Saturday, January 2, 2010

நாத்திகம், பகுத்தறிவு - போலிகள் ஜாக்கிரதை [ பகுதி - 2 ]

நாத்திகர்களில் போலிகள் என்ற துவக்கதுடன் போன பதிவு முடிந்தது,. அதில் பதியும் தரத்தில் இல்லாமல் வந்திருந்த ஒரு பின்னோட்டத்தில் ஒரு கேள்வி - இந்த இருத்தல் இயல் என்ன வெங்காயம் என்று கேட்டிருந்தார். அது வெங்காயம் அல்ல அனால் அதை உரித்தால் நிச்சயமாக நாத்திகப் போலிகளுக்கு கண் கலங்கும்.
ஒரு பட்டுப் போன மரத்தின் இலை, காய்ந்த இலை, இனிமேல் அது இலை இல்லை அது சருகு. உதிர்ந்தாலும் காற்றில் அங்கும் இங்கும் திரிந்து, சத்தம் எழுப்பி தானும் இருப்பதை நிலைப்படுத்திக் கொள்ளும் . தனது இருப்பை மற்றவர்களுக்கு காட்டும் தன்மை - அப்படி இருத்தல் இயலில், தன இருப்பை எப்படியாவது காட்டி கொள்ளும், பிரசங்கித்துக் கொள்ளும், சம காலத்துக்கு மாறாக செய்து தன்னை நிலைநிறுத்தி கொள்ளும் ஒரு CHEAP TRICKஆகா இந்த நாத்திகத்தை அப்பிக் கொண்டவர்கள்தான் இன்றைய சூழலில் அதிகம்.
இதில் இன்னும் சில வகை போலிகள் உண்டு, எந்த சமயமாயினும் அதை பின்பற்றுவது கடினம், அதற்கென்று சில கட்டமைப்புகள், கோட்பாடுகள், கடமைகள் உண்டு. இந்த சிலவற்றை செய்ய சோம்பல் படுபவர்கள் அநேகர்கள் உண்டு. இந்த சோம்பலின் காரணமாக சமயத்தை எதிர்க்கும் சமய சோம்பேறிகள் - மூடர்களும் இந்த நாத்திக முகமுடியில்தான் அலைகிறார்கள். மிக முக்கியமாக இவற்றில் புரிதல் இல்லாதவர்கள், ( அர்த்தம் தேடுபவர்கள் அல்ல ) - இன்னொரு வகை. எனக்கு கணக்குப் பாடம் வரவில்லை என்றால், அந்த வகுப்பின் மீது, வகுப்பு ஆசிரியர் மீது, சில நேரத்தில் அந்த ஒரு காரணத்திற்காக அந்த பள்ளியின் மீதே எனக்கு வெறுப்பு வரும். என்னை விட முந்தைய நிலையில் சுமாராக புரிதல் உள்ள மாநாக்கனையும் நான் சேர்த்துக் கொண்டு கணக்கு வகுப்பை புறக்கநிக்கபது போன்ற சில கோமாளிகள் ஏராளம். இவர்கள் தன்னை நாத்திகரென்று அடையாளப் படுத்திக் கொள்ளலாம், ஆனால் இவர்கள் நாத்திகரில்லை.  நாத்திகம் முன்பு கூறியது போல் ஒரு காரணியின் தேடுதல்தான் , அது அவனம்பிக்கயாகவோ, குருட்டுத்தனமான எதிர்ப்போ அல்ல.
நாத்திகம் என்பது சிந்தனை சார்த்து ஆனால் இன்றைய போலிகள் அதை ஒரு வெறுப்பு சார்ந்த இயலாகவே மாற்றி விட்டனர்.
பகுத்தறிவு அல்லது நுண்ணாய்வு, ஒரு பொருளில், கோட்பாட்டின், தத்துவத்தின் கட்டமைப்பை உணர்தல், பொருள் விளங்கிக் கொளல். புரிதல் இல்லாமல் அதை எதிர்த்தல் அல்ல. இதுவும் தேடுதல் சார்ந்த இயலே இதில் வெறுப்பிற்கு வாய்பே இல்லை.
இந்த இடத்தில மிக முக்கியமான ஒரு கேள்வி பகுத்தறிவும் நாத்திகமும் ஒன்றா. நாத்திகம் பேசுபவர்கள் எல்லாருமே பகுதரிவுவாதிகளா - இல்லை. நாத்திகர்களும் , அதன் போலிகளும் தன்னை பகுத்தறிவு தேசத்தின் முடிசூடா மன்னனாக அறிவித்துக் கொள்ளலாம். ஆனால் பகுத்தறிவு என்பது உலகத்தின் எல்லா கட்டமைப்புகளையும் சோதிக்கும், நாத்திகம் -  கடவுள், சமய நம்பிக்கை சார்ந்த கட்டமைப்பை மட்டுமே சோதிக்கும். பகுத்தறிவு என்ற பெரிய வட்டத்திற்குள் சுழலும் ஒரு சின்ன வட்டம்தான் நாத்திகம், நாத்திகர்கள் மட்டுமே பகுத்தறிவுவாதிகள் என்பது மடக்குரயே. பகுத்தறிவு என்னும் பல்கலைகழகத்தில் ஒரே ஒரு துறைதான் நாத்திகம் அதுவே மொத்த பல்கலைகழகம் என்பது எப்படி. இதன் அடிப்படையில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்பது நாத்திகப் போலிகளின் சுய இன்பக் கற்பனையே. இதன் அடிப்படையில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்பது நாத்திகப் போலிகளின் சுய இன்பக் கற்பனையே.
 
இன்னும் தொடரும்
 
போன பதிவில் கூறியது போல இந்தப் பதிவு உங்களை சுட்டுவது போன்று இருந்தால் ஆம் இது உங்களைப் பற்றிதான். கீழே பின்னூட்டம் போட்டு உங்கள் பெயர்களை பதிவது உங்கள் முடிவு. அவற்றில் பகிரும் தரம் இருப்பின் அவற்றை வெளியிடும் முடிவு என்னுடையது. முதுகெலும்பு ( பெயர் ) இல்லாதவர்கள் முதலில் தைரியம் தேடுங்கள்

11 comments:

அண்ணாமலையான் said...

தேவையான பதிவு...
புத்தாண்டு வாழ்த்துக்கள்....

பேநா மூடி said...

நல்லபதிவு...,

hayyram said...

நல்ல பதிவு. பகுத்தறிவு பற்றி உண்மையான விழிப்புணர்ச்சி நம்ம மக்களுக்குத் தேவை.

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com

Anonymous said...

Backbonless coward Anonymous writes..

//நாத்திகம் என்பது சிந்தனை சார்த்து ஆனால் இன்றைய போலிகள் அதை ஒரு வெறுப்பு சார்ந்த இயலாகவே மாற்றி விட்டனர்.
பகுத்தறிவு அல்லது நுண்ணாய்வு, ஒரு பொருளில், கோட்பாட்டின், தத்துவத்தின் கட்டமைப்பை உணர்தல், பொருள் விளங்கிக் கொளல். புரிதல் இல்லாமல் அதை எதிர்த்தல் அல்ல. இதுவும் தேடுதல் சார்ந்த இயலே இதில் வெறுப்பிற்கு வாய்பே இல்லை. //

This is your understanding. To me, it is flawed.

Your notion of Atheism without any hatred of opposite ism, is philsophy. When it remains a philosophy, it is confined to books and academia. It is for intellectuals. It is for round table conferences and seminars.

But there is another kind, and, indeed, that kind raises your anger in this and earlier blogpost. Your blogpost is indeed not against persons, not ideas.

Athieism of this kind, is atheism in action. Not in notion.

Athisim of action is also found in theology. They call it liberation theology wherein the priests participate in freedom movement and get imprioned or killed. Desmond Tutu, the Bishop of South Africa, participated in apartheid movement. His acts earned him the Noble Prize for Peace. Roman Church has permited their Latin American clergy to participate in the freedom movement or liberation struggles there. Indeed, it is from them the new word Liberation Theology came into existence.

Now coming to Atheism in Action.

It does not simply believe that there is no God and goes away speechlessly. It protests, hums and haws, raves and rants against all those venal rascals who use the belief in God to cheat the gullible and innocent masses.

Atheism in Action....continued

Anonymous said...

Back-boneless and coward Anonymous continues...

Atheism in Action hates all those who cheat the masses in the name of God, by subtle manipulation of their minds, using variety of rituals, reasons, scriptures etc. It hates those men who disguise themselves in different robes and rape women. It hates those who use the vulnerability of people to tell them that their fates are decided by stars. It hates all kinds of fatalism perpetrated by the venal rascals and the vermins of society who pose as savior of people promising various remedies using the name of god and stars. It hates those venal rascals who create imaginary divisions like castes among people and ask people to treat one section of people as 'untouchables'.

The list of hate things is long.

Why do atheists in action do that? Because they live in society and they cant simply watch people getting cheated in various ways in the name of God. They have social conscience. You lack it.

Since you have much things to hide, or you are afraid of being caught red handed, you now attempt to pour scorn on the Atheism in Action.

Of course, it is true there are black sheep anywhere. Any good idea can be manipulated to feather the nests of some people. So also, here, some people are exploiting the Atheism in Action.

But your attempt to attack the Atheists in Action wholesale, is motivated. You are throwing away the baby with bath water.

Lets welcome and encourage Atheists in Action. In fact, it is they and not the intellectual Atheists, who care for the society.

You, with all the pictures of God in your website, and your notion of 'me and my god' will not raise a single finger against the venal rascals in different robes chanting the names of God to cheat people. Maybe because, you don't want to hurt certain people or you may have some interest with that gang of cheats.

Why should the Atheists in Action be also like you?

ஸ்ரீநி said...

hey anonymous verbal disorder pls do visit the next publication for answers by a day or two

Anonymous said...

நாத்திகப் போலிகளை விட ஆத்திகக் க்போதிகள் தான் அயோக்கிய சிகாமணிகளாக நாடடையும் மக்களையும் கெடுத்துக் கொண்டுள்ளார்கள்.

sundaralakshmi said...

unnudaya indha paghudhiyum arumai.

Namma ellarum idhai padithu, matravarkalaiyum padikka solla vaendum.

To all who read this:

Mudinthavarai, ella nanbarghallaiyum indha blog visit panni, padikka sollungal.

Happy New year to all.

Lakshmi

Anonymous said...

//நாத்திகப் போலிகளை விட ஆத்திகக் க்போதிகள் தான் அயோக்கிய சிகாமணிகளாக நாடடையும் மக்களையும் கெடுத்துக் கொண்டுள்ளார்கள்.//

Backboneless coward anonymous writes...

Yes. correct Mr Anony. The number of நாத்திகப் போலிகள் is infinitesmall in comparision to ஆத்திகக் கபோதிகள்.

According to today news, the saamiyar who raped a woman devotee more than 50 times (Sreekumar) has been arrested at Bangalure airport.

Our Srini must be sad to hear that.

Anonymous said...

//hey.anonoymous verbal disorder do visit the next publication for answers in a day or two.//

Backboneless anonymous writes...

I am waiting for your verbal ORDER to defend the aahtimaka polikaL.

More than two days passed, where is your verbal Order?

hayyram said...

குறிப்பிட்ட ஜாதிக்காரர்களின் ஜாதி சங்க தலைவராக்கப்பட்ட அம்பேத்கர் பிறந்தநாளை யாரும் கொண்ட்டாடுவதில்லை
என்று அந்த ஜாதிக்காரர்கள் கொலைஞனிடம் புலம்பியதால் , ஜாதி ஓட்டு வங்கிக்காக ஒட்டு மொத்த இந்துக்களின் உணர்ச்சியையும் மதிக்காமல் தமிழ்ப்புத்தாண்டை சித்திரை ஒன்று அதாவது ஏப்ரல் பதினான்கிலிருந்து வேறு தேதியில் மாற்றிவிட்டான் கொலைஞன். ஓட்டு வியாபாரம் தான் பகுத்தறிவு என்பதும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதும் தான் பகுத்தறிவு என்பதும் வெளிச்சமாகத் தெரிகிறதே ஒழிய இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு அறிவு என்பதே இல்லை.

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )