Thursday, April 15, 2010

தமிழ்த்திரையில் சங்ககால 'ராப்' - RAP இசைப் பாடல்கள்

தமிழ் வார்த்தைகல கோழி குஞ்சா நெனசுகிட்டு, சொடுக்குநு ஒவ்வொவொரு வார்த்தையையும் கழுத்த திருகி, மென்னு, முழுங்கி, செமிச்சு, துப்பி, ஏப்பம் விட்டு, கேமராவல வந்து நடு விரலையும் மோதிர விரலையும் மடிச்சு மேலுங் கீழுமா ஆட்டுறது ராப் வகைப் பாடல். இன்னும் இது நிறைவடைய இது என்னன்னு புரியாத மாதிரி ஒரு உடையும் போட்டுக்கணும். இது கடந்த பத்து வருடத்தில் நம்ம தமிழ் சினிமா ராப்புக்கு கண்டுபிடித்த விளக்கம் ( அது கெடக்குது விடுங்க ).

RAP : இசையின் ஆதிக்கம் குறைவாக, மொழியின் ஆட்சி அதிகமாய் இருக்கும் இசை RAP - ஆகும். உரைநடை கவிதைகளுக்கும் இதுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இந்த ராப் வகை பாடல்கள் இசையால் அதிகம் செய்யப் படவில்லைஎன்றாலும் இசையின் ஜதிக்குள் நின்று ஒலிக்கும். இந்த வகை பாடல்களின் மாத்திரை இசையின் ஜதியை வேறாக கொண்டே அமைகின்றன. டூயட் படத்தில் வரும் சித்தத்தினால் உரைநடை கவிதை வகையை சாரும், அந்த ஒலிப்பதிவில் இசை இருக்கும், ஆயினும் மொழி அதன் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் கீழே சொன்ன பாடல்கள் அப்படி இல்லை. இந்த பாடல்களில் இசை உண்டு அனால் அதன் ஜதியின் கட்டுபாட்டில் இதன் வரிகள் இல்லை. அதை விட்டு அவை வெளியிலும் செல்ல வில்லை என்பதை நம்மால் உணர முடியும். வாட் இஸ் தி மேட்டர் ஐ சே. ஏதாவது இசை சிரோன்மணிகள் இதைப் படித்துக் கொண்டிருந்தால் இன்னும் விம்மோ சபினாவோ போடா வரவேர்க்கப் படுகிறார்கள்.

தமிழ் திரை உலகிற்கு இந்த வகைப் பாடல்கள் கடந்த பத்து வருடத்தில் வரத்தொடங்கின என்று நீங்கள் நினைபவராய் இருந்தால், முழிய மடக்கி சூடு பறக்க தேச்சு மன்டேல போட்டுக்குங்க. 'காதலன்' படத்துல வர்ற பாடல்தான முதல்ப் பாடல்னு சொன்னா - இன்னும் ஒரு முறை கொட்டிகிங்க. தமிழ் திரைக்கு இந்த வகைப் பாடகள் புதிதல்ல, இன்னும் சொல்லப்போனால் 'ராப்' என்று இந்த வகைப் பாடல்கள் அமெரிக்கவில் பெயர் பெறுவதற்கு முன்னமே நம் திரை உலகில் இந்த வகைப் பாடல்கள் உண்டு. அந்தப் பாடல்களில் எனக்கு பிடித்த சில பாடல்களை உங்களுடன் பகிர்கிறேன்.

இந்த தமிழ் 'ராப்' தெரியாத தமிழர்களே இருக்க முடியாது. கே. பீ. சுந்தராம்பாள் குரலில் வந்த இந்த ராப் வகைப் பாடல் அலாதியான மாட்சி. படம் கந்தன்கருணை என்று நினைகிறேன்.


டி எம் சௌந்தர்ராஜன் குரலில் அமைந்த இந்தப் பாட்டு மிக அருமையான ராப். ராப் வகைக்கு இது ஒரு இலக்கணம் என்றால் கூட அது மிகை அல்ல. இசை நுட்பமாய் மொழியை தாண்டி செல்லும் ஒவ்வொரு ஜதியிலும் இந்தப் பாடல் நிறுத்தப்பட்டு மீண்டும் மொழி மேலோங்கும் பாங்கு அருமை. படம் அருணகிரிநாதர்.

இன்னும் பின்னோக்கிப் பயணப்பட்டால் நந்தனார் படத்துல என்னப்பனல்லவா பாடல். கூர்ந்து பாருங்க நம்ம 'திருட திருடி' படத்துல கதாநாயகியோட அப்பதான் இவரு. இந்த படத்தில் அநேகப் பாடல்கள் இந்த வகையை சார்ந்தது என்பது குறிப்பிட தக்கது.

இந்தப் பாடலின் முதல் வரியை ஒரு முறையாவது நம்ம எல்லாரும் சொல்லி இருப்போம். அர்தபழசு என்று குறிப்பதற்கு நாம் பயன்படுத்தும் இந்த முதல் இரண்டு வார்த்தைகள். காயாத கானகத்தே. படம் ஸ்ரீ வள்ளி இன்றைய HIPHOP வகை ராப்`களில் காணப் பெரும் இசை திரிவு ( CELESTIAL BREAKDOWN )  இந்தப் பாடலில் கையாளப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஒரு SLOW RAP - EMINEM, AKON போன்றோர்களின் உலக புகழுக்கு அவர்கள் எடுத்து விளையாடும் துருப்பு சீட்டு என்று சொல்லலாம்

இசயராஜ இல்லாமல் தமிழில் ஒரு இசைப்பட்டியல் தயாரித்து விட முடியுமா. இதோ இசையராஜாவின் RAP. இந்த ராப் இருந்தியில் இசைக்குள் புதைந்து விடுகிறது


மீண்டும் இசயராஜா. யேசுதாசின் ராப்


நந்தா படத்தில் வரும் ஓர் ஆயிரம் யானை பாடல் கூட இந்த வகை என்று சொல்லி விடலாம் ஆனால் அந்தப் பாடலில் மிக அதிகமாக வரிகள் ஜதிக்கு வழைந்து கொடுக்கின்றன.

இந்தப் பாடல்கள் எல்லாமே நமக்குத் தெரியும். இவை ராப் வகை என்பதுதான் நமக்கு ( எனக்கு, எனக்கு ) தெரியாது.

2 comments:

பாலா said...

காதலனுக்கு முன்னாடியே, ‘துறைமுகம்’ படத்துல நம்ம ஆதித்யன் ஒரு ராப் போட்டுட்டாருங்க.

ஆனா. இந்த பாட்டையெல்லாம் ராப்பில் சேர்க்க முடியுமான்னு தெரியலை. ஒருவேளை அதுக்கான அர்த்தம் மாறிட்டனாலயான்னு தெரியல.

எப்பவும்.. வெவகாரமாவே எழுதுவேன்னு அடம் பிடிக்கறீங்களே! :) :)

மரா said...

ஆமாண்ணே....எப்பிடி இப்படில்லாம் சிந்திக்கிறீங்க. முடியல.......அவ்வையார் பாட்டு ராப்பா. அப்போ ‘குலேபகாவளி’ பாட்டு ஜாஸா...நல்லா யோசிக்கிறீங்க தலைவரே!!

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )