Friday, January 8, 2010

SUPERMAN ஜெட்டியில் அரசியலா ????


HUNTER என்ற உலகத் தரம் வாய்ந்த சிறந்த திரைபடம் வெளியாகும் முன்னதாகவே SMS முதல் GRAPHICS வரை சிக்கி மிளகு இரநூறு ஆகிப் போன தமிழக Superman விமர்சன படுவது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்பே இல்லை( அப்படியா ????? ). இதே போல் உலக அரங்கில் இன்னொரு கதாநாயகனும் துவைத்து தொங்கவிடப் படுகிறார் என்றால் அது நிச்சயமாக SUPERMANஆகா மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் நம்ம superman கரும்பு ஜூஸ் மசினில் சிக்கும் காரணங்களை ஒப்பிடும் பொழுது SUPERMAN சக்கயாகும் காரணங்கள் உலக அரசியல் சார்ந்தவையாக இருக்கிறது. நம்ம Superman ஈழத்துக்கு போராடுவது போலா என்று கேட்பவர்கள் எப்பூடி  என்று கேட்டால் சரியாக இருக்கும்.
இன்னும் முப்பது வருடங்களில் தன் நூறு வருண்டங்களை தாண்டும் அமெரிக்க காமிக்ஸ் ரக மாவீரன் சூப்பெர்மேன். இன்று வரை அமெரிக்கர்கள் கடந்து உலக ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு அடையாளத்தை 1938 முதல் இந்த கதாபாத்திரம் நிறுவி வருவதை யாராலும் மறுக்க முடியாது. தன் சக ரக கதாபதிரங்கலான BATMAN, SPIDERMAN  போன்ற கதாபத்திரங்களை விட ஈர்க்கும் தரமும் காலத்தில் மூத்தவனும் இந்த சூப்பெர்மேன். நமது இந்திய சக்திமான், க்ரிச்ஷ் கதாபாத்திரங்கள் கூட SUPERMAN கட்டமைப்பில் இருந்ப்பதும் குறிப்பிட தக்கது. ஏனைய அமெரிக்க கதானயர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு சூபெர்மேனுக்கு உண்டு , அது சீரிய அமெரிக்க அரசியல் எதிர்ப்பு.

என்னுடைய பூவிழுந்த கண்ணில் அவதார்இல் PAAவில் வேறு ஏதோ தெரிவது போல் SUPERMAN பெருவாரியான அமெரிக்கர்களுக்கு ஒரு கம்முனிச சிந்தயாகவே தெரிகிறான். உடல் நிறம் என்னமோ நாவிகள் போல் நீளம் என்றாலும் SUPERMAN அணிந்திருக்கும் சிவப்பு ஜட்டியும் மார்பில் தாங்கி இருக்கும் சிவப்பு S சின்னமும் கம்முனிச சிந்தனையை இவர்கள் உறுதி செய்யும் முதல் காரணிகள். SUPERMANனை உருவாக்கியவர்களில் JOESHUSHTER இன் மூதயர்கள் ரஷ்யாவை சார்ந்தவர்கள் என்பது இவர்களது இரண்டாவது வாதம் . MAN OF STEEL என்ற அழைப்பு பெயர் SUPERMANக்கு உண்டு இதே பெயரில்தான் ஸ்டாலினும் புகழப்பட்டார் என்பது என்னை போன்ற உலக அரசியல் கத்துக்குட்டிகளுக்கும் விளங்கும். இன்னும் ஒரு படி மேல் சூபெர்மன் KRYPTON என்னும் உலகத்தை சேர்ந்தவன், அந்த உலகத்தில் அவன் ஒரு சாதரன மனிதன்தான். அவனால் ஒன்னுமே செய்ய முடியாது. சரி அது எங்களுக்கு தெரியுமே என்றால் ஒரு துண்டு சீட்டு - கர்ய்ப்டன் ஒரு பச்சை நிற உலகம் , அமெரிக்க பணம் டாலர் - பச்சை நிறம். பணம் இருக்கும் பணத்தால் கம்முனிச நன்மையை முடக்குகிறார்கள் என்று சொல்வது போல் இவர்களுக்கு தோன்றுகிறது.
இது வெறும் TRAILERதான் கண்ணா , மெயின் பிச்சர் இன்னும் உண்டு.

சித்தப்பு சூது எங்களுக்கும் தெரியும் என்று இதற்க்கு போட்டியாக இன்னொரு கூட்டம் சுபெர்மன் ஒரு நாஜி சிந்தனை என்கிறார்கள். SUPERMANனின் S இவர்கள் கண்ணில் நாஜிக்களின் swastika சின்னத்தின் இன்னொரு பாரிமானமாகவே தெரிகிறது.
தன்னை மற்றவர்களை விடவும் சட்டதை விட உயர்ந்தவனாகவும் தன்னை கருதிகொள்ளும் தனமும் ஹிட்லருக்கும் சுபெர்மைணுக்கும் உண்டு என்கிறது இந்த கூட்டம்.

இந்த சூழலில் SUPERMAN படங்களுக்கு இயக்குனர்கள் தயங்குகிறார்கள். எது எப்படியோ இந்த வருடம் நமக்கு SPIDERMAN - 4 விருந்து மே மாதம் உறுதி
ஆமா இந்த SPIDERMANம் சிவப்பு டிரஸ் தானே ?????

Wednesday, January 6, 2010

நாத்திகத்தில் சாதிவெறியின் புதைகுழி

நாத்திகம், பகுத்தறிவு, - போலிகள் ஜாக்கிரதை பகுதி - 3.


இதற்க்கு முன்னதான இரண்டு கட்டுரைகளும், நாத்திகம், பகுத்தறிவு பற்றி பேசி இருந்தேன். இந்த இடத்தில் ஒரு குறிப்பு சமயத்தின், கடவுளின் பெயரில் இன்றைய ஆத்திகப் போலிகள் வயிறு வளர்க்கின்றனர் - உண்மை. தமிழக நாத்திகப் போலிகளும் கடவுளை வைத்துதான் வயிறு வளர்க்கின்றனர் என்பதும் மறுக்க முடியாது. இன்றைய சூழலில் மனிதன் தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் விற்றுப் பிழைக்கிறான் என்பது நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கல்வி, தண்ணி, உடல், மன அமைதி, சுதந்திரம், சுயம், எல்லாத்தயுமே விற்று பிழைக்கும் நிலைக்கு இன்றைய மனிதன் உந்தப் பட்டிருக்கிறான், இதில் கடவுள் விதிவிலக்கல்ல. இது சாட வேண்டிய நிலை நிச்சயமாக அனால் இந்த நாத்திகப் போலிகள் இதை ஒரு சாரர்,  ஒரே ஜாதி சார்ந்த ஒரு வெறுப்பு கக்கும் முயற்சியை செய்வது மிகவும் வேதனைக்குரியது.
நாத்திகம் என்பது சிந்தனை சார்ந்த விஷயம், இன்றைய சூழலில் இது ஒரு மனநோய் வடிவில் நம்பிக்கைகளை விட்டுவிட்டு நம்புவோரை எதிர்க்கும் ஒரு அவல நிலையில்தான் தமிழகத்தில் இருக்கிறது. நம்பிக்கை எதிர்பிற்கும், நம்புவோரை எதிர்பத்ரக்கும் என்ன வேறுபாடு ?. எனக்கு பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லை. அதற்காக பெரியாரை பற்றி பேசுவது மடமை. இதற்க்கு ஒரு படி மேல் சென்று பெரியார், அவர் சார்ந்த ஜாதி, அவரை சார்ந்த மக்கள், அவர் தோற்றுவித்த அணைத்து அமைப்புகளையும் சாடுவது பேடிகளின் செயல். பெரியாரை பிடிக்கவில்லை என்பதற்கும், பெரியாரின் கொள்கைகளை பிடிக்கவில்லை என்பதற்கும் அனேக மைல்கற்கள் தூரம் உண்டு. இதையும் தாண்டி ஒரே ஜாதியினரை இதற்க்கு காரணம் கட்டி அவர்களை , பகிரும் தரத்தை தாண்டி சாடுவது , ஜாதிவெறி என்று மட்டுமே சொல்ல வேண்டும்.

போலிகளின் குறிப்புகளில் அந்தணர்களை, மிகவும் நேர்ந்து, ரசித்து திட்டுவார்கள், இல்லையேல் அந்த அடையாளுதுடன் இறுக்கம் சிலரை மட்டுமே சாடுவார்கள். ஐரோப்பிய சிந்தனையாளர்கள் குறிப்பினை மேற்கோள் காட்டி பேசும்போது கூட இவர்களால் வேறு மதங்களை , அவற்றில் உள்ள மூட நம்பிக்கைகள் பற்றி பேசும் தினவு இல்லாதவர்கள். தன்னுடை எழுத்துகள் முழுவதும் அந்தன ஜாதி வெறியை கக்கும், முடிக்கையில் ஏனைய மதங்களிலும் இத்தகைய நிலை உள்ளது என்று ஒரு வரியில் கூறி தான் பொதுவானவன் என்று காட்டிக் கொள்வார்கள். இதற்க்கு காரணம் ஒன்று தினவு அல்லது மனதிடம் இல்லாமை, அதற்கடுத்த நிலையில் தனுடைய இன்றைய / நாளைய அரசியல் உள்நோக்குகளுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாதென்று ஒரு தெளிவான முடிவு.  மூட நம்பிக்கைகளை முழுவதும் எதிர்பவர்கலேன்றால் , சில தோள்களில் தொங்கும் மஞ்சள் துண்டின் ரகசியங்கள் பகிரும் சிந்தனை ஏன் இல்லை.
எல்லாமதம் , கடவுள் சார்ந்த சிந்தனைகளை சோதிப்பவன் , முன்னர் கூறியது போல எதிர்பவன கூட இல்லை - நாத்திகன். அந்தணர்களை மட்டும் சாடும் சாதிவெறியர்கள் நாத்திகப் போலிகள் , இந்த கூடத்திற்குள் மாட்டி கொண்ட சில உண்மையான நாத்திகர்களின் நிலை " நெனச்சது ஒன்னு ; நடந்தது ஒன்னு ; அதுனால முழிக்குது அம்மாக் கண்ணு" பாடல்தான். எதிர்ப்பு என்பதற்கும் சாடுவது என்பதற்கும் , கொலைக்கும் வீரத்திற்கும் உள்ள அளவு வேற்பாடு. காந்தியின் எதிர்ப்பை விட காந்தியின் எதிர்ப்பின் முறைதான் மிகவும் பேசப்பட்டது.

Tuesday, January 5, 2010

330அடி உயரம், திகட்ட திகட்ட வானம், ஒரே அந்தரம், ஒரு கவிதை



பணி நிமித்தமாக இந்த உயரங்களில் நின்ற போது எனக்குள் நோதித்தவை

இந்த நொடியிலிருந்து

தன்னை கீறிய கோட்டுக்குள்
அடைத்து கொண்ட
ஜனநாயக நிலகிழாருக்கு
நான் சொந்தமில்லை


இனி தூரங்களின் காதலனில்லை
உயரங்களின் தூதுவன் நான் 
 
இனி எங்கு சென்றாலும்
காற்றின் கலாபம் -
வரட்சி பேதங்கலில்லை
வகுப்பு போதனைகள் இல்லை

இதழில்லாலாமல் யார் யாரோ
முத்தமிடுகிறார்கள்.
உடலில்லாமல் சிலர்
உரசிக் கொண்டிருந்தனர்


உயரங்களின் வன்புணர்ச்சி
பயங்களுக்கு பெயரிட்டு
உப்பின் முத்துக்களை
உமிழத் தொடங்கின
உடல் சுரப்பிகள்.

முதுமைசூடாத மேகங்கள்
முயல் முகத்துடன்,
முனியன் அரிவாள் போல் ஒன்று
வெண்நீல நெருப்பாய் ஒன்று
அத்தனையும் முகங்கள்
எதுவுமே முகமுடிகள் இல்லை

தரைவாழ் நரர்கலே

இரவலாய் ஒரு நுரையீரல் அனுப்புங்கள்
புல்லறுக்க வரும்
புறாவிடம் அனுப்பிடுக

நீவிர் யாரும் வர வேண்டாம்
வேறுபாட்டின் நிரல்களின்
ஜீரண சக்தி வானத்திற்க்கு இல்லை

என்னோடு நின்று பார்த்தல்
ஒரு உண்மை புரியும்
வாய் முடி இருக்கும்
பூமியே வகுப்புவாத சிந்தனை
வளங்கள் ஓரிடம்
வெடிக்கும் மலைகள் ஓரிடம்
யாரோ திணித்த சுதந்திரம்
எனக்கு வேண்டாம்
இனம் முடிந்து கொள்ளும்
சமாதானமும் வேண்டாம்
இங்கேயே விட்டு விடுங்கள்
இது கனவாயினும்,
என்னை எழுப்ப வேண்டாம்