Wednesday, March 31, 2010

ENGLISH IS A FUNNY LANGUAGE - எப்படி ?? பகுதி - 4

எல்லா மொழியிலும், சமுதாய கலாசார மற்று சில காரணங்களினால், வேற்று மொழி வார்த்தைகள் கலந்து விடுவது உண்டு. எந்த மொழியும் இதற்க்கு விதி விலக்கல்ல. அந்தந்த மொழிக்கென்ற தனித் தன்மையை, கட்டமைப்புகளை, இலக்கணத்தை, இந்த கலப்பின் காரணியாக எந்த மொழியும் சிதைத்து கொள்வது அல்ல, ஆங்கிலத்தைத் தவிர. இந்த முறையில் ஆங்கிலத்தில் உள்ள பெருவாரியான வார்த்தைகள் பிரெஞ்சு சார்ந்தவை, இலக்கணம் பெருவாரியாக லடினம் சார்ந்தவை, அதன் ஏனைய கட்டமைப்புகள் பெரிதும் ஜேர்மனிய மற்றும் பழைய நோர்ச்க் மொழியின் அடிப்படையில் அமைந்தவை, ஆங்கிலப் பெயர் பட்டியல் ரோமானிய வரலாற்றை சார்ந்தது, அறிவியல் சார்ந்த பெயர் பட்டியல் கிரேக்க மொழியை தழுவி இருக்கும். இது சரியா? தவற? என்பதை விட முக்கியம், இதில் ஆங்கிலம் எந்த மொழியின் அடிப்படையில், அல்லது ஆங்கிலதிர்க்கான கட்டமைப்பு எது? . இன்று வரை அப்படி எதுவுமே இல்லை. ஒரு மூலத்தை அல்லது வேர்போருளை நிறுவ செய்யப்பட்ட முயற்சிகள் ( GREAT VOWEL SHIFT, ANGLISIZING, SPELLING REFORMS ) அனைத்துமே தோல்வியில் முடிவடைந்தன. இந்த முயற்சிகள் கூட கூடுமான வரையில் ஆங்கிலம் இந்த மொழிகளில் வாங்கிய கடன்களை திரை மறைவிற்கு கொண்டு செல்லும் முயற்சியாக முடிவடைந்தன.

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்
தீவு என்ற சொல்லிற்கான ஆங்கில சொல் - ISLAND. சில நூறு ஆண்டுகள் முன்வரை தொன்மையான ஆங்கில சொல்- IGLAND, இதற்கான பொருளுடன் புழக்கத்தில் இருந்தது.  லதினத்தில் INSULA என்பது தீவு என்று பொருள் தரும் சொல்லாகும். இடைப்பட்ட ஆங்கில மொழிக் காலங்களில் IGLAND சொல்லை லாடின INSULA சொல்லுடன் தொடர்பு படுத்த INSULAவில் மூன்றாம் இடத்தில இருந்த 'S'ஐ எடுத்து IGLANDஇல் இரண்டாம் இடத்தில சேர்த்தனர். உச்சரிப்பு சீலம் காரணமாக இரண்டாம் இடத்தில உள்ள 'S' உச்சரிப்பில் மௌனமாக்கப்பட்டது. இது இன்று நமக்கு விதியாக இதன் வரலாற்று காரணிகள் படிப்பிக்க படாமலே கற்பிக்கப் படுகிறது. DETTE என்ற தொல்லாங்கில சொல்லில் B நுழைக்கப் பட்டு அதை இலத்தின DEBITUM சொல்லுக்கு தொடர்பு படுத்த முயற்சி செய்ததும், DEBT ஆனது. இன்றும் இந்த DEBT சொல்லை நாம், தொல்லாங்கில சொல்லின் உச்சரிப்புடந்தான் பயன்படுத்துகிறோம்.

மொழியின் சொல் பயன்பாடு ஒவ்வொரு காலத்திலும் ஒரு நிலையில் இருக்கும், வள்ளுவர் எழுதிய திருக்குறள் படிக்க நமக்கு ஒரு விரிவுரை தேவைப்படுகிறது. பரிமேல் அழகர் விரிவுரைக்கே இன்னொரு விரிவுரை தேவைப் படும் நிலையில் இருக்கிறோம். ஆயினும் நமது இலக்கணங்கள், நமது சொற்களை சிதைக்கும் நிலைக்கு நாம் (இன்னும்) செல்லவில்லை. எத்தனையோ பழைய சொற்களை தொலைத்து விட்டோம், இதே வேலையில் பல புதிய சொற்களை பயிர் செய்யவும் நாம் தவறவில்லை. ஜன்னல், சன்னல், சாளரம் இவை மூன்றுமே நமக்கு பழக்கமான சொற்களே இதில் சாளரம் மட்டுமே தமிழ். ஜன்னலுக்காய் நாம் சாளரத்தை மாற்றி அமைக்கவில்லை. மாறாக ஜன்னலை, சன்னலாய் தமிழ்படுத்தி இருக்கிறோம். இந்த சொற்களின், உச்சரிப்பு, இலக்கணம், பயன்பாடு எதையுமே நாம் சிதைத்து விட வில்லை.

ஆறிரண்டு திங்கள்

JANUARIE            JULIE
FEBRAURIE          AUGUST                      
MARCHE          SEPTEMBRE
APRIL  OCTOBRE / OCTOMBRE
MAI              NOVEMBRE
JUIN             DECEMBRE
இப்படிதான் நூறு ஆண்டுகள் முன்புவரை கூட ஆங்கில மாதங்கள் எழுதப் பட்டு வந்தன. இவை அனைத்துமே ரோமானிய சொற்கள். உச்சரிப்பிர்க்காய் எழுத்துக்களை மாற்றி அமைக்கும் முறை ஆங்கிலத்தில் மட்டுமே உண்டு. இது நாம் முதல் பகுதியில் கதைத்த, சுதந்திரம் என்ற பெயரில் வழங்கிய தான்தோன்றித் தனத்தின் விளைவு மட்டுமே. தழுவலான அல்லது ஒரு செயற்கையான உச்சரிப்பு புகுத்தல் காரணமாக இந்த மாதத்திற்கான பெயர்களின் எழுத்துக்கள் மாற்றி அமைக்கப்பட்டு, நம் கையில் கொடுக்கப் பட்டு இருக்கிறது. இதை சூழலுக்கு ஏற்ற வகையில் மற்றம் கொள்தல் என்று மார்தட்டி கொள்ளலாம். ஆயினும் இதன் உண்மை, சிதைவு என்பது வெகு கண்கூடு. இந்த சிரமத்தை இன்னும் அதிகமாக்க இன்றைய ஆங்கிலேயே பட்டறைகள் கைகொண்டுள்ள ஆயுதம் - நவீனமயமாக்கல். குறுஞ்செய்திகளின் மேலோங்கு பொருளாக வார்த்தைகள் சங்கு நெரித்து கொள்ளப் படுகிறது.

HOW ARE YOU - "OW`W`U "
I WILL SEE YOU LATER - " I LL C U L8R"
Will Be right BAck - " BRB "  என்று நீட்டி முழக்கி கொண்டே போகலாம் .

இதே காலத்தில் வேற்று மொழிகளில் உள்ள முழு சொற்றோற்றோடர்களை அப்படியே எடுத்து பயன்படுத்துதல் இன்னும் சிக்கலை இடியாப்பம் ஆக்கி விடுகிறது.

KUDOS ( GREEK ), ADIOS AMINGO ( SPANISH ) ASTA LA VISTA

என்று இவைகளும் தொடரும். இதனால எல்லாம் இந்த மொழி அழியுதுன்னு நீங்க சொல்ல முடியாதுன்னு சொல்ற நண்பர்கள் பொறுக்க; அடுத்த பகுதி வரை.

1 comment:

geethappriyan said...

நல்ல பதிவு தான் நண்பா,
ஃபார்மாலிட்டீஸ் டன்.

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )