Sunday, January 3, 2010

வரலாறு தொலைக்கும் நகரங்கள்


அண்மையில் பணி நிமித்தமாக நாக்பூர் நகரில் சில நாட்கள் தங்க வேண்டியதாக இருந்தது. நாக்பூர் நமது இந்திய நகரங்களில் முன்னேற்றப் பாதையில் ஓடிகொண்டிருப்பதாக பறைசாற்றும் பெரிய நகரங்களில் தூய்மையான நகரம். இந்த நகரத்திற்கு இன்னும் சில முக்கியமான குறிப்புகளும் உண்டு. நமது தேசத்தில் மையப் புள்ளி என்று கூற வேண்டும் என்றால் அது நாக்பூர். நமது தூரங்களின் கனகீடுகலான ZEROமைல்கல் இங்கிருந்துதான் துவங்குகிறது. நாக்பூர் நமது நாட்டின் ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப் படுகிறது . இங்கு விளையும் கொய்யாக்களும் மிக சிறப்பான சுவைகளை கொண்டவையே.
ஒரு மாநிலத்தில் பொதுவாக ஒரே ஒரு RBI கிளைதான் இருக்கும் அனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மும்பையில் ஒன்று, கூடுதலாக நாக்பூரிலும் ஒன்று உண்டு. அரசியல் ரீதியாக இந்த இடத்தில்தான் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறினார். இங்குள்ள தீக்ஷ பூமி என்னும் இடத்தில்தான் அவருடைய நினைவு மணிமண்டபத்தில் அவருடைய சாம்பல் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆசியாவின் மிகப் பெரிய மதமாற்ற   ஸ்தலமாக நாக்பூர் விளங்குகிறது. வருட வருடம் புத்த பூர்ணிமா அன்று அம்பேத்கர் மதம் மாறிய அதே இடத்தில் வேறு சில மதத்திலிருந்து புத்த மதத்தை பெரும்பாலானோர் தழுவுகின்றனர். முன்னாபாய் M.B.B.S, 3-IDIOTS போன்ற திரைப் படங்களின் இயக்குனர் ராஜு ஹிரானியும், ஸ்வதேஸ் படத்தின் நாயகி காயத்ரியும் இந்த ஊர்காரர்கள்.
HALDIRAMS ( நொறுக்குத் தீனி ) இந்த ஊர்காரர்கல்தான்
இந்தியாவின் மிகப் பெரிய பன்னாட்டு விமான நிலையம் இங்கு பல கோடி செலவில் அமைக்கப் பட்டு வருகிறது. இந்திய வரலாற்றின் மிகப் பெரிய பொது நல திட்டம் MIHAN என்ற பெயரில் அது செயலாக்கப் பட்டு வருகிறது. நமது நாட்டின் மையப் புள்ளி என்பதால் இந்த திட்டம் நாக்பூரின் தலையெழுத்தை புரட்டி போடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏனைய இந்தியாவின் மற்ற திட்டங்களை போல் இந்த திட்டமும் நீண்ட நாலா பின்னடைவை சந்தித்து வருகிறது. தெரிஞ்சுகிட்டே ஏன்னு கேக்க கூடாது அதான்அரசுத் திட்டம்ன்னு சொல்றேன்ல. துவங்க வேண்டிய இந்த விமான நிலையம் இன்றைய நிலையில் துவங்குவது மிகவும் கடினம்.
நீவிர் சென்று வந்த சுற்றுலா பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை வரைகன்னு பழகுன பழக்கம். அப்படில்லாம் விற்ற முடியாது.

இந்த ஊரில் உற்று நோக்குபவர்களுக்கு ஒரு வியப்பு காத்திருக்கும் ஒரு தெருவுக்கு மிகச் சாதரணமாக 8 முதல் 10 வரை பல் மருத்துவர்கள் உண்டு. எதுக்கு இத்தனை பேர்? . இங்க என்ன RBI மாதிரி பல்லும் அதிகமான்னு கேட்டா-  இல்லங்க. இங்கு பல் உபாதைகள் அதிகம். ஆரஞ்சு சாப்ட்ரதுனாலயன்னு கேட்டா அதுவும் இல்ல, கொய்யாவும் இல்லைங்க. நமது சென்னை பான் பீட கடைகளில் கிடைக்கும் 'மேவா' வகையில் குட்காவின் பெரிய பெரியப்பாவும் சுண்ணாம்பின் தலை மகனுமான கற்றாரே என்னும் லாகிரி வஸ்து இதற்க்குக் காரணம். இங்குள்ள சுள்ளான் முதல் இந்தியன் தாத்தா வரை இதற்க்கு அடிமைகள். இந்த வகை மாட்டர்கள் வேறு இந்தியாவில் எங்குமே கிடையாது என்று இதனை குடிசைத் தொழிலாக செய்பவர்கள் சவால் விடுகின்றனர். ஒரு கில்மா குறிப்பு நாக்பூரின் தட்பவெப்ப நிலை நவம்பர் முதல் FEBRAURY வரை மிக குளுகுளுவென்று இருக்கும் அதனால் எல்லா கட்சி தலைவர்களும் கட்டாயமாக இங்கு வருகிறார்கள். காதகுடுங்க நம்ம மகாராஷ்டிராவின் பெரிய தலை பிள்ளைகளில் 40சதவிகிதத்தினர் இங்குதான் CODING செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று சட்ட வல்லுனர்கள் SSHSHHH.  ஆதலால் வருடத்தின் இந்த நேரத்தில் BANNERகளின் விற்பனையும் ஹோர்டிங்க்ஸ்களின் விற்பனையும் மேகம் முட்டி மண்டை வீங்குமாம்.
இம்புட்டையும் சேக்கும்போது இந்த ஊருக்கு ஏன் நாக்புர்ன்னு பேரு வந்துச்சுன்னு ஒரு கேள்வியில் தொக்கினேன் , வரிசையாக இங்க ஏதாவது விமர்சையான நாக தெய்வத்தின் கோயில் இருக்கான்னு கேட்டேன். அப்படி ஏதும் கோயில் இங்கு இல்லை. பின்ன ஏன் நாக்பூர் ன்னு பேரு எதாவது நாக் என்ற பெயரோ, அடைமொழியோ, பெயரின் ஒரு பகுதியோ கொண்ட ஏதாவது தலைவரின் சுட்டுப் பெயரா- இல்லை. இப்படி தோண்ட தோண்ட இல்லை என்ற பதில் மட்டும் வந்தது. அனால் இங்குள்ள மக்களில் அதிகம் பேருக்கு ஏன் என்ற காரணம் தெரியவில்லை. கூடவே கொண்டு போயிருந்த விக்கோ பேஸ்ட் போட்டு துலக்க ஆரம்பித்தேன், இங்கு நாக் என்னும் நதி ஓடியதாம் அதை சார்ந்து வளர்ந்த நாகரிகம் என்பதால் இந்த ஊருக்கு நாக்பூர் என்று பெயர். இந்த நாக் நதியும் ஓடாயாகிப் போய் கூவத்தின் முகச் சாயலில் இன்று இருந்து வருகிறது. அதை விட வருத்தம் பெற்ற தாயின் பெயரை இந்த நகர மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து வருகிறார்கள் என்பதே. இது என்ன பெரிய பொருட்டன்னு கேட்டா. நிச்சயமாக . இம்சை அரசனின் நகைசுவையாய் வந்தாலும் அந்த வசனம் மிகவும் முக்கியமானது " வரலாறு முக்கியம் அமைச்சரே ". அதை நாம் சரியாக பதிவு செய்யாததுதான் நமது மிகப் பெரிய மடமை. அது இங்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெரும்பஞான நகரங்கள், ஏனைய அடையாளங்களின் நிலையும் இதே அவலம்தான்.

Saturday, January 2, 2010

CALENDAR - நாட்காட்டி வரலாறு; அதற்க்கு முன்னாள் ??

இன்றைய சூழ்நிலையில் மனிதனிடம் ஒரு நாள் என்ன நாள் என்று கண்டு பிடிக்க CALENDAR அதாவது நாட்காட்டி வேண்டும். நாட்காட்டி இருந்தாலே பலருக்கு இன்றைய நாள் என்னவென்று தெரியாது. இன்று நாம் பயன்படுத்தும் CALENDAR என்னும் சொல் நாட்களை கணக்கில் கொள்ளும் வழக்கத்தை குறிப்பதே. இந்த காலெண்டரை அறிமுகம் செய்தவர் போப் கிராக்ரி ( POPE GREGORY )  என்பவரே , அதனால் இந்த முறையை உலகெங்கிலும் உள்ளவர்கள் கிரகோரியன் ( GREGORIAN ) காலேண்டர் என்று அவருடைய பெயரிலேயே அழைகின்றனர். 
அப்படின்னா இவருக்கு முன்னாடி ஒரு நாளே கெடயாதா ? ஒரு மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதியின் நாளை எப்படி கனகிட்டர்கள்.

இதை இந்திய முறைப்படி பஞ்சாங்கம் என்பார்கள். இதில் வரும் அனைத்துமே துல்லியமாக கணக்கிடப் பட்டவையே. எண்களின் அடிபடையில் நெய்யப்பட்ட முறையே இந்த பஞ்சாங்கம். அதை இந்த 2010 ஆங்கில வருடத்திற்காக மொழி பெயர்த்தால் ??? ( எண் கட்டுமானங்களை மட்டுமே விவரிக்கும் விளக்கம் )

இதுல எங்க நாள் இருக்கு ? இதுக்கப்புறம் ஒரு குட்டி கூட்டல் அதுகப்புறம் ஒரு வகுத்தல் நாள் என்னன்னு உங்களுக்கு தெரிய வரும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஒவ்வொரு நாளுக்கும் மாதத்திற்கும் ஒரு எண் கொடுக்கப் பட்டிருக்கிறது அதே போல் 2010 இக்கு 6 என்னும் எண் கொடுக்கப்பட்டுள்ளது .
ஷ்ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே
 
ஒரு தேதி தேர்ந்தேடுங்கள் அந்த மாதத்தின் குறிப்பு எண்ணையும் இந்த வருடத்தின் குறிப்பு எண் 6யும் அதனுடன் கூட்டிக் கொள்ளுங்கள் இப்போது அதனை 7 ஆள் வகுத்து வரும் மிகுதியை நாட்களுக்கு கொடுக்கப் பட்ட எண்ணில் ஒப்பிட்டால் அந்த நாள் கிடைத்து விடும்..
எடுத்துகாட்டு 22 மார்ச் என்ன கிழமை.
22 + 2 ( மாதத்தின் எண் ) + 6 ( வருடத்தின் குறிப்பு எண் ) = 30 / 7 அதன் மிகுதி ( REMAINDER ) - 2.  வரிசையில் 2காண நாள் திங்கட்கிழமை
 
செக் செய்யவும்


அந்த கூட்டுஎண் [7,14, 21, 28 , 35 ] சரியாக வகுபடுகையில்- மிகுதி இல்லாமல்
அதனை 0 கொள்க இப்போது 0 காண நாள் - சனி

எடுத்துகாட்டு 3 - ஏப்ரல்
3 + 5 ( மாதத்தின் எண் ) + 6 ( வருடத்தின் குறிப்பு எண் ) = 14 / 7 அதன் மிகுதி ( REMAINDER ) - 0. வரிசையில் 0காண நாள்  சனி
இந்த பகுத்தறிவு போதுமா ???

நாத்திகம், பகுத்தறிவு - போலிகள் ஜாக்கிரதை [ பகுதி - 2 ]

நாத்திகர்களில் போலிகள் என்ற துவக்கதுடன் போன பதிவு முடிந்தது,. அதில் பதியும் தரத்தில் இல்லாமல் வந்திருந்த ஒரு பின்னோட்டத்தில் ஒரு கேள்வி - இந்த இருத்தல் இயல் என்ன வெங்காயம் என்று கேட்டிருந்தார். அது வெங்காயம் அல்ல அனால் அதை உரித்தால் நிச்சயமாக நாத்திகப் போலிகளுக்கு கண் கலங்கும்.
ஒரு பட்டுப் போன மரத்தின் இலை, காய்ந்த இலை, இனிமேல் அது இலை இல்லை அது சருகு. உதிர்ந்தாலும் காற்றில் அங்கும் இங்கும் திரிந்து, சத்தம் எழுப்பி தானும் இருப்பதை நிலைப்படுத்திக் கொள்ளும் . தனது இருப்பை மற்றவர்களுக்கு காட்டும் தன்மை - அப்படி இருத்தல் இயலில், தன இருப்பை எப்படியாவது காட்டி கொள்ளும், பிரசங்கித்துக் கொள்ளும், சம காலத்துக்கு மாறாக செய்து தன்னை நிலைநிறுத்தி கொள்ளும் ஒரு CHEAP TRICKஆகா இந்த நாத்திகத்தை அப்பிக் கொண்டவர்கள்தான் இன்றைய சூழலில் அதிகம்.
இதில் இன்னும் சில வகை போலிகள் உண்டு, எந்த சமயமாயினும் அதை பின்பற்றுவது கடினம், அதற்கென்று சில கட்டமைப்புகள், கோட்பாடுகள், கடமைகள் உண்டு. இந்த சிலவற்றை செய்ய சோம்பல் படுபவர்கள் அநேகர்கள் உண்டு. இந்த சோம்பலின் காரணமாக சமயத்தை எதிர்க்கும் சமய சோம்பேறிகள் - மூடர்களும் இந்த நாத்திக முகமுடியில்தான் அலைகிறார்கள். மிக முக்கியமாக இவற்றில் புரிதல் இல்லாதவர்கள், ( அர்த்தம் தேடுபவர்கள் அல்ல ) - இன்னொரு வகை. எனக்கு கணக்குப் பாடம் வரவில்லை என்றால், அந்த வகுப்பின் மீது, வகுப்பு ஆசிரியர் மீது, சில நேரத்தில் அந்த ஒரு காரணத்திற்காக அந்த பள்ளியின் மீதே எனக்கு வெறுப்பு வரும். என்னை விட முந்தைய நிலையில் சுமாராக புரிதல் உள்ள மாநாக்கனையும் நான் சேர்த்துக் கொண்டு கணக்கு வகுப்பை புறக்கநிக்கபது போன்ற சில கோமாளிகள் ஏராளம். இவர்கள் தன்னை நாத்திகரென்று அடையாளப் படுத்திக் கொள்ளலாம், ஆனால் இவர்கள் நாத்திகரில்லை.  நாத்திகம் முன்பு கூறியது போல் ஒரு காரணியின் தேடுதல்தான் , அது அவனம்பிக்கயாகவோ, குருட்டுத்தனமான எதிர்ப்போ அல்ல.
நாத்திகம் என்பது சிந்தனை சார்த்து ஆனால் இன்றைய போலிகள் அதை ஒரு வெறுப்பு சார்ந்த இயலாகவே மாற்றி விட்டனர்.
பகுத்தறிவு அல்லது நுண்ணாய்வு, ஒரு பொருளில், கோட்பாட்டின், தத்துவத்தின் கட்டமைப்பை உணர்தல், பொருள் விளங்கிக் கொளல். புரிதல் இல்லாமல் அதை எதிர்த்தல் அல்ல. இதுவும் தேடுதல் சார்ந்த இயலே இதில் வெறுப்பிற்கு வாய்பே இல்லை.
இந்த இடத்தில மிக முக்கியமான ஒரு கேள்வி பகுத்தறிவும் நாத்திகமும் ஒன்றா. நாத்திகம் பேசுபவர்கள் எல்லாருமே பகுதரிவுவாதிகளா - இல்லை. நாத்திகர்களும் , அதன் போலிகளும் தன்னை பகுத்தறிவு தேசத்தின் முடிசூடா மன்னனாக அறிவித்துக் கொள்ளலாம். ஆனால் பகுத்தறிவு என்பது உலகத்தின் எல்லா கட்டமைப்புகளையும் சோதிக்கும், நாத்திகம் -  கடவுள், சமய நம்பிக்கை சார்ந்த கட்டமைப்பை மட்டுமே சோதிக்கும். பகுத்தறிவு என்ற பெரிய வட்டத்திற்குள் சுழலும் ஒரு சின்ன வட்டம்தான் நாத்திகம், நாத்திகர்கள் மட்டுமே பகுத்தறிவுவாதிகள் என்பது மடக்குரயே. பகுத்தறிவு என்னும் பல்கலைகழகத்தில் ஒரே ஒரு துறைதான் நாத்திகம் அதுவே மொத்த பல்கலைகழகம் என்பது எப்படி. இதன் அடிப்படையில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்பது நாத்திகப் போலிகளின் சுய இன்பக் கற்பனையே. இதன் அடிப்படையில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்பது நாத்திகப் போலிகளின் சுய இன்பக் கற்பனையே.
 
இன்னும் தொடரும்
 
போன பதிவில் கூறியது போல இந்தப் பதிவு உங்களை சுட்டுவது போன்று இருந்தால் ஆம் இது உங்களைப் பற்றிதான். கீழே பின்னூட்டம் போட்டு உங்கள் பெயர்களை பதிவது உங்கள் முடிவு. அவற்றில் பகிரும் தரம் இருப்பின் அவற்றை வெளியிடும் முடிவு என்னுடையது. முதுகெலும்பு ( பெயர் ) இல்லாதவர்கள் முதலில் தைரியம் தேடுங்கள்