இந்தப் படம் வெளியான உடனேயே இந்தப் பதிவ போடணும்னு நெனச்சேன், இன்னும் சிலர் இந்தப் படத்த இன்னும் பாக்கலேன்னு சொன்னாங்க, அதனால இத இத்தனை நாள் தள்ளி போடுறேன். இந்த கருத்துக்களை படிச்சிட்டு இந்தப் படாத பார்த்த கண்டிப்பா படத்தில் நிலைக்கும் நகைசுவை ரசிக்கும் திறன் இருக்காது. இந்தப் படம் முழுக்க முழுக்க இந்திய கல்வித் தரத்தை அது விதைக்கும் சமுதாய நிரல்களையும் சாடிய முதல்ப் படம் என்று நமக்கு தெரியும் இந்தப் படத்தில் சில பொருள்களை இயக்குனர் சில கட்சிகளில் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது, என்பார்களே அது போல் கை ஆண்டு இருக்கிறார். இங்கே பகிரப் படும் கருத்துக்கள் உங்களுக்கும் தோன்றியவை என்றால் மிகவும் மகிழ்ச்சி இல்லையென்றால் இந்தப் பதிவு உங்களுக்குதான் வாழ்த்துக்கள்.
ஆசிரியர்களைப் பற்றி: பொம்மன் இராணி ஏற்று நடித்த வீறு சஹாஸ்ரபுதே என்ற பாத்திரம். அரச காலத்து COUCHவகை கட்டிலில் OPERAவகை இசையில் உறங்கும் கட்சி - இன்னும் பழங்காலத்தில், மேற்கத்திய மோகத்தில் இன்றைய ஆசிரியர்கள் நின்று கொண்டிருப்பதாக இந்த கட்சி வெளிப்பாடு இருக்கிறது. பல இடங்களில் இவர் வெளி நாட்டிற்க்கு செல்வதைப் பற்றி மேன்மையாக பேசுவதையும் காட்டி இருக்கிறார்.
மிக முக்கியமாக ஆமிர்கான் இரண்டு வார்த்தைகளை( Farhanitrate Prerajulisation) குடுத்து தேடச் சொல்லும் கட்சி. ஒரு புரட்சியான கேள்வியை நிறுத்தி விட்டு அவர் ஓடி விடுகிறார். அதே கல்லூரியில் பல வருடங்களாக பாடம் நடத்தி வரும் ஆசிரியர். தனக்கு தெரிந்ததை மிக தெளிவாய் முன் வைக்கும் VEERU SAHASRBUDDHE பத்திரம் இந்த இடந்தில் மழுங்கி நிற்கும். ஒரு பாடபுத்தகத்தை மாணவர்களை விட அதிகம் படித்தவர் ஆசிரியராக இருப்பார், இருந்தும் இந்த இரண்டு வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் இல்லை என்று இந்த பாத்திரம் தைரியமாக சொல்ல வில்லை. இப்படி தன்னன்பிக்கை இல்லாத படிப்பு தேவையா ? - என்ற தொக்கி நிற்கும் ஒரு கேள்வியை இந்தக் காட்சி செருகிச் செல்கிறது.
பட்டமும் படிப்பும்: வேலைக்காரன் படத்தில் ரஜினி அறிமுகப் பாடல் 'வேலை இல்லாதவன்தான்' - இன்று வரை மனோவின் மிக முக்கியமான பாடலாக கருதப் பட்டு வரும் இந்தப் பாடலில் இரண்டு வரிகள் - படிச்சவுங்க வாங்குற பட்டம் காகிதம்தான் காகிதம்தான்; படிக்காதவன் விடுற பட்டமும் காகிதம்தான் இதன் கருத்துப் பதிவு இந்தப் படத்திலும் உண்டு. ஆமிர்க்ஹான் 'ராஞ்சோத் தாஸ் ஷ்யாமல் தாஸ் ஜானஜாத்' என்ற பெயரில் படித்து போரியல் இல நிலைப் பட்டம் பெறுவார், இவரை அதே பெயரில் தேடிச் செல்லும் நண்பர்களுக்கு அந்த பட்டம் அந்தப் பெயருள்ள இன்னொருவரிடம் இருப்பது போல் காட்டப் படும். இதில் நகைச்சுவை மழித்து விட்டு பார்த்தால், இன்றைய பட்டங்கள் வெறும் பெயருக்கு பின்னால், நமது வீட்டு வரவேற்ப்பரையில் தொங்க விட மட்டும் பயன் படுகின்றன - இன்றைய படிப்பிலும் பட்டங்களிலும் அறிவு தூண்டுதளுக்கான, சிந்தனைகளுக்கான ஊற்று - இவற்றுக்கான வெகுமதிகளாய் இன்றைய பட்டங்கள் இல்லை என்பதையே இந்த காட்சிகள் பதிவு செய்கின்றன
Education just begins with Books; misfortunate in this subcontinent it also ends there
4 comments:
புதிய பார்வை?
unmai thaan..., namathu kalvi koodangal mathipen nirambiya kuppaithottigal...,
namma oorla state first , second apdinnu release pannuvangalee adhu oru soothattam apdingurathu en opinion
குயில் எப்போதும் மற்ற பறவைகள் கூட்டில் தான் முட்டையிடும் என்றும், அதன் குஞ்சுகள் வெளியே வந்தவுடன் பிற பறவைகளின் முட்டைகளை கீழே தள்ளி கொன்றுவிடும். so, competition is over. the world begin with murder. எனவே போட்டி போடுபவன் தான் ஜெயிக்க முடியும் என்று சொல்லிச் செல்வதும் தற்கால ஓட்டத்தை அருமையாக சித்தரிக்கிறது. மேலும் சட்டையில் பட்டனுக்குப் பதிலாக ஒட்டும் முறையை வைப்பதும், இரண்டு கையால் எழுதும் பழக்கம் , நாக்கைத் துறுத்தியபடி ஒருமாதிரியாக பேசுவது போன்றவை நல்ல கேரெக்டரை சேஷன். நான் 3 முறை பார்த்த அருமையான படம். காட்சிகளிலும் நல்ல திரைக்கதை ஓட்டம். நல்ல படம்.
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )