Monday, March 1, 2010

STOCK MARKETல கைப்புள்ள டைம்ஸ்

நீங்க நல்லவரா கெட்டவரா - தெரியலயேப்பா. இது மாதிரிதாங்க ஸ்டாக் மார்க்கெட் நல்லதா கெட்டதான்னு கேட்டா சொல்றாங்க. கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமா - கேள்விக்கு கூட தெளிவா பதில் சொல்றவுங்க இதுக்கு பதில் சொல்ல மாட்டேங்குறாங்க.

ஸ்டாக் திருடிங் ( பாருங்க TRADINGன்னு டைப் பண்ணா கூட திருடிங்க்ன்னு வருது )ஒரு நல்ல முதலீடு - சரி அப்ப வருடந்திர வட்டிகளுடன் வரக்கூடிய வங்கி முதலீடுகள்ள போட்டுடடலமே . STOCKள ஏன் போடணும். வங்கிகள்ல வரக்கூடிய முதலீடு திட்டங்களள போட்டா - அதிக வட்டி கிடைக்குமா ?.

STOCKல அதிக வட்டி கிடைக்குமா ? - ஆமாம் - எப்படி ? - நீங்க வாங்குற ஒவ்வொரு STOCKக்கும் ஒரு கம்பெனில முதலீடு. முதலீடு செய்யப் படும். அந்தக் கம்பெனி நல்ல வருமானம் ஈட்டித் தந்தால் உங்கள் முதலீட்டில் நல்ல RETURNஸ் கிடைக்கும் . இல்லேன்னா? . சரி இந்தக் கேள்விக்கு அப்புறம் வருவோம்.
இந்த கம்பெனி நல்ல கம்பெனியா இல்லியான்னு எப்படி கண்டுபிடிப்பீங்க?. கம்பனிகள் வரைந்து கொடுக்கும் சார்டுகள் பீ ஈ RATIOக்கள் மூலமா அத தெரிஞ்சுக்கலாம். இத வெளியிடுறது யாரு ? அந்தந்த கம்பனிகள். அதாவது என்ன பத்தி நான் சொல்றத வச்சு என் கிட்ட காசு கொடுக்கிறது - அப்டித்தான - சரி இந்தக் கேள்விக்கு அப்புறம் வருவோம்.
ஏங்க நாம நம்ம ஊர்ல இருக்குற ஒரு கம்பெனில முதலீடு பண்றோம் - சரி ஆனா அமெரிக்கால வேற ஒரு கம்பனிக்கு சூனியம் வச்சுட்டாங்கன்னு, கொஞ்ச நாளைக்கு நம்ம கோமனத்த கடன் கேப்பங்கலாமே, கொஞ்ச நாளைக்குதான் - அப்டியா?. உலக வர்த்தகம் ஒன்றை ஒன்று தொடர்புடையது - ஒரு சந்தையின் வீழ்ச்சி இன்னொரு சந்தையில் தெரிவது தவிர்க்க முடியாது. அப்ப கண்டிப்பா கொஞ்ச நாளைக்கு சுதந்திரமா சுத்தணும் - அப்டீல்லாம் ஒன்னும் இல்ல உங்க வருமானம் குறையும்.
இத எத வச்சு கண்கானிப்பீங்க. எப்போ எந்த நாடு என்ன செய்யும் ?. எப்போ எந்த நாட்டு தலைவர் யாரோட யுத்தம் அறிவிப்பர்ந்னு?  எப்போ எந்த நாடு எந்த நாட்ட அடிச்சு ஓலைல போட்டுதுன்னு பாப்பீங்க. ஏங்க அதான் இன்னிக்கி இவ்ளோ நியூஸ் சேனல் இருக்கே - அப்பா எங்க எது நடந்தாலும் கண்டிப்பா  குனியுரதுக்கு என்னையும் கூப்டுவாங்கன்னு சொல்லுங்க. அது மட்டும் இல்ல நான் என்ன செஞ்சாலும் பரவா இல்ல தொடர்ந்து யாருக்காவது எதுக்காவது பயந்து கிட்டே இருக்கணும். தொடர்ந்து உலக நிலவரங்கள கண்கானிசுகிட்டே இருக்கணும். அப்படீல்லாம் இல்ல அதுக்குதான் நாங்க இருக்கோமே.

ஏங்க இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி அமெரிக்க கூட்டமா டிவி டிவி யா ஒப்பாரி வச்சு கூத்தடிசாங்கலே அப்பா அது நடக்க போவுதுன்னு உங்களுக்கு தெரிஞ்சு போச்சா?. தெரிஞ்சதுக்கு அப்புறம் கூப்ட்டு எல்லாருக்கும் பணத்த திருப்பி குடுதுடீன்களா ?.  இல்லங்க இப்போதான் சந்தை நல்ல நிலைமைக்கு வந்துருச்சே. இப்புடி ஆகப் போவுதுன்னு உங்களுக்கு தெரியுமா ? பெரிய ஆளுங்க நீங்க நீங்க அங்க ஒசாமா சாரி ஒபாமா பக்கத்துல இருந்துருக்கலாம், அவரு பாருங்க அந்த நாட்டு மக்கள் பொண்டாட்டி மோதரத்த ( அமெரிக்க - அங்க தாலி செண்டிமெண்ட் செல்லாது ) அடகு வச்சு கட்டுன வரிப் பணத்த இன்னிக்கி வரைக்கும் கோல்ட் மண் சாச்ஸ்லேந்து அம்புட்டு பயபுள்ளக்கும் வாங்கி ஏறச்சு கிட்டு இருக்கார்.
அட நம்புங்க சார் - எதுல இல்ல ரிஸ்க் - நாளைக்கு நீங்க உயிரோட இருக்கப் போறீங்களான்னு உங்களால சொல்ல முடியுமா - அது கரெக்ட் - போட்டா,  பணத்த திருப்பி தரப் போரேன்னு நீங்க சொல்லவா போறீங்க??? .


PLS read the offer Document/ red herring prospectus before investing - எது இந்த குட்டி குட்டியா OXFORDல காப்பி குடிச்சிட்டு CAMRIDGEல  தூங்குரவுங்க கூடி உக்காந்து DICTIONARYல இருக்குற வார்த்தையா தேடி எழுதிருப்பங்கலே அதுவா ?

BE FEARFUL WHEN OTHERS ARE GREEDY; GREEDY ONLY WHEN OTHERS ARE FEARFUL - WARREN BUFFET -
GREEDன்ன பேராசைதானே
ஆசையே அழிவுக்கு வழி - புத்தர் - அதான் நாங்க கடவுளையே நம்புறது இல்ல

அவுங்கெல்லாம் முகமூடி போடாத கொள்ளக்காரங்கள் ஆச்சே !!!! - 1887ஆம் ஆண்டு ஆபிரகாம் லின்கன் இல்ல - நம்ம காமெடி நடிகர் விவேக்தான்.

இந்தக் கேள்விக்கு அப்புறம் வருவோம். -  இதை தனியாக ஒரு பகுதியாக நாளைய விடிவெள்ளி 'ஹர்ஷத் மேத்தா' ஒரு பதிவு எழுத முடிவு செய்துள்ளார்.

Tuesday, February 23, 2010

ஒருத்திக்காய் நனையாமல் இருக்கும் சுவர்கள்

அவளுடைய மஞ்சளின் நுன்மேனிகளில்
இன்னும் கட்டுண்டு கிடக்கும்
கற்பு குலைந்த கம்பளிகள்
 
அவள் பருகி மறுதலித்த
என்னுடல் கொப்பளங்களில் கருத்தரித்த
நிமிடங்களை அடைகாக்கும் மெத்தைகள்
 
ஒவ்வொரு காலையிலும்
நீயா நெற்றியில் சூடு பரப்புவது ??
என்று பால்காரன் விரல்களில்
ஏமாந்து போகும் அழைப்புமணி பொத்தான்கள்
 
நீ எப்போதாவது உதட்டழகை மறைக்கப்
பூசும் உதட்டுச் சாயங்கள்
மூண்டு கிடக்கும் அலைபேசி த்வாரங்கள்
 

இன்றும் நீ மூட்டிய கனலை
விதைத்துக் கொண்டு உன் ரேகைகளாய்
பிரகாசிக்கும் விளக்கின் திரி முனைகள்
 
உன்னால் தன்னுடல் பிரிந்த
துளசி இலைகள் இன்னும்
உனக்காய் உயிர் பிரியாமல்
திருமேனிகளின் திருவடியில்
 
முதுகுப் புறங்களில்
நீ வருடுவதில்லை என்று
முகங்களில் மொங்கோளியக் கண்களில்
கதிர் மறுக்கும் சாலரச் சீலைகள்

எனக்குள் ஆர்கிமெடிஸ்
அழைத்துவரும் உன்னுடன், மட்டுமே
நனையக் காத்திருக்கும்
குளியலறை சுவர்கள்

பெற்றவர்கள் அழைத்தார்கலென்று
என் கண்மறைவில் பிள்ளை பெறுவதற்க்காய்
கை கடிகாரம் போல்
என்னை கழற்றி வைத்துப் போன உன்னை
இவைகளோடு அற்றிணையாய் நின்று விளிக்கிறேன்
வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும்
நேரங்களை பிதிக்கி
உன்னை நொதித்து கொண்டிருக்கும்



ஒருவன்





மனசாட்சி : பண்றதெல்லாம் பண்ணிபுட்டு, கவிதை வேற

Sunday, February 21, 2010

3 IDIOTS - காற்றில் தொங்கும் கேள்விகள்( மாற்றுப் பார்வை )

இந்தப் படம் வெளியான உடனேயே இந்தப் பதிவ போடணும்னு நெனச்சேன், இன்னும் சிலர் இந்தப் படத்த இன்னும் பாக்கலேன்னு சொன்னாங்க, அதனால இத இத்தனை நாள் தள்ளி போடுறேன். இந்த கருத்துக்களை படிச்சிட்டு இந்தப் படாத பார்த்த கண்டிப்பா படத்தில் நிலைக்கும் நகைசுவை ரசிக்கும் திறன் இருக்காது. இந்தப் படம் முழுக்க முழுக்க இந்திய கல்வித் தரத்தை அது விதைக்கும் சமுதாய நிரல்களையும் சாடிய முதல்ப் படம் என்று நமக்கு தெரியும் இந்தப் படத்தில் சில பொருள்களை இயக்குனர் சில கட்சிகளில் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது, என்பார்களே அது போல் கை ஆண்டு இருக்கிறார். இங்கே பகிரப் படும் கருத்துக்கள் உங்களுக்கும் தோன்றியவை என்றால் மிகவும் மகிழ்ச்சி இல்லையென்றால் இந்தப் பதிவு உங்களுக்குதான் வாழ்த்துக்கள்.


ஆசிரியர்களைப் பற்றி: பொம்மன் இராணி ஏற்று நடித்த வீறு சஹாஸ்ரபுதே என்ற பாத்திரம். அரச காலத்து COUCHவகை கட்டிலில் OPERAவகை இசையில் உறங்கும் கட்சி - இன்னும் பழங்காலத்தில், மேற்கத்திய மோகத்தில் இன்றைய ஆசிரியர்கள் நின்று கொண்டிருப்பதாக இந்த கட்சி வெளிப்பாடு இருக்கிறது. பல இடங்களில் இவர் வெளி நாட்டிற்க்கு செல்வதைப் பற்றி மேன்மையாக பேசுவதையும் காட்டி இருக்கிறார்.
மிக முக்கியமாக ஆமிர்கான் இரண்டு வார்த்தைகளை( Farhanitrate Prerajulisation) குடுத்து தேடச் சொல்லும் கட்சி. ஒரு புரட்சியான கேள்வியை நிறுத்தி விட்டு அவர் ஓடி விடுகிறார். அதே கல்லூரியில் பல வருடங்களாக பாடம் நடத்தி வரும் ஆசிரியர். தனக்கு தெரிந்ததை மிக தெளிவாய் முன் வைக்கும் VEERU SAHASRBUDDHE பத்திரம் இந்த இடந்தில் மழுங்கி நிற்கும். ஒரு பாடபுத்தகத்தை மாணவர்களை விட அதிகம் படித்தவர் ஆசிரியராக இருப்பார், இருந்தும் இந்த இரண்டு வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் இல்லை என்று இந்த பாத்திரம் தைரியமாக சொல்ல வில்லை. இப்படி தன்னன்பிக்கை இல்லாத படிப்பு தேவையா ? - என்ற தொக்கி நிற்கும் ஒரு கேள்வியை இந்தக் காட்சி செருகிச் செல்கிறது.

பட்டமும் படிப்பும்: வேலைக்காரன் படத்தில் ரஜினி அறிமுகப் பாடல் 'வேலை இல்லாதவன்தான்' - இன்று வரை மனோவின் மிக முக்கியமான பாடலாக கருதப் பட்டு வரும் இந்தப் பாடலில் இரண்டு வரிகள் - படிச்சவுங்க வாங்குற பட்டம் காகிதம்தான் காகிதம்தான்; படிக்காதவன் விடுற பட்டமும் காகிதம்தான் இதன் கருத்துப் பதிவு இந்தப் படத்திலும் உண்டு. ஆமிர்க்ஹான் 'ராஞ்சோத் தாஸ் ஷ்யாமல் தாஸ் ஜானஜாத்' என்ற பெயரில் படித்து போரியல் இல நிலைப் பட்டம் பெறுவார், இவரை அதே பெயரில் தேடிச் செல்லும் நண்பர்களுக்கு அந்த பட்டம் அந்தப் பெயருள்ள இன்னொருவரிடம் இருப்பது போல் காட்டப் படும். இதில் நகைச்சுவை மழித்து விட்டு பார்த்தால், இன்றைய பட்டங்கள் வெறும் பெயருக்கு பின்னால், நமது வீட்டு வரவேற்ப்பரையில் தொங்க விட மட்டும் பயன் படுகின்றன - இன்றைய படிப்பிலும் பட்டங்களிலும் அறிவு தூண்டுதளுக்கான, சிந்தனைகளுக்கான ஊற்று - இவற்றுக்கான வெகுமதிகளாய் இன்றைய பட்டங்கள் இல்லை என்பதையே இந்த காட்சிகள் பதிவு செய்கின்றன

Education just begins with Books; misfortunate in this subcontinent it also ends there