என்றாவது உங்களை நீங்களே சுமப்பது போல் உணர்ந்திருக்கிறீர்களா ? வெறும் ஒரு திரைப்படம் அதுவும் அதுவும் அதன் இடைவெளிக்கு முன்பே அப்படி ஒரு தாக்கத்தை உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறதா ?
#ஜோக்கர்_பாராட்டுக்கள், கவனிக்க இது விமர்சனம் மட்டுமல்ல இது ஒரு பாராட்டும்.
இந்தப் படத்தின் முதல் சுவரொட்டி விளம்பரம் முதலே( அது கடந்த மாநிலங்களவை தேர்தல் பிரச்சார நேரமென்று நினைக்கிறேன் ) இந்த படத்துக்காக காத்துக் கிடந்து, நமது சுதந்திர தமிழக அரசியல் சூழலில் இந்தப் படம் வெளியாகாமல் போய்விடுமோ சற்று மண் வாடியவறில் நானும் ஒருவன்.
ஒரு நிகழ்வில் இந்தப் படத்தின் இயக்குனர் ராஜு முருகனை சந்தித்தேன், தான் ஒரு கமியூனிஸ்ட்டு என்று அறிமுகம் செய்து கொண்ட அவரின் படம் என்பதால், இவரும் ஏனைய போலிகள் போல் வறண்ட - ஒரு சாரர் கருத்துக்களை இந்த படத்தில் முன் வைப்பார் என்ற முன்முடிவோடே இந்த படத்தை பார்த்தேன். ஆனால் அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கிய அவருக்கு நன்றி. பாராட்டுக்கள்.
புரட்சி பேசுவதாய் கதையின் களத்திற்கு கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமில்லாத காடசிகளோ வசனங்களையோ இடைச்செருக்காமல் ஒரு வனப்பான முற்போக்குப் படம் இது. சில படங்கள் - ஏன் அனைத்துப் படங்களுமே ஏதோ ஒருவரியிலாவது ஏதோ ஒரு கருத்தை தீர்க்கமாய்ப் பதிகின்றன. ஜோக்கர் வரிக்கு வரி நொடிக்கு நொடி என்று அதை தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறது, -பின்விழைவுகளை கருத்தில் கொள்ளாமல். இயக்குனர் என்ற தளத்தைக் கடந்து, வசனகர்த்தாவாக, ஒரு திரைக்கடையாளனாக முருகன் வெகு சிறப்பு.
ஆரண்ய காண்டத்திலிருந்தே ( கொடுக்காய் புலியின் அப்பா ) ஒவ்வொரு படத்திலும் தனக்கான ஒரு முத்திரையை தயார் செய்து வந்த குரு சோமசுந்தரம், இந்தப் படத்தில் அதை அழுத்தமாய்ப் பதிகிறார். கோமாவில் இருக்கு மனைவிக்கு பாவாடை மாற்றிவிடும் ஒரு நொடி காட்சியில் உடைந்து நம்மை அழவைக்கிறார். ஊர்கோவிலில் இருக்கும் சாமிக்கான குடையை தனதாக்கும் முன் அதை அவர் பார்க்கும் பார்வைக்கு ஷ்டாண்டிங் ஓவேஷன் ( ) தனது மனப்பிறழ்விழும், அழுகை கட்டுப்படுத்தி வீட்டுவேலைகளை இசைக்கு ( ஒரு கதாபாத்திரம் ) கட்டளையிடும் காடசியில் அவருக்கு இந்த பாண்டிய நாடே அடிமை.
அமைக்கப்பட்ட கழிப்பறையின் அடிப்படை கட்டுமானத்தை, கையில் கிடைத்த ஒலிம்பிக் மெடல் போல் பார்க்கும் காட்சியில் தன்னை இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணிகளில் ஒன்றாக இனத்தை கொள்கிறார் '#ரம்யா பாண்டியன்'.
#செழியன் பெயருக்கேற்றார் போல் மிகக் செழுமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு கிராமத்தில் கொல்லைப்புறத்தில் இரவில் பெய்யும் மழையின் காட்சி, உடைக்கமுடியாத கதவுகள் முன் உதவிக்கு துடிக்கும் கால்களை காட்டும் காட்சி, துடிக்கும் உயிரை சொட்டு சொட்ட்தாக வடியும் சிறுநீர் பையால் காடசிப்படுத்தலென்று மிகையில்லாத அற்புதம் இவருடைய ஒளிஆளுமையும் பதிவும்.
ஒப்பனை இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம்,
மிகச்சிறு எடிட்டிங் பிசுறுகளைத் தவிர இந்தப் படம் அதி சிறப்பான படம். கஞ்சா பொடடலங்கள் போல் போதைக்கு ஒளியை விற்பனை செய்யும் திரையரங்குகள் இது போன்ற திரைப்படங்களை திரையிடுவதால், தன் பாவங்களை கழுவிக்கொள்ளலாம். டோரண்ட்டுகளில் திருடும் ஞமலிகளுக்கு அந்தப் பிராரப்தம் கூட கிடடாது போகும்.
கோடம்பாக்கத்தின் ஜனாதிபதி என்ற முறையில் இந்த ஆண்டின் மிக சிறப்பான படமென்றும், தைரியமான, பயனுள்ள படமென்றும் இந்தப் படத்தை அறிவிக்கிறேன். தேட்ட்றலா போய் பாக்கல பகத்சிங்க்க அவுத்து விட்ருவேன் பாத்துக்க
#ஜோக்கர்_பாராட்டுக்கள்

No comments:
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )