Wednesday, March 31, 2010

ENGLISH IS A FUNNY LANGUAGE - எப்படி ?? பகுதி - 4

எல்லா மொழியிலும், சமுதாய கலாசார மற்று சில காரணங்களினால், வேற்று மொழி வார்த்தைகள் கலந்து விடுவது உண்டு. எந்த மொழியும் இதற்க்கு விதி விலக்கல்ல. அந்தந்த மொழிக்கென்ற தனித் தன்மையை, கட்டமைப்புகளை, இலக்கணத்தை, இந்த கலப்பின் காரணியாக எந்த மொழியும் சிதைத்து கொள்வது அல்ல, ஆங்கிலத்தைத் தவிர. இந்த முறையில் ஆங்கிலத்தில் உள்ள பெருவாரியான வார்த்தைகள் பிரெஞ்சு சார்ந்தவை, இலக்கணம் பெருவாரியாக லடினம் சார்ந்தவை, அதன் ஏனைய கட்டமைப்புகள் பெரிதும் ஜேர்மனிய மற்றும் பழைய நோர்ச்க் மொழியின் அடிப்படையில் அமைந்தவை, ஆங்கிலப் பெயர் பட்டியல் ரோமானிய வரலாற்றை சார்ந்தது, அறிவியல் சார்ந்த பெயர் பட்டியல் கிரேக்க மொழியை தழுவி இருக்கும். இது சரியா? தவற? என்பதை விட முக்கியம், இதில் ஆங்கிலம் எந்த மொழியின் அடிப்படையில், அல்லது ஆங்கிலதிர்க்கான கட்டமைப்பு எது? . இன்று வரை அப்படி எதுவுமே இல்லை. ஒரு மூலத்தை அல்லது வேர்போருளை நிறுவ செய்யப்பட்ட முயற்சிகள் ( GREAT VOWEL SHIFT, ANGLISIZING, SPELLING REFORMS ) அனைத்துமே தோல்வியில் முடிவடைந்தன. இந்த முயற்சிகள் கூட கூடுமான வரையில் ஆங்கிலம் இந்த மொழிகளில் வாங்கிய கடன்களை திரை மறைவிற்கு கொண்டு செல்லும் முயற்சியாக முடிவடைந்தன.

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்
தீவு என்ற சொல்லிற்கான ஆங்கில சொல் - ISLAND. சில நூறு ஆண்டுகள் முன்வரை தொன்மையான ஆங்கில சொல்- IGLAND, இதற்கான பொருளுடன் புழக்கத்தில் இருந்தது.  லதினத்தில் INSULA என்பது தீவு என்று பொருள் தரும் சொல்லாகும். இடைப்பட்ட ஆங்கில மொழிக் காலங்களில் IGLAND சொல்லை லாடின INSULA சொல்லுடன் தொடர்பு படுத்த INSULAவில் மூன்றாம் இடத்தில இருந்த 'S'ஐ எடுத்து IGLANDஇல் இரண்டாம் இடத்தில சேர்த்தனர். உச்சரிப்பு சீலம் காரணமாக இரண்டாம் இடத்தில உள்ள 'S' உச்சரிப்பில் மௌனமாக்கப்பட்டது. இது இன்று நமக்கு விதியாக இதன் வரலாற்று காரணிகள் படிப்பிக்க படாமலே கற்பிக்கப் படுகிறது. DETTE என்ற தொல்லாங்கில சொல்லில் B நுழைக்கப் பட்டு அதை இலத்தின DEBITUM சொல்லுக்கு தொடர்பு படுத்த முயற்சி செய்ததும், DEBT ஆனது. இன்றும் இந்த DEBT சொல்லை நாம், தொல்லாங்கில சொல்லின் உச்சரிப்புடந்தான் பயன்படுத்துகிறோம்.

மொழியின் சொல் பயன்பாடு ஒவ்வொரு காலத்திலும் ஒரு நிலையில் இருக்கும், வள்ளுவர் எழுதிய திருக்குறள் படிக்க நமக்கு ஒரு விரிவுரை தேவைப்படுகிறது. பரிமேல் அழகர் விரிவுரைக்கே இன்னொரு விரிவுரை தேவைப் படும் நிலையில் இருக்கிறோம். ஆயினும் நமது இலக்கணங்கள், நமது சொற்களை சிதைக்கும் நிலைக்கு நாம் (இன்னும்) செல்லவில்லை. எத்தனையோ பழைய சொற்களை தொலைத்து விட்டோம், இதே வேலையில் பல புதிய சொற்களை பயிர் செய்யவும் நாம் தவறவில்லை. ஜன்னல், சன்னல், சாளரம் இவை மூன்றுமே நமக்கு பழக்கமான சொற்களே இதில் சாளரம் மட்டுமே தமிழ். ஜன்னலுக்காய் நாம் சாளரத்தை மாற்றி அமைக்கவில்லை. மாறாக ஜன்னலை, சன்னலாய் தமிழ்படுத்தி இருக்கிறோம். இந்த சொற்களின், உச்சரிப்பு, இலக்கணம், பயன்பாடு எதையுமே நாம் சிதைத்து விட வில்லை.

ஆறிரண்டு திங்கள்

JANUARIE            JULIE
FEBRAURIE          AUGUST                      
MARCHE          SEPTEMBRE
APRIL  OCTOBRE / OCTOMBRE
MAI              NOVEMBRE
JUIN             DECEMBRE
இப்படிதான் நூறு ஆண்டுகள் முன்புவரை கூட ஆங்கில மாதங்கள் எழுதப் பட்டு வந்தன. இவை அனைத்துமே ரோமானிய சொற்கள். உச்சரிப்பிர்க்காய் எழுத்துக்களை மாற்றி அமைக்கும் முறை ஆங்கிலத்தில் மட்டுமே உண்டு. இது நாம் முதல் பகுதியில் கதைத்த, சுதந்திரம் என்ற பெயரில் வழங்கிய தான்தோன்றித் தனத்தின் விளைவு மட்டுமே. தழுவலான அல்லது ஒரு செயற்கையான உச்சரிப்பு புகுத்தல் காரணமாக இந்த மாதத்திற்கான பெயர்களின் எழுத்துக்கள் மாற்றி அமைக்கப்பட்டு, நம் கையில் கொடுக்கப் பட்டு இருக்கிறது. இதை சூழலுக்கு ஏற்ற வகையில் மற்றம் கொள்தல் என்று மார்தட்டி கொள்ளலாம். ஆயினும் இதன் உண்மை, சிதைவு என்பது வெகு கண்கூடு. இந்த சிரமத்தை இன்னும் அதிகமாக்க இன்றைய ஆங்கிலேயே பட்டறைகள் கைகொண்டுள்ள ஆயுதம் - நவீனமயமாக்கல். குறுஞ்செய்திகளின் மேலோங்கு பொருளாக வார்த்தைகள் சங்கு நெரித்து கொள்ளப் படுகிறது.

HOW ARE YOU - "OW`W`U "
I WILL SEE YOU LATER - " I LL C U L8R"
Will Be right BAck - " BRB "  என்று நீட்டி முழக்கி கொண்டே போகலாம் .

இதே காலத்தில் வேற்று மொழிகளில் உள்ள முழு சொற்றோற்றோடர்களை அப்படியே எடுத்து பயன்படுத்துதல் இன்னும் சிக்கலை இடியாப்பம் ஆக்கி விடுகிறது.

KUDOS ( GREEK ), ADIOS AMINGO ( SPANISH ) ASTA LA VISTA

என்று இவைகளும் தொடரும். இதனால எல்லாம் இந்த மொழி அழியுதுன்னு நீங்க சொல்ல முடியாதுன்னு சொல்ற நண்பர்கள் பொறுக்க; அடுத்த பகுதி வரை.

Monday, March 29, 2010

ரேடியோ`வ கண்டுபிடிச்சது யாரு? - சரித்திர இருட்டு

மொதல்ல யாரு தொலசாங்கலோ அவுங்க கிட்ட கேட்டா தெரியும் ( எட்ரா அந்த அருவாள!!! ) .

ரேடியோ`வ கண்டுபிடிச்சது யாரு ?
மார்கோனி, இது கூடவாடா தெரியாது ங்கொய்யா.
குக்லில்மோ மார்கோனி, 25, ஏப்ரல், 1874 இவர் பொலொக்ன, இத்தாலியில் பிறந்தார். 2, ஜூன் 1896 அன்று ரேடியோவை தன் கண்டுபிடிப்பாக, தனது சிந்தனையின் காபுரிமைக்காய் ஆங்கிலேய காப்புரிமை சட்டத்தின்[பதிவு எண் - 12, 309 ] படி பிரிட்டனில் பதிந்தார். அமெரிக்காவிலும் பதிந்தார். 1901 ஆம் ஆண்டு மர்கோனியின் ஒரு சோதனைக்கூடத்திலிருந்து ஒரு தொலைதூண்டுதல் ஒலி மூலமாய் ( இன்னும் ரேடியோ முளுமையடாயாத நிலை ) அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வேல்டிடம் இருந்து ஏழாம் எட்வர்ட்க்கு அனுப்ப பட்டதாய் ஒரு வாழ்த்து செய்தி அனுப்ப பட்டது. அதன் பின் 1909ஆம் ஆண்டின், ரேடியோயவை கண்டுபிடிததற்காய, இயற்பியலுக்கான நோபெல் பரிசு இவருக்கு வழங்கப் பட்டது. 1912 இல் கடலுக்குள் மூழ்கிய TITANIC கப்பலிலிருந்து காப்பாற்ற பட்டவர்கள் நன்றி பாராட்ட ஒருவர் உண்டு என்றால் அது மார்கோனி மட்டுமே என்ற புகழுடன் மார்கோனி இன்றும் நமது புத்தகங்களில் ரேடியோவின் தந்தையாக இருந்து வருகிறார்.

அது சேரி... ரேடியோ`வ கண்டுபிடிச்சது யாரு ???
என்னடா வம்பா போச்சு " கால்ல வர கத கேட்டு சோனியாவும் ராகுலும் இந்தியர்கலல்ன மாதிரி போச்சு. நிகோல டெஸ்லா, இந்தப் பெயரை இதுதான் நீங்கள் முதல் முறையாக எதிர்கொண்டிருபீர்கள். 10, ஜூலை, 1856 ஆம் ஆண்டு ச்மிஜன் ஆஸ்திரியாவில் பிறந்தார் இந்த செர்பியர். 1882ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்று, 1884 பின் ஆம் ஆண்டு இவர் எடிசனுடன் பணிபுரிய அமெரிக்க வந்தேருகிறார். ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சி நிறைவு செய்தால், 50,000 அமெரிக்க டாலர்கள் தருவதாய் சொல்லி, எடிசன், அப்பறம் பிம்பிளிக்கிபிளாக்கி சொல்லி விடுகிறார். 1886 இல் எடிசொனிடம் இருந்து விலகி சுயமாய் ஒரு தொழில்பட்டறையும் ஆராய்ச்சியும் தொடர்கிறார். கூலிவேலையும் செய்கிறார், தனுடைய கண்டுபிடிப்புகளுக்கு பணம் சேர்கிறார். 1895 இல் ரேடியோவை ஒலி நீட்சி இயக்க தத்துவத்தை நிரூபிக்கிறார். மார்கோனி காப்புரிமைக்கு பதிந்த சிந்தனையின் அதே இயக்க தத்துவம் இது என்பது குறிப்பிட தக்கது.

என்னங்கட சொல்றீங்க
இன்னும் ஒரு படி மேல் போய் மார்கோனி பதிந்த காப்புரிமை பத்திரத்தில் அவர் பயபடுதியதாக சொல்லப்படும் அலைவரிசை சுருள் ( COIL) - டேஸ்லCOIL, ஆண்டேனவும்தான். 1915இல் டேஸ்ல மார்கோனி பயன்படுத்தியது தன்னுடைய சிந்தனையே என்று கோரி வழக்கு தொடுக்கிறார். போதிய பண வசதி இல்லாமையால் பல முறைகள் இந்த வழக்கு கை விடப்பட்டு, டேஸ்லாவால், பல முறை மீண்டும் பதியப் படுகிறது. இறுதியில் 1943இல் அமெரிக்க நீதி மன்றம் டேஸ்லவை ரேடியோவின் கண்டுபிடிப்பிற்கு உரிமை படுத்துகிறது. இந்த தீர்ப்பு வரும் பொழுது டேஸ்ல இந்த உலகில் இல்லை. அதே வருடம் ஜனவரி 7ஆம் தேதி டேஸ்ல இறந்துவிட்டார் என்பது வருத்தமான விஷயம். இன்று நம் பயன்பாட்டில் இருக்கும் எந்த ஒரு நவீன சாதனமோ அதில் ஒரு புள்ளியாவது டேஸ்ல கை பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  இயற்பியலின் எல்லா கோட்பாடுகளையும் டேஸ்ல ஆராய்ந்தார். மின்காந்தவியல்( ELECTRO MAGNETISM ), காந்தஇயக்கதத்துவம் ( ELCTROMECHANICAL ), அணு இயற்பியல் (NUCLEAR PHYSICS ), ஒலித்தூண்டல், ராடார், தொலைஇயக்கமாட்சி( TELEFORCE ) , மாற்றுமின்சாரம்( ALTERNATE CURRENT ) , புவிஈர்ப்பு தத்துவம் ( GRAVITY ), என்று இயற்பியலின் எந்த திசை நோக்கி நடந்தாலும் அங்கு ஒரு கைப்பிடி அளவேனும் டேஸ்ல, நிற்கிறார். 1912இல் ஒரு முறை, 1915இல் முறை உலகறிந்து நோபெளுக்கு பரிந்துரை செய்யப் பட்ட டேஸ்லவிற்கு, இன்று வரை நோபெல் கிடைக்காதது அளப்பெரும் வியப்பு

இப்போதான் காதலுக்கு மரியாதை மினி கேக்குறாங்க ஏன் இப்பிடில்லாம்??
டேஸ்ல மேலும் தன்னுடைய ஆராய்ச்சியின் எல்லைகளை விரிவு படுத்திக் கொண்டிருந்த வேளைகளில் மார்கோனி அந்த சிந்தனையை சந்தையிட்டு மிகப் பெரும் பணம் ஈட்டினார். பிறப்பினால் பணக்காரர், அதன் பின் தொழில் முறை பணக்காரர், இது மட்டுமல்லாது இவருடைய தொழிற்பேட்டைகளில் முதலீடு செய்தவருடைய பணம், என்று டேச்லவுக்கு எங்கு திரும்பினாலும் பணம் கட்டிய கோட்டை நுழைவாயில் மறுத்தது, இதனுடன் போராட என்பதை விட, அன்றாட வாழ்விற்கே டேஸ்ல கை ஏந்தும் நிலையில் இருந்தார் என்பது உண்மை.

டேஸ்ல ஒரு செர்பியர் என்பது அன்றைய காலத்திற்கு, அவரை மறுக்க, மிக போதிய காரணமாக இருந்தது.

உலகு வணங்கிய எடிசனின் எதிர்ப்பு
 
மர்கோனியின் அரசியல் நட்பு, அவர் வகித்த பதவிகள், மேலும் இவை இரண்டும் அவர் பின்னே ஈர்த்த ஊடக தொடர்ப்பு.

ஒன்றோடுன்று தொடர்புடைய புத்தக பதிவர்கள், தான் ஒரு முறை பதிவு செய்ததை மாற்றி அமைக்கும் தேவை இன்றி இன்று வரை அதை நமக்கு படிப்பித்து வருகிறார்கள்.

HISTORIES are made and Written, and its Obsolete if not re-written.

Wednesday, March 24, 2010

நட்டரங் - மராத்தி - திரைவிமர்சனம்

எல்லா மொழி திரைப்படங்களுக்கும், இன்று தமிழில் விமர்சனங்கள் படிக்கக் கிடைக்கிறது. தமிழைத், தவிர ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஸ்பானிஷ், கொரியன், ஜெர்மன் ஏன் இன்னும் பெங்காலிக்கு கூட தமிழில் விமர்சனங்கள் கிடைக்கின்றன. இதில் ஒரே படத்திற்கு பல பேர் எழுதிய விமர்சனங்கள் கூட படிக்கக் கிடைக்கும். இது வரை ஒரு மாரட்டிய மொழி திரைபடத்திற்கு யாரும் விமர்சனம் எழுதிப் பார்த்ததில்லை. இது முதல் முயச்சி; எனக்கு தெரிந்தவரை. இல்லை என்று மறுப்பவர்கள் கமெண்ட்ஸ் குட்டிவிட்டுப் போகவும்.
அவதாரும் 3-முட்டாள்களும், இந்தியா முழுவதும் திரைகளை நிறைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் " ஆங்கோர் காட்டினில் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்று உண்டோ ". என்று இந்த மாராத்திய திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரன் திரைப்பட வில்லன் அதுல் குல்கர்னியின் மிகச் சிறப்பான நடிப்பில் zee டாக்கீஸ் தயாரிப்பில், இந்தப் படம் நாடகம் அதன் கலைங்கர்கள் பற்றிய மிக அழகான பதிவு.

குணா ( அதுல் குல்கர்னி ) , கட்டு மஸ்தான இந்த விவசாயிக்கு நாடகங்களில் ராஜா வேஷத்தில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பது கனவு. சேமிப்பிலாமல் - நாடகங்கள் பார்க்கும் இந்த கிராமவாசி  சில காலத்திற்குப் பிறகு தமாஷா வகை நாடகங்களில் நடிக்கவும் ஆரம்பிக்கிறான். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் நேரத்தில் ஒரு கேள்வியை/ சவாலை  எதிர் கொள்கிறான், இப்படி ஆணாக இருந்து ஆணாக நடிக்கிராயே, ஒரு திருநங்கைய ( NACHYA ) நடிக்க முடியுமா என்று சராசரியான ஒரு ஆணின் கேள்வியாக இல்லாமல் ஒரு நாடக காதலனாய் குண எனக்கு நாட்டியம் தெரியாதே என்கிறான். கதை அடுத்த பரிமாணத்தை அடைகிறது.

அந்த நாடக கூட்டத்தை சேர்ந்த ( மிக அழகிய ) பெண் குணாவிற்கு நாட்டியம் சொல்லித் தருகிறாள். இது அல்லாமல் குணா தன்னுடைய மிரட்டலான உடலை இழக்கிறான். கோலம் அழிகிறான். ஒரு நளினமான உடல் தோற்றத்தை அடைய முற்படுகிறான். தன்னை சுற்றி உள்ள பெண்களின் அசைவுகளை பார்த்து பழகவும் செய்கிறான். ஒரு நாள் திருநங்கை கோலத்தில் மேடையேருகிறான் குணா. குணாவின் சகாக்களும் நாடகத்தின் சிறப்பரிந்தவர்களும், அந்த நாடக குழுவை சார்ந்தவர்களும் குணாவைப் பாராட்டி மெச்சுகின்றனர். ஆனால் இப்படி ஒரு வாழ்கை தேவை இல்லை என்று குடும்பம் அவனுக்கு தடையாக இருக்கிறது. ஒரு நீண்ட நாடகப் பயணத்திற்குப் புறப்படும் குணா உறவுகள் தொலைக்கிறான்

குணாவின் பாத்திரம் அந்த நாடககுழுவிர்க்கு வலு சேர்க்கிறது. அந்த நாடக குழு அக்கம்பக்கங்களில் பிரபலமடைகிறது. சாதாரண குழுவாக இருந்த அந்த குழு பல இடங்களுக்கு சென்று நாடகம் நடத்துகிறது. புகழின் உச்சியில் இருக்கும் குணா தன்னுடைய திருநங்கை கோலத்திலேய வாழவும் துவங்குகிறான். அதற்காய் நொந்தும் கொள்கிறான் இடையில் அர்ஜுனன் பத்திரத்தில் மேடை ஏறுகிறான் குணா. இவன் ஒரு திருநங்கை - இவன் அர்ஜுனனாய் நடிக்க கூடாது என்று கலவரப் படுகின்றனர் பாமர ரசிகர்கள், நாடக மேடை தீக்கிரை ஆகிறது. அந்த வேலையில் குணா ஒரு பழைய பகை காரணமாக , அந்த ஊர் பெரிய மனிதாரால் கடத்தப்படுகிறான். ஒரு திருநங்கையாக வன்புணர்ச்சிக்கு ஆளாகிறான். சுயம் அழிகிறான் குணா தான் சேர்த்த பெயர் புகழ் அனைத்தும் கானல்நீராய் கலைகையில் ஊர் திரும்புகிறான். உறவுகள் மறுக்கின்றன. சுற்றமும் மறுக்கிறது. துணையாய் நின்ற நட்பும் கலைகிறது. என்னுடைய அனைத்தும் இந்த நாடகத்தில்தான் தொலைத்தேன், இதிலிருந்துதான் மீட்பேனென்று சூளுரைக்கிறான். இவன் வாழ்கையை தடம் மாற்றிய அந்த நாட்டியக்காரி மட்டும் இவன் துணை நிற்க மீண்டும் அதே பயணத்தை துவங்குகிறான். வெற்றி, சுபம்.

வடஇந்தியாவில் முன்னமே தனக்கென்று ஒரு அடையாளம், ஒரு முத்திரை வைத்திற்கும் அதுல் குல்கர்னி, இந்த படத்தின் மூலம் இன்னொரு நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டுஇருக்கிறார். CASTWAY - படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக TOM HANKS பக்தர்களாகி விடுவார்கள், அவருடைய உடல் எடையை கூட்டி , குறைத்து, கூட்டி என்ற உழைப்பிற்காக. அதன் பின் உலகெங்கும் இதை போல் முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் இந்தப் படத்தில் அதுல் குல்கர்னி ஒரு சராசரியான கட்டுமஸ்தான விவசாயியின் உடலையும் ஒரு நாடக திருநங்கையின் உடலையும் தத்ரூபமாக காணத்தந்து நிறைவு செய்கிறார். ஒரு திருநங்கையின் உடல் அசைவிலும், ஆணாக இருந்து கொண்டு திருனங்கயாய் வாழும் காட்சிகளிலும், குழப்ப நிலையில் நம்மையும் கட்டி கொண்டு அழுதுவிடுகிறார். தன்னுடைய முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு இந்த படத்தின் இயக்கத்திலும், காட்சி அமைப்பிலும் இயக்குனர் மகுடம் சூடி இருக்கிறார். இசை - ஒரு கிராமிய இசையின் பாந்ததுடன், மாராத்திய மண்ணின் அனைத்து கிராமிய இசையையும் கலந்து மீட்டி இருக்கிறார். லாவணி வகை நடனப் பாடல் தூள்.

மலையாளத்தின் 'சாந்துபொட்டு' படம் தமிழில் விக்ரம் நடித்து ராஜாவேஷமாக வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திறிகிறோம். விக்ரமிற்கு நட்ரங் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையும். எந்தப் படம் பார்பதாயினும் அந்த மொழியின் அறிவு வேண்டும். அதுவும் இந்தவகை கிராமிய மொழிப் படத்திற்கு கண்டிப்பாக தேவை.  ஆனால் நீங்கள் ஒரு நர்சினிமா காதலறேன்றால் இந்தப் படம் உங்களுக்குத்தான் - மொழி ஒரு தடையல்ல.

உங்களுக்கு இந்தப் படத்தின் ஒலித்தட்டு கிடைக்கவில்லைஎன்றாலோ , டோர்றேன்ட்டுகள் கிடைக்காத பட்சத்திலும். இந்த படம் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள், உங்கள் தொடர்புக்கான எண், அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரி பின்னூட்டவும் ( COMMENTS - உங்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும் ) , விரைவில் நான் சென்னை வருகையில் இந்தப் படத்தின் ஒரு காட்சி (ஆங்கில SUBTITLEகளுடன் )ஏற்பாடு செய்து, உங்கள் அனைவரையும் சந்திக்க எண்ணுகிறேன்.