் இப்போ நிதி அமைச்சர். அதற்க்கு இது பதில் அல்லவே... மன்னா.....ரொம்ப நொய்நொய்ங்க கூடாது, இந்த காரணத்தை கண்டு பிடிக்கவே காங்கிரஸ்ல பல தல சொட்டை ஆயிடுச்சு தெரியுமா. இன்னிக்கி இவருக்கு மேல உக்காந்துகினு பிரதமமந்திரியா இருக்குற நம்ம மன்மோகன் சிங்க் அப்ப இவருக்கு கீழ RBI GOVENORரா இருந்தார் தெரியுமா ???.

2009 தேர்தலுக்கு முன்.
தேர்தலை எதிர் கொண்டு இருந்த காங்கிரஸ் அரசுக்கு இது ஒரு முக்கியமான பட்ஜெட்டாக அமைந்தது. நம்ம பிரணாப் முகெர்ஜி காதுல ஒரே ஒரு பட்டுதான் கேட்டுச்சு " திக்கு தெரியாத காட்டில்.. ". நம்ம போன வர்ச குமாஸ்தா சிதம்பரம் வெளியிட்ட, இதுக்கு முந்துன பட்ஜெட்ட தேனிசை தென்றல் தேவா ஸ்டைல்ல, நம்ம ஸ்கூல்ல குறிச்சு குடுத்த கேள்விய மட்டும் படிச்சுட்டு போய் பாஸ் பண்ற மாதிரி பாஸ் பண்ணினார். உலக சந்தையில் பெட்ரோல் விலை சரமாரியாக, பாதிக்கும் கீழ் வீழ்ச்சி அடைந்த நேரம், அப்பவும் நம்ம எல்லாரும் அதே விலையில்தான் பெட்ரோல் வாங்கினோம்

உன்னைப் போல் ஒருவன் பட்ஜெட்
மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துச்சு. 6, ஜூலை, 2009 பிரணாப் திருப்பி ஒரு நிதி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்ட ' AAM ADMI KA' பட்ஜெட் என்று மீடியாக்கள் கொண்டாடின. இன்னும் சரியாய், கொண்டாட வைக்கப்பட்டன. AAM ADMI - COMMON MAN -உன்னைப் போல் ஒருவன்ல தலைவர் சொல்லுவாரே அதே தான். AAM ADMI என்ற பதம் பட்ஜெட்ட்ல ஆறு முறை இருந்தது.

2010 பட்ஜெட்

26, FEB இந்த ஆண்டின் நிதி அறிக்கை பிரணாப் முகெர்ஜி வெளியிட்டார் ( சமர்பித்தார் இல்லை ). சரியாக ரயில்வே பட்ஜெட் சமர்பித்த இரண்டு நாட்களுக்கு பிறகு. ஏகப் பட்டு எதிர்ப்புகள். எதிர் கட்சிகள் வெளி நடப்பு செய்தன. மொத்த பட்ஜெட்டையும் திரும்பப் பெற கோரிக்கைகள் வைக்கப் பட்டன. நம்ம அக்கா ( இன்னும் கல்யாணம் ஆகலேல்ல  ) மம்த்தா பநேர்ஜி என்னோட பட்ஜெட்ல இந்த ஆளு மன்னப் போட்டார்நு காங்கிரஸ் கிளாஸ்மிஸ் கிட்ட கம்ப்ளைன் பண்ணாங்க. பிரதமமந்திரி பதிவிக்காக நம்ம காங்கிரஸ் வடிவமைத்த என்திரன் - மன்மோகன்சிங்க்`கும் இதுல சில கருத்துக்கள்ள எனக்கு உடன் படு இல்லேன்னு சொல்லிட்டார்.

27, 28 FEB இவுங்க அல்லாரும் பொய் சொல்றாங்கபா. மெய்யாலுமே இது நல்ல பட்ஜெட்னு பிரணாப் மண்டி கால் போட்டு அழுதார். ஐயோ நான் இவுங்கள எல்லாம் கேட்டுதான் செஞ்சேன்ன்னு எல்லா டிவி காரங்களையும் கூப்ட்டு சொல்லிட்டார். எதிர்கட்சிகளும் மக்கள் மேல் பயாஆஆஆஆஅந்கர அக்கறையுடன் போராட்டங்கள் பண்ணின.

விளம்பர இடைவெளி - எங்கயோ நமக்கு தெரியாம ஒரு கூட்டம் போடுறாங்க, அதுல ஒரு முடிவு எடுக்குறாங்க. இதுக்கு மேல இதப்பத்தி பேசினா மக்கள் முளிச்சுகுவாங்க. நம்ம எல்லாருக்குமே கஷ்டம். அதானலே வேற படத்த போடுங்கப்பா என்றனர். ஆனாலும் பிரணாப், சிக்கன் குனியா வராமலே குளிரில் நடுங்கினார்.

01, MAR - தெற்கில் நித்யானந்த, வடக்கில் பாம்பு சாமியார் செய்திகள் பல தெர்மா மீட்டர்களை வெடிக்க செய்தன. கண்டிப்பாக இவர்கள் இருவரும் செய்தது கேவலமான விஷயம்தான். தனி மனித ஒழுக்க மீறல்கள், நம்பிக்கை கொலை, ஊருக்கு உபதேசம். தனிமனித ஒழுக்கம், நம்மில் எல்லாரும் மற்றவர்களிடம், அதாவது நமக்கு வலப்பக்கம், இடப்பக்கம், எதிர்புறம், பின்புறம், பக்கத்து வீட்ல உள்ளவுங்ககிட்ட, அடுத்த தெருவுல உள்ளவுங்ககிட்ட, நமக்கு கீழ வேல பாக்குறவுங்ககிட்ட, நமக்கு மேல நின்னு வேல வாங்குறவர்கிட்ட அதாவது நமக்கு வெளில எல்லார் கிட்டயும், நம்ம எதிர்பார்க்கும் ஒரு விஷயம். மீடியாக்களின் எஞ்சிய நேரங்களையும், பக்கங்களையும், நம்ம இந்தியாவின் புராதான உப்மா - பாகிஸ்தான், ஹபிஸ் சயத், தீவிரவாதம், போன்றவை நிறைவு செய்தன.

02, MAR - மேல் சொன்ன செய்திகள்தான். இன்னும் அதிகமாய் பெருங்காயம், வெங்காயம், தேவைக்கேற்ப உப்பு புலி மிளகாய் கூட்டப் பட்டன. உலகமே பொருளாதாரம் சீர்குலைந்த நேரத்தில் இந்தியாவை காத்ததாக போற்றப் படும், இதற்க்கு முந்தைய  RBI GOVERNOR Y.V ரெட்டி இந்த பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவிக்கிறார். ஒரு துண்டு செய்தி கூட வரவில்லை. எங்கிருந்தோ ஒரு செய்தி ஊடகத்திற்கு (TV)  மனசாட்சி போதை தெளிய ஒரே ஒரு வரி செய்தியாக வெளியிடுகிறது. திருப்பி பாம்பு சாமியார் டான்ஸ்தான்.

03 MAR அதே பிரியாணி வேற தாழ்ச்ச, பாகிஸ்தான் 'வெளிஉறவு துறை அமைச்சர் பொய் சொல்றார்' செய்தி வெளியிடப்படுகிறது. அது கரெக்ட் இது வரைக்கும் அவுங்க உண்மையே பேசிகிட்டு இருந்தாங்கல்ல !!!!. இன்னும் பிரணாப் கால் முட்டி மோதிகிட்டு இருந்தன.

05 MAR வரை மேல சொன்ன மட்டேற வச்சே தீத்தாச்சு. CD - நெறையா கீறல் விழுந்துருச்சு. புது நிகழ்ச்சி 12 வர்சமா தூங்கிகிட்டு இருந்த `33% பெண்கள் இட ஒதுக்கீடு`, 'காந்தகண் அழகி START the MUSIC' . ஏதோ இந்த மகளிர் தினத்தன்று இத நிறைவேற்றியே தீருவது போல்.

06, 07 MAR - மேல் சொன்ன எல்லாம்.

08, MAR - மகளிர் தின நல்வாழ்த்துக்கள் , முதல் பெண் ஆஸ்கார், அப்பறம் மீத நேரம் பெண் மசோதா.

09, 10, 11,MAR  அதேதான்...

12, MAR - IPL ஆரம்பிச்சுது......பிரணாப் மகிழ்ச்சி பெருமூச்சு...... இனிமேல் பட்ஜெட் துண்டை மறைக்க வேற எதுவும் தேட வேண்டியதில்லை. IPL முடியுறதுக்கு முன்னாடி இத மறந்துருவாங்க. அப்படியே ஞாபகம்வரும் சூழ்நிலை வந்தா வேற நியூஸ் தயாரிப்போம்ல......கத்தி போய் வாழு வந்துது டும் டும் டும் .. நித்தி போய் ரஞ்சி வந்துது டும் டும் டும் , ரஞ்சி போய் பாம்பு வந்துது டும் டும் டும் பாம்பு போய் மசோதா வந்துச்சு டும் டும் டும். மசோதா போய் IPL வந்துச்சு டும் டும் டும்......

Thursday, March 11, 2010

ENGLISH IS A FUNNY LANGUAGE - எப்படி ?? பகுதி - 2

இதற்க்கு முந்திய பதிவில் ஆங்கில எழுத்துக்களில் உச்சரிப்பின் சிறப்புகளை ( ???? ) பற்றி பாத்தோம். இதை படித்த பின் , ஏன் செய்தார்கள் என்ற கேள்வி நம்மை முட்டி இருக்கும். ஒரு எழுத்திற்கு ஒரு உச்சரிப்பு, ஐந்தே ஐந்து எழுத்துக்களை வைத்து கொண்டு அதிகமான வார்த்தைகளை உருவாக்கி விட முடியாது. புது வார்த்தைகளை உருவாக்கும் நோக்கில் இந்த எழுத்துக்களுக்கு தான்தோன்றித் தனமாக உரிமைகள் வழங்கப் பட்டு, வேண்டிய இடத்தில வேண்டிய உச்சரிப்பு எழுப்ப அனுமதி அளிக்கப் பட்டது ( யார்பா அது அங்க யாருன்னு கேக்குறது..... ). ஒரு மொழி வளர மக்களுக்கு எதுவாய், எல்லாப் பொருள்களுக்கும், வார்த்தைகள் தேவை. அதை உருவாக்குவது அந்த மொழியை காலம் ஒத்ததாய், என்றும் வளமயானதாய் வைத்திருக்க உதவும். கணினி, நிரலி, அலைபேசி போன்ற தமிழ் சொற்கள் இதற்க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அனால் இந்த காரணத்தை ஆங்கிலம் வென்றதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதை புரிந்து கொள்ள ஆங்கிலத்தின் வார்த்தைகள் பற்றி பார்ப்போம்.

வார்த்தை தவறிவிட்டாய்............................. மண்ட வலிக்குதடி .............................
ஹிந்தி / சமஸ்க்ரிதம் படிப்பவர்கள் முக்கியமான சிக்கல் போன பதிவில் குறிபிட்டது போல நான்கு க, நான்கு ச, நான்கு தா, நான்கு ட. இந்த வகை எழுத்து அமைப்பு இந்த 'HOMOPHONES' - எனும் வார்த்தை குடும்பங்களை உருவாக்கி விடும் ( மொழிகளிலாவது ஆங்கிலம் குடும்பங்களை உருவாக்குது பாருங்க - பாராட்டனும் ). ஒரே உச்சரிப்பு, அல்லது ஒரே போல் உச்சரிப்பு உள்ள வார்த்தைகள், ஆனால் வேறு வேறு பொருள் தரும், வேறு வேறு எழுத்துக்களை கொண்டு அமைந்திருக்கும். - HOMOPHONE ( சரியா படிங்க சட்ட திருத்தம் 377படி வேற எதாவது படிச்சுர போறீங்க ). இந்த வகை சிக்கல் தமிழிலும் உண்டு [ மரம், மறம் ] [ மழை, மலை ], [ வலி வழி ] [ மனம், மணம் ].  இதை படிக்கையில் இந்த மொழிகளில் ஒரு எழுத்திற்கு ஒரு உச்சரிப்புதான் என்பதை மறந்து விடக் கூடாது. இந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் தனியாக ஒரு அறக் கொயர் நோட்டு முழுக்க எழுதிய கை வலி இன்னும் எனக்கு ஞாபகம் உண்டு.
[ALTAR/ ALTER], [ ARC / ARK ], [ BE/BEE], [ BAND/BANNED], [BERTH/BIRTH ], [ BORED / BOARD ] , [ BEACH / BEECH ], [ BILLED / BUILD ], [ BOUGH / BOW ] , [CIELING / SEALING ], [CANON / CANNON ] . . . .. . . .
[DESSERT / DESERT ] - இதில் எதை பாலைவனத்திற்கு பயன் படுத்துகிறோம் சொல்லுங்க ??. கொஞ்ச நேரம் யோசிசீங்கள்ள, அங்கதான் சந்துரு`ன்ற மானஸ்தன் ........
CENTRE / CENTER - யோசிக்காம சொல்லுங்க இதில் எது மையப் புள்ளியை குறிக்கும் ??...
WEEK / WEAK - இதுல எது பலவீனத்தை குறிக்கும் ....ம்ம்ம்ம்ம்ம் யோசிக்காதீங்க.
எழுத்துக்களுக்கு உச்சரிப்பு சுதந்திரம் வழங்கிய பின்னருமா இப்படி ஒரு நிலை என்று வாய் பிலப்பவர்களுக்கு - படையப்பா சொல்லும் பதில் 'கண்ணா - அங்கே பார் ..... இது சும்மா ட்ரைலர்தான்.. இன்னும் புல் பிக்சர் ( சன் பிக்சர் அல்ல ) பாக்கி இருக்கு' .
HOMOPHONE வகை வார்த்தைகள் உலகில் எந்த மொழியையாவது இந்த அளவிற்கு பதித்திருக்கும் என்றால் அது ஆங்கிலத்தை சொல்லலாம். உலக ஆங்கிலம் என்ற நோக்கில் பார்க்கையில் ஒரு சில வார்த்தைகளுக்கு உச்சரிப்பை வைத்து அதன் எழுத்துகளையே மாற்றி விடும், நிலைமைக்கு ஆங்கிலம் தள்ளப் பட்டு இருக்கிறது. PHONE - FONE ஆகிப் போனது, COLOUR - COLOR ஆகிப் போனது இதற்க்கு முக்கிய காரணம் எழுத்துகளுக்கு வழங்கப் பட்ட தான்தோன்றித் தனமான சுதந்திரம் என்பதை மறுத்து விட முடியாது. அமெரிக்கர்களின் ஆங்கிலேய வெறுப்பும்தான் ( நல்லாதான போய்கிட்டு இருக்கு....... இதென்ன புதுக் கதை ) - இதை வைத்து ஒரு தனி பதிவே போடலாம். அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த வார்த்தை குடும்பங்களில் - HOMONYMS.

HOMONYMS - ஒரு வார்த்தை, ஒரே எழுத்துக்கள் , வேறு வேறு உச்சரிப்பு வேறு வேறு அர்த்தம் ஆங்கிலம் படிக்க வருபவர்களை சாம் அன்டேர்சன் படம் காட்டி பயமுறுத்தும் ஒரு பரிமாணம் என்றால் அது மிகை என்பதற்கு கொஞ்சம்தான் கீழே... மற்ற படி உண்மை.

ADDRESS - முகவரியை குறிக்கும் [ What is your residential Address ? ] , வேறு உச்சரிப்பில் ஒரு பிரச்சனை அணுகுவதைக் குறிக்கும் [ Obama has greatly addre`ssed the melt down issue ]
CRICKET - சச்சின் விளையாடுவது CRI`CKETவெட்டுகிளிக்கும் இதுதான்
CONDUCT - நடாத்துதல், CONDUCT CERTIFICATE - நமது ஒழுகுதலையும் குறிக்கும்.

இதன் அடுத்த படி இந்த வகை வார்த்தைக் குடும்பங்களில் , ஒரு வார்த்தை, ஒரே எழுத்துக்கள், அதே உச்சரிப்பு வேறு வேறு பொருள் . எப்படி ( இன்னுமா படிக்கிறீங்க ?? .

BAR -  மது அருந்தும் இடம், BAR AT LAW - சட்டக் குழுமம், BARRED -  தடை செய்- TMT BAR - கனமான கம்பி.
BANK - வங்கி,  DMK banks upon minority votes...நம்பகத்தன்மை GODAVARI RIVER BANKS - ஆற்று படுகு.

அடுத்தபடியாக JAMESBOND படங்களுக்கு இணையான 'வீராசாமி' போல் ஒரு மேட்டர் - AUTOANTONYM - ஒரே வார்த்தை அதே உச்சரிப்பு வேறு வேறு பொருள், ஒவ்வொவொரு பொருளும் அதன் எதிரமரைப் பொருள் தரும் , தமிழ்ழ சொன்னா சுயமுரண். ( புரிலேள்ள???? எனக்கும்தான்.... ).

AWE என்ற வேரில் இருந்து பிறக்கும் வார்த்தை AWESOME - மிகஅருமை. AWFUL - அருவருக்கத் தக்க

Its our CUSTOM and we follow it.தொன்மையான என்று பொருள் தரும் ; CUSTOM MADE SOLUTION - நேர்த்தியாக புதுமையாக என்று பொருள் தரும்

FAST - RABBIT IS FAST - வேகமாய் நகர்தல்; RABBIT is FAST - அசைய / நகர முடியாமல் கட்டப் பட்டு உள்ளது.

LEFT - HE HAS LEFT - கடந்து செல்தல்; HE HAS LEFT HIS WEALTH BESIDES மீதம் இருத்தல்

இந்த விளங்காப் பொருளுக்கு CONTRANYM/CONTRONYM, ANTAGONYM, JANUS WORDS, ENANTIODROME, SELF ANTONYM என்ற பெயர்களும் பொருந்தும். - நிக்காத நகத்துக்கு நைல் போலிஷ் என்னாதுக்குடா ????.

நம்ம தலைவர் பாடுவது போல் - முரண்பாட்டு மூட்டை நீ ...ENGLISH......வாஜி வாஜி . . . . .

தொடரும் . . . . .

Tuesday, March 9, 2010

ENGLISH IS A FUNNY LANGUAGE - எப்படி ?? பகுதி - 1

ENGLISH IS A FUNNY LANGUAGE என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இதை மிகையாக சொல்வதென்றால் சென்னையில் உள்ள அனைவரும் இந்த ஒரு வரியை ஒருமுறையாவது சொல்லி இருப்பார்கள். ஆனால் எப்படி என்று கேட்டுப் பாருங்கள் மிகச் சிலரால மட்டுமே இதை விரிவுரைக்க முடியும். இந்தப் பொருளை அனைவருக்கும் கொண்டு செல்வது என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஆங்கிலம்
அவர்களுடைய தோல் நிறத்தை வைத்து பறங்கியர் என்றும் வெள்ளையன் என்றும் இந்த கலோனிய வெளிநாட்வர்களை நாம் கூறிவந்தோம். இங்கிலீஷ் - தாய் மொழியாகக் கொண்ட கிழகிந்திய கம்பநியர்களை, பிரிட்டிஷ் நாட்டவர்களை,  ஆங்கிலேயர்கள் என்று எப்படி நாம் அழைக்கிறோம் ?. தமிழ் பேசுவோர் தமிழர், தெலுங்கு பேசுவோர் தெலுங்கர் என்றால் - இங்கிலீஷ் பேசுவோர் இங்கிலேயர் தானே அதெப்படி ஆங்கிலேயர்கள் ஆனார் ?. ஆங்கிலேயர்களின் சமகாலத்தில், இந்தியாவில் இருந்த மற்ற கோலோநியர்கள் - DUTCH, பிரெஞ்சு , போர்துகேசியர்கள் மற்றும் டென்மார்க்காரர்கள். இவர்களில் தமிழகத்தில் ப்ரிடிஷர்களுக்கு இணையான முனைப்போடு இருந்த இன்னொரு COLONYயகம் பிரெஞ்சு கொலனிகள். பிரெஞ்சில் ENGLISH என்ற சொல்லிற்கு இணையான சொல் ஆங்க்லேஸ்( Anglais )  ஆகும்,  ப்ரிடிஷரை இவர்கள் 'ஆங்க்லேதார்' என்பர். இந்த வகை சொற்களில் இருந்து தமிழர்கள் புழக்கத்தில் இந்த ஆங்கிலம் என்ற சொல்லும், அங்கிலேயர் என்ற சொல்லும் மருவி இருக்க வேண்டும். ஹிந்தியில் கூட இவர்களை 'அங்க்ரேஷ்' என்றுதான் அழைப்பர் மற்ற படி கால்டுவெல் படித்தவர்கள் இதற்குரிய விளக்கங்கள் தரலாம். ஆங்கிலேயரகளுக்கு இந்தியாவின் ஒரு பகுதி முதன் முதலில் கல்யாண சீராக அல்லது வரதட்சணையாக கொடுக்கப் பட்டது தெரியுமா ?????? சரி...... அதைப் பற்றி பின்பு உதார் விடுகிறேன் . இப்போ மேட்டர்.

ஆங்கில வழி 'விவிலிய' போதனைகளில் துவங்கி, ஆங்கில வழிக் கல்விக்கு மெருகேறி இன்று நாம் குடிப்பது லோக்கல் பன்னீர் சோடா என்றாலும் அதில் கண்டிப்பாக ஆங்கிலத்தில் பெயர் இருக்கும், தமிழில் இல்லையென்றால் கூட. எடைக்கு பேப்பர் வாங்கும் கடையிலும்    RS.2.00 / KG தான். இப்படி ஆங்கிலம், தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவின் ஓவ்வொரு மூலையிலும் விரவிக் கிடக்க வெறும் ஆங்கில மோகம் மட்டும் காரணம் அல்ல அதையும் மீறிய ஒரு காரணம் உண்டு, அது நமது தலைப்புதான் " ENGLISHN IS A FUNNY LANGUAGE ".

கணம் கோர்ட்டார் அவர்களே...... இங்கே குற்றம் சுமத்த பட்டு.....
நாம் தமிழில் எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள், மெய்எழுத்துக்கள், உயிர் மெய், ஆயுத எழுத்து என்று பிரிப்பது போல் ஆங்கிலத்தில் எழுத்துகளை VOWELS என்றும் CONSANANTS என்று பிரிக்கிறோம். உயிர் எழுத்துக்களுக்கு இணையான வேலைகளை A, E, I, O, U ஆகிய VOWELகள் செய்கின்றன. தமிழில் மட்டுமல்ல ஏனைய எந்த இந்திய எழுது முறை மொழிகளிலும் ஒரு எழுத்திற்கு ஒரு ஓசைதான். ஆனால் ஆங்கிலத்தில் இந்த VOWELகள் படுத்தும் பாடு பெரும்பாடு.   எடுத்துக்காட்டு

FAT -          இதில் `A' - அ என்ற ஓசையைத் தரும்.
FAMOUS - இதில் `A' - ஏ என்ற ஓசையைத் தரும்.
FATHER -  இதில் `A' - ஆ என்ற ஓசையைத் தரும்.

GERM -    இதில் `E' - எ என்ற ஓசையைத் தரும். ஜெர்ம்
GET - இதிலும் `E' - எ என்ற ஓசையைத்தான் தருகிறது. கவனிக்க முதல் எழுத்தின் உச்சரிப்பு ஜே`யிளிரிந்து, கெ`யாகிப்போனது. அடங் கொய்யால............எப்படி என்று கேட்பவர்களுக்கு ஒரு நாப்பது பக்கம் நோட்டு ரொம்ப ரொம்ப எழுத்துக்களும் அதன் உச்சரிப்புகளுக்கான (RULES FOR PRONUNCIATION ) விதிகள் இருக்கின்றன. அதை வாங்கிப் படிக்கவும். இதை பல மேல்தாவிகள் மன்னிக்கவும் மேதாவிகள் ஆங்கிலத்தின் லாவகத் தன்மை என்று வாதிடுவதும் உண்டு. ஆனால் இது ஆங்கிலத்தின் பலமா ? இது ஆங்கிலத்தின் லாவகத் தன்மையை அதிகரிக்கிறதா ? இல்லை.
தமிழின் எந்த ஒரு எழுத்தையும் எந்த இடத்திலும் எப்படி படித்தாலும் அதற்க்கு ஒரே உச்சரிப்புதான். தமிழில் வேற்று மொழி சொற்கள் எழுதினால் மட்டும் மெய், உயிர் மெய் எழுத்துக்களுக்கு அதன் வலிமையை கூட்டியோ குரைத்தோ உச்சரிக்க வேண்டும். கண்டம்( KANTAM - தொண்டை / கழுத்து சங்குப் பகுதி ), கண்டம் ( GANDAM - தடை). வட மொழிகளில் எழுத்தின் ஒவ்வொரு வலிமைக்கும் ஒரு எழுத்து என்பதும் நாம் அறிந்த விஷயமே ( நான்கு க, ச, த ). அதனால் வட மொழிகளில் கூட இந்த உச்சரிப்பு சிக்கல் இல்லை.நேரடியாக ஒரு எழுத்துக்கு ஒரே உச்சரிப்பு. பாபா ஸ்டைலில் கதம் கதம்.

இந்த வகை சிக்கல் மொழியின், நம்பகத் தன்மையை குறைத்து விடுகிறது. ஆங்கில எழுத்துக்கள் தெரிந்தாலும் ஆங்கில வார்த்தைகளை படிப்பதற்கு தனியாக ஒரு பயிற்சி தேவை என்பது மறுக்க முடியாது. இந்த உச்சரிப்புகளுக்கு உள்ள விதிகள் கூட இது இப்படிதான் என்கின்றன ஆனால் ஏன் - என்ற கேள்விக்கு இடமே இல்லை.
இந்த அடிப்படையில் " ENGLISH IS A MEMORISED LANGUAGE - ஆங்கிலம் வெறும் ஒரு மனப்பாடம் செய்யப் பட்ட மொழியே  " என்பார்கள்.  ஒரு உச்சரிப்பை முன்னதாக கேட்டிருந்தால் மட்டுமே அதை நாம் பயன் படுத்த முடியும், சிறப்பாக ஆங்கிலத்தில் பேசும் மாணவர்களுக்கும் பல வார்த்தைகளுக்கும் உச்சரிப்பு பயிற்சிகள் தேவைப் படும். இல்லையேல் பல கால பயன்பாட்டிற்கு பின் இந்த சொல்லின் சரியான உச்சரிப்பு தெரிந்தவுடன் மாற்றுவது கடினமாக இருக்கும்.

இன்றெல்லாம் கேப்டன் கூட அரசியலில் பிஸியாம் . . .  அதனால் தைரியமாய் மேலும் துகில் உரியுவோம்.

Monday, March 8, 2010

RESERVE BANK விற்கும் 'பத்து ருபாய்' பஞ்சாமிர்தம் திகட்டுகிறதுஇன்னும் சில தினங்களில் புது பத்து ரூபாய் நாணயம் ஒன்றை ரிசெர்வ் வங்கி புழக்கப் படுத்தவிருக்கிறது

நாணயக் குறிப்புகள்
தேசிய வடிவியல் மற்றும் வடிவமைப்பு படிப்பகதினால்( NATIONAL INSTITUTE OF DESIGN, AHMEDABAD ) வடிவமைக்கப் பட்டு, இந்திய நாணய சட்டம் ( COINAGE ACT ) 1906, இன் படி இந்த நாணயம் ரிசெர்வ் வங்கியால் வெளியிடப்படும். இந்த சட்டத்தின் படி, இது வரை 10, 20, 25, 50 பைசாக்களும், 1, 2, 5 ரூபாய்களும் அழகுவரிசை நாணயங்கள் வெளியிடப் பட்டு வருகின்றன. இந்த 10 ருபாய் நாணயமும் இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே வெளியிடப் படுகிறது. இந்த சட்டத்தின் படி, 1000 ரூபாய் வரை புழக்கத்தில் உள்ள எந்த அழகுவரிசை ( DENOMINATION )நோட்டுகளுக்கும் மாற்றாக,  நிதித் துறை வழிநடத்துதலின் பெயரில், ரிசெர்வ் வங்கியின் வேண்டுகோளில், நாணயம் வெளியிட முடியும். இந்த 10ருபாய் இந்த வகை நாணயங்களுக்காக அமைக்கப் பட்ட 5 வடிவங்களில்( DESIGN ) இருந்து தேர்வு செய்யப் பட்ட ஒன்று. இந்தியாவின் 5 நாணய அச்சு பட்டறைகளில் ( மும்பை, அளிபர, ஸைப்பாத் , செலபல்லி, நொய்டா  ) அச்சடிக்கப் பட்டு நாடெங்கிலும் உள்ள 3784 நாணயக் கலன்களுக்கு ( COIN DEPOT ) அனுப்பப் படுகிறது. செம்பு மற்றும் வெள்ளி ஒரே நாணயத்தில் தனித் தனியாக வடிவமைப்பில் இருக்க வெளியிடப் படும் முதல் நாணயம் இதுவாகும். இந்த நாணயத்தின் முகப்பு பாரத் என்று ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப் பட்டு, நமது சின்னமான மூன்று சிங்கங்கள் ( ஆய்த எழுத்து படத்தின் போஸ்டர் ஒரிஜினல் ) மற்றும் 10 என்ற அழகுவரிசைக் குறிப்பும், கீழே வடிவமைக்கப் பட்ட 2006 ஆண்டும் பொறித்து இருக்கும்.
 
 
 
 
வடிவமைத்தவர்கள் மற்றும் ரிசெர்வ் வங்கியின் விளக்கங்கள்
இந்த நாணயத்தின் பின்புறத்தில் உள்ள வடிவத்தை வேற்றுமையில் ஒற்றுமைக்காக வடிவமைத்தோம், என்றும் இந்தியாவின் நான்கு பகுதிகளும் ஒரே முனைப்பில் செயல் படுவதாக, ஒரே தலையின் கீழ் செயல் படுவதாக இந்த சின்னம் வலியுறுத்துகிறது என்றும், இந்த நாணயம் பார்வை அற்றோர்க்கு புழங்க ஏதுவாய் இருக்கும் என்றும் விளக்கங்கள் கூறி உள்ளனர். இந்த ( MY DADDY குதுர்க்குள் இல்ல  ) விளக்கங்கள்   பின்வரும் கேள்விகளை நமக்கும் தூண்டுவதாக இருக்கும்.

1.  மற்ற நாணயங்கள் பார்வை அற்றோர்க்கு புழங்க ஏதுவாய் வடிவமைக்கப் படவில்லையா ? . இல்லை இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்தில் வடிவமைக்கப் படும் எல்லா நாணயங்களும், ஏன் எல்லா நோட்டுகளும் கூட, இன்னும் ஒரு படி மேல் நாம் பயன்படுத்தும், அனைத்து படுபொருள்களும் ( TANGIBLE ARTICLES ) பார்வை அற்றோரை கருத்தில் கொண்டே வடிவமைக்கப் படுகின்றன. ருபாய் நோட்டில் இருக்கும் கறுப்புப் புள்ளியும், நமது தொலை மற்றும் அலைபேசி பொத்தான்களில் என் ஐந்தின் மேல் உள்ள சிறப்புக் குறியீட்டை கவனிக்க. இன்னும் விவரமாய் விரும்புவோர் பேரழகன் பட சின்னா சூர்யாவை அணுகவும். லிப்ட் பொத்தான்கள் கூட BRAILEY ( பார்வை அற்றோர்கான எழுத்து முறை) எண் குறியீடுகளுடன்தான் தயாரிக்கப் படுகின்றன.
2. இந்தியாவை மாகாணங்களாக பிரித்தால் அவை ஐந்தாகப் பிரிக்கப் படும் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய ( DECCAN or CENTRAL ) என்று ஐந்து- நான்காக அல்ல. இந்த குறியீட்டில் விட்டுப் போன மாகாணம் எது ? . ஏன் அப்படி ஒரு மாகாணத்தை விட வேண்டும் ?.
3. இந்த நான்கு கோடுகளின் கூட்டமைப்பை வேண்டுமானால் வேற்றுமையில் ஒற்றுமையின் சின்னமாக ( கைப்புள்ளையின் ஒப்புதலுடன் ) ஏற்றுக் கொள்ளலாம். கோடுகளைச் சுற்றி உள்ள புள்ளிகளையும் அதே நான்கு மாகான கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்க வேண்டுமா ? நான்கு மாகனன்களைப் நான்கு கோடுகள் குறிக்கும் பொழுது தனியாக நான்கு புள்ளிகள் எதற்க்காக ?

முதல்வன் ரகுவரன் குறுக்கிட்டு " தம்பி கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி.......;  ஒரு நாள்...... ஒரே நாள்...... " என்கிறார்.
ஆம் சிலுவைதான்.
இந்த நாணயம் தன்னுடைய பின் புறத்தில் சிலுவையைதான் வெளியிட்டு இருக்கிறது. வெறும் கூட்டல் குறி போல் இருந்தால் இதற்கு வேறு அர்த்தங்கள் சொல்லிவிட முடியும். ஆனால், நான்கு கோஸ்பெல்களின் - GOSPEL - இறைவனின் வாக்குத் தத்தம் ( மார்க்`இன் கோஸ்பெல், லுக்`இன் கோஸ்பெல், மத்தேயுவின் கோஸ்பெல், ஜான்`இன் கோஸ்பெல் ) குறியீடான நான்கு புள்ளிகளும் இந்த குறியீடு, சிலுவைதான் என்று உறுதி செய்கிறது இந்த வடிவத்தை ரிசெர்வ் வங்கி வேற்றுமையில் ஒற்றுமை சின்னம் என்று சப்பைக் கட்டு கட்டிவருகிறது எதற்காக என்று தெரியவில்லை.  இந்த வகையில் இது முதல் முயற்சி கூட இல்லை, இது நாணயங்களில் மூன்றாவது முறையாக வெளியிடப் படுகிறது முதல் முறை 2005 / 2006ஆம் ஆண்டின் 1 ரூபாய் நாணயத்திலும், 2006 ஆம் ஆண்டு இரண்டு ருபாய் நாணயத்திலும் இந்தக் குறியீடு வெளியிடப் பட்டு இருக்கிறது.


க்ருசாட் கிராஸ் - CRUSADE CROSS. www.crivoice.org/symbols/ornaments.html கிறிஸ்தவ ஊடங்களும் இதையே உறுதி செய்கின்றன. இது போன்று நான்கு புள்ளிகளுடன் கூடிய சிலுவை க்ருசாட் கிராஸ் குறி அல்லது  ஜெருசலத்தின் சிலுவை. இது எங்கெங்கிலும் ( நான்கு திசையிலும் ) கிறிஸ்தவத்தை பரப்பும் நோக்கத்தின் அடிப்பையில் வடிவமைக்கப்பட்டது.ஏற்கனவே வாய்க்கா தகராறு ... என்று சமயத்தின் பேரில் அரசியல் செய்பவர்களுக்கு ரிசெர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும் நல்ல தீனி போடுகின்றன. இவ்வளவு அப்பட்டமான ஒரு விஷயத்தை பூசி மொழுகி மறைப்பது இந்த சர்ச்சையின் வீர்யத்தை இன்னும் அதிகரிக்கும்.  இந்த காரியங்கள் சிலுவை என்ற புனிதத்தை வணிகப் படுத்தி விட்டார்கள் என்ற சிந்தனையில், நாணயங்கள் பற்றிய போதிய சிந்தனை இல்லாத கிறிஸ்தவ பழமைவாதிகளை பாதிக்கக்கூடும். அடுத்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை நேரடியாக மற்ற சமய நம்பிக்கயாளர்களை.
இந்த வகை செயல்கள் செய்வது ரிசெர்வ் வங்கி என்று பதிவு முழுவதும் எழுதி முடித்து விட்டால் தண்ணி குடிச்சா கூட செமிக்காது. இதை சொல்லத் தேவை இல்லை. இது போன்ற காரியங்கள் அரசு ஆளும் கட்சியின் தூண்டுதல், ஆதரவு, ஆசிர்வாதம் இல்லாமல் நடப்பது என்பது தூரம், துவங்குவது கூட முடியாத காரியம்.
அது மட்டும் இல்லை இந்த நாணயத்தின் இரண்டு தனித்தனி உலோக பாகங்கள் உடைந்து பிரிந்து விடும் வாய்புகள் அதிகமாம். ஒரு நோட்டுல பின் அடிச்ச ஓட்டை இருந்தாலே நம்ம கடைக்காரர் அவரோட ரெண்டு கிட்னிய கடனா கேட்ட மாதிரி பாப்பாரு இதுல ஒடஞ்ச நாணயம் கொண்டு போனா ...............
இந்த வடிவத்தில் வேற்றுமையில் ஒற்றுமை எங்கு புலப்படுகிறது என்று படிக்கும் நண்பர்கள் கூறினாலும் ஏற்கத் தயார்.
சரி...... பிள்ளையார் படம் போட்ட கரென்சி நோட்டு பாத்து இருக்கீங்களா ?? இந்தோனேசியா போங்க

அனானியாய் வருபவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை மொட்டை கமெண்ட்ஸ் எழுதி வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, March 4, 2010

டுமீல் குப்பம் விஞ்ஞானி

ஒரு பள்ளிக் கூடம் அதுல விலங்கியல் சோதனைக் கூட பாட நேரம் ( தமிலர்களுக்கு - ZOOLOGY PRACTICAL / LAB PERIOD ) தவளையை வைத்து சோதனை செய்து கொண்டு இருந்தனர்.  புல் மீல்ஸ் கட்டி இருந்த சில வயருகள் ரோல்லர் கோஸ்டரில் சுத்திக் கொண்டு இருந்தன. அப்பா நம்ம விஞ்ஞானி ஒரு தவளையை ஒரு மாணவன் டிச்செக்சொன் செய்து கொண்டு இருந்தான். ஒவ்வொரு காலாக வெட்டி சோதித்து கொண்டு இருந்தான்.
முதல் காலை வெட்டி JUMP என்றான். இரண்டாவது காலையும் வெட்டி JUMP என்றான்.இப்படி கடைசி கால் வரை வெட்டி விட்டு, தன்னுடைய சோதனைகள் முடிவடைந்த நிலையில் , யுரேகா எபக்டோடு ஆசிரியரை அணுகினான். " சார் ஒரு கண்டு பிடிப்பு நான்கு கால்களையும் வெட்டி விட்டால் தவளை கேட்டும் சக்தி இழந்து விடுகிறது ' என்றான். ஒரு பீதியுடன் எப்படி விளக்கிச் சொல் என்றார் அவரும். முதல் காலை வெட்டி JUMP என்றேன் தவளை குதித்தது , இரண்டாவது காலை வெட்டிய பிறகும் கூட குதித்து, மூன்றாவது கால் வெட்டிய பின் கூட தவ்வ முயன்றது . அனால் நான்காவது காலை வெட்டியா பின்னர் நான் எவ்ளோ கதறியும் தவளை இடத்தை விட்டு நகர வில்லை . அப்படியே இறந்தும் விட்டது என்றான்.

அடேயப்பா ...

சிரிப்பு வந்தவுங்க சிரிச்சதுக்கு அப்புறம் கொஞ்சம் வருத்தப் பட தயார் ஆகிக்கோங்க, இது நிஜமா வருத்தமான விஷயம், இது மாதிரி புரிதல் இல்லாத கல்வியைதான் இன்றைய பள்ளிகள், ஒரு படி மேல் நம்முடைய கல்லூரிகளில் கூட படித்து வருகிறோம். எடுத்துக் காட்டு நீங்கள் ஏழாம் வகுப்பில் படித்த ஒரு கேள்வி ( A + B )2 = ? என்ன உங்களை தூக்கத்தில் இன்று எழுப்பி கேட்டால் கூட சொல்வீர்கள் A2 + B2 + 2AB . அதை விட முக்கியமான விஷயம் இதன் அடிப்படை என்ன ?. இது எப்படி வந்தது ?. இந்த கேள்விக்கு பதில் பெருவாரியான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதை சொல்லித் தரும் பல பள்ளி ஆசிரியைகளை நானே இம்சை செய்து பார்த்து இருக்கிறேன் ஒருவருக்கும் தெரியாது. A என்ற ஒரு சதுரமும் B என்ற சதுரமும் இணையும் பொழுது ஏற்படும் ஒரு உருவகம் - ஒரு க்யுப் இன் பரப்பளவு பற்றிய FORMULAதான்.

THOSE WHO KNOW HOW ALWAYS HAS JOB; AND THOSE WHO KNOW WHY WILL ALWAYS BE THEIR MANAGERS
வரலாற்ற்றில் அசோகர், அக்பர் போன்றவர்கள் மரம் நட்டனர், குளம் வெட்டினார்கள்ன்னு படிக்கிறோம், இவுங்கெல்லாம் அரசர்களா? இல்லை PWDஅதிகரிகளா ? இவர்கள் செய்த நல்ல பல திட்டங்களை விளக்கி, இவர்களுடைய சிந்தனை, ஆய்வுத் திறன் எல்லாம் - கல்லூரியில் வேற எந்த துறையிலும் தேர்வு ஆகாமல் கலைப் பட்ட படிப்பில் வரலாறு தேர்வு செய்யும் வரை நமக்கு தெரிய வாய்ப்பு இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அம்பேத்கர் உள்பட பல இந்திய அறிஞர்களாலும், பல மேல் நாடு அறிஞர்களாலும் உடைக்கப் பட்ட ARYAN INVASION THEORY பாடம் இன்று வரை நம்முடைய பாடப் புத்தகத்தில் இருந்து வருகின்றன.
இன்றைய இந்திய கல்வித் தரத்தை ஆராயும் ஒவ்வொரு கட்டத்திலும் பாடங்கள், படிப்பிக்கும் முறைகள், பாடத் திட்டங்கள், சோதனை முறைகள், பள்ளிகள், ஆசிரியர்கள், என்று எல்லாமே வழுவில்லாத நிலையில் இருக்கிறது. இன்றைய சூழலில் நீங்கள் எந்த ஒரு சமுதாயப் பிரச்சனையை ஆராய்ந்தாலும் அதில் கல்வியின் பங்கு மிக முக்கியமாக இருக்கும். அது நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புடையதாக கல்வி இருக்கும்.
இன்றைய தேர்வுகளில் நாம் சோதிப்பது ஒரு மாணவனின், இன்னும் குறிப்பை ஒரு மூளையின் தேடித் திரட்டும்  ( RETRIEVAL CAPACITY ) சக்தியை மட்டும்தான். உயிரற்ற கணினிகளின் வேகத்தையும் இதை வைத்து தான் சோதிக்கிறோம். நமது சிந்தனை, கற்பனைத் திறன், ஆராயும் திறன், பகுத்தாயும் தன்மை, பண்பாடு இவற்றில் ஒன்றைக் கூட நாம் வளர்பதில்லை, அதை சோதிப்பது????? ....... பல பள்ளிகளில் விளையாட்டு பாட நேரம் (P.E.T PERIOD) போன வாரத்தில் விட்டு போன அல்லது நேற்றைக்கு விட்டுப் போன ஒரு பாட வகுப்பின் மாற்றுப் பாட வகுப்பாக மட்டுமே நடை பெறுகிறது. அப்பறம் எங்க ஒலிம்பிக் ல தங்கம் ?? ( ABHINAVBINDRA வை பற்றி பேசும் முன்னாடி அவரை பற்றி கொஞ்சம் படித்து விட்டு வாருங்கள் ).
பள்ளிகளில் மாணவர்களை தேர்வு செய்யும் நுழைவுத் தேர்வுகள், நல்ல மாணவர்களை மட்டுமே தேர்வு செய்வோம் சுமாராக படிக்கும் மாணவர்கள் வேண்டாம், எங்கள் பள்ளியின் பெயர் கெட்டு விடும். இதற்க்கு மேல் கெடுவதற்கு என்ன இருக்கிறது. நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் படிப்பிக்க பள்ளிகள் எதற்கு எல்லா டுடோரியால்களை சட்டப். பூரவமாக பள்ளிகளாக மாற்றி விடலாமே,இதை பள்ளிகள் புள்ளி விவரத்துடன் பிரகடனப் படுத்தி கொள்கிறது. அரசும் தேர்ச்சி என்ற அடிப்படையில் மட்டும் பள்ளிகளை நிலுவை செய்கிறது. சுமாராக படிக்கும் மாணவர்கள் படும் அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏதோ அமெரிக்கர்கள் கறுப்பின மக்களை பார்ப்பது போல் பார்பார்கள். மதிப்பெண் மட்டுமே ஒரு மாணாக்கனின் அடையாளாமாக காலப் போக்கில் மாறிவிடும். இதில் பெற்றோர்களின் பங்கு வியப்பிற்குரியது தன்னுடைய குழந்தைகளின் மதிப் பெண்ணிற்க்காக அவர்களுடைய மழையையும் , விடலைப் பருவங்களையும் அடகு வைத்து விடுகிறார்கள்

21வயது வரை மதிப் பெண் எடுக்கும் இயந்திரமாக ஒரு உயிரை மாற்றி விட்டோம், மனிதனாய் என்று மாற்றுகிறோமோ அன்று தேசம் மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. இல்லேன்னா PS வீரப்பா சொல்வது போல் " ஹ ஹ ஹ ஹ ஹ இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ".
ஒரு புறம் சைபர் கூலிகளை அதிகமாக உருவாக்கிய பெருமையை நமது கல்வி அறக்கட்டளைகள் பறைசாற்றிக் கொண்டு இருக்க இன்னொரு புறம் கல்விக் கூடங்கள் படிக்க வந்த எத்தனையோ ஆபிரகாம் லின்கன்களை செருப்புத் தெயிக்க மீண்டும் அனுப்பி இருக்கும், எத்தனையோ பாரதிகள் சுள்ளி பொருக்கி கொண்டு இருப்பார்கள். இதெற்கெல்லாம் மேல் கல்வியின் விலைவாசி. கைகடங்காத விலையில் இன்றைய கல்வி சென்று கொண்டு இருக்கிறது.

பெருநகரங்களில் சில இடங்களில் திடீர் என்று மக்கள் திரளாக ஒரு இடத்தில குடியேறி வாழத் துவங்குவர். சென்னையில் இவர்ற்றை டுமீல் குப்பங்கள் என்பார்கள், மதுரையில் திடீர் நகர் என்பார்கள். இந்தப் பகுதிகளில் நகரங்களின் ஏனைய பகுதிகளை ஒப்பிட்டு பார்க்கையில் தேவையான வாழ்வாதார வசதிகள் இருக்காது. ஆனால் இன்றைய கல்விச் சூழல் மாறினால் இந்த இடங்களில் இருந்து கூட நாளைய விஞ்ஞானி உருவாகலாம்
If i been given a choice between being a literate and illiterate i choose the later, as i choose to be educated than jus literate - Aristotle