Thursday, February 4, 2010

QUOTA - என்னும் ஒரு ஈன அரசியல் கும்மி.

பார்த்தீர்களா எப்படி ஒரு பார்பனீய சிந்தனை - என்று இந்தப் பதிப்பை குறிப்பிடுவோர்களுக்கும், பின்னூட்டம் போடப்போகும் பகிரவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களும், ஒரு ஒலி( ?? ) மயமான அரசியல் எதிர்கால வாழ்த்துக்களும்.

இன்றைய இந்திய அரசியல் திட்டத்தில் மிகவும் முக்கியமான் இடத்தை வகிப்பது இந்த 'இடஒதுக்கீடு' சார்ந்த சிந்தனை.முன்மொழியப் பட்ட காலத்தில், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும், ஒடுக்கப் பட்ட சமூகத்தினருக்கும் முன்னுரிமையை நிலைநிறுத்தி சட்டமாக இயக்கப் பட்டது இந்த இட ஒதுக்கீடு. அன்றைய காலகட்டத்தில் இது இல்லையென்றால் இன்று சில மக்கள் சுதந்திரம் என்பதின் உண்மை கூட தெரியாமலே வாழ்ந்திருப்பார்கள் என்பது உண்மையே. ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது எப்படி இருக்கிறது. ஒரு சரியான கருவி தவறான முறையில் பயன் படுத்தப்படுகிறது என்பதையும் மறுத்து விட முடியாது. இந்த ஒரு வார்த்தையினால் எவ்வளவு அரசியல் மாற்றங்களை, எத்தனை கலவரங்களை நமது நாடு சந்தித்திருக்கிறது என்பது உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
BOMBS DONT KILL; BUT BOMBERS - மக்களை அணுகுண்டுகள் கொள்வதில்லை ஆனால் அதை வைக்கும் மணிதன் என்று கேளிக்கையான ஒரு வரி உண்டு. இதில் உள்ள உண்மையை இந்த இட ஒதுகீடிர்க்கும் பொருத்திவிடலாம். ( அங்க யாருங்க - இட ஒதுக்கீட்டை எப்படி அணுகுண்டோட ஒப்பிடுறான் பாருன்னு கேக்குறது - உங்களுக்கு முடிச்சு போடுறத தவிர வேற வேல இல்லியா ???.) இது அரசியல இல்லை உண்மையிலேய இன்று அது சரியாக பயன்படுகிறது என்பதை விளக்கி உங்களுக்கு கொட்டாவி வரவைக்க வேண்டாம். சில கேள்விகள் மட்டும். முன்வைப்போம் அதுக்கு நம்ம சமுக மேம்பாட்டிற்கு பாபாபாபாபாபாபாபாபாபாபாபாடுபடும் தோழர் தோழிகள் விளக்கம் அளித்து என் மரமண்டைகளுக்குப் புரிய வைக்கட்டும்.
காலவரையறை
இந்த இடஒதுக்கீடு கடந்த 60 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வரையறுக்கப் பட்டிருக்கு ??? இதற்க்கு ஏதாவது கால வரையறை உள்ளதா? இன்னும் 50 வருடம், 100வருடம், 1000வருடம் என்று எங்காவது ஒரு வரையறை???. நமது அரசியல் அமைப்பில் காலவரையறை இல்லாத ஒரு திட்டம் இது !!!!. காலவரையறை இல்லாமல் எப்படி இதை செயல்படுத்தப் போகிறோம் ??? பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேறும் வரை - ஆஹா என்னே ஒரு முன்னேற்ற சிந்தனை, நல்லது - எத்தனை ஆண்டுகளில் அவர்களை நாம் முன்னேற்றம் அடைய செய்யப் போகிறோம் ?? , அதற்க்கு என்னவெல்லாம் எதுவாய் செய்யப் போகிறோம் ??, அது செயபடாத பட்சத்தில் மாற்று என்ன ??, இது செயல் இழந்த பட்சத்தில் யார் பொறுப்பு ??. அவருக்கு என்ன தண்டனை( செயல் படுத்த முடியாமைக்கு அவர் சரியான அடிபடையில் காரணம் சொல்லவில்லை என்றால் )??. ஒரு நீண்ட கால திட்டத்தை சிறு சிறு கால வராக பிரித்து அதற்க்கு எய்துவாய் செய்யலாம். அவவப்போது அதன் நடவடிக்கைகள் வெளியிடப் பட்டு அதன் முன்னேற்றங்கள் கண்காணிக்கப் படவேன்டாமா?. 
ஜாதி ஒழிப்பு - ஜாதிகளின் முன்னேற்றம் .
இந்த திட்டம் கடந்த வருடங்களுக்கு முன்னால் உருவானது அன்றய சூழ்நிலையில் இருந்த ஜாதிகளின் பொருளாதார அடிப்படையில் அவைகள் ஒவ்வொரு நிலையிலும் வைக்கப் பட்டு வகுக்கப்பட்டன. அதற்குப் பின்னால் இந்த அட்டவணை முழுமையாக எப்போது புதுபிக்கப் பட்டது??.இனி எப்போது செய்யப் படும் ??. இனிமேல்தான் செய்யப் போகிறார்கள் என்றால் ஏன் ஒரு முறை கூட செய்யவில்லை. ??ஜாதிகள் இல்லாத சமுகம் அமைப்போம் !! இன்றும் ஜாதி உள்ளன - பிறப்பின் அடிப்படையில். சரி இந்த அடிப்பையில் 60வருடங்களுக்கு முன்னால் பிற்படுத்தப் பட்ட ஒரு சமுகம் இன்று முன்னேறி இருக்கிறது என்றால் அவர்களை வேறு பிரிவன் கீழ் ஏன் கொண்டு வருவதில்லை ???. இன்று வரை தங்கள் ஜாதியும் பிற்படுத்தப் பட்ட ஜாதி என்று ஆக்கப் பட வேண்டும் என்று பல ஜாதிகள் போராட்டம் நடத்தப் பட்டு வருகின்றனவே. ??ஒரு ஜாதி அமைப்பு கூட நாங்கள் முன்னேறி விட்டோம் எங்களை முன்னேரியவர்களாய் மாற்றி பதிவு செய்யுங்கள் என்று போராட்டம் நடத்தினார்களா ?. ஒரு ஜாதி/மரபு கூட முன்னேறவே இல்லியா. - இந்த திட்டம் என்ன செய்கிறது ???
முன்னேற்றம்
முன்னேற்றம் என்றால் என்ன ? எதை நாம் அடிபடையகக் கொண்டு இவர்கள் முன்னேறியவர்கள் இவர் இன்னும் முன்னேறவில்லை என்று வரையறுக்கிறோம். கல்வி, உணவு,சொத்துக்கள், சிந்திக்கும் நிலை, எதனை முன்னிறுத்தி இந்த முன்னேற்றத்தின் சக்கரம் சுழல்கிறது. மாதம் இவ்ளோ ரூபாய் சம்பாரிக்கும் ஒரு குடும்பம் முன்னேறி விட்டது, இவ்வளவு படித்த ஒரு குடும்பம் முன்னேறி விட்டது, இவ்வளவு ஒரு நாளைக்கு உண்ணும் குடும்பம், இவ்வளவு சிந்திக்கும் ( ?? ) ஒரு குடும்பம் முன்னேறி விட்டது ?? இதன் அடிப்படையில் முன்னாளில் முன்னேறியதாக அறிவிக்கப் பட்ட ஒரு சமுகத்தின் ஒரு பிரிவினர் அல்லது ஒரு குடும்பத்தினர் இருந்தால் அவர்களுக்கு இந்த அடிபடையில் முன்னிரிமை வழங்க முடியுமா. ???.
பொது

இவ்வளவு முக்கியமான வாழ்வியல் அடிப்படைக்கு வழி வகுக்கும் ஒரு விஷயத்தை பள்ளி பாடப் புத்தகங்களில் ஏன் நாம் பாடங்களாக விளக்கமாக படிப்பதில்லை???. சிறு வயது முதல் இதன் புரிதல் ஏன் மக்களுக்கு வழங்கப் படுவதில்லை ?? இதை செய்து விட்டால் நம் நாட்டிற்க்காக உழைத்து ஓடா.......ய்த் தன் வாழ்கையை தேய்த்து கொண்டிருக்கும் சமுக சேவர்கள் வேலை இன்னும் சுலபமாகி விடுமே. ?? பாலியல் கல்வியை விட இதை பற்றிய அறிவு முக்கியம் அல்லவா ??.
முடிவுரையாக அல்ல ஒரு வாழ்த்துரையாக இது அமைக
இது நிச்சயமாக முன்னேற்றத்திற்க்காக வழி வகுக்க வேண்டும் என்றால் வெறும் மேடை பேச்சுக்கள் / வோட்டு பிச்சை என்பதை விட்டு சீரான திட்டம் வரையறுக்கப் பட வேண்டும். அது இல்லவே இல்லை என்பதைத்தான் இந்த கேள்விகள் விளக்க உதவும்.இந்த கேள்விகளை ஒரு மட்டமான ஜாதி வெறி சாயம் பூசுவோருக்கு முன்னர் கூறியது போல் நமது அனுதாபங்கள் மட்டுமே. மத்தபடி இந்த முறை இன்றளவும் ஒரு பினவைப்பரையாக; ஜாதியை அப்படியே ஒரு நிரந்தர பிரச்சனையாக வைத்திருக்க மட்டுமே உதவுகிறது. இந்தப் பதிவின் நோக்கு இந்த முறை வேண்டாம் என்பதல்ல, இன்றளவும் சரியாக பயன் படவில்லை, 60வயதாகியும் இந்த குழந்தை இன்னும் தவழக் கூட வில்லை. இதற்க்கு காரணம் பார்ப்பனீய ஆதிக்கம் என்றோ இல்லை ஏதாவது ஒரு சாதியினரையோ நீங்கள் குறிப்புடுவோர் என்றால் இந்த பதிப்பை முதலிலிருந்து மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

14 comments:

ஜெயக்குமார் said...

Very good and correct post.. Speaking about the quota itself a crime now a days.. Unfortunately, financially sound people grab all the opportunities and poor backward community remains poor for ever. They keep these mass as mass only. No one wants to develop them..

Really it is atrocious that one country could not develop its backward community people for 60 years.. and it is agreeing this fact by extending this quota by every 10 years..

Joke of the world..

பேநா மூடி said...

நல்ல கருத்து தல..., மக்கள் என்னிக்கோ கோடிக்கணக்கான ஓட்டுகளாக மாறியதன் விளைவே இது

பேநா மூடி said...

தல... அதுக்குள்ள மைனஸ் போட்டுட்டாங்க பாத்திங்களா....

அண்ணாமலையான் said...

very gud one

Anonymous said...

bad measage

Anonymous said...

Quota system is there only for past 60 years but they were suppressed for centuries! There is nothing wrong in giving reservation for another few thousand years.

ஸ்ரீநி said...

reservation for another few thousand years.
me too fine about it. But why dont we confirm it in the public.

they were suppressed for centuries! - is this a revenge you are trying to justify. Get checked by a psychyatrist my freind

Anonymous said...

If Quotas are withdrawn, the position will be status quo ante i.e. the brahmin-bania gang of Indians will take over everything, as they did in the past.

It further means the gang is still powerful. They are just licking their wounds. Wounded tigers. More dangerous than before.

So, other people are to guard their lives from the tigers. Quota is just a barbed fence to protect the erstwhile slaves from not falling again into slavery to the gang of brahmin-bania.

India is not just for the gang. But for others too.

History repeats itself. But by taking espcial care, we can ensure it does not.

Eternal vigilance is the price of democracy. We must be vigil ever in our interests.

ஸ்ரீநி said...

folks have the courage to comeout with your name when it matters.
Quotas are withdrawn - did i said that here ???.
i suggest you give a read again friend

hayyram said...

//எத்தனை ஆண்டுகளுக்கு வரையறுக்கப் பட்டிருக்கு ??? // எத்தனை வருஷம் ஆனாலும் அதன் மூலம் சுகம் கான்பவர்கள் அதை விடமாட்டார்கள். அதாவது இப்போ இருக்கும் அரசியல் வாதிகள் பார்ப்பனீயத்தை தலைகீழ் வரிசையில் நடத்தப் பார்க்கிறார்கள். பொருளாதார ரீதியாக உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்களை வாழ வழியற்றவர்களாக செய்து விட்டு மற்றவர்கள் அவர்களை ஆதிக்கம் செய்யும் நிலை வர வேன்டும் என்றே முயற்சிக்கிறார்கள். இது சமத்துவமா என்பது எப்போது புரியும்?. ஜாதி இல்லை என்றும் ஜாதி ஒழியவேண்டும் என்றும் சொல்பவர்களிடம் ...நாளை முதல் ஒதுக்கீட்டு முறை ரத்து என்று சொல்லிப்பாருங்கள். ஐயைய்யோ ஜாதி வேண்டும், ஜாதி வேண்டும் என்பார்கள்.

hayyram said...

உண்மையான சமூகக்கருத்துக்களை தொடர்ந்து கையாள்கிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர் said...

பிற்படுத்த பட்டோருக்காக பாபாபாபாபாபாபாடுபடும் தோழர், தோழிகள் கண்ணில் இந்த பதிவு படவில்லை போலும், நேர்மையான பதிலை காணவில்லை.

தொடரட்டும் உங்கள் நேர்மையான அணுகுமுறை.

ஸ்ரீதர்

சாலிசம்பர் said...

இட ஒதுக்கீட்டை முற்றிலும் நீக்குவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.அப்படியே இடஒதுக்கீடு இல்லாமல் , திறந்த முறையிலேயே கல்வி,வேலை வாய்ப்புகளில் தேர்வு செய்தாலும்,முற்பட்ட சமூகம் தங்கள் மக்கள்தொகைக்கு ஏற்ற எண்ணிக்கையில் இடங்களைப் பெற இயலாது என்பது தான் தற்போதுள்ள‌ சூழ்நிலை.எனவே முற்பட்ட சமூக மக்களுக்கும் இட ஒதுக்கீடு செய்வது தான் இப்போதைய தேவை.ஆனால் இது ஒரு மோசமான தீர்வு.இந்து பத்திரிக்கையில் சாதி குறிப்பிட்டு விளம்பரம் செய்வதை நிறுத்தினால் ஒழிய (இது இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும்)இடஒதுக்கீடு பிரச்சினை முடிவுக்கு வராது.

BalajiVenkat said...

As far i'm concerned, a law without a time limit of execution will led to disastrous side effects.. politicians now using this a weapon to come power. so u should not expect them to bring those really needed will come forward.. if people have very good futuristic thinking, they wont vote and elect appropriate leader. enraiku kodigaluku votu enru intha maakal mari ponargalo athan pin nalla arasu varum ithu mathiri makalai mutalgalakum oru satam nadaimuraiyil irukum enru ethir noka thevai illai.. makalukaga inru enth oru arasum unnamaiyana munetra nokodu padu padum oru arasu varum vaarai irukum satangalai oru karuviyaga (Nalla karuvi thavaraga) payanpaduthapadum...
parpanai kutram soliye intha arasu makalai ematri kodnu irukirathu... unamayileye intha maatram vara vendum anaivarum samamaga iruka vendum enru poradiya perum makkal intha parapaniya inathai serthavargalum thaan enbathai yarum maranthuvida vendam... oru paanai sotruku oru soru patham ... subramaniya bhrathiyar... avar thamathu samugathil irukum aniyaagalai poki samathuvam vara padu patar... oru samaugathil thavaru nadakirathu enbathai antha samugathil irukum oruvaral matumey nangu purinthu kolla mudiyum... naan anru iruntha brahmanargalai avargalin sindathangalai mutrilum erkavillai.. athil sila thavarugal nadakathaan seithathu... athai thiruthi kondu vitargal thavaru seithavan epoluthum thandanaikuriyavan enru soluthal oru nalla sindanaivathiku alagala.. athey pola thavarai unarnthu athai thiruthi kondavani vida anubavasali yavarum illai enbathayum purinthu kola vendum... ivargaluku ivargal seum pizhayai sutti katinal nee paarpanan endru solli othuki thalluvathu oru escapism thaan...

naan niraya eltha vendum endru ninaikiren.. aanal eno manathu ithodu mudithukol endru solgirathu.. meendum pesuvom varum bathilgalai poruthu...

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )