Wednesday, November 24, 2010

இந்தியா - பத்து ஆண்டுகள் 2001 - 2010 [ பகுதி - 1 ].


இந்த டிசெம்பருடன் இந்த வருடம் மட்டுமல்ல, இரண்டாவது ஆயிரதின் முதல் பத்து ஆண்டுகள் முடிவடைந்தன. பூனை முடியை, மீசை என்று பெருமை பீத்திக் கொண்ட என் கண்ணாடி, இப்பொழுதெல்லாம் தினம் முழைக்கும் ரோமங்கலை - அய்யோ நாளைக்கு திருப்பி சவரம் செய்ய வேண்டுமென்று வெறுப்புடன் பார்கிறது. 100 குடிகள் இருந்த எங்கள் தெருவில் ( என் சொந்த ஊரில் ) இன்று வெரும் 10 -15 குடிகள் மட்டுமே இருக்கின்றன. உலகின் ஏழு அதிசயங்கள் மாறிவிட்டன. இந்தியாவிற்க்கு இந்தியர்களுக்கு மூன்று ஆஸ்கர். திருப்பதி லட்டு அளவில் குன்றிவிட்டது, என்ற மாற்றங்கள் ஒருபுரம்.
சச்சின் இன்னும் விளையாடுகிரார் 'அதே புகழுடன்'. ரஜினி கமல் இன்றும் ஹீரோக்கள். லைஃப்பாய் சோப் இப்பொழுதும் கறைய மறுக்கிரது. இன்னும் இரண்டு மூன்று வருடத்தில் ( விரைவிலேயே ) உலகம் அழிந்துவிடும் என்று மக்கள் இன்றும் நம்புகின்றனர். யூனீயன் கார்பைட் - ஆண்டெர்சொன் இன்னும் கைதாகவில்லை. கிழக்கில் சூரியன், இடப்பக்கம் சுழழும் பூமி, சுவைகுன்றா கர்பகம் மெஸ் பொடிதோசை, காபி என்று மாறா உலக நிகழ்வுகள் ஒரு புரம்.

இந்த பத்து வருட கணக்கிர்கென்று ஒரு குறிப்பு, அதுவும் நம் நாடு, நம் மக்கள் பற்றி மட்டும் எழுத இசைகிறேன். மிகக்குறிப்பாக இந்த பத்து ஆண்டுகலையும், அதர்க்கு முந்தைய காலத்தையும் ஒப்பீடு செய்து எழுத முயர்சிக்கிறேன். ஒரு முழு சமுகமாக நம்மை ஒரு தராசில் நிருத்த்திப் பார்கையில் கடந்த பத்து ஆண்டுகாலதில்..

மக்களும் மலினப்பட்டனர்.
மீண்டும் ஒருமுறை துனைத்தலைப்பை படியுங்கள், மக்கள் அல்ல - மக்களும். அரசியல்வாதிகள்,அரசு நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் என்று துவங்கி இந்தியன் தாத்தா லிஸ்டில் வருபவர்கள் மட்டும்தான் மலினமாக கைஊட்டு பெரும் நிலையில் இருந்தனர். அவர்களும் மக்களே. ஆயினும் இவர் அல்லாத பொதுமக்கள் இதைப்பற்றி பேசி வருத்தபட்டு ( அதுமட்டும் ) கொண்டிருதனர். பேசிக்கொண்டு மட்டும் இருந்த மக்கள், இந்த கடைசி பத்து ஆண்டுகளில் தனித்தனியாக எல்லா நிலைகளிலும் மலினப்பட்டனர். வெளிப்படையாக வோட்டுப்போட வேட்பாலரிடம் பணம் பெருவது துவங்கி, பணத்திர்காக மதம் மாறுவது வரை இந்தியா ஒரு சமுகமாக மலினப்பட்டு இருக்கிறோம். தனிமனித தேவைகளை, சுய நலத்தை மனிதன் பெரிதாக நினைக்கிறான். அப்படியா ?. இது சுயநலமா ? மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள்.
சுயநலத்தில் - சுயம் உண்டு. சுயம் என்பது தனது சுற்றம் தனது மக்கள், தனது மனைவி(கள்), என்று நம் தமிழ்நாட்டில் வாழ்ந்தது ஒரே குடும்பம், இந்தியா என்றால் ஒரு பத்து குடும்பங்கள் மட்டுமே( தமிழ்நாட்டில் எந்த குடும்பம் என்று கேட்டு காமெடி பண்ணாதீங்க ). இன்னும் குறுக்கி, தான் மட்டுமென்று சுயத்தின் வட்டத்தை குறுக்கினால் கூட சுயநலத்திர்க்காக இன்று, மனிதன் வாழ்கிறான் என்று சொல்ல முடியாது. சுய நலதில் மிக முக்கியம் நலம். தனது நலத்தை பேனுதல். நமது வாக்குகளை வெறும் ரூ.500 க்கு விற்கிரோம். அந்த ரூ.500 ல் எவ்வளவு நலமாக இருந்து விட முடியும் ?. ஒரு தனி மனிதனின் மூன்று நாள் செலவுக்கு மட்டுமே இந்த பணம் பயன்படும். இதில் எந்த அளவுக்கு நலமாக இருந்து விட முடியும் ?. கணவனுக்காக, சாதி, சமுதாய அந்தஸ்திர்காக மதம் மாறுவது போய், வெறும் பணதிர்க்காக மதம் மாறுகிரோம், உடல் விற்பது போல. இப்படி செய்வதால் கிடைக்கும் பணத்தின் பயன் என்ன ?
தன்னுடைய உடல் நலம், மகிழ்ச்சி, அனைத்தையும் மறந்து போய், தனகென்று ஒரு நிமிடம் கூட இல்லாமல் வேறு ஒருவனுடைய ( முதழாளி ) பணத்திர்க்காக, உழைக்கிறோம். அதில் பணம் மட்டுமே, நலம் எங்கே. சேர்க்கும் பனத்தை பலர் துய்ப்பது கூட இல்லை. வேறு சிலர் அந்தப் பணத்தை மருத்துவருக்கு அழுகிரார்கள். பிறகெப்படி இது சுயநலம்.

ப்லாஸ்டிக் பயன்பாட்டை இந்த நோக்குடன் அனுகலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள ப்லாஸ்டிக்கை நம்மால் அழிக்க முடியாது என்பது எல்லோர்கும் தெரிந்த உண்மை. இருந்தும் ப்லாஸ்டிக் பயன்பாட்டை, நிருத்துவதைப் பற்றி, - குறைப்பதைப் பற்றி, சிந்திப்பது கூட இல்லை. வருமான வரி - மாதம் ரூ. 300 வருமான வரி சேமிப்பதர்காக, சிரமப்படும் காமெடி பீஸ்கலை, இன்னும் 3 மாததில் நீங்கள் பார்ர்க முடியும். இது சுய நலம் அல்ல. நலம் அல்ல. சுயமும் அல்ல. வெரும் பணம். இந்த நேரத்தில் ஒரு ரஷ்ய திரைப்படத்தில் வந்த ஒரு வசனத்தை சொல்வது சரியாக இருக்கும். " சில ஆண்டுகல் முன்புவறை கூட மக்களுக்கு, பல் துறைகள், பல தொழிகள். இன்று மக்களுக்கு, துறைகள் மட்டும்தான் வேறு வேறு தொழில் ஒன்றே ஒன்றுதான் - பணம் செய்தல். உயிரியலில் பட்டம் பெற்ற எத்தனை பேர்கள் மென்பொருள் தயாரிப்பு பணியில் வேலை செய்கின்றனர். அது மென்பொருள் தயரிப்பில் உள்ள ஈடுபாடு அல்ல, மென்பொருள் அமைப்புகள் காட்டும் வெளிநாட்டு மோகம் கூட அல்ல, வெரும் பணம்சார் ஈடுபாடு என்பதை சொல்வதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. மென்பொருள் படித்ததால் வெளி நாட்டிற்க்கு செல்வோரை விட, வெளி நாட்டிற்க்கு ( பணம் சம்பாதிக்க ) செல்லவதர்காய் மென்பொருள் படிப்போரை நீங்கள் பார்ததில்லையா. இதற்க்கு சப்பைகட்டாய் அங்குல்ல கலாச்சாரத்தை பெருமையாக போற்றி போற்றி செய்துவிட்டு. தனக்கென்று ஒரு பிள்ளை பிறந்ததும், தெறித்து ஒடிவந்து நம்மூர் பள்ளிகளில் விண்ணப்பம் வாங்குவது ஒரு புது நடைமுறை அல்ல.
ஒரு சுய நலமான மனிதன், தன்னுடைய சுற்றுப்புரம் பற்றி(யாவது) நிச்சயம் கவலைகொள்வான். ஆனால் சூழள் பற்றி கவலைப் படுவதை வீன் நேரச் செலவாக, உடல் உலைச்சலாக நாம் சிந்திக்க துவங்கி விட்டோம். 70 % சென்னையில் உள்ள வீடுகளில் இன்று வாசல் தெளிக்கும் பழக்கம் அற்றுப்போனது இதர்க்கு ஒரு சிரிய உதாரனமாய் அமையலாம். இன்று நாம் செய்யும் சில தர்ம காரியங்கள் கூட சுயநல பணத்தின் அடிப்படையில் செய்வதை விட இழிவு என்ன இருக்க முடியும். எனக்கு பழக்கமான ஒரு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகதிர்க்கு வரும் பெருவாரியான மக்கள், கேட்கும் கேள்வி " நன்கொடைக்கு எத்தனை சதவிகிதம் வருமான வரி தள்ளுபடி அள்ளது மீள்தொகை கிடைக்கும் என்பது ".
இந்த பணத்தினால் பெரிய வீடுகள் வாங்கினோம், மருப்பே இல்லை உங்கள் ஊரில் உங்கள் தாத்தா காலத்திலோ ( நினைவிருந்தால் ), அப்பா காலத்திலோ உங்கள் வீட்டிர்க்கு வந்த உறவினர்கள் எண்ணிக்கயையும், உங்கள் வீட்டிருக்கு வரும் உறவினர்கள் எண்ணிக்கயையும் ஒப்பிட்டு பார்த்தால் இந்த கூற்று புரியும்(அவர்களுக்கே நேரம் இல்லையென்று சொல்லி நம்மை நாமே மனசைத் தேத்திக் கொள்ளலாம்). இன்னொருபடிமேல் சென்று உறவினர்கள் நமது வீட்டிற்க்கு வருவதை ஒரு செலவு நோக்குடன் அனுகும் மனநிலையில், இன்று நாம் அனைவரும் நெர்ந்துகொண்டோம். அதே வீட்டில் இருக்கும்பொழுது நமது பக்கத்து வீட்டுக்காரருடன், எத்தனை முறை மகிழ்சியாய் பேசி இருப்போம். அவரைப் பார்த்து மனம்மலர்ந்து எத்தனை முறை சிரித்திருப்போம். அப்படி வீட்டைக் கட்டும் பலர், தான் வீடு கட்டுவதை ஒரு இளக்காக கட்டுவதில்லை, அதை நாளைய பணத்தேவைக்கான ஒரு முதலீடாக மட்டுமே நாம் பார்கிறோம். பணம் தேவை இல்லை என்று நானும் சொல்ல வரவில்லை. ஆனால் இந்த பத்து ஆண்டுகளில், பணம் செய்வது ஒன்றையே இலக்காக, அதைப் பெருவதர்க்காய் ஏதும் செய்யத் தயாராய், தன்னை இன்று நாம் மாற்றிக் கொண்டு விட்டோம். இப்படிச் சொன்னால் இன்னும் விளங்கப் புரியும். ஒரு மனிதனுக்கு முதல் கூற்று / தேவை ( primary objective ) இரண்டாவது கூற்று / தேவை ( secondary objective ) ஏனைய கூற்று / தேவை ( other objective ) என்று வகைபடுதலாம். இதில் நமக்கு முதல் தேவை பணமாக இருப்பதில் எனக்கு பெரிய எதிர்ப்பு இல்லை. ஆனால் இன்று, முதல், இரண்டாவது, மற்றும் ஏனைய என்ற எல்லா தேவைகளுமே நமக்கு பணம் என்ற மனப்பாங்கு இந்த பத்து வருடதில் நம்மிடம் பெருவாரியானவர்களிடம் வளரத்துவங்கி விட்டது. இது சரியா தவரா என்பது உங்களுக்கு நான் சொல்லித் தெரியத் தேவையில்லை.

" IT NEVER MATTERS WHETHER YOU LIVE AN IMPULSIVE OR AN INTUTIVE LIVING, BUT THE LIVING. " - PLATO.

மேலும் இதே சமுகப்பாங்கில் நகரப்படுதல், பயம் செரிந்த மக்கள், பெண் விடுதலை அத்துமீரல்கள் என்ற உட்தலைப்புகளிலும், அரசியல் பாங்கு, திரைப்படம், பொன்ற பாங்கிலும் இந்த கருத்துத்தோனி பயனப்படும்.

5 comments:

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி

Karthiga said...

adutha padhivukaga waiting.. seekiram...

hayyram said...

அருமை

சாமக்கோடங்கி said...

நல்ல பகிர்வு நண்பா...

மாற்றுப்பார்வை said...

நல்ல பகிர்வு நண்பா...

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )