என்னடா டி குடிக்க கூப்டுற மாதிரி. செத்து செத்து வெளையாடலாம் ஸ்டைல்ல கூப்டுற ......
ஒரு மலினப்பட்ட மனிதனின் மட்ட ரக பதிவு தொலைக்காட்சியில் ஒளிவரும்பொழுது, நானும் உட்பட மறைக்கப் பட்ட அந்த பெண்ணின் முகத்தை பார்க்க துடித்தோம். உங்கள சொல்லலீங்க, அப்படி பன்னவுங்கள மட்டும்தான் சொன்னேன். இந்த நெலமைல உங்கள யாரவது நல்லது பண்ண கூப்ட போயிடவா போறீங்க . அதான் ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தேசதுரோகம் செய்ய கூப்ட்டேன்....
தேவையான பொருட்கள்
தேச துரோகம் செய்ய, துப்பாக்கி, BOMB இப்படி எந்த ஆயுதங்களும் தேவை இல்லை, தப்பான விஷயத்த சொல்ல எந்த ஊடகமும் வேண்டாம், இவ்வளவு ஏன், கண்டத எழுத பேனா பென்சில் பேப்பர் கூட வேண்டாம், மத்தவுங்கல்ட்ட நீங்க பேச கூட வேண்டாம். நமக்கென்ன நாடு நாசமா போகட்டும்னு ஒரு சிந்தனை மட்டும் இருந்தா போதும். நான் ரெடி..... நீங்க ரெடியா ?????
இதுல ரொம்ப சிறப்பம்சம் இந்த தேசதுரோகங்கள் செய்யும் போது உங்கள சட்டம் ஒன்னும் பண்ணாது. நீங்க தைரியமா, ஜாலியா இந்த தேச துரோகங்கள பண்ணலாம். செய்யும் போது உங்களுக்கும் உறுத்தாது மத்தவுங்களுக்கும் வலிக்காது. இதுக்கெலாம் மேல சமயங்களில் நம்பிக்கை இல்லாத, கடவுள் நம்பிக்கை இல்லாத - நாடு என்ற குறிக்கோளுடன் வாழும் நாத்திகர்கள்( ??) கூட செய்யலாம்.
செய்முறை விளக்கம்
காலைல எழுந்துரிசுடீன்களா, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், இப்போ என்ன பண்ணுங்க ப்ருஷ்ள பேஸ்ட் தடவரதுக்கு முன்னாடியே அந்த வாஸ்பாஸின், கொலாய தெறந்து விடுங்க. தண்ணி கொட்டுதா.. ஓகே .. இப்போ பல்லு தேச்சு முடிக்கிற வரைக்கும் அத அடைக்கவே கூடாது சரியா. முடிஞ்சா பல்லு தேச்சதுக்கு அப்புறம் ஒரு ஒரு நிமிஷம் உங்க அழகான முகத்த கண்ணாடில பாப்பீங்கள்ள அதுவரைக்கும் கூட அதுல தண்ணி கொட்டட்டும். அடுத்து பாத்ரூம் வெயிட் வெயிட்...அந்த டிவி ஆண் பண்ணீங்களா ம்ம்ம்ம் ரேடியோ இல்ல டிவி அதுல பாட்டு கேட்டாதான நம்ம திட்டம் நிறைவடையும். இப்போ அந்த டிவி ஓடட்டும், திரும்ப குளியல்அறைக்குப் போங்க தொறதொரன்னு தண்ணிய தொறந்து விடுங்க அப்புறமா அதுக்கு நேர பக்கெட் வைங்க.. இல்ல இல்ல மொதல்ல தண்ணிய தொரக்கனும் அப்பறம்தான் பக்கெட். குளிக்குது ரோசா நாத்து .. டங்..குடங் பாடிக்கிட்டே குளிங்க ..எவ்ளோ நேரமா???.. ஒரு அஞ்சு, ஆறு பக்கெட் தண்ணி, நல்லா குளிக்க ரெண்டு பக்கெட் போதும் இன்னொரு பக்கெட்ல துணி துவைக்கலாம். கூடுதல் ரெண்டு பக்கெட் நீங்க அந்த தண்ணியோட சுகத்துல மெய்மறந்து குளிக்கிரீங்கள்ள அதுக்கு.
இப்போ துணிமணி உடுத்தியாச்சா. (வீட்டு) அம்மா சுட்ட இட்லியோ தோசையோ நல்ல மென்னு முழுங்கிட்டு உங்களுக்கு தேவையானத விட அதிகமா பிடிச்சு வச்ச குடிதன்னிலேந்து ஒரு சொம்பு தண்ணி எடுத்து வெறும் ஒரு டம்ளர் தண்ணி மட்டும் குடிசுடீன்களா ?..இப்போ இந்த பாக்கி சொம்பு தண்ணிய அப்படியே தூக்கி கீழ ஊத்திடுங்க.
மதியம் கொட்டிக்க கட்டிக்கிட்ட சோத்து டப்பாவ மறந்துட்டு போய் வண்டி ஸ்டார்ட் பண்ணுங்க .. இப்போ அப்படியே வண்டிய இக்நிஷன்ல வச்சுகிட்டு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் சாயங்காலம் எப்ப வரணும், நேத்து ராத்திரி விட்டுப் போன விஷயம், வரும் போது என்ன வாங்கிட்டு வரணும், உங்க மேலாளர் பத்தி ரெண்டு வசவு எல்லாம் முடிஞ்சுதா.. இப்போ வண்டிய ஓட்டுங்க.... சாப்பாட்டு டப்பாவா??, பொறுங்க பாதி தூரம் போயிட்டு திரும்ப வந்து எடுத்துக்குங்க. நமக்கென்ன அதான் நம்ம எரிநெய்க்கு.. அதான் பெட்ரோல்க்கு காசு குடுக்குரோம்ல. போற வழில சிக்னல்ல வண்டி அனைக்காதீங்க மத்தவுங்க என்ன அணைக்கவா செய்றாங்க? நீங்க மட்டும் பெரிய பெட்ரோல் மிச்சம் பிடிக்கப் போறீங்க
அலுவலகம் வந்துடீங்களா இப்போ நேத்து வீட்டுக்கு போகும் பொழுது ஞாபகமா மானிடர மட்டும் அமத்திட்டு போய் இருந்தீங்கள்ள இப்போ அத மட்டும் ஆன் பண்ணிட்டு வேலையப் பாருங்க. ஹ்ம்ம் டீ குடிக்கப் போனா கூட மானிடர அமத்தக் கூடாது. என்னது உங்களுக்கு தெரியுமா ?. அப்படிதான் முன்னாடியே பண்றீங்களா ?? நல்ல புள்ளை. போகும் போது அந்த செல்போன சார்ஜ்ல போட்டுருந்தீங்கள்ள அதையும் கைல எடுத்துக்கோங்க இல்ல இல்ல அதையும் அமத்த வேண்டாம் அப்படியே விட்ட்ரவும். வீட்ல காலைல போட்ட டிவிய ரீமொட்டாலதான அமத்துநீங்க, அதோட ஸ்விட்ச அமத்தலேள்ள - அதான எனக்கு ஒரு நிமிஷம் பகீர்ன்றுச்சு..
அடுத்து டீ கடைல சூட பஜ்ஜி ரெடியா இருக்கா? வாங்கி ரெண்டு உள்ள விடுங்க. அப்படியே தன்னை மறக்கும் அந்த சுவையில் அந்த கைல இருக்குற பேப்பர தூக்கி கீழ போடுங்க. குப்ப தொட்டிஎல்லாம் தேடி உங்க பொன்னான நேரத்த வீணடிக்க வேண்டாம். இல்லேன்னா அந்த கடைக்காரர்கிட்ட வைக்க சொல்லி கேக்கக் கூட வேண்டாம். அடுத்து அந்த புதுசா வந்துருக்க வெளிநாட்டு சிப்ஸ் பாக்கெட் அதையும் வாங்கி கொரிசுட்டு அப்படியே வீசுங்க, அந்த பிளாஸ்டிக் டீ கப்பையும் அதே முறையில் துல்லியமாக எறியவும், முடிந்தால் மனதில் மாரடோனவை உருவகம் செய்து கொண்டு அந்த கப்பை நடு ரோட்டுக்கு எத்தி விடவும். இங்க புகைப்பவர்களுக்கான சிறப்புக் குறிப்பு என்னது பெண்களுக்குமான்னா கேக்குறீங்க ??? ஆமாங்க. அதான் பெண்ணுரிமை
இப்போ ஒரு தம்ம வாங்கி பத்த வச்சுட்டு விடுங்க எதையா ? .பொகயத்தான்.... சரியா அடுத்தவன் நிக்கிற எடமா பாத்து புகை விடனும். அவ்ளோதாங்க இத தொடர்ச்சியா ஒரு மாசம் முயற்சி பண்ணீங்கன்ன போதும். நல்ல பலன் கிடைக்கும்.
என்னாது இதத்தான் பல வருசமா பண்றீங்களா. தலைவா உங்க நம்பெர பின்னூட்டத்துல போட்டுட்டு போங்க.ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் தலைவர் பதவிக்கு ஆள் தேடுகிறோம்
குறிப்பு: அதிநூதனமாக தேசத்ரோகம் செய்ய விரும்புவோர் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
புரட்சி என்பது ஆயுதம் ஏந்தி போராடுவது அல்ல, ஆயுதம் ஏந்த வைப்பது, போராட வைப்பது கூட இல்லை, சிந்திப்பதும், சிந்திக்க வைப்பதுமே - சே
13 comments:
r u doing like this
அருமை,
மனதை உறுத்தும் பதிவு. இதில் ஒரு சில பழக்கங்கள் எனக்கும் உண்டு. மாற்றிக் கொள்கிறேன்.
நன்றி
எங்கெய்யா உக்காந்து யோசிக்கிறீர்!!!!!!!!!!!!!!
நானும் இப்போ முதல் தேசத்துரோகம் செய்யப்போறேன்:-)
சின்னச்சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளைச் சரி பண்ணிருங்க.
பதிவு தூள்:-)
hi Vikram,
அருமையான பதிப்பு.
மக்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். நாம் தினம்தோறும் செய்யும் சின்ன சின்ன தவறுகளின் விளைவுகள்.
இதை படித்த பின்பாவது மக்கள் மாறினால் மிகவும் சந்தோஷம்.
Chitra
கோவை போய்ட்டு அப்படியே கோவைல (அதாம்பா இரயிலு) திரும்பி வரும்போது , சன்னல் வழியே பாத்துக்கிட்டே வந்தேன். அவ்வளவு இடம் குப்பை குப்பையா இருக்கு. வழி நெடுகிலும் குப்பை , எங்க பாத்தாலும் குப்பை, இந்த தேசத்தின் வெளிப்பாடாதான் அது தெரிந்தது. அப்ப நான் உணர்ந்தேன் எவ்வளவு தேசத்துரோகம் பண்ணிக்கிட்டு இருக்கோம்னு, அடுத்தது நம்மள குப்பையாக்கறதுக்கு, இந்த அரசாங்கமே "டாஸ்மாக்" என்னும் சாராய க(ழிச)டையை நடத்தற கேவலமான தேசத்துரோகம். எவ்வளவு பேரு லிவ்வர் (கல்லீரல்) கெட்டுப்போய் நாசாமாய்போகும் அவலம், இதெல்லாம் இந்த அரசுக்கு கிடைக்கிற கோடிகளோட பல கோடி வருங்கால குடிகளோட நாசகாரியம் . சிந்திங்க மக்கா......சிந்திக்க விடாம பண்றதுக்குத்தான் சிரிப்பு சேனல் அட்டகாசமான அரசியல் காமெடி, அதுக்கேத்த ஊடகம் சன், நக்கீரன் மாதிரி.......
துளசி கோவாலு , இதுக்கெல்லாம் வேற உக்காந்து யோசிக்கணுமா அதான் தன்னாலேயே நடக்குது. இன்னிக்கு காலைல நடை போகும்போது , என் முன்னாடி நடந்தவர் பூங்கா ஓரம் அப்படியே அவரோட சளியை துப்பியே முழு வலம் வந்தார் , எவ்வளவு தேசத்திரோகம் இந்த மாதிரி எத்தனை பேர் பண்ணிகிட்டு இருக்கோம்.
இப்படி பொறுப்போடு காலம் காலமாக செய்து நாட்டுக்கு நலன் புரியும் நண்பர்களை தேச துரோகிகள் என்று அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன், அவர்களை பிரபஞ்ச துரோகி என்று அழையுங்கள்.
சர்வ சாதாரணமா செய்யறதைப் போயி...தேசத் துரோகம் அது,இதுன்னு பயமுத்திறீங்கப்பா!!!
nallu padhivu nalla sindhanai, ippadillam kuda advise pannalama
மிக மிக அருமையான பதிவு.. என் மனதில் இருந்த நெருடல்களை எழுத்து வடிவில் காண்கிறேன்....
ஒவ்வொரு தேச துரோகிகளுக்கும் நீங்க சிரிச்சிகிட்டே கொடுத்த செருப்படி..
//*எப்பூடி ... said...
இப்படி பொறுப்போடு காலம் காலமாக செய்து நாட்டுக்கு நலன் புரியும் நண்பர்களை தேச துரோகிகள் என்று அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன், அவர்களை பிரபஞ்ச துரோகி என்று அழையுங்கள்.*//
எப்பூடி அவர்களை நானும் வழிமொழிகிறேன் நண்பர் ஸ்ரீநிதி அவர்களே ...
உங்களின் பதிவை சிறு நோட்டிசாக அடித்து சமூக மன்றங்கள் விநியோகித்தால் நல்ல பலன் கிடைக்கும் ...
நல்ல பதிவு தோழரே...
நிறுத்துறோம்....எல்லாத்தயும் நிறுத்துறோம்...நீங்க எப்போ வெளிநாட்டிலேருந்து இந்தியா வர்றீங்க? :)
ஒரு செருப்பை என் வாயில் கவ்வக் கொடுத்து, மறு செருப்பை சாணியில் முக்கி, மூஞ்சியில் அடித்ததைப் போல உணருகிறேன்..
சத்தியமாக நம்மை முதலில் நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டிய பதிவு... காரசாரமான ஒரு விஷயத்தை அருமையான முறையில் எழுதி அசத்தி விட்டீர்..
கண்டிப்பாக என்னிடம் உள்ள அந்த விஷயங்களை மாற்றிக் கொள்கிறேன்...
நன்றி...
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )