Friday, April 16, 2010

FACING GOLIATH - வாழ்கையை மாற்றும் 48 நிமிடங்களாகட்டும்

நம் அனைவருக்குமே ஒருமுறையாவது இன்றோடு இந்த நிமிடத்தோடு வாழ்கை முடிந்து விட்டால் நன்று என்று தோன்றும். இது மகிழ்ச்சியின் உச்சத்தில் அல்லது தோழ்வியின் முனையில் தோன்றும். இன்னும் அதிகமாய் தோழ்வியின் உச்சத்தில் இன்றோடு முடிந்தது இனி என் செய்வது, ஏன் வாழவேண்டும் என்று புரியாமல் ஒரு சூழல் ஏற்படும். இதைப் பற்றிய ஒரு ஒளிப் பதிவுதான் இந்த குறும்படம்.

ரே( RAY ) தன்னுடைய பிறப்பால் மிகக் குறைவான பார்வை கொண்ட மனிதர். தன்னுடைய 51 வயதில் இருக்கும் இவருக்கு இன்னும் சில நாட்களில் வலது கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை தேவை ஏற்படும் நிலையில் இந்த காட்சிகள் நகர துவங்குகின்றன. இந்த நேரத்தில் ரே ஒரு உடற்பயிற்சி கூடத்தில் சேருகிறார். செபஸ்டியன்( SEBASTIAN )  என்ற உடற்பயிற்சியாலரை சந்திக்கிறார். சில தினங்களில் நடக்கவிருக்கும் மாநில அளவிலான உடற்பயிற்சிப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள் என்ற செபஸ்தியானின் வேண்டோகோளுக்கு இணங்க ரே வழக்கை ஓட்டம் மாறுகிறது. இருவரும் போட்டியில் பங்கு பெறுகின்றனர். செபஸ்டியன் மட்டும் அந்த போட்டியில் வெற்றி பெறுகிறார். மேலும் ஹாலிபாக்ஸ் கனடா வில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு முன்னேறுகிறார். அங்கு ரே சிறப்பு பங்கேற்பாளராக அழைக்கப் பெறுகிறார். அந்தப் போட்டியில் செபஸ்டியன் வெற்றி அடையவில்லை. ரே தனது சிறப்பு தோற்ற கட்சியை நிறைவு செய்கிறார். திரையை இருள் சூழ்கிறது நமக்குள் ரே - ஒளி பிறக்கிறது. ரே என்ற மனிதரை பார்கையில் பாரதி பாடி அழைத்த ஒளி படைத்த கண்ணும் உறுதி கொண்ட நெஞ்சும் காணக் கிடைக்கின்றன. இயல்பாக தெளிந்த நீர்போல் ஓடும் கட்சிகளும், அதற்க்கு நேர்த்தியாய் இசையும் நிச்சயமாக நொடிக்கு நொடி பயனுள்ளவை. நம்பிக்கை, விடாமுயற்சி, போன்ற வார்த்தைகளை பேசாமல் பேசும் காட்சிகள் வெற்றி என்ற வார்த்தைக்கு பொருளை மாற்றிவிடுகின்றன.


Thursday, April 15, 2010

தமிழ்த்திரையில் சங்ககால 'ராப்' - RAP இசைப் பாடல்கள்

தமிழ் வார்த்தைகல கோழி குஞ்சா நெனசுகிட்டு, சொடுக்குநு ஒவ்வொவொரு வார்த்தையையும் கழுத்த திருகி, மென்னு, முழுங்கி, செமிச்சு, துப்பி, ஏப்பம் விட்டு, கேமராவல வந்து நடு விரலையும் மோதிர விரலையும் மடிச்சு மேலுங் கீழுமா ஆட்டுறது ராப் வகைப் பாடல். இன்னும் இது நிறைவடைய இது என்னன்னு புரியாத மாதிரி ஒரு உடையும் போட்டுக்கணும். இது கடந்த பத்து வருடத்தில் நம்ம தமிழ் சினிமா ராப்புக்கு கண்டுபிடித்த விளக்கம் ( அது கெடக்குது விடுங்க ).

RAP : இசையின் ஆதிக்கம் குறைவாக, மொழியின் ஆட்சி அதிகமாய் இருக்கும் இசை RAP - ஆகும். உரைநடை கவிதைகளுக்கும் இதுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இந்த ராப் வகை பாடல்கள் இசையால் அதிகம் செய்யப் படவில்லைஎன்றாலும் இசையின் ஜதிக்குள் நின்று ஒலிக்கும். இந்த வகை பாடல்களின் மாத்திரை இசையின் ஜதியை வேறாக கொண்டே அமைகின்றன. டூயட் படத்தில் வரும் சித்தத்தினால் உரைநடை கவிதை வகையை சாரும், அந்த ஒலிப்பதிவில் இசை இருக்கும், ஆயினும் மொழி அதன் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் கீழே சொன்ன பாடல்கள் அப்படி இல்லை. இந்த பாடல்களில் இசை உண்டு அனால் அதன் ஜதியின் கட்டுபாட்டில் இதன் வரிகள் இல்லை. அதை விட்டு அவை வெளியிலும் செல்ல வில்லை என்பதை நம்மால் உணர முடியும். வாட் இஸ் தி மேட்டர் ஐ சே. ஏதாவது இசை சிரோன்மணிகள் இதைப் படித்துக் கொண்டிருந்தால் இன்னும் விம்மோ சபினாவோ போடா வரவேர்க்கப் படுகிறார்கள்.

தமிழ் திரை உலகிற்கு இந்த வகைப் பாடல்கள் கடந்த பத்து வருடத்தில் வரத்தொடங்கின என்று நீங்கள் நினைபவராய் இருந்தால், முழிய மடக்கி சூடு பறக்க தேச்சு மன்டேல போட்டுக்குங்க. 'காதலன்' படத்துல வர்ற பாடல்தான முதல்ப் பாடல்னு சொன்னா - இன்னும் ஒரு முறை கொட்டிகிங்க. தமிழ் திரைக்கு இந்த வகைப் பாடகள் புதிதல்ல, இன்னும் சொல்லப்போனால் 'ராப்' என்று இந்த வகைப் பாடல்கள் அமெரிக்கவில் பெயர் பெறுவதற்கு முன்னமே நம் திரை உலகில் இந்த வகைப் பாடல்கள் உண்டு. அந்தப் பாடல்களில் எனக்கு பிடித்த சில பாடல்களை உங்களுடன் பகிர்கிறேன்.

இந்த தமிழ் 'ராப்' தெரியாத தமிழர்களே இருக்க முடியாது. கே. பீ. சுந்தராம்பாள் குரலில் வந்த இந்த ராப் வகைப் பாடல் அலாதியான மாட்சி. படம் கந்தன்கருணை என்று நினைகிறேன்.


டி எம் சௌந்தர்ராஜன் குரலில் அமைந்த இந்தப் பாட்டு மிக அருமையான ராப். ராப் வகைக்கு இது ஒரு இலக்கணம் என்றால் கூட அது மிகை அல்ல. இசை நுட்பமாய் மொழியை தாண்டி செல்லும் ஒவ்வொரு ஜதியிலும் இந்தப் பாடல் நிறுத்தப்பட்டு மீண்டும் மொழி மேலோங்கும் பாங்கு அருமை. படம் அருணகிரிநாதர்.

இன்னும் பின்னோக்கிப் பயணப்பட்டால் நந்தனார் படத்துல என்னப்பனல்லவா பாடல். கூர்ந்து பாருங்க நம்ம 'திருட திருடி' படத்துல கதாநாயகியோட அப்பதான் இவரு. இந்த படத்தில் அநேகப் பாடல்கள் இந்த வகையை சார்ந்தது என்பது குறிப்பிட தக்கது.

இந்தப் பாடலின் முதல் வரியை ஒரு முறையாவது நம்ம எல்லாரும் சொல்லி இருப்போம். அர்தபழசு என்று குறிப்பதற்கு நாம் பயன்படுத்தும் இந்த முதல் இரண்டு வார்த்தைகள். காயாத கானகத்தே. படம் ஸ்ரீ வள்ளி இன்றைய HIPHOP வகை ராப்`களில் காணப் பெரும் இசை திரிவு ( CELESTIAL BREAKDOWN )  இந்தப் பாடலில் கையாளப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஒரு SLOW RAP - EMINEM, AKON போன்றோர்களின் உலக புகழுக்கு அவர்கள் எடுத்து விளையாடும் துருப்பு சீட்டு என்று சொல்லலாம்

இசயராஜ இல்லாமல் தமிழில் ஒரு இசைப்பட்டியல் தயாரித்து விட முடியுமா. இதோ இசையராஜாவின் RAP. இந்த ராப் இருந்தியில் இசைக்குள் புதைந்து விடுகிறது


மீண்டும் இசயராஜா. யேசுதாசின் ராப்


நந்தா படத்தில் வரும் ஓர் ஆயிரம் யானை பாடல் கூட இந்த வகை என்று சொல்லி விடலாம் ஆனால் அந்தப் பாடலில் மிக அதிகமாக வரிகள் ஜதிக்கு வழைந்து கொடுக்கின்றன.

இந்தப் பாடல்கள் எல்லாமே நமக்குத் தெரியும். இவை ராப் வகை என்பதுதான் நமக்கு ( எனக்கு, எனக்கு ) தெரியாது.

Monday, April 12, 2010

THANKS MAA( ஹிந்தி ) - திரை விமர்சனம்

இரண்டு வருடத்திற்கு முன் இந்தப் படம் வந்திருந்தால், "SLUMDOG MILLIONAIRE " படம் இந்த படத்தின் பாதிப்பில் எடுக்கப் பட்ட படம் என்று மார்தட்டி இருக்கலாம். போஸ்டர்களும், முதல் சில நிமிட காட்சிகளும் அந்தப் படம்தானோ என்ற சந்தேகத்தில் ஆழ்த்த முயற்சிக்கிற வேலையில், இல்லை என்று மறுத்து படத்தின் ஏழாவது நிமிடத்தில் இருந்து வேறு திசைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் இயக்குனர் இர்பான் கமல். நான்கு ஆதரவற்ற தெருச்சிறுவர்கள், ஒரு சிறுமி, மனம் போன போக்கில் வாழ்கின்றனர். இரண்டு நாளே ஆன ஒரு குழந்தை இந்த  சிறுவர்களில் ஒருவனான, தன்னைத் தானே சல்மான்கான் என்று அழைத்துக் கொள்ளும், 'முனிசிபாலிட்டி'யின் கையில் கிடைக்கிறது. தன் நண்பர்கள் "சோடா" "கட்டிங்" மற்றும் தோழி "சுர்சுரி"யுடன் சேர்ந்து அந்தக் குழந்தையை அதன் தாயுடன் சேர்க்க முயற்சி செய்கிறான் முனிசிபாலிட்டி. இந்த ஓட்டத்தில் மும்பையின் பல மூலைகளிலும் இந்த சிறுவர்கள் சந்திக்கும் மக்கள், அவர்களின் வாழ்கை, உணர்சிகள் என்று இந்த கதை ஓடி முடிவடைகிறது. சாபக்கேடு என்றாலும் இந்திய சினிமாவுக்கே உள்ள போளிதனன்களோடு கதை நம் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்றாலும், தனித் தனியாக ஒவ்வொரு காட்சியும் படையப்பாவில் தல தன்னோட சால்வையால் ஊஞ்சலை கீழிழுத்து உக்காரும் ஸ்டைலில் அமர்ந்து கொள்கிறது. மேல் சொன்னதற்கு மேல் இந்தக் கதையில் சொல்ல ஒன்னும் இல்லை-  கதாபாத்திரங்கள் நிலைத்து விடுகின்றன.
சீர்திருத்த பள்ளியில் வரும் சிறுவர்களோடு வன்புணர்ச்சி செய்யும் அந்த பள்ளியின் மேற்பார்வையாளர், மனைவி இல்லாத நேரத்தில் வேறு பெண் தேடும் ஆண், தன்னுடைய நாற்பது வயதிற்குப் பின் தனக்கு பாதுகாப்பாய் இருக்க, வாழையடி வாழையாக விபச்சாரம் செய்ய ஒரு பெண்குழந்தை தேடும் விபசார பெண், பத்து வயதே நிரம்பிய சுர்சுரியை விபச்சாரத்தில் நுழைக்க முயற்சிப்பவன், இந்த சிறுவர்களிடமே சரக்கு வாங்கிக் குடிக்கும் மருத்துவமனை வார்டு பாய் ( முனிசிபாலிட்டியின் அம்மாவை கண்டுபிடிப்பதாக சொல்லி ) என்று சராசரியான அவலங்களோடு ஓடும் காட்சி, இந்தியாவின் நிதித் தலைமையகமாக இருக்கும் மும்பையின் அழுக்கு நிமிடங்களை யதார்த்தமாக நிறைத்து விடுகிறது. இறுதிக் காட்சியில் இந்த குழந்தை, தந்தையாலேயே கற்பழிக்கப் பட்ட, அந்த கருவை சுமந்து பெற்ற ஒரு பெண்ணுடையது என்று கதை முடியும் பொழுது, ஆங்காங்கே பெண் அவலங்களை பேசும் இந்தப் படம், உரக்கப் பேசி முடிகிறது.

கனமான நெஞ்சோடு வெளியில் வருபவர்கள் பாராட்ட தவறாத ஒன்று இந்தப் படத்தில் சிறார்களின் நடிப்பும் அவர்களுடைய வசனங்களும். இசை பல ஹிந்திப் படங்களை நினைவு படுத்துகிறது தொய்வு இருக்கிறது. அஜயன் வின்சென்ட் எந்த ஒரு கோணத்திலும் இந்த பதிவுகள் SULDOGMILLIONAIERஐ நினைவு படுத்தக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார், அந்த படம் சுடப் பட்ட பல இடங்களில் இந்தக் கதை நகர்ந்தாலும், காட்சி கோணங்களையும், ஒளி அமைப்பையும் நேர்ந்து செய்ததிற்கு அவருக்கு குட்டிகரணம் போட்டு கைதட்டுகிறோம். இர்பான் கமல் இயக்கிய முதல் படம் என்பது தெரிகிறது ஆனாலும் வாழ்த்துக்கள் - எதுக்கு ?? - இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்ததர்க்கு.

புதிய பாதையில் பார்த்திபனும், பணக்காரனில் ரஜினியும் சொல்ல நினைத்ததும் இதுதான் - THANKS MAA.

Monday, April 5, 2010

வாங்க தேசத்ரோகம் பண்ணலாம்

என்னடா டி குடிக்க கூப்டுற மாதிரி. செத்து செத்து வெளையாடலாம் ஸ்டைல்ல கூப்டுற ......
ஒரு மலினப்பட்ட மனிதனின் மட்ட ரக பதிவு தொலைக்காட்சியில் ஒளிவரும்பொழுது, நானும் உட்பட மறைக்கப் பட்ட அந்த பெண்ணின் முகத்தை பார்க்க துடித்தோம். உங்கள சொல்லலீங்க, அப்படி பன்னவுங்கள மட்டும்தான் சொன்னேன். இந்த நெலமைல உங்கள யாரவது நல்லது பண்ண கூப்ட போயிடவா போறீங்க . அதான் ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தேசதுரோகம் செய்ய கூப்ட்டேன்....

தேவையான பொருட்கள்
தேச துரோகம் செய்ய, துப்பாக்கி, BOMB இப்படி எந்த ஆயுதங்களும் தேவை இல்லை, தப்பான விஷயத்த சொல்ல எந்த ஊடகமும் வேண்டாம், இவ்வளவு ஏன், கண்டத எழுத பேனா பென்சில் பேப்பர் கூட வேண்டாம், மத்தவுங்கல்ட்ட நீங்க பேச கூட வேண்டாம். நமக்கென்ன நாடு நாசமா போகட்டும்னு ஒரு சிந்தனை மட்டும் இருந்தா போதும். நான் ரெடி..... நீங்க ரெடியா ?????  
இதுல ரொம்ப சிறப்பம்சம் இந்த தேசதுரோகங்கள் செய்யும் போது உங்கள சட்டம் ஒன்னும் பண்ணாது. நீங்க தைரியமா, ஜாலியா இந்த தேச துரோகங்கள பண்ணலாம். செய்யும் போது உங்களுக்கும் உறுத்தாது மத்தவுங்களுக்கும் வலிக்காது. இதுக்கெலாம் மேல சமயங்களில் நம்பிக்கை இல்லாத, கடவுள் நம்பிக்கை இல்லாத - நாடு என்ற குறிக்கோளுடன் வாழும் நாத்திகர்கள்( ??) கூட செய்யலாம்.

செய்முறை விளக்கம் 
காலைல எழுந்துரிசுடீன்களா, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், இப்போ என்ன பண்ணுங்க ப்ருஷ்ள பேஸ்ட் தடவரதுக்கு முன்னாடியே அந்த வாஸ்பாஸின், கொலாய தெறந்து விடுங்க. தண்ணி கொட்டுதா.. ஓகே .. இப்போ பல்லு தேச்சு முடிக்கிற வரைக்கும் அத அடைக்கவே கூடாது சரியா. முடிஞ்சா பல்லு தேச்சதுக்கு அப்புறம் ஒரு ஒரு நிமிஷம் உங்க அழகான முகத்த கண்ணாடில பாப்பீங்கள்ள அதுவரைக்கும் கூட அதுல தண்ணி கொட்டட்டும். அடுத்து பாத்ரூம் வெயிட் வெயிட்...அந்த டிவி ஆண் பண்ணீங்களா ம்ம்ம்ம் ரேடியோ இல்ல டிவி அதுல பாட்டு கேட்டாதான நம்ம திட்டம் நிறைவடையும். இப்போ அந்த டிவி ஓடட்டும், திரும்ப குளியல்அறைக்குப் போங்க தொறதொரன்னு தண்ணிய தொறந்து விடுங்க அப்புறமா அதுக்கு நேர பக்கெட் வைங்க.. இல்ல இல்ல மொதல்ல தண்ணிய தொரக்கனும் அப்பறம்தான் பக்கெட். குளிக்குது ரோசா நாத்து .. டங்..குடங் பாடிக்கிட்டே குளிங்க ..எவ்ளோ நேரமா???.. ஒரு அஞ்சு, ஆறு பக்கெட் தண்ணி, நல்லா குளிக்க ரெண்டு பக்கெட் போதும் இன்னொரு பக்கெட்ல துணி துவைக்கலாம். கூடுதல் ரெண்டு பக்கெட் நீங்க அந்த தண்ணியோட சுகத்துல மெய்மறந்து குளிக்கிரீங்கள்ள அதுக்கு.
இப்போ துணிமணி உடுத்தியாச்சா. (வீட்டு) அம்மா சுட்ட இட்லியோ தோசையோ நல்ல மென்னு முழுங்கிட்டு உங்களுக்கு தேவையானத விட அதிகமா பிடிச்சு வச்ச குடிதன்னிலேந்து ஒரு சொம்பு தண்ணி எடுத்து வெறும் ஒரு டம்ளர் தண்ணி மட்டும் குடிசுடீன்களா ?..இப்போ இந்த பாக்கி சொம்பு தண்ணிய அப்படியே தூக்கி கீழ ஊத்திடுங்க.

மதியம் கொட்டிக்க கட்டிக்கிட்ட சோத்து டப்பாவ மறந்துட்டு போய் வண்டி ஸ்டார்ட் பண்ணுங்க .. இப்போ அப்படியே வண்டிய இக்நிஷன்ல வச்சுகிட்டு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் சாயங்காலம் எப்ப வரணும், நேத்து ராத்திரி விட்டுப் போன விஷயம், வரும் போது என்ன வாங்கிட்டு வரணும், உங்க மேலாளர் பத்தி ரெண்டு வசவு எல்லாம் முடிஞ்சுதா.. இப்போ வண்டிய ஓட்டுங்க.... சாப்பாட்டு டப்பாவா??, பொறுங்க பாதி தூரம் போயிட்டு திரும்ப வந்து எடுத்துக்குங்க. நமக்கென்ன அதான் நம்ம எரிநெய்க்கு.. அதான் பெட்ரோல்க்கு காசு குடுக்குரோம்ல. போற வழில சிக்னல்ல வண்டி அனைக்காதீங்க மத்தவுங்க என்ன அணைக்கவா செய்றாங்க? நீங்க மட்டும் பெரிய பெட்ரோல் மிச்சம் பிடிக்கப் போறீங்க

அலுவலகம் வந்துடீங்களா இப்போ நேத்து வீட்டுக்கு போகும் பொழுது ஞாபகமா மானிடர மட்டும் அமத்திட்டு போய் இருந்தீங்கள்ள இப்போ அத மட்டும் ஆன் பண்ணிட்டு வேலையப் பாருங்க. ஹ்ம்ம் டீ குடிக்கப் போனா கூட மானிடர அமத்தக் கூடாது. என்னது உங்களுக்கு தெரியுமா ?. அப்படிதான் முன்னாடியே பண்றீங்களா ?? நல்ல புள்ளை. போகும் போது அந்த செல்போன சார்ஜ்ல போட்டுருந்தீங்கள்ள அதையும் கைல எடுத்துக்கோங்க இல்ல இல்ல அதையும் அமத்த வேண்டாம் அப்படியே விட்ட்ரவும். வீட்ல காலைல போட்ட டிவிய ரீமொட்டாலதான அமத்துநீங்க, அதோட ஸ்விட்ச அமத்தலேள்ள - அதான எனக்கு ஒரு நிமிஷம் பகீர்ன்றுச்சு..
அடுத்து டீ கடைல சூட பஜ்ஜி ரெடியா இருக்கா? வாங்கி ரெண்டு உள்ள விடுங்க. அப்படியே தன்னை மறக்கும் அந்த சுவையில் அந்த கைல இருக்குற பேப்பர தூக்கி கீழ போடுங்க. குப்ப தொட்டிஎல்லாம் தேடி உங்க பொன்னான நேரத்த வீணடிக்க வேண்டாம். இல்லேன்னா அந்த கடைக்காரர்கிட்ட வைக்க சொல்லி கேக்கக் கூட வேண்டாம். அடுத்து அந்த புதுசா வந்துருக்க வெளிநாட்டு சிப்ஸ் பாக்கெட் அதையும் வாங்கி கொரிசுட்டு அப்படியே வீசுங்க, அந்த பிளாஸ்டிக் டீ கப்பையும் அதே முறையில் துல்லியமாக எறியவும், முடிந்தால் மனதில் மாரடோனவை உருவகம் செய்து கொண்டு அந்த கப்பை நடு ரோட்டுக்கு எத்தி விடவும். இங்க புகைப்பவர்களுக்கான சிறப்புக் குறிப்பு என்னது பெண்களுக்குமான்னா கேக்குறீங்க ??? ஆமாங்க. அதான் பெண்ணுரிமை  
 இப்போ ஒரு தம்ம வாங்கி பத்த வச்சுட்டு விடுங்க எதையா ? .பொகயத்தான்.... சரியா அடுத்தவன் நிக்கிற எடமா பாத்து புகை விடனும். அவ்ளோதாங்க இத தொடர்ச்சியா ஒரு மாசம் முயற்சி பண்ணீங்கன்ன போதும். நல்ல பலன் கிடைக்கும்.  
 என்னாது இதத்தான் பல வருசமா பண்றீங்களா. தலைவா உங்க நம்பெர பின்னூட்டத்துல போட்டுட்டு போங்க.ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் தலைவர் பதவிக்கு ஆள் தேடுகிறோம்


குறிப்பு: அதிநூதனமாக தேசத்ரோகம் செய்ய விரும்புவோர் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

புரட்சி என்பது ஆயுதம் ஏந்தி போராடுவது அல்ல, ஆயுதம் ஏந்த வைப்பது, போராட வைப்பது கூட இல்லை, சிந்திப்பதும், சிந்திக்க வைப்பதுமே -  சே