The OSCAR FEVER is On - என்று ஆங்கிலத்தில் சொல்வர்கள், அதற்க்கான நேரம்தான். நம்ம SUN TV ரேகோ ஸ்டைல்ல சொன்னா இனிமே வருவது ஆஸ்கார் வா..ரம். ஆஸ்கார் என்ற விருதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு, நம்பிக்கை இல்லை. தானே அறிவித்து தானே புகழ் ஆறம் சூடிக்கொள்ளும், அமெரிக்காவின், இடிஅமின், தன்மையாகவே இதுவும் நோபெல் பரிசும் எனக்கு தெரியுது ( இதுல உள்ளூர் அரசியல் நெடி இருக்குதே). ஆனால் ஒரு, சினிமா பைத்தியம் என்ற முறையில் ஆர்வம் உண்டு. ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டு திரைப் பட ( ACADEMY AWARD FOR BEST FOREIGN LANGUAGE FILM )வரிசையில் நமது இந்தியத் திரைப்படங்கள் போட்டியிடுவது ஒரு வகை. அவற்றில் வருடா வருடம் இந்திய அளவில் உள்ள ஏனைய நாட்டுக்கட்டைகளை - அதாங்க மத்த வூட் - டோலி வூட், போலிவூட் போன்ற மற்ற மொழி திரைப்படங்களுடன் போட்டியிட்டு நமது தமிழ் படங்கள் தேர்வுசெய்யப்படும். அடுத்து OSCARரில் நமது தமிழ் கலைஞர்கள் வேறு மொழி, வேறு நாட்டு திரைப்படங்களில் பணிபுரிந்த நமது கோலிவூட் கலைஞர்கள்.
இதில் 1957 முதல் இன்று வரை 8 தமிழ் திரைப்படங்கள் இந்திய அளவில் ஆஸ்கார் பரிந்துரைக்கு தேர்வு செய்யப் பட்டு இருக்கின்றன. ஆனால் இதில் ஒன்று கூட இன்றுவரை வெளிநாட்டு திரைப்பட வரிசையில் நியமிக்கப் ( NOMINATE ) பட்டதில்லை. ஆனா இந்தப் பட்டியலில் 'ஜீன்ஸ்' படம் இருப்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி இல்லை. அதையும் கடந்து 'அப்படி என்னத்த கண்டுடாங்க இதுல' என்ற கேள்வி கூட உண்டு. அதே வருடம் வெளியான "1947-Earth" ( ஹிந்தி ), SAAZ ( ஹிந்தி ), தாயி சஹேபா ( கன்னட ) களியாட்டம் ( மலையாளம் ) ஹவுஸ்புல் (தமிழ்). இதில் கடைசியாக சொல்லப் பட்ட மூன்று படங்களும் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல விருதுகளால் அங்கீகரிக்கப் பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. இதே ரீதியில் 'இந்தியன்' படத்தில் கூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஊருக்கு நூறு பேர்( 2001) வெயில்(2006) நவரசா(2004) வேதம் புதிது , தண்ணீர் தண்ணீர்(1981), உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், தில்லான மோகனாம்பாள், மூன்றாம் பிறை, போன்றவை சமகாலத்தில் தேர்ந்தெடுக்கதமையும் வியப்புதான்.
அடுத்து வேறு மொழிப் படங்களில் அல்லது வேறு நாட்டு படங்கலில் போலிவூடார்கள் 'எப்படி பாத்தாலும் நம்ம பயக' வகையறாக்கள். மீண்டும் கமல் . சாகர்- ஹிந்தி- 1985, சுவாதி முத்யம் - தெலுகு( சிப்பிக்குள் முத்து )- 1984, போன்ற ஆஸ்கார் பட்டியல் படங்களில் தன்னுடைய பாத்திரத்தால் வலு சேர்த்தவர். அடுத்த படிய நேர நம்ம ரஹ்மான் நான் என்ன பெரிய சொலீரப் போறேன் உங்களுக்கு தெரியாததா SLUM DOG MILLAINORE பத்தி. அது இல்லாம LAGAAN, RANG DE BASANTI, INDIAN, JEANS, போன்ற பட்டியலில் இடம் பிடித்த மற்ற திரைபடங்களில் இவரடுய பங்களிப்பு மிகவும் குறிப்பிட தக்கது. இவர் இந்த வருடமும் COUPLE RETREAT என்ற ஆங்கில திரைபடத்தில், நியமனப் பட்டியலுக்கு தனுடைய இரண்டு பாடல்கள் மூலமாக போட்டியிடுவது சந்தோசமே . அதுல ஒன்னு தமிழ் பாட்டு சாமியோ.
" இந்தியா - ஆஸ்கார் " என்று இன்னும் இந்த மட்டேற விக்கோ வஜ்ரதந்தி போட்டு விளக்கி திரும்ப வந்து BLOGகுறேன். இப்போதைக்கு டிரைவர், ஸ்டாப் வந்துருச்சு பிரேக்க போடு.
ஆமா இளையதளபதி 2011ல விருதுப் படங்கள் நடிக்கப் போராரமே, அதுல எத்தன ஆஸ்கார் ?????. ( என்னமோ தெரில எவ்ளோதான் தென்னமரம் பத்தி எழுதுனாலும் அதுல மாட்டை கட்டலாம்நு சொல்லாம முடிக்க முடியல)
4 comments:
அருமையான பதிவு நண்பரே.
ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை...ஆஸ்கார் என்பது ஆங்கிலப் படங்களுக்கான விருது என்பதை விட வேறு என்ன சிறப்பு இருக்கிறது..அது என்ன, உலக திரைப் படங்களுக்கான உயரிய விருதா? நாம் ஏன் (குறிப்பாக, இந்திய தொலைக் காட்சிகள்) அதைப் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்கிறோம்:-) ..எனக்கு என்னவோ இது நமது அடிமைத் தனத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது . ஜெய் ஹோ பாடலை விட ரோஜா-வின் பாடல்கள் குறைந்தவையா என்ன?
///ஆமா இளையதளபதி 2011ல விருதுப் படங்கள் நடிக்கப் போராரமே, அதுல எத்தன ஆஸ்கார் ?????.///
இப்போ நடிக்கற படமே தாங்கல. இதுல விருது படம் வேறய. முடியலடா சாமி..
அன்புடன்
ராம்
www.hayyram.blogspot.com
கமல் சொன்னது போல் நாம் வெளிநாட்டுகாரனுக்கு
விருது வழங்கும் காலம் வர வேண்டும் என்பதே
என் கருத்து.....!!
"கமல் சொன்னது போல் நாம் வெளிநாட்டுகாரனுக்கு
விருது வழங்கும் காலம் வர வேண்டும் என்பதே"
எனக்கு இந்த கருத்தில் உடன்பாடு இல்லை கமல் ஹாசன் ரஹ்மானுக்கு விருது கிடைப்பதற்கு முன் இந்த கருத்தை சொல்லி இருந்தால் அது சரி இதே விருதை பெறுவது பெருமை என்று ஒரு காலத்தில் இருந்து விட்டு அந்த விருது வேறு ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் போது இந்த கருத்தை சொல்வது அந்த விருதை குறை கூறுவது மட்டும் இல்லாமல் விருது பெற்ற கலைஞனை மட்டம் தட்டுவது போல்
சீ இந்த பழம் புளிக்கும் கதை தான் இது
எனக்கு கமல் ஹாசனை பிடிக்கும் ஆனால் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )