Friday, January 15, 2010

CHANCE PE DANCE - திரை விமர்சனம்


இந்தப் படம் இந்தியாவில் ஏன் உலகத்திலேயே ஒரு புது முயற்சி - அப்படீன்னு சொன்னா நானோ இல்ல அப்படி சொல்றவரோ இதுவரைக்கும் ஒரு படம் கூட பாததில்லைன்னு அர்த்தம். சினிமாவில் கதாநாயகன் ஆகும் கனவுள்ள ஒரு இளைஞன், ஏழ்மையான குடும்பம்,  ஒரு காதலி, உழைப்பு, ஏமாற்றம், சோகம், வெற்றி. சினிமாவில் இது புது கான்செப்ட் இல்லை. இதை மீறியும் படம் - பார்க்கலாம். பபில் கம் திரைக் கதையை தாண்டியும் படம் சில சின்ன சின்ன வெளிப்பாடுகள் மூலம் காமெராவும் இசையும் நமக்கு கொரட்ட வராம பாத்துக்குது . SHAHID KAPOORகாக எழுத்தப் பட்ட கதை என்று இயக்குனர் KEN GHOSH சொல்வது படத்தின் சில இடங்களில் நம்மால் உணர முடிகிறது. கடைசி நடனக் கட்சியில் தன்னுடைய EIGHT PACK AB உழைப்புவரை இவருடைய பணி இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்கது.


நிச்சயமாக டிஸ்கோ, பிரீஸ்டைல், நடனங்கள் சார்ந்த STEP UP, DIRTY DANCING படங்கள் நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தாலோ, இல்லை, தெலுங்கில் அல்லு அரவிந்தின் நடனங்களை நீங்கள் பார்த்திருந்தாலோ, இந்த பழம் நிச்சயம் புளிக்கும். ஜெனீலியாவின் பாலிவுட் கனவுக்கு இந்த படம் வழு சேர்க்கவில்லை, ஆனால் இன்னும் அழகாவே தெரிகிறார். தனது நடனத் திறமை வெளிப் படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பையும், இவர்  முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது வருத்தமே.உங்களுக்கு மேற்கத்திய டான்ஸ் பிடிக்குமா இந்த படம் உங்களுக்கு பிடிக்கும், எனக்கும் அந்த விதத்தில் இந்தப் படம் பார்க்க பிடித்திருந்தது. நிறைவு இல்லை, இம்சையும் இல்லை. இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து வெளியான நான்காவது ஹிந்தி படம், சரியாக சொன்னால் வெளியாகி வெற்றியடையாத நான்காவது ஹிந்திப் படம்.

CHANCE PE DANCE - வேற படம் டிக்கெட் கெடக்கலேன்ன கண்டிப்பா போங்க
இந்த வருடத்தில் நடனத்தை மையமாக வைத்து ஹ்ரிதிக்கின் KITES படமும் வரும் என்று உங்களுக்கு தெரியும்ல .
பாலா அண்ணேன் இதுக்கெல்லாம் மாற்றுப் பார்வை இல்லை, ஆனால் விரைவில் 3- IDIOTS படத்தின் மாற்றுப் பார்வையுடன் சந்திக்கிறேன்.

3 comments:

பாலா said...

எனக்கு ரெண்டு ஸ்டெப் அப் படங்களும் பிடிச்சது. கதைக்காக இல்லை. ஆனா.. அவங்களோட ஸ்ட்ரீட் டேன்ஸ் ரொம்ப அருமையா கொரியோக்ராஃபி பண்ணியிருப்பாங்க.

நம்மூரில் இப்படி ஒரு படம் வராதான்னு நினைச்சிகிட்டு இருந்தேன். பாதி கிணறு கூட தாண்டியிருக்க மாட்டாங்க போல இருக்கே?! :( :(

3-இடியஸ்ட்க்கு வெய்ட்டிங். ரொம்ப மாறி பார்க்காதீங்க! :) :) : பாவம் பொழச்சிப் போகட்டும்! :)

Unknown said...

kalakkunga...

geethappriyan said...

பாத்துடீங்களா நண்பா
நல்லா எழுதியிருக்கீங்க
ஆத்திகம் நாத்திகத்துக்கு தற்காலிக லீவா?

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )