Thursday, January 14, 2010

ஹிந்து சமய ஆத்திகக் கோளாறுகள்

நாத்திகம் பகுத்தறிவு - போலிகள் ஜாக்கிரதை [ பகுதி - 5 ]


அடுத்து சமயங்களை நடாத்தும் பணியில் சமயம் சார்ந்த பணியில் , கோயில் மற்றும் அதனை சார்ந்த பணியில் உள்ளவர்களைப் சொல்ல வேண்டும். முந்தைய பகுதியில் கூறியது போல் சமயகுருமார்களுக்கு உள்ள பணிகளின் பொறுப்புகள் இவர்களுக்கும் உண்டு. சமய கட்டுமானங்களில் பனி புரியும் அனைவரருக்கும் அதை சரியாக பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. சமயம் என்பது மனிதனை மனிதனாக வைக்கும் ஒரு நிரல், அந்த நிரலில் நேரடியாக தொடபுடைய அந்தணர்கள், சமயப் பணியில் உள்ளவரால், கோயில் மற்றும் அது சார்ந்த பணியில் உள்ள அனைவருக்கும் சரிவர நடத்தும் பொறுப்பு உள்ளது. குருமார்களை விட சமயம் என்ற நோக்கில் மக்கள் எதிர் கொள்வது இவர்களைத்தான். ஒரு கம்பெனியின் வர்த்தக மேம்பட்டு துறை( SALES ) உள்ளவர்கள் நேரடியாக அந்த கம்பெனியின் வாடிக்கையாளர்களை சந்திக்கும் , அந்த அமைப்பின் முகமாக(  FACE OF THE FIRM ) செயல் படுகிறார் இதை கருத்தில் கொண்டே பல கம்பெனிகள் இவர்களுக்கான உடை கட்டுப்பாடுகளை ( CLEAN SHAVED, TIE, POLISHED SHOES ) வைத்திருப்பது நாம் அறிந்ததே. வெறும் பணம் சம்பாதிக்கும் அமைப்பிற்கே இவ்வளவு கோட்பாடுகள் என்றால், இவர்கள் சமயம், மனிதனுக்கு ஒழுக்கங்களை, மன அமைதியை, பண்பாட்டை, நிலை நிறுத்தும் பணியில் உள்ளவர்களுக்கு பன்மடங்கு பொறுப்புகள் அதிகம். கட்டுப்பாடுகளும் அதிகம். தன் நடவடிக்கைகள் ஏனைய மனிதர்களுக்கு உதாரணமாக இருக்கும் படி நடக்க வேண்டும். அவர்களை விட பிறப்பால் உயர்ந்தவன் , பெரியவன் என்ற வரட்டுத் தனமான, மடமையான நிலைப்பாடுகளை விட்டுவிட்டு உயரிய, நல்ல நெறியை ஏனைய மக்களுக்கு வாழ்ந்து புகட்டும் கடமை உண்டு. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் சமயத்தின் நிழலாகவே கண்காணிக்கப் படுகிறது என்பத மனதில் கொண்டு செயல் பட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு. இது செய்வதற்கு தயார் என்றால் மட்டும் நீங்கள் இந்த பணிகளை ஏற்றுக் கொள்ளுங்கள், வெறும் பணத்திற்காக இங்கு புகுவதென்றால், உங்களுடைய பொருள்சார் தேவைகளுக்கு சமயத்தை அடகு வைக்க எந்த உரிமையும் இல்லை. இதைத் தவிர அனேக பொருள் ஈட்டும் பணிகளில் ஈடுபடுங்கள். சமயத்தின் பெயரில் களங்கமாவது தவிர்க்கப்படும். 

அடுத்து நாம் பகிரப்போவது சமயர்கள், வழிபடுவோர்கள், பக்தர்கள். உங்கள் மனதிற்கு ஏற்றார் போல் ( ஹிந்து சமயத்தவர்களுக்கு மட்டும் பொருந்தும் ) எந்த தேய்வதை வேண்டுமானாலும் நீங்கள் வழிபடலாம், எந்த சமயகுருவையும் நீங்கள் பின்பற்றலாம், எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் நீங்கள் செல்லலாம், அணைத்து சமயம் சார்ந்த நூல்களை நீங்கள் படிக்கலாம், அனால் நீங்கள் இவற்றை எல்லாம் மனிதனாக இருப்பதற்கு இடையூறு செய்வதாய் இருந்தால் வேண்டாம், உங்கள் கடமைகளுக்கு, சமூகப் பொறுப்புகளுக்கு எதிராக இருந்தால் அவற்றை செய்யாதீர்கள், அன்பை போதிக்காத ஒன்று சமயமாக இருக்கவே முடியாது, நலஒழுக்கத்தை உங்களுக்கு கட்டளை இடாத ஒரு தெய்வம் வெறும் கல் அல்லது அது ஒரு பிம்பம் மட்டுமே. சமயக் கோட்பாடுகளில் சிந்தனைகளில் செயல்பாடுகளில் உங்களுக்கு புரிதல் பண்பு, அமைதி தென்படவில்லை என்றால் அவற்றோடு உங்களை ஒத்துப் போக வேண்டிய அவசியம் இல்லை. சமயம் என்ற பெயரில் தன்னை வருத்தி, மற்றவர்களை இன்னலுக்கு உள்ளாக்கி எந்தக் கடவுளும் மகிழப் போவதில்லை.


பெண் பக்தர்கள் எத்தனை விரதம் இருப்பீர்கள் ?, உங்களுடைய கஷ்டங்கள் தீர தெய்வங்கள் உதவும் என்றால் அவற்றை சரிசெய்யும் வழியை தேர்வு செய்யும் அறிவை, உங்களுக்கு இறைவன் தந்ததை மறக்காமல் செயல் படுங்கள். உங்களுடைய சோம்பேறித் தனைகளுக்கு இறைவைனை இழுப்பதை நிறுத்துங்கள்.

அடுத்து மலைகளுக்கு மாலை போடும் சாமிகள், இவர்கள் செய்யும் செயல் இறைவன் காட்சியளித்தாள் கூட " ஏய், என்னைய வச்சு காமெடி கேமடி பண்ணலியே " என்று கேட்கத் தோன்றும். மாலையை கழற்றிய உடனே மது அருந்தும் உங்களுக்கு , இன்னும் மோசமான நிலையில் மலாயுடனே புகைக்கும் உங்களுக்கு விரத்தங்கள் எதற்கு, ஐயப்பனோ, முருகனோ நீங்கள் வரவில்லை என்றால் நிச்சயம் மலையிலிருந்து கீழே வந்துவிடப் போவதில்லை.  விரதங்கள் அனுஷ்டிக்கும் மனநிலையில், கட்டுப்பாடு உங்களுள் இல்லையென்றால் போக மறந்த வாக்குப் பதிவாக நினைத்து விட்டுவிடுங்கள்.

இந்தப் பகுதியை நிறைவு செய்யும் ஒரு வரி " இறைவனை குழந்தையின் மனதுடனும், அறிவியல் அறிஞனின் மூளையுடனும் அணுகுங்கள் " . உங்களுக்கு சமயம் எளிதில் விளங்கும், சமயம் உங்களுக்கு இடராக இருக்காது" .
 
அடுத்த பதிவில் மீண்டும் நாத்திக , பகுத்தறிவு போலிகள் மேல் சவுக்கு சுழலும்

7 comments:

Karthiga said...

" இறைவனை குழந்தையின் மனதுடனும், அறிவியல் அறிஞனின் மூளையுடனும் அணுகுங்கள் " - இதனுடன் இன்னொரு அணுகுமுறையும் உண்டு அது "இறைவனை தோழமையோடு அணுகுவது". உண்மையான தோழமை எப்போதும் நம்மை உயர்த்தும் .

மாலைக்கு மாலை போடுவோர் பற்றி ஒரு சிறு கருத்து. நாட்டில் பல பெண்கள் தங்களுடைய குடிகார கணவன்மார்கள், தந்தை, தம்பி, அண்ணன் போன்ற மிக மிக பொறுப்புள்ள ;-) குடிமக்கள் , மலைக்கு மாலை போடும் சமயங்களில் மாடுமாவது விரதம் கடைபிடித்து டாஸ்மாக் பக்கம் போகாமல் இருப்பதை எண்ணி, வருடம் 365 நாட்களும் இவர்கள் மாலை போட்டால் என்ன என்று ஏங்கும் பல பெண்கள் உண்டு.

ம்ம்ம்ம் .. பரவால நம்ம முட்டாள் தனமான சமய நம்பிகையிலும் ஒரு சின்ன நன்மை இருக்கு ..

I expect still more nice punches from you in next part..

nama aalunga Kadavul'ngra aata thoola potukitu (thanaku ullayae vachikitu) oor oora thedranga - idha paathi innum aazhama sollunga.

அண்ணாமலையான் said...

நல்லது நடந்தா சந்தோஷம்தான்... வாழ்த்துக்கள்...

வால்பையன் said...

//. சமயம் என்பது மனிதனை மனிதனாக வைக்கும் ஒரு நிரல், //

சமயம் இல்லாட்டி மனிதன் என்னவாக மாறுவான்!?

passerby said...

//உங்களுக்கு சமயம் எளிதில் விளங்கும். சமயம் இடராக இருக்காது//

In earlier para, you advise people to give up religion if it poses a hindrance to them in their lives; or in becoming good humans.

Here you say, religion is within understanding. It wont be a hindrance.

It is contradictory.

I am afraid you have not understood religion properly.

Religion is of two levels: one is for common people; the other for interested persons.

Common people don't bother about the nitty-gritty of the religion. For them, straight path like saranaakathi concept in Srivaishnavism, is prescribed. They can take it and find religion very helpful.

The other kind of people will take sufficient effort to understand and assimilate the concepts; and put them in their life. The result is extraordinary spiritual happiness to them.

Your advice to people to give up religion if they cant understand it or find it a hindrance - has not taken into consideration the nice points about religion.

Please think again.

ஸ்ரீநி said...

Dear Kallapiraan,

Thanks for the vistit, time and efforts.
Not practising a ritual is more different from that of a giving up a religion itslef.

in the earlier paragraph i suggest ppl to give up the practice which you have very less consciences. Religion just cannot be forced from outside and also the same cannot be forced from inside or self.

Religion need to be understood and need to be practiced, else it has all the chance of being a ruffianistic prank on the society
உங்களுக்கு சமயம் எளிதில் விளங்கும். சமயம் இடராக இருக்காது// - You will undestand the religion easily and it will not stand a hindrance to your life and social commitment.

ITs more about understanding and than to give up. Being in the religion to understand the cause and to give up the religion are two different activities.

ITs more about understanding and than to give up.
Once again thank you for the meticulous questioning.

ஸ்ரீநி said...

வால்

சமயம் என்ற நிரலில், இயக்க சக்திக்கு கடவுள் என்று பெயரிட்டு, ஒழுக்கத்தை கட்டளையிடுகிறது . ஒரு தனி மனிதனுக்கு ஒழுக்கத்தை, மன அமைதியை நிலைநிறுத்தும் வேறு ஒரு நிரல் ஒரு ஊடம் இருக்கிறதா ?

நீங்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. உங்களோடு சேர்ந்து சிந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Mehanathan said...

ரொம்ப நல்லா இருக்கு விக்ரம்

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )