Tuesday, February 23, 2010

ஒருத்திக்காய் நனையாமல் இருக்கும் சுவர்கள்

அவளுடைய மஞ்சளின் நுன்மேனிகளில்
இன்னும் கட்டுண்டு கிடக்கும்
கற்பு குலைந்த கம்பளிகள்
 
அவள் பருகி மறுதலித்த
என்னுடல் கொப்பளங்களில் கருத்தரித்த
நிமிடங்களை அடைகாக்கும் மெத்தைகள்
 
ஒவ்வொரு காலையிலும்
நீயா நெற்றியில் சூடு பரப்புவது ??
என்று பால்காரன் விரல்களில்
ஏமாந்து போகும் அழைப்புமணி பொத்தான்கள்
 
நீ எப்போதாவது உதட்டழகை மறைக்கப்
பூசும் உதட்டுச் சாயங்கள்
மூண்டு கிடக்கும் அலைபேசி த்வாரங்கள்
 

இன்றும் நீ மூட்டிய கனலை
விதைத்துக் கொண்டு உன் ரேகைகளாய்
பிரகாசிக்கும் விளக்கின் திரி முனைகள்
 
உன்னால் தன்னுடல் பிரிந்த
துளசி இலைகள் இன்னும்
உனக்காய் உயிர் பிரியாமல்
திருமேனிகளின் திருவடியில்
 
முதுகுப் புறங்களில்
நீ வருடுவதில்லை என்று
முகங்களில் மொங்கோளியக் கண்களில்
கதிர் மறுக்கும் சாலரச் சீலைகள்

எனக்குள் ஆர்கிமெடிஸ்
அழைத்துவரும் உன்னுடன், மட்டுமே
நனையக் காத்திருக்கும்
குளியலறை சுவர்கள்

பெற்றவர்கள் அழைத்தார்கலென்று
என் கண்மறைவில் பிள்ளை பெறுவதற்க்காய்
கை கடிகாரம் போல்
என்னை கழற்றி வைத்துப் போன உன்னை
இவைகளோடு அற்றிணையாய் நின்று விளிக்கிறேன்
வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும்
நேரங்களை பிதிக்கி
உன்னை நொதித்து கொண்டிருக்கும்



ஒருவன்





மனசாட்சி : பண்றதெல்லாம் பண்ணிபுட்டு, கவிதை வேற

3 comments:

அண்ணாமலையான் said...

மிக அருமையா இருக்கு... அனுபவம்?

Unknown said...

மிக அருமையா இருக்கு.. vaalthukkal..

Unknown said...

நல்லா இருக்குங்க...,ஆனா ரெண்டாவது தடவ படிச்சதும் தான் புரிஞ்சது

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )