ஒரு பள்ளிக் கூடம் அதுல விலங்கியல் சோதனைக் கூட பாட நேரம் ( தமிலர்களுக்கு - ZOOLOGY PRACTICAL / LAB PERIOD ) தவளையை வைத்து சோதனை செய்து கொண்டு இருந்தனர். புல் மீல்ஸ் கட்டி இருந்த சில வயருகள் ரோல்லர் கோஸ்டரில் சுத்திக் கொண்டு இருந்தன. அப்பா நம்ம விஞ்ஞானி ஒரு தவளையை ஒரு மாணவன் டிச்செக்சொன் செய்து கொண்டு இருந்தான். ஒவ்வொரு காலாக வெட்டி சோதித்து கொண்டு இருந்தான்.
முதல் காலை வெட்டி JUMP என்றான். இரண்டாவது காலையும் வெட்டி JUMP என்றான்.இப்படி கடைசி கால் வரை வெட்டி விட்டு, தன்னுடைய சோதனைகள் முடிவடைந்த நிலையில் , யுரேகா எபக்டோடு ஆசிரியரை அணுகினான். " சார் ஒரு கண்டு பிடிப்பு நான்கு கால்களையும் வெட்டி விட்டால் தவளை கேட்டும் சக்தி இழந்து விடுகிறது ' என்றான். ஒரு பீதியுடன் எப்படி விளக்கிச் சொல் என்றார் அவரும். முதல் காலை வெட்டி JUMP என்றேன் தவளை குதித்தது , இரண்டாவது காலை வெட்டிய பிறகும் கூட குதித்து, மூன்றாவது கால் வெட்டிய பின் கூட தவ்வ முயன்றது . அனால் நான்காவது காலை வெட்டியா பின்னர் நான் எவ்ளோ கதறியும் தவளை இடத்தை விட்டு நகர வில்லை . அப்படியே இறந்தும் விட்டது என்றான்.
அடேயப்பா ...
சிரிப்பு வந்தவுங்க சிரிச்சதுக்கு அப்புறம் கொஞ்சம் வருத்தப் பட தயார் ஆகிக்கோங்க, இது நிஜமா வருத்தமான விஷயம், இது மாதிரி புரிதல் இல்லாத கல்வியைதான் இன்றைய பள்ளிகள், ஒரு படி மேல் நம்முடைய கல்லூரிகளில் கூட படித்து வருகிறோம். எடுத்துக் காட்டு நீங்கள் ஏழாம் வகுப்பில் படித்த ஒரு கேள்வி ( A + B )2 = ? என்ன உங்களை தூக்கத்தில் இன்று எழுப்பி கேட்டால் கூட சொல்வீர்கள் A2 + B2 + 2AB . அதை விட முக்கியமான விஷயம் இதன் அடிப்படை என்ன ?. இது எப்படி வந்தது ?. இந்த கேள்விக்கு பதில் பெருவாரியான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதை சொல்லித் தரும் பல பள்ளி ஆசிரியைகளை நானே இம்சை செய்து பார்த்து இருக்கிறேன் ஒருவருக்கும் தெரியாது. A என்ற ஒரு சதுரமும் B என்ற சதுரமும் இணையும் பொழுது ஏற்படும் ஒரு உருவகம் - ஒரு க்யுப் இன் பரப்பளவு பற்றிய FORMULAதான்.
THOSE WHO KNOW HOW ALWAYS HAS JOB; AND THOSE WHO KNOW WHY WILL ALWAYS BE THEIR MANAGERS
வரலாற்ற்றில் அசோகர், அக்பர் போன்றவர்கள் மரம் நட்டனர், குளம் வெட்டினார்கள்ன்னு படிக்கிறோம், இவுங்கெல்லாம் அரசர்களா? இல்லை PWDஅதிகரிகளா ? இவர்கள் செய்த நல்ல பல திட்டங்களை விளக்கி, இவர்களுடைய சிந்தனை, ஆய்வுத் திறன் எல்லாம் - கல்லூரியில் வேற எந்த துறையிலும் தேர்வு ஆகாமல் கலைப் பட்ட படிப்பில் வரலாறு தேர்வு செய்யும் வரை நமக்கு தெரிய வாய்ப்பு இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அம்பேத்கர் உள்பட பல இந்திய அறிஞர்களாலும், பல மேல் நாடு அறிஞர்களாலும் உடைக்கப் பட்ட ARYAN INVASION THEORY பாடம் இன்று வரை நம்முடைய பாடப் புத்தகத்தில் இருந்து வருகின்றன.
இன்றைய இந்திய கல்வித் தரத்தை ஆராயும் ஒவ்வொரு கட்டத்திலும் பாடங்கள், படிப்பிக்கும் முறைகள், பாடத் திட்டங்கள், சோதனை முறைகள், பள்ளிகள், ஆசிரியர்கள், என்று எல்லாமே வழுவில்லாத நிலையில் இருக்கிறது. இன்றைய சூழலில் நீங்கள் எந்த ஒரு சமுதாயப் பிரச்சனையை ஆராய்ந்தாலும் அதில் கல்வியின் பங்கு மிக முக்கியமாக இருக்கும். அது நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புடையதாக கல்வி இருக்கும்.
இன்றைய தேர்வுகளில் நாம் சோதிப்பது ஒரு மாணவனின், இன்னும் குறிப்பை ஒரு மூளையின் தேடித் திரட்டும் ( RETRIEVAL CAPACITY ) சக்தியை மட்டும்தான். உயிரற்ற கணினிகளின் வேகத்தையும் இதை வைத்து தான் சோதிக்கிறோம். நமது சிந்தனை, கற்பனைத் திறன், ஆராயும் திறன், பகுத்தாயும் தன்மை, பண்பாடு இவற்றில் ஒன்றைக் கூட நாம் வளர்பதில்லை, அதை சோதிப்பது????? ....... பல பள்ளிகளில் விளையாட்டு பாட நேரம் (P.E.T PERIOD) போன வாரத்தில் விட்டு போன அல்லது நேற்றைக்கு விட்டுப் போன ஒரு பாட வகுப்பின் மாற்றுப் பாட வகுப்பாக மட்டுமே நடை பெறுகிறது. அப்பறம் எங்க ஒலிம்பிக் ல தங்கம் ?? ( ABHINAVBINDRA வை பற்றி பேசும் முன்னாடி அவரை பற்றி கொஞ்சம் படித்து விட்டு வாருங்கள் ).
பள்ளிகளில் மாணவர்களை தேர்வு செய்யும் நுழைவுத் தேர்வுகள், நல்ல மாணவர்களை மட்டுமே தேர்வு செய்வோம் சுமாராக படிக்கும் மாணவர்கள் வேண்டாம், எங்கள் பள்ளியின் பெயர் கெட்டு விடும். இதற்க்கு மேல் கெடுவதற்கு என்ன இருக்கிறது. நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் படிப்பிக்க பள்ளிகள் எதற்கு எல்லா டுடோரியால்களை சட்டப். பூரவமாக பள்ளிகளாக மாற்றி விடலாமே,இதை பள்ளிகள் புள்ளி விவரத்துடன் பிரகடனப் படுத்தி கொள்கிறது. அரசும் தேர்ச்சி என்ற அடிப்படையில் மட்டும் பள்ளிகளை நிலுவை செய்கிறது. சுமாராக படிக்கும் மாணவர்கள் படும் அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏதோ அமெரிக்கர்கள் கறுப்பின மக்களை பார்ப்பது போல் பார்பார்கள். மதிப்பெண் மட்டுமே ஒரு மாணாக்கனின் அடையாளாமாக காலப் போக்கில் மாறிவிடும். இதில் பெற்றோர்களின் பங்கு வியப்பிற்குரியது தன்னுடைய குழந்தைகளின் மதிப் பெண்ணிற்க்காக அவர்களுடைய மழையையும் , விடலைப் பருவங்களையும் அடகு வைத்து விடுகிறார்கள்
21வயது வரை மதிப் பெண் எடுக்கும் இயந்திரமாக ஒரு உயிரை மாற்றி விட்டோம், மனிதனாய் என்று மாற்றுகிறோமோ அன்று தேசம் மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. இல்லேன்னா PS வீரப்பா சொல்வது போல் " ஹ ஹ ஹ ஹ ஹ இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ".
ஒரு புறம் சைபர் கூலிகளை அதிகமாக உருவாக்கிய பெருமையை நமது கல்வி அறக்கட்டளைகள் பறைசாற்றிக் கொண்டு இருக்க இன்னொரு புறம் கல்விக் கூடங்கள் படிக்க வந்த எத்தனையோ ஆபிரகாம் லின்கன்களை செருப்புத் தெயிக்க மீண்டும் அனுப்பி இருக்கும், எத்தனையோ பாரதிகள் சுள்ளி பொருக்கி கொண்டு இருப்பார்கள். இதெற்கெல்லாம் மேல் கல்வியின் விலைவாசி. கைகடங்காத விலையில் இன்றைய கல்வி சென்று கொண்டு இருக்கிறது.
பெருநகரங்களில் சில இடங்களில் திடீர் என்று மக்கள் திரளாக ஒரு இடத்தில குடியேறி வாழத் துவங்குவர். சென்னையில் இவர்ற்றை டுமீல் குப்பங்கள் என்பார்கள், மதுரையில் திடீர் நகர் என்பார்கள். இந்தப் பகுதிகளில் நகரங்களின் ஏனைய பகுதிகளை ஒப்பிட்டு பார்க்கையில் தேவையான வாழ்வாதார வசதிகள் இருக்காது. ஆனால் இன்றைய கல்விச் சூழல் மாறினால் இந்த இடங்களில் இருந்து கூட நாளைய விஞ்ஞானி உருவாகலாம்
If i been given a choice between being a literate and illiterate i choose the later, as i choose to be educated than jus literate - Aristotle
3 comments:
பதிவு மிக அருமை
வாழ்த்துக்கள்
Good. (A+B)2 formulavin base (athanoda logica) innikku ellarukkum solli kuduthutta.
this is really super.
anbudan
ram
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )