Sunday, March 21, 2010

எதிர்நீச்சலும்( படம் ) ஹுசைனும், மொக்கை பகுத்தறிவும்

கண்டிப்பாக நாகேஷ் நடிப்பில் எதிர்நீச்சல் படம் என்னைக் கவர்ந்த ஒரு படம். பாலச்சந்தரின் இவ்வளவு நீண்ட நாள் சினிமா வாழ்விற்கு, இந்த திரைப்படம் ஆணிவேர். இந்தப் படத்தில் நாகேஷ் மிக ஏழையான மாதுவாக, அவருடைய நண்பர் அந்த நாயர் ( முத்துராமன் ). இவர்களுக்கு இடையில் ஒரு காட்சி, மாதுவிற்கு முன்பு மனநலம் பதிக்கப்பட்ட அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க அந்த பெண்ணின் பெற்றோர் பேசிக் கொண்டு இருப்பார்கள். அது காதில் விழுந்த மாது நாயரிடம் சென்று இந்த விஷயத்தைக் கூற, நாயரும் எப்பொழுதும் போல் கொதித்து எழுவான். அவுங்க, என் தலேல அந்தப் பொண்ண கட்டுறதுக்கு முன்னாடி நான் அந்தப் பொண்ண விரும்பிட்டா என்ன ? என்பது போல் இருவரும் பேசிமுடிப்பார்கள். செய்யு.... என்று நாயர் சொல்ல. மாதுவும் களத்தில் இறங்குவான்.
இது நம்மக்கு தெரிந்தது , இனிமேல் சொல்லப் போவதும் தெரிந்ததுதான் இந்நேரம் நீங்களே முடிச்சுப் போட்டு ரெடி ஆயிருபீங்க.
2006 எந்தக் கைகேயி இந்த கலையின் தலைமகனை காட்டுக்குப் போகவேண்டுமாய் வரம் கேட்டால்?
இப்ப சர்ச்சைக்குரிய ஓவியர் ஹுசைன், இந்தியாவை விட்டு தானே வெளியேறி மனம் வெறுத்து கத்தார் செல்கிறார். அங்கு குடிஉரிமை பெற்று விட்டார் என்று நமக்குப் படிக்க கிடைக்கிறது. இன்னும் அஞ்சு வர்ஷதுல இந்த தாத்தாவுக்கு நூறு வயசு. இப்படி தள்ளாத வயசுல தனது மொழியும் சுதந்திரத்தினை கருத்தில் கொண்டு இவர் கத்தார் நாட்டுக்கு செல்கிறாராம். இதுல ஒரே ஒரு மேட்டர் விட்டு போச்சுன்னா இந்த செய்திக்கும் மேல் சொன்ன காட்சிக்கும் உள்ள தொடர்புதான். இன்றுவரை இந்த மனிதர் மீது பல புகார்கள் பதிவு செய்யப் பட்டு இருக்கின்றன. ஈ பீ கோ 153A, 295A, 298, 146, 147 148 என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. இதில் இது வரை பல புகார்கள் ( விசாரிக்கப் படாமலே )தள்ளுபடி செய்யப்பட்டு  செய்யப் பட்டு இருக்கின்றன, இதுவரை பல புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில் ஒரு புகாரில் கூட ஹுசைன் தண்டிக்கப் படவில்லை என்பது குறிப்பிட தக்கது. இதுக்கு மேல ஒரு விஷயம் என்னன்னா, நிலுவையில் உள்ள புகார்களை பரிசீலிக்கும் நிலையில் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று நமது சட்ட ஆணையம் சொல்கிறது. இந்த நிலையில் தான் மேல் சொன்ன யுக்தியை ஹுசைன் பயன்படுத்தி இருக்கிறார். அவுங்களா நம்மள தண்டிச்சா சோத்துக்கு, சொத்துக்கு வழி இல்லாம போயிரும், சும்மா என்று கத்தருக்கு கம்பி நீட்டுகிறார் ஹுசைன் என்பது நமக்கு சொல்லப் படாத உண்மை. அது ஏங்க குறிப்பா 2006ல இவரு கத்தார் மொதல்ல ஒரு சாமிய வரஞ்சாறு சும்மா இருந்தாங்க, 2006ல தான இவரு தேசியத் தாயின் உருவத்தை நிர்வாணமாக வரைந்தார். இந்த முறை செமையாக சிக்கிக் கொண்டார். சமய உணர்வுகளை புண்படுத்திய குற்றத்திலிருந்து இவர் நிலை உயர்வு பெற்று தேசிய உணர்வினை புன்படுதியதர்க்காக இவர் மேல் வழக்கு தொடுக்கப் பட்டது. இந்த வழக்கும் மிக கட்சிதடமாக இவருக்கு எதிராக அமைய ஜூட்டானார் ஹுசைன்.

கலை, கலைக்கண்;
ஹுசைன்நின் இயக்கத்தில் வெளியான MEENAXI திரைப் படத்தில், இவரே எழுதிய பாடல் ஒன்று நூற்-உன்-அலா. அந்தப் பாடல் குர்ஆனில் இருந்த எடுக்கப் பட்ட வரிகள் இவை இறைவனை குறிக்கிறது . இவற்றை ஒரு பெண்ணை பற்றி பாடும் வரிகளாக பயன்படுத்தியது தவறு என்று இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. வெளியான அதே வாரத்தில் அந்தப்படம் திரை அரங்குகளில் இருந்து அகற்றப்பட்டது. ஹுசைன் மன்னிப்பு கேட்டார். எப்பவும் போல ஹிந்துக்களுக்கு மட்டும் சகிப்புத் தன்மையை போதிக்கும் ஊடகங்கள் இதை சொல்லும் அவசியம் இல்லையென்று நமக்கு சொல்லவில்லை இதே ஊடகங்கள் மேல் சொன்ன MEENAXI நேரங்களில் வேறு செய்திகளை பாராட்டிக்கொண்டு இருந்தன.

இன்னும் தொக்கி நிற்கும் சில கேள்விகள்
எதிர்ப்பை சந்தித்த தஸ்லிமாவுடன், சல்மான் ரஷ்டியுடன், ஓடி ஒழியும் ஹுசைனை எந்த விதத்தில் ஒப்பிடுகிறது பகுத்தறிவு பந்தல்கள். ? சமயம் சார்ந்த எதிர்ப்பு என்ற அடிப்படையில் மட்டுமா ??
பாரதமாதா படத்தை நிர்வாணமாக வரைந்தது அரசியல் சட்டப் படி ஜாமீன் மறுக்கப் பட்ட குற்றம். ஹிந்து சமயத்தை எப்பவும் போல் ஒதுக்கி விடலாம். தேசிய வரம்பு மீறலுக்கு என்ன செய்யலாம்?. பாரத மாதா என்பது ஹிந்துத்வா என்று சப்பை கட்டு கட்டுவோருக்கு ஒரு தொடுப்பு செய்தி முதன் முதலில் இந்த ஓவியம் வெளியானது MOTHER INDIA என்ற தலைப்பில்.
அதென்ன எப்பவும் சகிப்பு தன்மை ஒரு சாராருக்கு மட்டும் போதிக்கப் படுகிறது இந்த மதசார்பற்ற காங்கிரஸ் நாட்டில் ??
ஒரு நாட்டின் சின்னத்தை ( தேசியமாதாவை ) அவமானம் செய்த ஒருவரை இன்னொரு நாடு ஆதரிக்கிறது என்றால், இதை எப்படி எடுத்துக் கொள்வது ??.
ஒரு நாட்டில் இன்னும் பல புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில் இன்னொரு நாட்டில் குடியுரிமை எப்படி கிடைக்கும் ??
குடிஉரிமை இவர்க்கு கிடைக்க வேண்டுமென்று அனைத்து புகார்களும் முன்பு போல் விசாரணை இன்றி தள்ளுபடி செய்யப் பட்டனவா ??

5 comments:

Anonymous said...

உசேன் விசயத்தில் அவரின் சைகையை நான் ஏற்கவில்லை.. அவர் செய்ததது தவறுதான்.. இருந்தாலும்.. நாம் சற்று பெருந்தன்மையாக இருப்பதால் ஒன்றும் குறைந்து போய்விடமாட்டோன் என்றே தோன்றுகிறது.. அவர் வரைந்தார் அது தவறு.. நாம் மறப்போம் மன்னிப்போம்... துரத்தி துரத்தி குற்றம் கண்டுபிடிப்பதால் ஒன்றும் பயன் இல்லையே..
கந்தசாமி

ஸ்ரீநி said...

அன்புத் தோழர் கந்தசாமி,

நீங்கள் சொல்வது சரி. ஒருவர் செய்த தவறென்று அதை உணர்ந்து ஒப்புக் கொண்டால் கூட போதும், அதன் பின் அவரை விரட்டுவதில், எனக்கும் உட்பட்டு இல்லை. ஆயினும் ஹுசைன் இன்று வரை இந்த விஷயத்தில் வருத்தம் தெரிவித்ததாக ஒரு வரி செய்தி கூட படிக்கக் கிடைக்கவில்லை. அவர் இந்தியாவில் தனக்கு சுதந்திரம் இன்மையால்தான் வெளி செல்கிறார் என்று சொல்கிறார். ஊடககங்களும் அதை உடுக்கையடிக்கின்றன , அதை மறுப்பவர்களுக்கு கொடுங்க்காவி நிறம் பூசப்படுகிறது. இதில் தவறு செய்த ஹுசைன் தப்பித்து ஓடுகிறார் என்பது மறைக்கப்படுகிறது,அதுதான் இது போன்ற பதிவுகளுக்கு ( எதிப்புகளுக்கு ) தேவை விதைக்கிறது.

Anonymous said...

இதப் படிங்க.

http://tamilnerrupu.blogspot.com/2010/03/blog-post_18.html
http://tamilnerrupu.blogspot.com/2010/03/blog-post.html

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

கடவுளை வரைந்தவருக்கே கல்லடி கொடுக்கும் இஸ்லாமிய நாட்டைவிட, அம்மனமாக வரைந்தவரை நாடு விட்டு நாடு போகச் சொன்னது தவறா.

http://jagadeesktp.blogspot.com/2010/03/blog-post_22.html

மரா said...

உசேன் பாய் வரையுறதையெல்லாம் கலைக்கண்ணோடு பார்க்கணும்ணே....எவ்ளோ பெரிய கலைஞன் அவர்.

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )