Tuesday, March 9, 2010

ENGLISH IS A FUNNY LANGUAGE - எப்படி ?? பகுதி - 1

ENGLISH IS A FUNNY LANGUAGE என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இதை மிகையாக சொல்வதென்றால் சென்னையில் உள்ள அனைவரும் இந்த ஒரு வரியை ஒருமுறையாவது சொல்லி இருப்பார்கள். ஆனால் எப்படி என்று கேட்டுப் பாருங்கள் மிகச் சிலரால மட்டுமே இதை விரிவுரைக்க முடியும். இந்தப் பொருளை அனைவருக்கும் கொண்டு செல்வது என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஆங்கிலம்
அவர்களுடைய தோல் நிறத்தை வைத்து பறங்கியர் என்றும் வெள்ளையன் என்றும் இந்த கலோனிய வெளிநாட்வர்களை நாம் கூறிவந்தோம். இங்கிலீஷ் - தாய் மொழியாகக் கொண்ட கிழகிந்திய கம்பநியர்களை, பிரிட்டிஷ் நாட்டவர்களை,  ஆங்கிலேயர்கள் என்று எப்படி நாம் அழைக்கிறோம் ?. தமிழ் பேசுவோர் தமிழர், தெலுங்கு பேசுவோர் தெலுங்கர் என்றால் - இங்கிலீஷ் பேசுவோர் இங்கிலேயர் தானே அதெப்படி ஆங்கிலேயர்கள் ஆனார் ?. ஆங்கிலேயர்களின் சமகாலத்தில், இந்தியாவில் இருந்த மற்ற கோலோநியர்கள் - DUTCH, பிரெஞ்சு , போர்துகேசியர்கள் மற்றும் டென்மார்க்காரர்கள். இவர்களில் தமிழகத்தில் ப்ரிடிஷர்களுக்கு இணையான முனைப்போடு இருந்த இன்னொரு COLONYயகம் பிரெஞ்சு கொலனிகள். பிரெஞ்சில் ENGLISH என்ற சொல்லிற்கு இணையான சொல் ஆங்க்லேஸ்( Anglais )  ஆகும்,  ப்ரிடிஷரை இவர்கள் 'ஆங்க்லேதார்' என்பர். இந்த வகை சொற்களில் இருந்து தமிழர்கள் புழக்கத்தில் இந்த ஆங்கிலம் என்ற சொல்லும், அங்கிலேயர் என்ற சொல்லும் மருவி இருக்க வேண்டும். ஹிந்தியில் கூட இவர்களை 'அங்க்ரேஷ்' என்றுதான் அழைப்பர் மற்ற படி கால்டுவெல் படித்தவர்கள் இதற்குரிய விளக்கங்கள் தரலாம். ஆங்கிலேயரகளுக்கு இந்தியாவின் ஒரு பகுதி முதன் முதலில் கல்யாண சீராக அல்லது வரதட்சணையாக கொடுக்கப் பட்டது தெரியுமா ?????? சரி...... அதைப் பற்றி பின்பு உதார் விடுகிறேன் . இப்போ மேட்டர்.

ஆங்கில வழி 'விவிலிய' போதனைகளில் துவங்கி, ஆங்கில வழிக் கல்விக்கு மெருகேறி இன்று நாம் குடிப்பது லோக்கல் பன்னீர் சோடா என்றாலும் அதில் கண்டிப்பாக ஆங்கிலத்தில் பெயர் இருக்கும், தமிழில் இல்லையென்றால் கூட. எடைக்கு பேப்பர் வாங்கும் கடையிலும்    RS.2.00 / KG தான். இப்படி ஆங்கிலம், தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவின் ஓவ்வொரு மூலையிலும் விரவிக் கிடக்க வெறும் ஆங்கில மோகம் மட்டும் காரணம் அல்ல அதையும் மீறிய ஒரு காரணம் உண்டு, அது நமது தலைப்புதான் " ENGLISHN IS A FUNNY LANGUAGE ".

கணம் கோர்ட்டார் அவர்களே...... இங்கே குற்றம் சுமத்த பட்டு.....
நாம் தமிழில் எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள், மெய்எழுத்துக்கள், உயிர் மெய், ஆயுத எழுத்து என்று பிரிப்பது போல் ஆங்கிலத்தில் எழுத்துகளை VOWELS என்றும் CONSANANTS என்று பிரிக்கிறோம். உயிர் எழுத்துக்களுக்கு இணையான வேலைகளை A, E, I, O, U ஆகிய VOWELகள் செய்கின்றன. தமிழில் மட்டுமல்ல ஏனைய எந்த இந்திய எழுது முறை மொழிகளிலும் ஒரு எழுத்திற்கு ஒரு ஓசைதான். ஆனால் ஆங்கிலத்தில் இந்த VOWELகள் படுத்தும் பாடு பெரும்பாடு.   எடுத்துக்காட்டு

FAT -          இதில் `A' - அ என்ற ஓசையைத் தரும்.
FAMOUS - இதில் `A' - ஏ என்ற ஓசையைத் தரும்.
FATHER -  இதில் `A' - ஆ என்ற ஓசையைத் தரும்.

GERM -    இதில் `E' - எ என்ற ஓசையைத் தரும். ஜெர்ம்
GET - இதிலும் `E' - எ என்ற ஓசையைத்தான் தருகிறது. கவனிக்க முதல் எழுத்தின் உச்சரிப்பு ஜே`யிளிரிந்து, கெ`யாகிப்போனது. அடங் கொய்யால............எப்படி என்று கேட்பவர்களுக்கு ஒரு நாப்பது பக்கம் நோட்டு ரொம்ப ரொம்ப எழுத்துக்களும் அதன் உச்சரிப்புகளுக்கான (RULES FOR PRONUNCIATION ) விதிகள் இருக்கின்றன. அதை வாங்கிப் படிக்கவும். இதை பல மேல்தாவிகள் மன்னிக்கவும் மேதாவிகள் ஆங்கிலத்தின் லாவகத் தன்மை என்று வாதிடுவதும் உண்டு. ஆனால் இது ஆங்கிலத்தின் பலமா ? இது ஆங்கிலத்தின் லாவகத் தன்மையை அதிகரிக்கிறதா ? இல்லை.
தமிழின் எந்த ஒரு எழுத்தையும் எந்த இடத்திலும் எப்படி படித்தாலும் அதற்க்கு ஒரே உச்சரிப்புதான். தமிழில் வேற்று மொழி சொற்கள் எழுதினால் மட்டும் மெய், உயிர் மெய் எழுத்துக்களுக்கு அதன் வலிமையை கூட்டியோ குரைத்தோ உச்சரிக்க வேண்டும். கண்டம்( KANTAM - தொண்டை / கழுத்து சங்குப் பகுதி ), கண்டம் ( GANDAM - தடை). வட மொழிகளில் எழுத்தின் ஒவ்வொரு வலிமைக்கும் ஒரு எழுத்து என்பதும் நாம் அறிந்த விஷயமே ( நான்கு க, ச, த ). அதனால் வட மொழிகளில் கூட இந்த உச்சரிப்பு சிக்கல் இல்லை.நேரடியாக ஒரு எழுத்துக்கு ஒரே உச்சரிப்பு. பாபா ஸ்டைலில் கதம் கதம்.

இந்த வகை சிக்கல் மொழியின், நம்பகத் தன்மையை குறைத்து விடுகிறது. ஆங்கில எழுத்துக்கள் தெரிந்தாலும் ஆங்கில வார்த்தைகளை படிப்பதற்கு தனியாக ஒரு பயிற்சி தேவை என்பது மறுக்க முடியாது. இந்த உச்சரிப்புகளுக்கு உள்ள விதிகள் கூட இது இப்படிதான் என்கின்றன ஆனால் ஏன் - என்ற கேள்விக்கு இடமே இல்லை.
இந்த அடிப்படையில் " ENGLISH IS A MEMORISED LANGUAGE - ஆங்கிலம் வெறும் ஒரு மனப்பாடம் செய்யப் பட்ட மொழியே  " என்பார்கள்.  ஒரு உச்சரிப்பை முன்னதாக கேட்டிருந்தால் மட்டுமே அதை நாம் பயன் படுத்த முடியும், சிறப்பாக ஆங்கிலத்தில் பேசும் மாணவர்களுக்கும் பல வார்த்தைகளுக்கும் உச்சரிப்பு பயிற்சிகள் தேவைப் படும். இல்லையேல் பல கால பயன்பாட்டிற்கு பின் இந்த சொல்லின் சரியான உச்சரிப்பு தெரிந்தவுடன் மாற்றுவது கடினமாக இருக்கும்.

இன்றெல்லாம் கேப்டன் கூட அரசியலில் பிஸியாம் . . .  அதனால் தைரியமாய் மேலும் துகில் உரியுவோம்.

7 comments:

வால்பையன் said...

ஆங்கிலம், சமஸ்கிருதத்தின் நீட்சி தான் என்பது தெரியுமோ!

Karthick ( biopen) said...

உண்மையாகவே ஆங்கிலம் நம்மில் பலர் தவறாகவும் தமிழ் அதை விட தவறாகவும் அறிந்து வைத்துள்ளோம்.

தமிழிலும் ஆங்கிலம் போல் வேறு வேறு ஒலி எழுப்பும் ஒரே எழுத்துக்கள் உண்டு. G என்கிற எழுத்து தமிழில் இல்லை என்று சொல்லப்பட்ட தருணத்தில் - இல்லை அந்த எழுத்து எல்லா மொழிகளிலும் உண்டு. தமிழிலும் உண்டு என்று கண்டுபிடித்தார்கள்.

அவர்கள் சொன்னது கம்பனில் உள்ள க - Ka ஆகும். அனால் தங்கத்தில் உள்ள க - Ga ஆகும்.

உண்மையில் மரியாதை உள்ள ஒரே மொழி ஆங்கிலம்தான். அதில் நீ - கிடையாது நீங்கள் (யு) மட்டும்தான்.

Karthick
http://eluthuvathukarthick.wordpress.com

"உழவன்" "Uzhavan" said...

//கண்டம்( KANTAM - தொண்டை / கழுத்து சங்குப் பகுதி )//
 
இது சரியான வார்த்தை தானா? கேள்விப்படவேயில்லை

மரா said...

நெறயா யோசிப்பீங்களோ?......கண்டினுயூ திஸ் குட் ஜாப்...... :)

Anonymous said...

very good .......

சாமக்கோடங்கி said...

பின்னீட்ட மாப்ள... இத்தினி நாளா உன்ன பாலோ பண்ணாம மிஸ் பண்ணீட்டேன்... இன்னைக்கு நைட்டே உடுக்கையோட வந்துடறேன்..

அப்புறம் மேட்டர்க்கு வரேன்..

இதெல்லாம் சொந்த எழுத்தா.. உண்மையா இருந்தா நெசமாவே உனக்கு ஒரு ஓ போடலாம்..

கண்டினுயு....

நன்றி..

பாலராஜன்கீதா said...

//
//கண்டம்( KANTAM - தொண்டை / கழுத்து சங்குப் பகுதி )//

இது சரியான வார்த்தை தானா? கேள்விப்படவேயில்லை//
திருநீலகண்டர் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்களே

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )