Monday, January 18, 2010

SUZUKI HAYABUSA - பெயர்க்காரணம் - மாற்றுப் பார்வை


எனக்கென்னமோ தெரிலங்க சில மட்டேற நேரா பாத்தாலும் உள்குத்து இருக்கோன்னு தோணுது. அப்படி நம்ம அவதார்,  300 மாதிரி இந்த மேட்டர் ஒரு காலத்தில் பைக் பயித்தியமா ( பைக் இல்லாம பயித்தியமா மட்டும் ) சுத்துனப்ப, சீல்தலை சாத்தனார் ஆகி கண்டுபுடிச்சது. ரொம்ப முக்கியமா பைக் ஆசை, அறிமுகம் இல்லாதவங்களுக்கு கூட இது புரியணும்னு கொஞ்சம் கூடுதல் முயற்சி செய்துள்ளேன்.
புரிஞ்சுது இல்லேன்னு கமெண்ட்ஸ் போட்டு சொல்லிட்டு போங்க ( கட்டணம் ஏதும் இல்லை. முற்றிலும் இலவசமாக ).

சுசுகி ஹயபுசா இன்றைய பைக் - ஓட்டாமல், மெல்லமாய் பறக்கும் இளைஞர்கள், ( ஐயோ பெண்ணியம் ) இளைங்கிகளும் விரும்பும் ஒரு வார்த்தை உண்டென்றால் அது நிச்சயமா - ஹயபுசா. ஜப்பானிய சுசுகி நிறுவனத்தின் மிக சிறந்த உலகப் புகழ் பெற்ற ஒரு படைப்பாக கடந்த 10 வருடமாக இந்த பைக் வளம் வருகிறது. 'SPEED IS THE NAME OF THE GAME ' என்ற தாரக மந்திரத்தை முன்வைத்தே 1999ல் வெளி வந்த இந்த பைக் அதிக பட்சமாய் ஒரு மணி நேரத்திற்கு 188 முதல் 194 மைல் வேகம் வரை அதாவது 300 -312 கீ மீ வேகத்தில் ஓடும் ( பறக்கும் ). இன்று வரை SPORTS BIKE வகைகளில் இதற்கென்று ஒரு தனி இடத்தை இந்த பைக் தக்க வைத்து கொண்டே வந்திருக்கிறது. இதே பெயரில் ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு விண்கலம் ஒன்றும் ஏவப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. நம்ம ஊருகளில் ஊருக்கொரு K.K நகர் J.J நகர் இருப்பதுபோல் ஜப்பானில் இந்தப் பெயரில் ஜட்டியிலிருந்து, சில்லி சிகென் கடை, விண்கலம் வரை HAYABUSA - இந்தப் பெயர் ஜப்பானியம் ஆனால் இந்த பெயரை இந்த பைக்க்கு வச்சது அப்படி சாதாரனமா வந்ததில்ல. இதுல ஒரு உள்குத்து இருக்கு அதப்பத்தி தெரிஞ்சுக்குரதுக்கு முன்னாடி ஹோண்டா BLACKBIRDபத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்.

அமெரிக்காவின் உலக நண்பன் ரஷ்ய போல SUZUKIயின் பரமநண்பன் ஹோண்டா நிறுவனம். இந்த வருடத்துடன் தனுடைய 100ஆண்டை வெற்றிக் களிப்பில் கொண்டாடும் இந்த குழு ( ஹோண்டா இரண்டு சக்கர வாகன நிறுவனம் அல்ல ஹோண்டா குழுமம் ), தன்னுடைய இன்னொரு நண்பன் கவாசாகிக்கு எதிராக, 90களில் முடிவு செய்து 1996இல் களத்தில் இறக்கிய ஸ்போர்ட்ஸ் வகை பைக் ஹோண்டா SUPER BLACKBIRD. இது மணிக்கு 177மைல் அதாவது 285கீ மீ வேகத்தில் டுர்ர்ற்ற கூடிய இரண்டு சக்கர வாகனம் ( விமானம் ). இதே பெயரில் இதன் சமகாலத்தில் உலகத்தின் மிக வேகமான ஒரு போர் வகை விமானம் ஒன்றும் இருந்தது.

இப்போ படத்தோட கிளைமாக்ஸ் எதுக்காண்டி HAYABUSAன்னு பேரு வச்சாங்க ?

HAYABUSA - ஜப்பானிய மொழியில் உயரமாகப் பறக்கும் பறுந்து / கழுகு என்ற பொருள்படும். இந்த பறுந்து எவளவு தூரதில் இருந்தாலும் மிகத் துல்லியமாக வேட்டையாடும் அதுவும் கருப்பு வகை காகங்களை வேட்டையாடும் திறன் பெற்றவை. எப்படி,,,,,,,,,,,,,,,,,, கருப்பு வகைப் பறவை - BLACKBIRD. ஹயபுசா BLACBIRDய் அமெர்க்க ஐரோப்பா போன்ற, இந்த வகை பைக்குகளின் முன்னணி சந்தையில் வேட்டைஆடியது இன்று வரை வரலாறு . உலகின் மிக வேகமான பைக் என்ற பட்டதை 'கவசாகி'யிடமிருந்து ஹோண்டா தட்டியது அதே பட்டதை இந்த ஹயபுசா மூலமாக 'ஹோண்ட'விடமிருந்து சுசுகி சுட்டது உலகறிந்தது . சொல்லி அடிகிரதுன்ன இதுதான். வச்ச பேர காப்பாத்துரது நாளும் இதுதான். 

இது இளைய தளபதிக்காக எழுதப் பட்டது என்று நீங்கள் நினைத்தால் அது வெறும் தற்செயலாக நிகழ்ந்த ஒன்றே ;-()  :-))

2 comments:

பேநா மூடி said...

ஹா.., இதுக்கும் தாங்க தளபதிக்கும் என்னங்க சம்பந்தம்,...,

சாமக்கோடங்கி said...

சூப்பர் மேட்டர் பா....

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )