Tuesday, January 5, 2010

330அடி உயரம், திகட்ட திகட்ட வானம், ஒரே அந்தரம், ஒரு கவிதை



பணி நிமித்தமாக இந்த உயரங்களில் நின்ற போது எனக்குள் நோதித்தவை

இந்த நொடியிலிருந்து

தன்னை கீறிய கோட்டுக்குள்
அடைத்து கொண்ட
ஜனநாயக நிலகிழாருக்கு
நான் சொந்தமில்லை


இனி தூரங்களின் காதலனில்லை
உயரங்களின் தூதுவன் நான் 
 
இனி எங்கு சென்றாலும்
காற்றின் கலாபம் -
வரட்சி பேதங்கலில்லை
வகுப்பு போதனைகள் இல்லை

இதழில்லாலாமல் யார் யாரோ
முத்தமிடுகிறார்கள்.
உடலில்லாமல் சிலர்
உரசிக் கொண்டிருந்தனர்


உயரங்களின் வன்புணர்ச்சி
பயங்களுக்கு பெயரிட்டு
உப்பின் முத்துக்களை
உமிழத் தொடங்கின
உடல் சுரப்பிகள்.

முதுமைசூடாத மேகங்கள்
முயல் முகத்துடன்,
முனியன் அரிவாள் போல் ஒன்று
வெண்நீல நெருப்பாய் ஒன்று
அத்தனையும் முகங்கள்
எதுவுமே முகமுடிகள் இல்லை

தரைவாழ் நரர்கலே

இரவலாய் ஒரு நுரையீரல் அனுப்புங்கள்
புல்லறுக்க வரும்
புறாவிடம் அனுப்பிடுக

நீவிர் யாரும் வர வேண்டாம்
வேறுபாட்டின் நிரல்களின்
ஜீரண சக்தி வானத்திற்க்கு இல்லை

என்னோடு நின்று பார்த்தல்
ஒரு உண்மை புரியும்
வாய் முடி இருக்கும்
பூமியே வகுப்புவாத சிந்தனை
வளங்கள் ஓரிடம்
வெடிக்கும் மலைகள் ஓரிடம்
யாரோ திணித்த சுதந்திரம்
எனக்கு வேண்டாம்
இனம் முடிந்து கொள்ளும்
சமாதானமும் வேண்டாம்
இங்கேயே விட்டு விடுங்கள்
இது கனவாயினும்,
என்னை எழுப்ப வேண்டாம்

3 comments:

Anonymous said...

nalla iruku vikram :) super :)
-muthuraja

வால்பையன் said...

//உயரங்களின் வன்புணர்ச்சி
பயங்களுக்கு பெயரிட்டு
உப்பின் முத்துக்களை
உமிழத் தொடங்கின
உடல் சுரப்பிகள்.//

நல்ல வர்ணனை!
தெரிஞ்சே உயரத்துக்கு போறவங்க, தெரிஞ்சே சாமியார்கிட்ட போறாங்களே அது மாதிரியா!?

கமலேஷ் said...

மிகவும் அருமையாக இருக்கிறது ..வாழ்த்துக்கள்...

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )