Wednesday, March 24, 2010

நட்டரங் - மராத்தி - திரைவிமர்சனம்

எல்லா மொழி திரைப்படங்களுக்கும், இன்று தமிழில் விமர்சனங்கள் படிக்கக் கிடைக்கிறது. தமிழைத், தவிர ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஸ்பானிஷ், கொரியன், ஜெர்மன் ஏன் இன்னும் பெங்காலிக்கு கூட தமிழில் விமர்சனங்கள் கிடைக்கின்றன. இதில் ஒரே படத்திற்கு பல பேர் எழுதிய விமர்சனங்கள் கூட படிக்கக் கிடைக்கும். இது வரை ஒரு மாரட்டிய மொழி திரைபடத்திற்கு யாரும் விமர்சனம் எழுதிப் பார்த்ததில்லை. இது முதல் முயச்சி; எனக்கு தெரிந்தவரை. இல்லை என்று மறுப்பவர்கள் கமெண்ட்ஸ் குட்டிவிட்டுப் போகவும்.
அவதாரும் 3-முட்டாள்களும், இந்தியா முழுவதும் திரைகளை நிறைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் " ஆங்கோர் காட்டினில் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்று உண்டோ ". என்று இந்த மாராத்திய திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரன் திரைப்பட வில்லன் அதுல் குல்கர்னியின் மிகச் சிறப்பான நடிப்பில் zee டாக்கீஸ் தயாரிப்பில், இந்தப் படம் நாடகம் அதன் கலைங்கர்கள் பற்றிய மிக அழகான பதிவு.

குணா ( அதுல் குல்கர்னி ) , கட்டு மஸ்தான இந்த விவசாயிக்கு நாடகங்களில் ராஜா வேஷத்தில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பது கனவு. சேமிப்பிலாமல் - நாடகங்கள் பார்க்கும் இந்த கிராமவாசி  சில காலத்திற்குப் பிறகு தமாஷா வகை நாடகங்களில் நடிக்கவும் ஆரம்பிக்கிறான். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் நேரத்தில் ஒரு கேள்வியை/ சவாலை  எதிர் கொள்கிறான், இப்படி ஆணாக இருந்து ஆணாக நடிக்கிராயே, ஒரு திருநங்கைய ( NACHYA ) நடிக்க முடியுமா என்று சராசரியான ஒரு ஆணின் கேள்வியாக இல்லாமல் ஒரு நாடக காதலனாய் குண எனக்கு நாட்டியம் தெரியாதே என்கிறான். கதை அடுத்த பரிமாணத்தை அடைகிறது.

அந்த நாடக கூட்டத்தை சேர்ந்த ( மிக அழகிய ) பெண் குணாவிற்கு நாட்டியம் சொல்லித் தருகிறாள். இது அல்லாமல் குணா தன்னுடைய மிரட்டலான உடலை இழக்கிறான். கோலம் அழிகிறான். ஒரு நளினமான உடல் தோற்றத்தை அடைய முற்படுகிறான். தன்னை சுற்றி உள்ள பெண்களின் அசைவுகளை பார்த்து பழகவும் செய்கிறான். ஒரு நாள் திருநங்கை கோலத்தில் மேடையேருகிறான் குணா. குணாவின் சகாக்களும் நாடகத்தின் சிறப்பரிந்தவர்களும், அந்த நாடக குழுவை சார்ந்தவர்களும் குணாவைப் பாராட்டி மெச்சுகின்றனர். ஆனால் இப்படி ஒரு வாழ்கை தேவை இல்லை என்று குடும்பம் அவனுக்கு தடையாக இருக்கிறது. ஒரு நீண்ட நாடகப் பயணத்திற்குப் புறப்படும் குணா உறவுகள் தொலைக்கிறான்

குணாவின் பாத்திரம் அந்த நாடககுழுவிர்க்கு வலு சேர்க்கிறது. அந்த நாடக குழு அக்கம்பக்கங்களில் பிரபலமடைகிறது. சாதாரண குழுவாக இருந்த அந்த குழு பல இடங்களுக்கு சென்று நாடகம் நடத்துகிறது. புகழின் உச்சியில் இருக்கும் குணா தன்னுடைய திருநங்கை கோலத்திலேய வாழவும் துவங்குகிறான். அதற்காய் நொந்தும் கொள்கிறான் இடையில் அர்ஜுனன் பத்திரத்தில் மேடை ஏறுகிறான் குணா. இவன் ஒரு திருநங்கை - இவன் அர்ஜுனனாய் நடிக்க கூடாது என்று கலவரப் படுகின்றனர் பாமர ரசிகர்கள், நாடக மேடை தீக்கிரை ஆகிறது. அந்த வேலையில் குணா ஒரு பழைய பகை காரணமாக , அந்த ஊர் பெரிய மனிதாரால் கடத்தப்படுகிறான். ஒரு திருநங்கையாக வன்புணர்ச்சிக்கு ஆளாகிறான். சுயம் அழிகிறான் குணா தான் சேர்த்த பெயர் புகழ் அனைத்தும் கானல்நீராய் கலைகையில் ஊர் திரும்புகிறான். உறவுகள் மறுக்கின்றன. சுற்றமும் மறுக்கிறது. துணையாய் நின்ற நட்பும் கலைகிறது. என்னுடைய அனைத்தும் இந்த நாடகத்தில்தான் தொலைத்தேன், இதிலிருந்துதான் மீட்பேனென்று சூளுரைக்கிறான். இவன் வாழ்கையை தடம் மாற்றிய அந்த நாட்டியக்காரி மட்டும் இவன் துணை நிற்க மீண்டும் அதே பயணத்தை துவங்குகிறான். வெற்றி, சுபம்.

வடஇந்தியாவில் முன்னமே தனக்கென்று ஒரு அடையாளம், ஒரு முத்திரை வைத்திற்கும் அதுல் குல்கர்னி, இந்த படத்தின் மூலம் இன்னொரு நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டுஇருக்கிறார். CASTWAY - படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக TOM HANKS பக்தர்களாகி விடுவார்கள், அவருடைய உடல் எடையை கூட்டி , குறைத்து, கூட்டி என்ற உழைப்பிற்காக. அதன் பின் உலகெங்கும் இதை போல் முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் இந்தப் படத்தில் அதுல் குல்கர்னி ஒரு சராசரியான கட்டுமஸ்தான விவசாயியின் உடலையும் ஒரு நாடக திருநங்கையின் உடலையும் தத்ரூபமாக காணத்தந்து நிறைவு செய்கிறார். ஒரு திருநங்கையின் உடல் அசைவிலும், ஆணாக இருந்து கொண்டு திருனங்கயாய் வாழும் காட்சிகளிலும், குழப்ப நிலையில் நம்மையும் கட்டி கொண்டு அழுதுவிடுகிறார். தன்னுடைய முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு இந்த படத்தின் இயக்கத்திலும், காட்சி அமைப்பிலும் இயக்குனர் மகுடம் சூடி இருக்கிறார். இசை - ஒரு கிராமிய இசையின் பாந்ததுடன், மாராத்திய மண்ணின் அனைத்து கிராமிய இசையையும் கலந்து மீட்டி இருக்கிறார். லாவணி வகை நடனப் பாடல் தூள்.

மலையாளத்தின் 'சாந்துபொட்டு' படம் தமிழில் விக்ரம் நடித்து ராஜாவேஷமாக வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திறிகிறோம். விக்ரமிற்கு நட்ரங் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையும். எந்தப் படம் பார்பதாயினும் அந்த மொழியின் அறிவு வேண்டும். அதுவும் இந்தவகை கிராமிய மொழிப் படத்திற்கு கண்டிப்பாக தேவை.  ஆனால் நீங்கள் ஒரு நர்சினிமா காதலறேன்றால் இந்தப் படம் உங்களுக்குத்தான் - மொழி ஒரு தடையல்ல.

உங்களுக்கு இந்தப் படத்தின் ஒலித்தட்டு கிடைக்கவில்லைஎன்றாலோ , டோர்றேன்ட்டுகள் கிடைக்காத பட்சத்திலும். இந்த படம் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள், உங்கள் தொடர்புக்கான எண், அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரி பின்னூட்டவும் ( COMMENTS - உங்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும் ) , விரைவில் நான் சென்னை வருகையில் இந்தப் படத்தின் ஒரு காட்சி (ஆங்கில SUBTITLEகளுடன் )ஏற்பாடு செய்து, உங்கள் அனைவரையும் சந்திக்க எண்ணுகிறேன்.

4 comments:

Sundaralakshmi said...

hi,

Marati padam vimarsanam arumai.

Vimarsanam padikkum pothae, katchigalai kanbathupol irukkirathu.

Padam kandippaka parka vaendum.

Pira mozhi padangalum parkanum yendra interest varugirathu.

Thanks for making us to know about Marati films.

Chitra

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நண்பா மிக அருமையாக உள்ளது உங்க விமர்சனம்.
வாய்ப்பிருந்தால் பார்க்கிறேன்.பதிவு எழுதிய நேரம் போக பிறர் பதிவுக்கும் போய் கருத்து போட்டு ஓட்டு போடுங்கள்,உங்கள் எழுத்துக்கள் எல்லோரையும் சென்று சேர உதவும்.:)

மயில்ராவணன் said...

நண்பரே மிக அற்புதமான படம் போலும்...நன்றாக எழுதி இப்படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள்.சீக்கிரம் சென்னை வந்து ‘Fishermen cove'ல ரூம் புக் பண்ணி இப்படத்தைக் காண்பியுங்கள். நன்றி.

Anonymous said...

ada//marathi movie pathuruka..good..

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )