Friday, April 16, 2010

FACING GOLIATH - வாழ்கையை மாற்றும் 48 நிமிடங்களாகட்டும்

நம் அனைவருக்குமே ஒருமுறையாவது இன்றோடு இந்த நிமிடத்தோடு வாழ்கை முடிந்து விட்டால் நன்று என்று தோன்றும். இது மகிழ்ச்சியின் உச்சத்தில் அல்லது தோழ்வியின் முனையில் தோன்றும். இன்னும் அதிகமாய் தோழ்வியின் உச்சத்தில் இன்றோடு முடிந்தது இனி என் செய்வது, ஏன் வாழவேண்டும் என்று புரியாமல் ஒரு சூழல் ஏற்படும். இதைப் பற்றிய ஒரு ஒளிப் பதிவுதான் இந்த குறும்படம்.

ரே( RAY ) தன்னுடைய பிறப்பால் மிகக் குறைவான பார்வை கொண்ட மனிதர். தன்னுடைய 51 வயதில் இருக்கும் இவருக்கு இன்னும் சில நாட்களில் வலது கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை தேவை ஏற்படும் நிலையில் இந்த காட்சிகள் நகர துவங்குகின்றன. இந்த நேரத்தில் ரே ஒரு உடற்பயிற்சி கூடத்தில் சேருகிறார். செபஸ்டியன்( SEBASTIAN )  என்ற உடற்பயிற்சியாலரை சந்திக்கிறார். சில தினங்களில் நடக்கவிருக்கும் மாநில அளவிலான உடற்பயிற்சிப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள் என்ற செபஸ்தியானின் வேண்டோகோளுக்கு இணங்க ரே வழக்கை ஓட்டம் மாறுகிறது. இருவரும் போட்டியில் பங்கு பெறுகின்றனர். செபஸ்டியன் மட்டும் அந்த போட்டியில் வெற்றி பெறுகிறார். மேலும் ஹாலிபாக்ஸ் கனடா வில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு முன்னேறுகிறார். அங்கு ரே சிறப்பு பங்கேற்பாளராக அழைக்கப் பெறுகிறார். அந்தப் போட்டியில் செபஸ்டியன் வெற்றி அடையவில்லை. ரே தனது சிறப்பு தோற்ற கட்சியை நிறைவு செய்கிறார். திரையை இருள் சூழ்கிறது நமக்குள் ரே - ஒளி பிறக்கிறது. ரே என்ற மனிதரை பார்கையில் பாரதி பாடி அழைத்த ஒளி படைத்த கண்ணும் உறுதி கொண்ட நெஞ்சும் காணக் கிடைக்கின்றன. இயல்பாக தெளிந்த நீர்போல் ஓடும் கட்சிகளும், அதற்க்கு நேர்த்தியாய் இசையும் நிச்சயமாக நொடிக்கு நொடி பயனுள்ளவை. நம்பிக்கை, விடாமுயற்சி, போன்ற வார்த்தைகளை பேசாமல் பேசும் காட்சிகள் வெற்றி என்ற வார்த்தைக்கு பொருளை மாற்றிவிடுகின்றன.


3 comments:

geethappriyan said...

அருமையான பகிர்வு நண்பா

சாமக்கோடங்கி said...

படத்தைப் பார்த்து விட்டு வருகிறேன் நண்பா,.

Paleo God said...

இதானா சங்கதி? :))

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )