Saturday, January 9, 2010

ஆத்திக அவலங்கள்

நாத்திகம், பகுத்தறிவு - போலிகள் ஜாக்கிரதை பகுதி - 4


நாத்திகப் போலிகளை மட்டும் இந்தப் பதிவின் மூலம் எதிர்த்து இந்த முயற்சியை முடித்து விட்டால், அது என்னுடைய கடமையில் ஒன்றை நாளைக்காய் ஒத்திபோட்டது போல் இருக்கும். இந்த பதிவை போடாமல் சுயத்திற்கு சுத்தப் பட்டவனாய் என்னால் இருக்க முடியாது. நாத்திகப் போலிகள் சாடுவது எல்லாமே தவறு என்று சொல்லி சமயத்தின் பெயரில் உள்ள அவலங்கை மூடி மறைத்தால் எனக்கும் போலிகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும். இது ஒரு நடுநிலைவாதி என்பதற்காக கூட நான் செய்யவில்லை. நல்ல சமய நம்பிக்கை உள்ளவன் என்ற முறையில் ஆத்திகப் போலிகளை பற்றி பேசுவது என்னுடைய கடமை. என்னுடைய என் காயங்களை மறைத்தால் என்னுடைய உடலைத்தான் அது பாதிக்கும். இன்றைய சூழலில் இருக்கும் சமயங்களில் நன்மைகள்; நன்மைகளை மட்டும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது நமது கடமை. அது சமய நம்பிக்கையால் மட்டுமே முடியும். எல்லா சமயங்களுக்கும் எல்லா சமயத்தினர்க்கும், எல்ல கடவுளர்க்கும் இது தகும். அதே போல் இன்றைய சூழுக்கு ஏற்ப தன்னை பண்படுத்திக் கொள்வது நமது கடமையாகும்.
இந்த பதிவில் அணைத்து சமயங்களில் உள்ள அவலங்களை பற்றி பேசுவது என்னுடைய கட்டாய கடமையாம், அதே சமயத்தில் மற்ற சமய நம்பிக்கைகளை பற்றிய அறிவு இன்மை காரணமாக என்னுடைய சமய அவலங்களை பற்றி மட்டும் பேசுகிறேன். சக கவலை உள்ள ஏனைய சமய நண்பர்கள் யாரேனும் உங்கள் மனதார உதவும் தருவாயில் அதையும் சேர்த்துப் பதியும் கடமையை செவ்வனே செய்வேன்.
எனக்குள் இருந்த இந்த கருத்து, சரி என்பதை பதியச் செய்த தோழி கார்த்திகா அவர்களுக்கு எனது நன்றிகள்.

கடவுளின் நம்பிக்கை சந்தயிடுவதர்க்கு அல்ல - கடவுளின் நம்பிக்கை, மனிதனின் மன அமைதியை, உறுதியை, உண்மையை நிலைப்படுதளுக்கான ஒரு நன்நெறி. இன்றைய நல்லவைகளை நாளைக்காக கொண்டு செல்லும் ஒரு நிரல் - அதை கழிவுகள் சுமக்கும் கூடாக ஆத்திகப்போலிகள் மாற்றிவிட்டனர் இந்த கூடத்திற்குள் நின்று இது வரை எதிர்காமையால் இதற்க்கு மறைமுகமாக உடன் பட்டவனாகிறேன். ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையிலோ, ஒரு மனிதனுக்கும் அவனுடைய கடமைக்கும் இடையிலோ, ஒரு மனிதனுக்கும் அவனுடைய சமுதாய பொறுப்புகளுக்கும் இடையிலோ எந்த மதமும் , கடவுளும் குறுக்கிடுதல் அது தன் நிலையிலக்கிறது. அந்த நொடி முதல் அது சமுதாய சீர்கேடுகளின் பட்டியலில் சேர்கப்படுவதே முறை.


இந்த கட்டமைப்பில் நாம் முதலில் இதற்க்கு நெறிப்படுத்த வேண்டியர்கள் , சமய நம்பிக்கையின், காக்கும் கடமை உள்ளவர்கள், சமயங்களை காலத்திற்கு ஏற்றவாறு செப்பனிடும் கடமையில் உள்ள சமயகுருக்கள், ஹிந்து சமயம் இன்று உள்ள சூழலில் எத்தனை குருக்களுக்கு ஹிந்து சமயத்தின் தத்துவங்களில் பயிற்சியும், புரிதலும் உண்டு என்பது கேள்விக்குரியது. இது அவர்களுடைய சமய அடிப்பயிலான அறிவினை சோதித்து சொல்ல வேண்டும் என்பதல்ல, அவர்களுடைய சமூக வெளிப்பாடு, சிந்தனைகள், சுய ஒழுக்கம் இவர்ற்றை வைத்தே அன்றும் இன்றும் என்றும் நிர்ணயம் செய்யப்படுகின்றன தன் நிலையிலிருந்து வழுவும் இயல் நிலை மனிதனுக்க தண்டனை என்றால் பாரதி கூறியது போல் படித்தவன் தவறு செய்தால் ஐயோ என்று போவான். அது சம்யகுருமார்களின் கடமையில் இருக்கும் யாரும் தவறு செய்தால், சராசரி மனிதனை விட, தெய்வ நம்பிக்கையில் தவறு செய்தவனென்று, [ Sacrilege ] அடிப்டையில் தண்டனைகள் வழங்கப் பட வேண்டும். இதுதான் இன்றைய நிலையில் இருக்கும் இந்த வகை  அவலங்களை தவிர்க்கும் ஒரே நெறிமுறை. நெறிபடுத்தும் அறிவோ பொறுப்போ இல்லையென்றால் மறவுரியையாவது அவனம் செய்யாமல் விட்டு விடுங்கள். அதற்க்கு அடுத்த படி தன் சுயலாபதிர்க்காக தவறான நம்பிக்கைகளை விதைப்பது, சரியானவற்றை விதைக்காமல் விட்டுவிடுவது இதவும் மேல் கூறிய வகை தவறுகளே.


மேலும் முகமுடிகள் கிழிப்போம்

1 comment:

Karthiga said...

"ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையிலோ, ஒரு மனிதனுக்கும் அவனுடைய கடமைக்கும் இடையிலோ, ஒரு மனிதனுக்கும் அவனுடைய சமுதாய பொறுப்புகளுக்கும் இடையிலோ எந்த மதமும் , கடவுளும் குறுக்கிடுதல் அது தன் நிலையிலக்கிறது" - naachunu oru kaaruthu

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )