Sunday, November 14, 2010

கோல்மால்-3( ஹிந்தி ) - திரைவிமர்சனம்..

நீங்கள் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவராயின், கண்டிப்பாக உங்கள், பெரியப்பாவின் மகன் மகளையோ, சித்தப்பாவின் மகன் மகளையோ, பார்த்து கூடப் பிறக்கவில்லை என்றபோதிலும் " நீயெல்லாம் எனக்கு ஏண்டா அண்ணனாப் பொறந்த " என்றோ " உனக்குப் போய் தம்பியா பொரந்தேன்னு " கேட்டதுண்டா ?. உண்டு என்றால் அந்த நினைவலைகளை. இந்த திரைப்படம், உங்களுக்கு மீள்திரட்டும். இன்றைய குழந்தைகள், தன் உற்ற சகோதரனயே, பார்த்து இப்படி கேட்கிறார்கள் என்பது மறுக்க முடியாது. சரி சரி ஆட்டய கவனிப்போம்....

கோல்மால்- 1 மற்றும் கோல்மால் -2( ரிடன்ஸ் ) வின் வெற்றிக்குப் பின், அந்தக் கூட்டனியின் மூன்றாவது படைப்புதான் கோல்மால்-3. ஹிந்தி திரைப்பட உலகின் முதல் ட்ரியோலொஜி. அட அதாங்க ஒரு படம் எடுப்போம், நல்லா ஓடிச்சா, மருக்கா அதே பேர வச்சு, இன்னொறு படம், இதுவும் ஓடிச்சா மருக்கா இன்னொரு பகுதி. எளிமையா புரியிர மாதிரி சொன்னா, வேகுர வரைக்கும் பருப்ப வேக வெக்கிறது. மிக முக்கியமா ஹாலிவுட்காரைங்கலுக்கு, ஒரு படம் ஓடி, அதுக்கு அடுத்த பகுதி எடுக்கலேன்னு வச்சுக்கோங்க அவுங்கலுக்கு இந்தியா பாகிஸ்தான் உறவ  பத்தி பேச சொன்ன ஒபாமா போல அயிடுமாம். ஒன்னுமே புரியாதாம். இப்போ இந்த வியாதி இப்போ பாலிவுட் புன்னியதில் நமக்கும் தொத்திகிச்சு. நம்ம கூட அந்த அபரிமிதமான " நான் அவன் இல்லை " படதுக்கு பகுதி ரெண்டு பாத்தோமே..அட அகில உலக நவரச நாயகன் ஜீவன் ஒரு அம்பாசிட்டர் கார் நடிப்பு நடிசாரே.... ஹ்ம்ம்ம்ம் அதே அதே.. ( ஜீவனின் ரசிகர்கள் மண்ணிக்கவும், அது ஆஸ்கார் -  பிளையாகி விட்டது ).

இந்தப் படத்தின் கதைக்களம் கோவா ( பூகோலம், வெங்கட் ப்ரபு படம் இல்லங்க ). இரண்டு சகோதரக் கூட்டம், இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் காமெடி கும்மாலி படத்தின் முதல் பகுதி. ஒருவருடைய வியாபாரத்தை இன்னொருத்தர் கெடுப்பது. ஒரு கூட்டனியில் அஜய் தேவ்கன், ஷ்ரெயஸ் தல்படே, தேவ்கனின் காதலியாக கரீனா, தேவ்கனுக்கு ஒரு அம்மா மட்டும். இன்னொரு கூட்டனியில் அர்ஸத் வார்சி, குனால் கெமு, மற்றும் துஸார் கபூர், இவர்கலுக்கு ஒரு அப்பா மட்டும். இந்த அம்மாவும் ரத்னா, - அப்பாவும் மிதுன் சக்ரவர்தி ( இவர் தீபன் சக்ரவர்தி அண்ணான்னு கேக்காதீங்க ), முன்னாள் காதலர்கள். இவர்கள் இருவரும் சந்திக்க மீண்டும் காதல் துளிர்கிறது. இவர்கள் சந்திக்கயில், இன்னும் இறுவரும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் வளர்க்கும் குழந்தைகள் அனாதைகள், இவர்கள் காலத்தினால் வளர்க்க நேர்ந்தது என்பதும் தெறிகிறது. இதை ஒட்டுக் கேட்ட கரீன, இவர்கள் இருவருக்கும் இந்த வயோதிகதிள் திருமணம் செய்து வைக்கிறார். டீ ,, பிஸ்கட்,, பாப்கார்ன்..

இரண்டு குடும்பமும், ஒரே வீட்டில் வாழ்கிறார்கள்.குழப்பம், தாம் அனாதைகள் என்ற உன்மை தெரிய வருகிறது,கிலைமாக்ஸ், கட்டித்தழுவுகிரார்கள். சுபம். பல பகுதிகள் உள்ள படங்களில், பெரும் பகுதி, அந்த வரிசையின் முதல் படம் அடுத்த பகுதிகளை விட அருமையாக இருக்கும் இந்தப் பட வரிசையும் இதற்க்கு விலக்கல்ல. இதை வணிகவியல்காரர்கள் " தீ லா ஆஃப் டிம்னிஸிங்க் மார்ஜினல் உடிலிடி"- THE LAW OF DIMINISHING MARGINAL UTILITY என்பார்கள். பசியில் வாடும்பொழுது நமக்கு கிடைக்கும் அந்த முதல் வாழைப்ப்பழத்தின் சுவை, அல்லது அதன் நிறைவு, அதற்கு அடுத்த( இரண்டாவது ) வாழைப்பழத்தை விட( முதல் ) அதிகமாய் இருக்கும், இப்படி குறைந்து கொண்டே வரும் எண்பார்கள். - இது பரிட்சையில ஞாபகம் வந்திருந்தா, பண்ணண்டாவது முடிச்சிருப்பேன்... இந்த விதிக்கு முன்னா பாய் ஒரு விதிவிலக்கு. அதாங்க நம்ம வசூல்ராஜா. இதுவரை வந்த இரண்டுமே நயம்.

அஜய் தேவ்கன் தன்னை திரமையான நடிகர் என்று நிருபிக்க தவரவில்லை. இயக்குனர் ரோஹித் ஷெட்டிக்கு மீண்டும் நன்றிகளும், வாழ்துக்களும். எனக்கு நினைவில் படும்வரை மிதுன் முதல்முரை காமெடி முயர்சித்திருக்கிரார். இந்தப் படத்தில் இவருக்கு திளைக்கும்  காதல் போல.. நேரம் கடந்து, கசிந்தாலும், கைகூடிஉல்லது,  - காமெடி. ஜானி லீவர் தனது பணியை, யாண்டும் போல் செவ்வனே செய்துல்லார்.
முன் குறிப்பிட்ட முன்னா பாய் படத்திர்க்கும் மூண்றாம் பகுதி அடுத்த வருடம் முழுஆண்டு விடுமுறைக்கு எதிர்பாற்க்கப் படுகிறது. மேலும் இந்த தொடர் பகுதி படங்கள் நம் நாட்டில்,  மலையாள படங்களில் அதிகம், மம்மூட்டி நடித்த "சி பி ஐ" இதுவரை நான்ங்கு பகுதிகள் வந்துள்ளன, மேலும் ஒன்று அடுத்த வருடம் எதிர்பார்க்கப் படுகிறது. இதே போல் மோஹன்லால் நடித்த இன்னொரு காமெடி படம் நான்ங்கு பகுதிகள் வந்துள்ளன. இத்தனயும் ஓடிச்சான்னு யாருங்க கேக்குறது. ஓடாம... அடுத்த பகுதி எடுக்க அவர் என்ன விஜய வச்சா படம் எடுக்குராங்க??, இல்ல ரஜினிய வச்சு படம் பன்ராங்கலா??, நஸ்டமானா காச திருப்பிக் கொடுக்க..
    மேலும் ஒரு தகவல், தமிழ் படங்களின் முதல்- பகுதி இரண்டு படம் எது தெரியுமா ?? க்ரோதம் - 2. அட நம்ம பிரேம் நடித்தது.  ஓடிச்சான்னா   கேக்குரீங்க??, அதான் மூனாவது பகுதி வரலேல்ல.
சரி இத்துடன் தமிழ்மணம் பாணியில் சண்ணலை மூடுகிறேன். நீங்க காமெண்ட்ஸ் போட்டு போய் படத்தப் பாருங்க,,

3 comments:

எப்பூடி.. said...

வணக்கம் அண்ணாத்த, நீண்ட நாளைக்கப்புறம் உங்க போஸ்ட பாக்கிறது சந்தோசம், உங்க வருகை மீண்டும் களை கட்டட்டும், உங்களை கானவில்லைஎன்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன், பதிலளிக்ககூட நேரமில்லையா :-) மின்னஞ்சலாவது ஞாகமிருக்கிறதா?

Prathap Kumar S. said...

முதல் பார்ட் பார்த்து மண்டை காஞ்சுப்போச்சு....பெரிதாக ஒன்றும் சிரிக்கவைக்கவில்லை.

Unknown said...

// மேலும் ஒரு தகவல், தமிழ் படங்களின் முதல்- பகுதி இரண்டு படம் எது தெரியுமா ?? க்ரோதம் - 2. அட நம்ம பிரேம் நடித்தது. ஓடிச்சான்னா கேக்குரீங்க??, அதான் மூனாவது பகுதி வரலேல்ல. //

அப்போ கல்யாணராமன் அன்ட் ஜப்பானில் கல்யாண ராமன் இல்லயா

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )