Wednesday, January 20, 2010

தமிழகத்தில் 'நாத்திகம்' என்பதே ஒரு மதம்

நாத்திகம் பகுத்தறிவு - போலிகள் ஜாக்கிரதை பகுதி - 5



சென்ற நூற்றாண்டின் நடுவில் தமிழகத்தில் நீதிக் கட்சியிலிருந்து விலகிய சிலரும், காங்கிரசிலிருந்து விலகிய சில ராஜாஜி எதிர்ப்பாளர்களும், திராவிடம் தாங்கிய ஒரு இயக்கம் இந்த திராவிடக் கழகம். இன்று இது கழகம் என்ற நிலயுயர்ந்து கட்சியாகி தமிழக அரசியலில் இரண்டு திராவிட கட்சிகளின் தாயாக விளங்கும் ஒரு கட்சி - திராவிட கட்சியாகும். திராவிடம் என்ற அடிப்படையில் இன்று ஊருக்கொரு கட்சி ஜாதிகொரு கட்சி என்ற நிலையில், நாத்திகம் என்று ஒரு நேர்கோடு வறைந்தோமே ஆனால் அதில் தமிழகத்தில் இன்று நிற்கக்கூடிய ஒரு ஒரே அமைப்பு திராவிட ட்சியாகும். பெரியார் காலத்தில் தோன்றிய இந்த அமைப்பு அவருடைய காலத்திற்கு பின் வழுவிளக்க தொடங்கி இன்று அரசியல் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிழலில் இருப்பது நாம் அறிந்ததே. நாத்திகம் என்ற கோட்பாட்டை பேசுகையில் தி மு கா வையோ அ தி மு கா வையோ பற்றி பேசுதல் அந்தந்த கட்சி உறுப்பினர்களே உடன்படாத ஒன்று. பெண்ணுரிமை, தமிழ் வளர்ச்சி, திராவிட உரிமை, தனித் தமிழகம், ஹிந்தி மறுப்பு, தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்டோர் உரிமைகள், சுய மரியாதை, ஈழம் வரை இந்த கட்சியின் கோட்பாடுகள் ஏனைய தமிழக கட்சிகளுக்கு இணையாக இருந்தாலும் இந்த கட்சியின் துவக்கம் நாத்திகம் என்பதும் குறிப்பிட தக்கது.
------------------------------------------------------------------------------------------------------------

சமயங்களில் கடவுள் என்ற பெயரின் கட்டளையின் கீழ் நடை பெறுகின்றன , தி க வும் பெரியார் என்ற பெயர் கட்டளையை பயன்படுத்துகின்றது.
சமயங்கள் எல்லாவற்றுக்கும் அடையாளங்கள் உண்டு, சிலுவை, குல்லா அணிதல் தாடி வைத்து கொள்ளுதல், திருநீறு அணிதல், பூணூல், போன்று கருப்பு சட்டை அணிதல் என்று இவர்களுக்கும் ஒரு குறியீடு உண்டு.இவர்களுடைய கொடி கூட ஒரு குறியீடே
பெரியாரின் படங்கள், பெரியாரின் சிலைகள் என்று இவர்களுக்கும் உருவ வழிபாடு உண்டு.
பெரியாரை போற்றும் இவர்கள், அவருடைய எழுத்துக்களை வேதமாய் பின்பற்றுவதும் போதிப்பதும் உண்டு. சமயப் பிரச்சாரங்கள் போல் இவர்களுக்கும் பிரச்சாரங்கள் உண்டு.
சமய சடங்குகளான திருமணங்களை ஆரம்ப காலங்களில் இவர்கள் எதிர்த்தாலும் இன்றைய சூழலில் திருமணம், பெயர் சூட்டு விழா, பூப்புனித நீராட்டு விழா போன்ற சமய சடங்குகளை தனக்கு பிடித்த உச்சாடனங்களுடன் நடத்துகின்றனர்.
போதகர்கள், பின்பற்றாளர்கள், வெறியர்கள், போலிகள் என்று எல்லா நிலை பகுப்புகளும் இவர்களுள் உண்டு. மொத்தத்தில் இது கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் பிறந்த ஒரு மதம். மற்ற சமயங்களை எதிர்க்கும் ஒரு அரசியல் மதம்.
எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கைகள் உண்டு இவர்களும் அதில் விதி விலக்கல்ல.



தி க சாரா நாத்திகர்களை எடுத்துக் கொண்டோமேயானால், இவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதை விட, சமய அடிப்பையில் சமயத்திற்குள் போலிகளை சாடுவோராக, அந்த நம்பிக்கைகளை சந்தயிடுவோரை எதிபபோராக, மூடத் தனங்களை உடைப்பவர்கலாவோதான் தன்னை அறிமுகம் செய்து கொள்ள முடியும். ஒரு சமயத்திலிருந்து இவர்கள் தன்னை விடுவித்து கொண்டோர் என்றாலும் , அதே சமயத்திற்குள் நின்று அந்த சமய முன்னேற்றத்திற்க்காக, கடவுள் நம்பிக்கையின் பரிநாமதிர்க்கு வழிவகுக்கிறார்கள். அந்த சமயதிர்க்குள் நின்று அந்த சமயத்தையோ வேறு சமயத்தையோ வேறு சமயங்களை எதிர்க்கிறார்கள். இவர்களும் சமயங்களும் துறந்ததாகக் கூறிக் கொள்ளும் சமயர்களே.
நாத்திகர்களுக்கு அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு அறிமுகம், வெளிப்பாடு, மறுப்பு, எதிர்ப்பு என்று எதுவுமே பொருந்தா. அவன் சுயத்திற்கு சுத்தப் பட்டவநென்றாள், அதை பரப்பும் தேவை அவனுக்கு இல்லை. அதை சந்தயிட்டு மற்றவர்க்கு திணிக்கும் பொழுது அவன் எதிர்த்த செயல்பாட்டினை அவனே செய்கிறான்.
ஒன்றை எதிர்க்கையில் அது உள்ளது ( EXISTENCE ) என்று நாம் உறுதிப் படுத்துகிறோம் - சச்ரடீஸ்.

8 comments:

Unknown said...

//தி க சாரா நாத்திகர்களை எடுத்துக் கொண்டோமேயானால், இவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதை விட, சமய அடிப்பையில் சமயத்திற்குள் போலிகளை சாடுவோராக, அந்த நம்பிக்கைகளை சந்தயிடுவோரை எதிபபோராக, மூடத் தனங்களை உடைப்பவர்கலாவோதான் தன்னை அறிமுகம் செய்து கொள்ள முடியும். ஒரு சமயத்திலிருந்து இவர்கள் தன்னை விடுவித்து கொண்டோர் என்றாலும் , அதே சமயத்திற்குள் நின்று அந்த சமய முன்னேற்றத்திற்க்காக, கடவுள் நம்பிக்கையின் பரிநாமதிர்க்கு வழிவகுக்கிறார்கள்//

நானும் இந்த வகைக்குள் வருபவன் தான்..., நான் கடவுள் இல்லாமையை புரிந்து கொள்ள தொடங்கிய காலகட்டத்தில் தி.க சுத்தமாக நீர்த்து போய் விட்டது..., உங்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது..., கடவுள் இல்லை என்று உணர்தவர்கள் அனைவராலும் அதை எளிதாக அனைவருக்கும் புரியும் படி விளக்க முடியாது ஆகவே தான் பெரியாரின் கருத்துக்களை பயன் படுத்துகிறார்கள்.., உலகில் நடத்த எல்லா பெரிய படுகொலை நிகழ்வுகளும் கடவுள் பெயரால் தான் நடந்தது இதை உங்களால் மறுக்க முடியுமா....,

சீனு said...

//மொத்தத்தில் இது கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் பிறந்த ஒரு மதம். மற்ற சமயங்களை எதிர்க்கும் ஒரு அரசியல் மதம்.//

திருத்தம். இந்து மதத்தை மட்டும், அதுவும் 'சில சமயங்களில்' மட்டும், எதிர்க்கும் மதம்.

என்ன...இந்த மதத்தில் கடவுளை பூஜிக்க இருக்கும் மந்திரங்கள் மட்டும் வெறுப்பின் சாரமாக இருக்கும்.

Thamizhan said...

பெரியார் கொள்கைகளை எப்படியாவது திரித்து எழுதி,மழுப்பிவிடப் பார்ப்பனர்களும்,பார்ப்பனீயத் தமிழர்களும் பல் வேறு பெய்ர்களில்,வேடங்களில் உலா வருகிறார்கள்.
பெரியார் சிலை வைப்பதற்கு முதலில் ஒத்துக் கொள்ளவில்லை.அவர் சிலையின் கீழேக்
"கடவுள் இல்லை,கடவுள் இல்லை ,கடவுள் இல்லவே இல்லை!
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி,
பறப்புகிறவன் அயோக்கியன் " என்ற வாசகங்களுடன் இருந்தால் ஒத்துக் கொள்கிறேன் என்றார்.

காந்தீயம் ,கம்யூனிசம் போலத்தான் பெரியாரிசமும்.
சுயநலந்தான் பெரிய மதமாக இருக்கிறது.
கொள்கை அடுத்த படி தான்.
இப்போதும் "மக்கள் பக்திக்காகக் கோவிலுக்குப் போவதும்,ஆண்டவனை வணங்குவதும் குறைந்து விட்டது.பிஸினாகி விட்டது " என்று சொன்னது சாட்சாத் நடமாடுங் கடவுளே தான்.

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்...

Sathik Ali said...

மிக நல்ல பதிவு.பெரியார் மட்டுமே உண்மையான நாத்திகராக இருந்தார்.அவர் தொண்டர்கள் அவரை சாமியாரக்கி சிலை வைத்து மாலையிடுவது பெரியார் இன்றிருந்தால் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்.பகுத்தறிவு எல்லாம் போய் பார்பனிய எதிர்ப்பு மட்டுமே திக வில் தங்கி விட்டது.மற்ற கழகங்களுக்கும் பெரியார் கொகைள்க்கும எந்த சம்பந்தமும் இல்லை.

BalajiVenkat said...

For DK only opposing the Brahmins is the only Minimum common agenda... if u ask them they will tell that our base is hinduism thats why they are opposing hinduism... but they call themself as a secular party... when we talk secularism its a different debateable one... but when we talk about the so called NATHIGAM of DK... they are not open mindedly ready to declare who worship ALLAH and JESUS are also KAATUMIRANDI's.. Do they have that guts to say that... the answer is no.. im talking about only the top level of that party and as said by the author of this blog its not an organisation when it was initially... and the one who calls himself as the MARATHAMIZHAN.. MKarunanidhi too dont have any rights to say.. since he wont intefere within his own family to stop worshiping the god but he will suggest others not to worship.. there are some news and not the rumors that he himself is not a NATHIGAVATHI..

சங்கமித்திரன் said...

என்ன எழவுக்கு இப்படி?
வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம்.ஐயோ,ஐயோ

hayyram said...

//ஒன்றை எதிர்க்கையில் அது உள்ளது ( EXISTENCE ) என்று நாம் உறுதிப் படுத்துகிறோம் - சச்ரடீஸ்///

நல்ல வரிகள். நன்றி.

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )