Monday, March 29, 2010

ரேடியோ`வ கண்டுபிடிச்சது யாரு? - சரித்திர இருட்டு

மொதல்ல யாரு தொலசாங்கலோ அவுங்க கிட்ட கேட்டா தெரியும் ( எட்ரா அந்த அருவாள!!! ) .

ரேடியோ`வ கண்டுபிடிச்சது யாரு ?
மார்கோனி, இது கூடவாடா தெரியாது ங்கொய்யா.
குக்லில்மோ மார்கோனி, 25, ஏப்ரல், 1874 இவர் பொலொக்ன, இத்தாலியில் பிறந்தார். 2, ஜூன் 1896 அன்று ரேடியோவை தன் கண்டுபிடிப்பாக, தனது சிந்தனையின் காபுரிமைக்காய் ஆங்கிலேய காப்புரிமை சட்டத்தின்[பதிவு எண் - 12, 309 ] படி பிரிட்டனில் பதிந்தார். அமெரிக்காவிலும் பதிந்தார். 1901 ஆம் ஆண்டு மர்கோனியின் ஒரு சோதனைக்கூடத்திலிருந்து ஒரு தொலைதூண்டுதல் ஒலி மூலமாய் ( இன்னும் ரேடியோ முளுமையடாயாத நிலை ) அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வேல்டிடம் இருந்து ஏழாம் எட்வர்ட்க்கு அனுப்ப பட்டதாய் ஒரு வாழ்த்து செய்தி அனுப்ப பட்டது. அதன் பின் 1909ஆம் ஆண்டின், ரேடியோயவை கண்டுபிடிததற்காய, இயற்பியலுக்கான நோபெல் பரிசு இவருக்கு வழங்கப் பட்டது. 1912 இல் கடலுக்குள் மூழ்கிய TITANIC கப்பலிலிருந்து காப்பாற்ற பட்டவர்கள் நன்றி பாராட்ட ஒருவர் உண்டு என்றால் அது மார்கோனி மட்டுமே என்ற புகழுடன் மார்கோனி இன்றும் நமது புத்தகங்களில் ரேடியோவின் தந்தையாக இருந்து வருகிறார்.

அது சேரி... ரேடியோ`வ கண்டுபிடிச்சது யாரு ???
என்னடா வம்பா போச்சு " கால்ல வர கத கேட்டு சோனியாவும் ராகுலும் இந்தியர்கலல்ன மாதிரி போச்சு. நிகோல டெஸ்லா, இந்தப் பெயரை இதுதான் நீங்கள் முதல் முறையாக எதிர்கொண்டிருபீர்கள். 10, ஜூலை, 1856 ஆம் ஆண்டு ச்மிஜன் ஆஸ்திரியாவில் பிறந்தார் இந்த செர்பியர். 1882ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்று, 1884 பின் ஆம் ஆண்டு இவர் எடிசனுடன் பணிபுரிய அமெரிக்க வந்தேருகிறார். ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சி நிறைவு செய்தால், 50,000 அமெரிக்க டாலர்கள் தருவதாய் சொல்லி, எடிசன், அப்பறம் பிம்பிளிக்கிபிளாக்கி சொல்லி விடுகிறார். 1886 இல் எடிசொனிடம் இருந்து விலகி சுயமாய் ஒரு தொழில்பட்டறையும் ஆராய்ச்சியும் தொடர்கிறார். கூலிவேலையும் செய்கிறார், தனுடைய கண்டுபிடிப்புகளுக்கு பணம் சேர்கிறார். 1895 இல் ரேடியோவை ஒலி நீட்சி இயக்க தத்துவத்தை நிரூபிக்கிறார். மார்கோனி காப்புரிமைக்கு பதிந்த சிந்தனையின் அதே இயக்க தத்துவம் இது என்பது குறிப்பிட தக்கது.

என்னங்கட சொல்றீங்க
இன்னும் ஒரு படி மேல் போய் மார்கோனி பதிந்த காப்புரிமை பத்திரத்தில் அவர் பயபடுதியதாக சொல்லப்படும் அலைவரிசை சுருள் ( COIL) - டேஸ்லCOIL, ஆண்டேனவும்தான். 1915இல் டேஸ்ல மார்கோனி பயன்படுத்தியது தன்னுடைய சிந்தனையே என்று கோரி வழக்கு தொடுக்கிறார். போதிய பண வசதி இல்லாமையால் பல முறைகள் இந்த வழக்கு கை விடப்பட்டு, டேஸ்லாவால், பல முறை மீண்டும் பதியப் படுகிறது. இறுதியில் 1943இல் அமெரிக்க நீதி மன்றம் டேஸ்லவை ரேடியோவின் கண்டுபிடிப்பிற்கு உரிமை படுத்துகிறது. இந்த தீர்ப்பு வரும் பொழுது டேஸ்ல இந்த உலகில் இல்லை. அதே வருடம் ஜனவரி 7ஆம் தேதி டேஸ்ல இறந்துவிட்டார் என்பது வருத்தமான விஷயம். இன்று நம் பயன்பாட்டில் இருக்கும் எந்த ஒரு நவீன சாதனமோ அதில் ஒரு புள்ளியாவது டேஸ்ல கை பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  இயற்பியலின் எல்லா கோட்பாடுகளையும் டேஸ்ல ஆராய்ந்தார். மின்காந்தவியல்( ELECTRO MAGNETISM ), காந்தஇயக்கதத்துவம் ( ELCTROMECHANICAL ), அணு இயற்பியல் (NUCLEAR PHYSICS ), ஒலித்தூண்டல், ராடார், தொலைஇயக்கமாட்சி( TELEFORCE ) , மாற்றுமின்சாரம்( ALTERNATE CURRENT ) , புவிஈர்ப்பு தத்துவம் ( GRAVITY ), என்று இயற்பியலின் எந்த திசை நோக்கி நடந்தாலும் அங்கு ஒரு கைப்பிடி அளவேனும் டேஸ்ல, நிற்கிறார். 1912இல் ஒரு முறை, 1915இல் முறை உலகறிந்து நோபெளுக்கு பரிந்துரை செய்யப் பட்ட டேஸ்லவிற்கு, இன்று வரை நோபெல் கிடைக்காதது அளப்பெரும் வியப்பு

இப்போதான் காதலுக்கு மரியாதை மினி கேக்குறாங்க ஏன் இப்பிடில்லாம்??
டேஸ்ல மேலும் தன்னுடைய ஆராய்ச்சியின் எல்லைகளை விரிவு படுத்திக் கொண்டிருந்த வேளைகளில் மார்கோனி அந்த சிந்தனையை சந்தையிட்டு மிகப் பெரும் பணம் ஈட்டினார். பிறப்பினால் பணக்காரர், அதன் பின் தொழில் முறை பணக்காரர், இது மட்டுமல்லாது இவருடைய தொழிற்பேட்டைகளில் முதலீடு செய்தவருடைய பணம், என்று டேச்லவுக்கு எங்கு திரும்பினாலும் பணம் கட்டிய கோட்டை நுழைவாயில் மறுத்தது, இதனுடன் போராட என்பதை விட, அன்றாட வாழ்விற்கே டேஸ்ல கை ஏந்தும் நிலையில் இருந்தார் என்பது உண்மை.

டேஸ்ல ஒரு செர்பியர் என்பது அன்றைய காலத்திற்கு, அவரை மறுக்க, மிக போதிய காரணமாக இருந்தது.

உலகு வணங்கிய எடிசனின் எதிர்ப்பு
 
மர்கோனியின் அரசியல் நட்பு, அவர் வகித்த பதவிகள், மேலும் இவை இரண்டும் அவர் பின்னே ஈர்த்த ஊடக தொடர்ப்பு.

ஒன்றோடுன்று தொடர்புடைய புத்தக பதிவர்கள், தான் ஒரு முறை பதிவு செய்ததை மாற்றி அமைக்கும் தேவை இன்றி இன்று வரை அதை நமக்கு படிப்பித்து வருகிறார்கள்.

HISTORIES are made and Written, and its Obsolete if not re-written.

4 comments:

மயில்ராவணன் said...

அண்ணே நான்தேன் முதல் காமெண்டா.........
என்ன கொடும சார் இது? நான்கூட இம்புட்டு நாளா மார்கோனின்னுதான் நெனச்சிக்கிட்டு இருந்தேன்....ங்கொக்காமக்கா பெரிய ஃப்ராடால்லா இருந்திருக்கான்.பரவாயில்லை இப்பமாச்சும் தெரியப்படுத்தினீகளே.ரொம்ப டேங்க்ஸ்னே..

Karthiga said...

thiruthi ezhudhapada vendiya sarithiram....

நீச்சல்காரன் said...

நல்ல அலைசல்.
இயற்பியலில் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் தனிமனித சாதனையல்ல பலர் பலகாலம் செய்த மேன்பாடுகள்.
இந்த டெல்சவிக்கு முன்பே பலர் இது குறித்து கண்டுபிடித்துள்ளனர். அதில் நாம இந்தியா விஞ்ஞானி போஸ்ஸும் ஒருவர்.

//அப்பறம் பிம்பிளிக்கிபிளாக்கி சொல்லி விடுகிறார்//? :(

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

டேஸ்லா போன்ற மாமனிதர்கள் திறமை இருந்தும் அதை லாபி செய்யத்தெரியாததால் காப்பி அடிக்கும் சில அற்ப ஜந்துக்கள் ப்ரெசெண்டேஷன் செதே முன்னுக்கு வந்துவிடுகின்றனர்.
ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தில் ஒரு வசனம் உண்டு
Itzhak Stern: Let me understand. They put up all the money. I do all the work. What, if you don't mind my asking, would you do?

Oskar Schindler: I'd make sure it's known the company's in business. I'd see that it had a certain panache. That's what I'm good at. Not the work, not the work... the presentation.

நண்பரே உலகமே ப்ரெசெண்டேஷனில் தான் இயங்குகிறது,இதில் எங்கே திறமைக்கு மதிப்பு?

நல்ல இடுகை,யார் காப்பி செய்து போட்டாலும் பாராட்டுவார்கள்.:)

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )