Thursday, January 28, 2010

VEER - திரை விமர்சனம்


சில வெகுஜன ஊடகங்களால் கொள்ளப் பட்ட ஒரு படத்தை நீங்கள் இதுவரை பாதிருக்கிருரீர்கள ? ஒரு படத்தை பார்த்துவிட்டு தேட்டரவிட்டு வெளில வரும் போது உங்களுக்கு 'இந்தப் படம் ஏன் ஓடலேன்னு......... தொநிருக்கா' ? அந்த உணர்வு VEER படம் பாத்துட்டு வெளில வரும்போது  ஏற்ப்பட நான் உறுதி அளிக்கிறேன். வீர் - இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து வெளிவந்து தொபுக்கடீர் ஆனா 6ஆவது ஹிந்தி படம்( இதில் SHARUKHகோடா ஒரு படமும் - DULHA MIL GAYA அடக்கம் ), தொடர்ச்சியாக மண்ணைக் கவ்விய சல்மானின் 3ஆவது படம் ( போக்கிரி ரீமேக் - WANTED ஹிட்டுக்கு அப்புறம் ). இந்த வருடத்தின் சிறந்த படம் என்று வீர்-படத்தை சொல்லவே முடியாது - அனால் ஊடகங்கள் விமர்சிக்கும் அளவிற்கு மட்ட ரக திரைப் படம் என்றும் நாம் ஒத்துக் கொள்ள முடியாது.
வீர் முழுக்க முழுக்க ஒரு வரலாற்றுப் படம், எல்லா வரலாற்றுப் படங்களுக்கும் உள்ள ஜலேபி சுத்துக்கள் இதிலும் உண்டு. இந்த படத்தில் பேசப்படும் காலம் -1875. இடம் இன்றைய -Baluchistan. இந்த இடங்களில் வாழ்ந்து வந்த பழங்குடியினரான பின்டாரிகளை[PINDARIS] ஒரு அண்டை நாடு மன்னன் [ ஜாக்கி ஸ்ரோப்ப் ] ஆங்கிலயர்களிடம் அடகு வைக்க முயல்கிறார். அவுங்க வெகுண்டு எழ ஒரு இளைஞன்[மிதுன் சக்ரபர்த்தி ] தலைமையில்  போராட, ஆங்கிலேயர்கள் தன்னுடைய பீரங்கி முனையில் அதை தகர்கின்றனர். தன்னை ஏமாற்றி விட்டான் என்று அந்த மன்னனின் வலது கையை அந்த இளைஞன் வெட்டிவிடுகிறான், அங்கிருந்து தப்பித்து தன கூட்டத்தை சந்திக்கிறான். ஆங்கிலயரையும், அந்த மன்னனையும் தன கரங்களால் வெட்டி கூறு போடுவேன் இல்லையேல் மடிவேன் என்று சூளுரைக்கிறான்; தன்னுடைய சில சகாக்களுடன் வேறு புலம் எய்துகிறான். அங்கு அவனுக்கு வீர் [ சல்மான் ] பிறக்கிறான். தன்னுடைய தினப்படிக்காக இவர்கள் வழிப்பறி செய்து பிழைகின்றனர்.
இந்த சூழலில் வீரரும் அவனுடைய தம்பியும் வழர்ந்து அவர்களும் வழிப்பறி செய்கிறார்கள். சல்மான் என்ட்ரி. ஒரு ரயில் வண்டியில் ஆங்கில பொருட்களை கவர்கின்றனர். அப்போ இன்னொரு பெட்டியில் ஒரு இந்திய ராஜ குடும்பம் இருப்பதைக் கண்டு அதுக்கும் போறாங்க. அங்க செம அழகான அரசிலன் குமாரியை- யசோதராவை சந்திக்கிறார். சாரின் கான் என்ட்ரி. பாத உடனே காதல் வயப் படுகிறான் வீர். சில நாட்களில் அங்கிலயர்களை பற்றி தெரிந்து கொள்ள, கல்வி கற்க ப்ரிடைனுக்கு அனுப்ப படுகிறான். அங்கே வீரோட ஆங்கில எதிர்ப்பும், கைல்கூளிகள் எதிர்ப்பும், யசோதராவை சந்திப்பு அவளுடன் காதலும் வழுக்கிறது. யசோதரவின் சகோதரர்கள் - ஆங்கில கைகூலிகளை, ப்ரிடைனில் கொன்று விட்டு தாயகம் திரும்புகிறான். டி போண்டா வட பச்சிசிசிசிசிசிசிசிசிசிசிசி.
மீண்டு வந்த வீர் யசோதராவை மணக்கிறான், போராடி ஜெயிக்கிறான், தன்னையும் ஈந்து அமரப் படுகிறான். படம் முடிஞ்சுது.
ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஹீரோ வீரமா[ எந்த வித வியாதியும் இல்லாம, காதலுக்காக இல்லாம ] சாகுறான். பிண்டாரிகள் என்ற வழிப்பறி செய்யும் குழுக்களின், கதைக் களம் -  நம் பாராட்டுகள். இந்த பிண்டாரிகள் பற்றி ஒரு தகவல், இவர்கள் கவைப் போர் வீரர்களும். தன்னுடைய போரற்றளுக்கு மிகவும் பெயர் போன இவர்கள் உடன்படிக்கையின் பெயரில் பல மன்னர்களுக்கு போரிட்டு உள்ளனர். போர் வெற்றி பெற்றால் முதல் 5நாட்கள் கவரப் படும் பொருட்கள் இவர்களுக்கு சொந்தம் என்ற உடன்படிக்கையில் இவர்கள் மற்ற மன்னர்களுக்கு போர் புரிந்ததா வரலாற்றுக் குறிப்பு. ஹிந்தி பஞ்சாபி, லாட்தி[ இந்த பழங்குடியினரின் வழக்கு மொழி ] போன்ற மொழிகளின் தழுவலுடன் வந்த மொழியாக்கம் நிச்சயம் அருமை. இசை அமைப்பாளர் கூலிக்கு கம்பி மீட்டிருக்கார். கேமராமேன் சாரின் க்ஹனை மட்டும் பாத்து ஜொள்ளு ஊத்திருக்கர். இவுங்களோட சேந்து தன பங்கிற்கு எடிட்டர் மாரடிதிருக்கிறார். இந்தப் படத்தின் உடையில் வல்லுநர் [ COTUME DESIGNER - கரெக்டா ?? ] மட்டும் என் கையில கெடசாரு........ அவருடைய உடையில ஒரு வழி பண்ணிருவேன் நூற்றாண்டின் ஹீல்ஸ் செருப்பு, பிரிட்டிஷ் கௌன், அரச கால உடைகள், போர்கல உடைகள் என்று எல்லாமே காமெடி பண்ணி இருக்கிறார் .
HIGH HEELS - முதன் முதலில் 1660 Nicholas Lestage என்பவரால் பதினான்காம் லூயிக்காக வடிவமைக்கப் பட்டது. ஆனால் ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு புரட்சியில் வழக்கொழிந்து போய், மீண்டும் 1960கலீல் உலகப் புகழ் அடைந்தது. இது கதையின் சூழலுக்கு காலத்திற்கு எப்புடி சேரும் ????
BRITISH GOWN -  HIGH TEA PARTY GOWNS, BALL ROOM DANCE FROCKS போன்ற பொது இடங்களில் அணியப்படும் அணைத்து கௌன் வகைகளும் முழுக் கைகளுடன் இல்லையேல் கூடுமான வரை முழுக்கைகளை மறைக்கும் விதமாக உரைகளுடனாவது இருக்கும்[ ஐரோப்பாவின் அன்றைய தட்ப வெப்பம் காரணமாக / ஆனாதிக்கம்னும் சொல்லலாம் ]. படத்தில் பெரிய மிஸ் - பெருவாரியான கெளன்கள்-  அர கைகள், இன்னும் அபத்தமாய் சில வற்றில் கைகளே இல்லை.

இன்னும் பல இடங்களில் LKG,UKG பிள்ளைகள் அளவிற்கு சறுக்கி சந்தோசப் பட்டிருக்கிறார். ஹாலிவுட் உடயியல் வல்லுனர்கள் இது போன்ற ஒரு வாய்பிற்காக காத்திருக்க, கிடைத்த ஒரு தங்கமான வாய்ப்பை மெகா சீரியல் உடைகளை வைத்து சமாளித்திருக்கிறார். உங்களுடைய அடுத்த கேளிவிக்கு பதில் வீர் ஒரு மெகா பட்ஜெட் படம். இயக்குனரை மனமார பாராட்டி நன்றியும் சொல்கிறோம். சாரின் கான் - ஒரு வளம் வருவார் ( சல்மானின் கனவுக் கன்னி KATRINA மார்க்கெட் இழந்தால்!!! ). ரசிக்கவும் முடியும் சில நேரங்களில் சகிக்கவும் வேண்டும் என்ற சல்மானின் கோட்பாட்டில் இந்தப் படம் விதிவிலக்கல்ல.
ஜோதா அக்பரின் வெளியீடு தேதியில் வெளியிடும் அதே சூட்சுமத்தை கொண்டு வந்த இந்தப் படம் வெற்றி இல்லை. ஆனாலும் தோல்வி இல்லை

5 comments:

ஜீவன்பென்னி said...
This comment has been removed by a blog administrator.
பாலா said...

விமர்சனத்தை விட... இந்தப் பதிவில் என்னை அதிகம் கவர்ந்தது எதுன்னு கேட்டீங்கன்னா.......


எழுத்துப்பிழைகள்-ன்னுதான் சொல்லுவேன்!! :) :)
--

கொஞ்சம் சரி பண்ணுங்க தல! :)

ஹாய் அரும்பாவூர் said...

ஹிந்தி படத்தை விடுங்க கோவா ,தமிழ் படம் பார்த்து நல்ல விமர்சனம் பண்ணுங்க
இந்த இரண்டு படத்தின் வெற்றியில் தான் அரை குறை நடிகர்களின் பந்தா படத்தின் அலப்பறை குறையும்
அவர் mr X & mr Y

பாலா said...

ஹலோ.. நான் போட்ட கமெண்ட் எங்கே?? :) :)

--

கோவிச்சிக்கிட்டீங்களா?? :(

மாதேவி said...

படித்தேன். பார்ப்பது பற்றி யோசிப்போம்.

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )