இன்று எய்தவன் ராமனென்றால் கூட
அவன் கோதண்டத்தை முறி,
நேராகவே நின்று எய்திருந்தாலும்!
தமிழ்நாட்டிற்கு இல்லையென்றால்கூட
தமிழுக்கு இன்று கருப்பு தினம்;
இன்று மாலையோடு திரையின்
மொழி நிறக்குருடாகியிருக்கும்;
நிழலின் மொழிகளுக்கு
நிறச்சாயம் நீ, ரங்கராஜா.. . .
சுவாசம் ஈடேறாமலா ?? - இருக்காது
நீ வரிகள் ஈடேறாமல்தான்
உடைந்திறுப்பாய்
இன்று இரவோடு உறங்கச்சென்ற
வார்த்தைப் பிள்ளைகள்
நாளைய கவிதை நலிந்த கதிரோடு எழுகையில்
உன்னைத் தேடி அழுமே!
என்ன சொல்லி ஆறுதல் செய்வேன்
அந்த தோட்டத்து வெற்றிலைகள்
முதல் முறையாய் நாளை அங்கு வாடியிருக்கும்
என்ன கொண்டு அவற்றை தேற்றுவேன்
இனி இங்கே எவனொருவன் காதலித்தாலும்
அவன் கவிதைகள் நிச்சயம் உன் ஜாடையில்தான் பிறக்கும்
இல்லையென்றால் அது இன்குபேட்டரில் தான் இருக்கும்
தமிழின் வினைத்தொகை நீ
மூன்று காலத் தமிழிழும் விரைந்திருக்கிறாய்
கவிதை செய்தாய், நாங்கள் காதலித்தோம்
காமம் ஈட்டினாய் கட்டுண்டு கிடந்தோம்
இப்படி போனாயே இப்போது என்ன செய்வது
உன் மொழியின் வயதை கருத்தில் கொண்டு
ஒப்பாரி செய்தால் நீ அற்பாயசில்தான் போயிருக்கிறாய்.
நீ இசைந்ததுபோல்
தன்னுயிர் பிரிந்ததை பார்தவறில்லை
இன்னுயிர் பிரிந்ததை நானும் பார்த்து நின்றேனே. . . . . . .
3 comments:
அன்பின் ஸ்ரீநி - அருமையான் இரங்கல் கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
இழப்பின் இரங்கல் ... நன்றாக உள்ளது நன்பரே...
Kavidhai maa maedhaikku ithu samarpanam..
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )