Thursday, July 18, 2013

வ(வா)லி. . . . . . .




இன்று எய்தவன் ராமனென்றால் கூட
அவன் கோதண்டத்தை முறி,
நேராகவே நின்று எய்திருந்தாலும்!

தமிழ்நாட்டிற்கு இல்லையென்றால்கூட
தமிழுக்கு இன்று கருப்பு தினம்;
இன்று மாலையோடு திரையின்
மொழி நிக்குருடாகியிருக்கும்;
நிழலின் மொழிகளுக்கு
நிறச்சாயம் நீ, ரங்கராஜா.. . .

 சுவாசம்   ஈடேறாமலா ?? - இருக்காது
நீ வரிகள் ஈடேறாமல்தான்
உடைந்திறுப்பாய்

இன்று இரவோடு உறங்கச்சென்ற
வார்த்தைப் பிள்ளைகள்
நாளைய கவிதை நலிந்த கதிரோடு எழுகையில்
உன்னைத் தேடி அழுமே!
என்ன சொல்லி ஆறுதல் செய்வேன்

அந்த தோட்டத்து வெற்றிலைகள்
முதல் முறையாய் நாளை அங்கு வாடியிருக்கும்
என்ன கொண்டு அவற்றை தேற்றுவேன்

இனி இங்கே எவனொருவன் காதலித்தாலும்
அவன் கவிதைகள் நிச்சயம் உன் ஜாடையில்தான் பிறக்கும்
இல்லையென்றால் அது இன்குபேட்டரில் தான் இருக்கும்
தமிழின் வினைத்தொகை நீ
மூன்று காலத் தமிழிழும் விரைந்திருக்கிறாய்


கவிதை செய்தாய், நாங்கள் காதலித்தோம்
காமம் ஈட்டினாய் கட்டுண்டு கிடந்தோம்
இப்படி போனாயே இப்போது என்ன செய்வது
உன் மொழியின் வயதை கருத்தில் கொண்டு
ஒப்பாரி செய்தால் நீ அற்பாயசில்தான் போயிருக்கிறாய்.

 நீ இசைந்ததுபோல்
தன்னுயிர் பிரிந்ததை பார்தவறில்லை
இன்னுயிர் பிரிந்ததை நானும் பார்த்து நின்றேனே. . . . . . .

Monday, July 8, 2013

சிங்கம்-2, திரைவிமர்சனம்


சின்னவயசுல உங்களுக்கு கழுதைப்பால் குடிக்க குடுதுருக்காங்களா???சூர்யாவுக்கு நெறையா குடுத்துருப்பாங்க போல. நல்லதுதான்!!


துரைசிங்கம் தன்னுடைய சென்னை பராக்ரமங்களை முடித்து விட்டு, தன்  சொந்த ஊரான நல்லூர் அருகே உள்ள பெருநகரான தூத்துக்குடி`யில் கரை ஒதுங்குகிறார். அங்கே தமிழக உள்துறை மந்திரியின் மேற்பார்வையில் பால்அண்டர்கவர் ஏஜென்ட்டாக ( அட அந்த ஏஜென்ட் இல்லீங்க, இது போலீஸ் உளவாளி  - 'அந்த ஏஜென்ட்' ) இருந்து கொண்டு ஒரு பள்ளியில் NCC வாத்தியாராக வேலை செய்கிறார். போலீஸ் வேலைய விட்டதுனால இவுங்க அப்பா காவ்யாவுக்கும் சிங்கத்துக்கும் நடக்கவிருந்த திருமணத்தை தள்ளிப்போடுகிறார்.  இந்த சினிமா அப்பனுகளுக்கே உள்ள திமிரு ( சினிமால மட்டுமா`ன்னு கேக்குறீங்களா??? ). 




அப்போ தூத்துக்குடியில் தன்ராஜ், பாய், சகாயம் -  மூவரும் மத நல்லிணக்கத்துடன் மிகப்புனிதமான போதைமருந்து தொழிலை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவன் டானி- எப்பவும் போல் ரூம்போடாமல் யோசிக்கும் வில்லன்; இவர்களை வேட்டையாட துரத்தும் சிங்கம். இதுகெடயில சிங்கம் வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் அழகான மாணவி ஹன்சிகா. . . மாணவியா`வா??. ஏங்க தளபதி காலேஜ் போகலாம்.. . கனவுகன்னி ஸ்கூல் போகக்கூடாதா  ? ? ? . . . அதே பள்ளியில் பியூன் வேலை செய்யும் சந்தானம்..


மற்றபடி கழுத்துச்செயின் தெரிய ஓடி, சட்ட கிழிய, தொண்ட கிழிய சண்டைபோட்டு வில்லனை பிடிக்கும் நம்ம துரைசிங்கம். படத்தின் செகண்ட் ஹீரோதான் சூர்யா, முதல் ஹீரோ திரைக்கதையும் எடிட்டிங்க்கும்தான் ( V.T.விஜயன்) -அதிரடி. எப்பவும் போல் ஹரி மிகஅருமையாக இயக்கத்தையும் திரைக்கதையையும் கையாண்டுள்ளார். ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் படத்தின் சுழற்சியைகூட்டி, உச்சா கூட போக விடாமல் சீட்டில் கட்டிவிடுகிறார். அனுஷ்கா`விற்கு சொல்லும் அளவிற்கு ஒரு வேலையும் இல்லை. குடுத்த வேலையை அரை  திருப்தியுடன் செய்திருக்கிறார் DSP. ஒரு முழுநீ  சூர்யா ரசிகனுக்கும் க்ன் ரசிகனுக்கும் மூக்குபிடிக்க தீனி இந்த சிங்கம்-2.

உழைப்பே உயர்வு இதற்க்கு மிக நல்ல எடுத்துக்காட்டு ஹரி மற்றும் சூர்யா அவர்களின் சிங்கம்-2. கண்டிப்பா போய் பாக்குறீங்க ... ஓகே. ஹரி`யின் சூப்பர்ஹிட் சாமியும் - ஹிந்தி`யில் ரீமேக் கி - POLICEGIRI என்று  வெளியாகி உள்ளது என்பது துணுக்கு செய்தி.