அண்மையில் பணி நிமித்தமாக நாக்பூர் நகரில் சில நாட்கள் தங்க வேண்டியதாக இருந்தது. நாக்பூர் நமது இந்திய நகரங்களில் முன்னேற்றப் பாதையில் ஓடிகொண்டிருப்பதாக பறைசாற்றும் பெரிய நகரங்களில் தூய்மையான நகரம். இந்த நகரத்திற்கு இன்னும் சில முக்கியமான குறிப்புகளும் உண்டு. நமது தேசத்தில் மையப் புள்ளி என்று கூற வேண்டும் என்றால் அது நாக்பூர். நமது தூரங்களின் கனகீடுகலான ZEROமைல்கல் இங்கிருந்துதான் துவங்குகிறது. நாக்பூர் நமது நாட்டின் ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப் படுகிறது . இங்கு விளையும் கொய்யாக்களும் மிக சிறப்பான சுவைகளை கொண்டவையே.
ஒரு மாநிலத்தில் பொதுவாக ஒரே ஒரு RBI கிளைதான் இருக்கும் அனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மும்பையில் ஒன்று, கூடுதலாக நாக்பூரிலும் ஒன்று உண்டு. அரசியல் ரீதியாக இந்த இடத்தில்தான் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறினார். இங்குள்ள தீக்ஷ பூமி என்னும் இடத்தில்தான் அவருடைய நினைவு மணிமண்டபத்தில் அவருடைய சாம்பல் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆசியாவின் மிகப் பெரிய மதமாற்ற ஸ்தலமாக நாக்பூர் விளங்குகிறது. வருட வருடம் புத்த பூர்ணிமா அன்று அம்பேத்கர் மதம் மாறிய அதே இடத்தில் வேறு சில மதத்திலிருந்து புத்த மதத்தை பெரும்பாலானோர் தழுவுகின்றனர். முன்னாபாய் M.B.B.S, 3-IDIOTS போன்ற திரைப் படங்களின் இயக்குனர் ராஜு ஹிரானியும், ஸ்வதேஸ் படத்தின் நாயகி காயத்ரியும் இந்த ஊர்காரர்கள்.
HALDIRAMS ( நொறுக்குத் தீனி ) இந்த ஊர்காரர்கல்தான்
இந்தியாவின் மிகப் பெரிய பன்னாட்டு விமான நிலையம் இங்கு பல கோடி செலவில் அமைக்கப் பட்டு வருகிறது. இந்திய வரலாற்றின் மிகப் பெரிய பொது நல திட்டம் MIHAN என்ற பெயரில் அது செயலாக்கப் பட்டு வருகிறது. நமது நாட்டின் மையப் புள்ளி என்பதால் இந்த திட்டம் நாக்பூரின் தலையெழுத்தை புரட்டி போடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏனைய இந்தியாவின் மற்ற திட்டங்களை போல் இந்த திட்டமும் நீண்ட நாலா பின்னடைவை சந்தித்து வருகிறது. தெரிஞ்சுகிட்டே ஏன்னு கேக்க கூடாது அதான்அரசுத் திட்டம்ன்னு சொல்றேன்ல. துவங்க வேண்டிய இந்த விமான நிலையம் இன்றைய நிலையில் துவங்குவது மிகவும் கடினம். HALDIRAMS ( நொறுக்குத் தீனி ) இந்த ஊர்காரர்கல்தான்
நீவிர் சென்று வந்த சுற்றுலா பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை வரைகன்னு பழகுன பழக்கம். அப்படில்லாம் விற்ற முடியாது.
இந்த ஊரில் உற்று நோக்குபவர்களுக்கு ஒரு வியப்பு காத்திருக்கும் ஒரு தெருவுக்கு மிகச் சாதரணமாக 8 முதல் 10 வரை பல் மருத்துவர்கள் உண்டு. எதுக்கு இத்தனை பேர்? . இங்க என்ன RBI மாதிரி பல்லும் அதிகமான்னு கேட்டா- இல்லங்க. இங்கு பல் உபாதைகள் அதிகம். ஆரஞ்சு சாப்ட்ரதுனாலயன்னு கேட்டா அதுவும் இல்ல, கொய்யாவும் இல்லைங்க. நமது சென்னை பான் பீட கடைகளில் கிடைக்கும் 'மேவா' வகையில் குட்காவின் பெரிய பெரியப்பாவும் சுண்ணாம்பின் தலை மகனுமான கற்றாரே என்னும் லாகிரி வஸ்து இதற்க்குக் காரணம். இங்குள்ள சுள்ளான் முதல் இந்தியன் தாத்தா வரை இதற்க்கு அடிமைகள். இந்த வகை மாட்டர்கள் வேறு இந்தியாவில் எங்குமே கிடையாது என்று இதனை குடிசைத் தொழிலாக செய்பவர்கள் சவால் விடுகின்றனர். ஒரு கில்மா குறிப்பு நாக்பூரின் தட்பவெப்ப நிலை நவம்பர் முதல் FEBRAURY வரை மிக குளுகுளுவென்று இருக்கும் அதனால் எல்லா கட்சி தலைவர்களும் கட்டாயமாக இங்கு வருகிறார்கள். காதகுடுங்க நம்ம மகாராஷ்டிராவின் பெரிய தலை பிள்ளைகளில் 40சதவிகிதத்தினர் இங்குதான் CODING செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று சட்ட வல்லுனர்கள் SSHSHHH. ஆதலால் வருடத்தின் இந்த நேரத்தில் BANNERகளின் விற்பனையும் ஹோர்டிங்க்ஸ்களின் விற்பனையும் மேகம் முட்டி மண்டை வீங்குமாம்.
இம்புட்டையும் சேக்கும்போது இந்த ஊருக்கு ஏன் நாக்புர்ன்னு பேரு வந்துச்சுன்னு ஒரு கேள்வியில் தொக்கினேன் , வரிசையாக இங்க ஏதாவது விமர்சையான நாக தெய்வத்தின் கோயில் இருக்கான்னு கேட்டேன். அப்படி ஏதும் கோயில் இங்கு இல்லை. பின்ன ஏன் நாக்பூர் ன்னு பேரு எதாவது நாக் என்ற பெயரோ, அடைமொழியோ, பெயரின் ஒரு பகுதியோ கொண்ட ஏதாவது தலைவரின் சுட்டுப் பெயரா- இல்லை. இப்படி தோண்ட தோண்ட இல்லை என்ற பதில் மட்டும் வந்தது. அனால் இங்குள்ள மக்களில் அதிகம் பேருக்கு ஏன் என்ற காரணம் தெரியவில்லை. கூடவே கொண்டு போயிருந்த விக்கோ பேஸ்ட் போட்டு துலக்க ஆரம்பித்தேன், இங்கு நாக் என்னும் நதி ஓடியதாம் அதை சார்ந்து வளர்ந்த நாகரிகம் என்பதால் இந்த ஊருக்கு நாக்பூர் என்று பெயர். இந்த நாக் நதியும் ஓடாயாகிப் போய் கூவத்தின் முகச் சாயலில் இன்று இருந்து வருகிறது. அதை விட வருத்தம் பெற்ற தாயின் பெயரை இந்த நகர மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து வருகிறார்கள் என்பதே. இது என்ன பெரிய பொருட்டன்னு கேட்டா. நிச்சயமாக . இம்சை அரசனின் நகைசுவையாய் வந்தாலும் அந்த வசனம் மிகவும் முக்கியமானது " வரலாறு முக்கியம் அமைச்சரே ". அதை நாம் சரியாக பதிவு செய்யாததுதான் நமது மிகப் பெரிய மடமை. அது இங்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெரும்பஞான நகரங்கள், ஏனைய அடையாளங்களின் நிலையும் இதே அவலம்தான்.
3 comments:
நல்ல பகிர்வு....
ம்ம்ம்.. உண்மைதான்.. நாம வரலாற பத்தியெல்லாம் எங்கெங்க கவல படுறோம்..
மிகவும் அருமையான கருத்து/பதிவு/தகவல்... நன்றி.. இது வெறும் வரலாறு இல்லை... அந்த மக்களின் கலாச்சாரத்தின்/பண்பாட்டின் அடிப்படை.. தேவர் மகன் படத்தில் வரும் "போற்றிப் பாடடி பொண்ணே.." என்ற பாடலில் வரும் இந்த வரி நினைவுக்கு வருகிறது : "அந்த கதை இப்போ வுள்ள சந்ததிங்க கேட்க வேண்டும்...."
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )