Monday, April 12, 2010

THANKS MAA( ஹிந்தி ) - திரை விமர்சனம்

இரண்டு வருடத்திற்கு முன் இந்தப் படம் வந்திருந்தால், "SLUMDOG MILLIONAIRE " படம் இந்த படத்தின் பாதிப்பில் எடுக்கப் பட்ட படம் என்று மார்தட்டி இருக்கலாம். போஸ்டர்களும், முதல் சில நிமிட காட்சிகளும் அந்தப் படம்தானோ என்ற சந்தேகத்தில் ஆழ்த்த முயற்சிக்கிற வேலையில், இல்லை என்று மறுத்து படத்தின் ஏழாவது நிமிடத்தில் இருந்து வேறு திசைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் இயக்குனர் இர்பான் கமல். நான்கு ஆதரவற்ற தெருச்சிறுவர்கள், ஒரு சிறுமி, மனம் போன போக்கில் வாழ்கின்றனர். இரண்டு நாளே ஆன ஒரு குழந்தை இந்த  சிறுவர்களில் ஒருவனான, தன்னைத் தானே சல்மான்கான் என்று அழைத்துக் கொள்ளும், 'முனிசிபாலிட்டி'யின் கையில் கிடைக்கிறது. தன் நண்பர்கள் "சோடா" "கட்டிங்" மற்றும் தோழி "சுர்சுரி"யுடன் சேர்ந்து அந்தக் குழந்தையை அதன் தாயுடன் சேர்க்க முயற்சி செய்கிறான் முனிசிபாலிட்டி. இந்த ஓட்டத்தில் மும்பையின் பல மூலைகளிலும் இந்த சிறுவர்கள் சந்திக்கும் மக்கள், அவர்களின் வாழ்கை, உணர்சிகள் என்று இந்த கதை ஓடி முடிவடைகிறது. சாபக்கேடு என்றாலும் இந்திய சினிமாவுக்கே உள்ள போளிதனன்களோடு கதை நம் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்றாலும், தனித் தனியாக ஒவ்வொரு காட்சியும் படையப்பாவில் தல தன்னோட சால்வையால் ஊஞ்சலை கீழிழுத்து உக்காரும் ஸ்டைலில் அமர்ந்து கொள்கிறது. மேல் சொன்னதற்கு மேல் இந்தக் கதையில் சொல்ல ஒன்னும் இல்லை-  கதாபாத்திரங்கள் நிலைத்து விடுகின்றன.
சீர்திருத்த பள்ளியில் வரும் சிறுவர்களோடு வன்புணர்ச்சி செய்யும் அந்த பள்ளியின் மேற்பார்வையாளர், மனைவி இல்லாத நேரத்தில் வேறு பெண் தேடும் ஆண், தன்னுடைய நாற்பது வயதிற்குப் பின் தனக்கு பாதுகாப்பாய் இருக்க, வாழையடி வாழையாக விபச்சாரம் செய்ய ஒரு பெண்குழந்தை தேடும் விபசார பெண், பத்து வயதே நிரம்பிய சுர்சுரியை விபச்சாரத்தில் நுழைக்க முயற்சிப்பவன், இந்த சிறுவர்களிடமே சரக்கு வாங்கிக் குடிக்கும் மருத்துவமனை வார்டு பாய் ( முனிசிபாலிட்டியின் அம்மாவை கண்டுபிடிப்பதாக சொல்லி ) என்று சராசரியான அவலங்களோடு ஓடும் காட்சி, இந்தியாவின் நிதித் தலைமையகமாக இருக்கும் மும்பையின் அழுக்கு நிமிடங்களை யதார்த்தமாக நிறைத்து விடுகிறது. இறுதிக் காட்சியில் இந்த குழந்தை, தந்தையாலேயே கற்பழிக்கப் பட்ட, அந்த கருவை சுமந்து பெற்ற ஒரு பெண்ணுடையது என்று கதை முடியும் பொழுது, ஆங்காங்கே பெண் அவலங்களை பேசும் இந்தப் படம், உரக்கப் பேசி முடிகிறது.

கனமான நெஞ்சோடு வெளியில் வருபவர்கள் பாராட்ட தவறாத ஒன்று இந்தப் படத்தில் சிறார்களின் நடிப்பும் அவர்களுடைய வசனங்களும். இசை பல ஹிந்திப் படங்களை நினைவு படுத்துகிறது தொய்வு இருக்கிறது. அஜயன் வின்சென்ட் எந்த ஒரு கோணத்திலும் இந்த பதிவுகள் SULDOGMILLIONAIERஐ நினைவு படுத்தக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார், அந்த படம் சுடப் பட்ட பல இடங்களில் இந்தக் கதை நகர்ந்தாலும், காட்சி கோணங்களையும், ஒளி அமைப்பையும் நேர்ந்து செய்ததிற்கு அவருக்கு குட்டிகரணம் போட்டு கைதட்டுகிறோம். இர்பான் கமல் இயக்கிய முதல் படம் என்பது தெரிகிறது ஆனாலும் வாழ்த்துக்கள் - எதுக்கு ?? - இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்ததர்க்கு.

புதிய பாதையில் பார்த்திபனும், பணக்காரனில் ரஜினியும் சொல்ல நினைத்ததும் இதுதான் - THANKS MAA.

3 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

மரா said...

ஆகா......நல்ல படம். சூப்பரா எழுதியிருக்கிறீர்கள்.
கைபர் கனவாய் வழியா சென்னைக்கு எப்போ வருவீங்க?!!!

Anonymous said...

This film story like - Tutsi(South African film) and Yogi(Tamil) .
-Vibin

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )