Sunday, March 14, 2010

அப்பாடா IPL ஆரம்பிச்சுது, பிரணாப் மகிழ்ச்சி பெருமூச்சு......

                                                                                                                                       12-MARCH-10
நேற்று மதியம் வரை பிரணாப், கண்டிப்பாய் தலைச்சன் புள்ள பிரசவத்திற்கு மிரண்டு காத்திருக்கும் கர்பினியை போல் இருந்திருப்பார். எங்கட இந்த போதாத வயதில் கடைசி கடசியா கெடச்ச நிதி அமைச்சர் பதவியையும் பிடுங்கிடுவாங்கலோன்னு. இனிமே அவர் கவலை பட வேண்டாம். அநேகமாக பிரணாப் எங்காவது ஒரு வெளி நாட்டுப் பயணம் போய் வருவார். இந்த டென்ஷன் குறைய வேண்டாமா. அப்படி என்ன டென்ஷன். எப்பவும் போல வரலாறு முக்கியம் அமைச்சரே.. .. . . .

ஹ்ம்ம் ரெடி ... டார்ட்டாய்ஸ் கொசுவத்தி சுருள் சுத்துப்பா .. . . . .
பாகிஸ்தானின் ஆயுதம் ஏந்திய அமைதி தூதுவர் ( சட்டப் படி ஒருவரை தீர்பிற்கு முன் குற்றவாளி என்று கூறுவதும் சட்ட விரோதம். தெரியுமா ? ) அஜ்மல் கசவ் புண்ணியத்தில் நம்ம P.C ( Sonia`s Personal computer இல்லங்க) அதுவரைக்கும் காங்கிரஸ்க்கு இந்தியாவுக்கு நிதி அமைச்சரா,  வரவு செலவு கணக்கு  பாத்துகிட்டு இருந்த இவர, சிவராஜ் பாட்டில் பொரமண்டயில அடிச்சு பத்திவிட்டு, வீடுவிவகார துறை மந்திரியா ஆக்குனாங்க. புரியுது புரியுது இவர பத்திதானே . . .நம்ம தலைவர் கைப்புள்ள இவர பேட்டி எடுத்து தணியா பதிவு போடுவார் இப்போ கதைக்குப் போவோம். அப்ப, சிதம்பரம் பாத்துகிட்டு இருந்த, குமாஸ்தா வேலைய தூக்கி, தன்னுடைய எட்டாம் எட்டுல, இருந்துகிட்டு, வெளயுரவுத் துறை அமைச்சரா, எழாம் எட்டுல சுத்த வேண்டிய உலகத்த சுத்திகினு இருந்த இவருக்கு, நிதி அமைச்சரா, பதவி உயர்வு குடுத்தாங்க. அப்படி என்னங்க இவர் பண்ணிட்டாரு, இவருக்கு இந்த பதவி குடுத்தாங்க. இப்போ ஒரு ஜம்போ கொசுவத்தி சுருள்.... கடைசிகடைசியா இந்தியா, கிரிக்கெட் உலக கோப்பை வாங்கிச்சே அப்ப, அட கூலிக்கு மாரடிக்கிற 20/20 இல்லங்க உண்மையான உலக கோப்பை, 1982 அப்ப இவர்தான் பட்ஜெட் பைய அக்குள்ள வச்சுகினு, குமாஸ்தா வேல பாத்தாராம். 1984 வர்ஷம் உலகத்தின் சிறந்த குமாஸ்த என்று EUROMONEYயால் பாராட்ட பட்டாராம். அதுனால இவர் இப்போ நிதி அமைச்சர். அதற்க்கு இது பதில் அல்லவே... மன்னா.....ரொம்ப நொய்நொய்ங்க கூடாது, இந்த காரணத்தை கண்டு பிடிக்கவே காங்கிரஸ்ல பல தல சொட்டை ஆயிடுச்சு தெரியுமா. இன்னிக்கி இவருக்கு மேல உக்காந்துகினு பிரதமமந்திரியா இருக்குற நம்ம மன்மோகன் சிங்க் அப்ப இவருக்கு கீழ RBI GOVENORரா இருந்தார் தெரியுமா ???.

2009 தேர்தலுக்கு முன்.
தேர்தலை எதிர் கொண்டு இருந்த காங்கிரஸ் அரசுக்கு இது ஒரு முக்கியமான பட்ஜெட்டாக அமைந்தது. நம்ம பிரணாப் முகெர்ஜி காதுல ஒரே ஒரு பட்டுதான் கேட்டுச்சு " திக்கு தெரியாத காட்டில்.. ". நம்ம போன வர்ச குமாஸ்தா சிதம்பரம் வெளியிட்ட, இதுக்கு முந்துன பட்ஜெட்ட தேனிசை தென்றல் தேவா ஸ்டைல்ல, நம்ம ஸ்கூல்ல குறிச்சு குடுத்த கேள்விய மட்டும் படிச்சுட்டு போய் பாஸ் பண்ற மாதிரி பாஸ் பண்ணினார். உலக சந்தையில் பெட்ரோல் விலை சரமாரியாக, பாதிக்கும் கீழ் வீழ்ச்சி அடைந்த நேரம், அப்பவும் நம்ம எல்லாரும் அதே விலையில்தான் பெட்ரோல் வாங்கினோம்

உன்னைப் போல் ஒருவன் பட்ஜெட்
மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துச்சு. 6, ஜூலை, 2009 பிரணாப் திருப்பி ஒரு நிதி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்ட ' AAM ADMI KA' பட்ஜெட் என்று மீடியாக்கள் கொண்டாடின. இன்னும் சரியாய், கொண்டாட வைக்கப்பட்டன. AAM ADMI - COMMON MAN -உன்னைப் போல் ஒருவன்ல தலைவர் சொல்லுவாரே அதே தான். AAM ADMI என்ற பதம் பட்ஜெட்ட்ல ஆறு முறை இருந்தது.

2010 பட்ஜெட்

26, FEB இந்த ஆண்டின் நிதி அறிக்கை பிரணாப் முகெர்ஜி வெளியிட்டார் ( சமர்பித்தார் இல்லை ). சரியாக ரயில்வே பட்ஜெட் சமர்பித்த இரண்டு நாட்களுக்கு பிறகு. ஏகப் பட்டு எதிர்ப்புகள். எதிர் கட்சிகள் வெளி நடப்பு செய்தன. மொத்த பட்ஜெட்டையும் திரும்பப் பெற கோரிக்கைகள் வைக்கப் பட்டன. நம்ம அக்கா ( இன்னும் கல்யாணம் ஆகலேல்ல  ) மம்த்தா பநேர்ஜி என்னோட பட்ஜெட்ல இந்த ஆளு மன்னப் போட்டார்நு காங்கிரஸ் கிளாஸ்மிஸ் கிட்ட கம்ப்ளைன் பண்ணாங்க. பிரதமமந்திரி பதிவிக்காக நம்ம காங்கிரஸ் வடிவமைத்த என்திரன் - மன்மோகன்சிங்க்`கும் இதுல சில கருத்துக்கள்ள எனக்கு உடன் படு இல்லேன்னு சொல்லிட்டார்.

27, 28 FEB இவுங்க அல்லாரும் பொய் சொல்றாங்கபா. மெய்யாலுமே இது நல்ல பட்ஜெட்னு பிரணாப் மண்டி கால் போட்டு அழுதார். ஐயோ நான் இவுங்கள எல்லாம் கேட்டுதான் செஞ்சேன்ன்னு எல்லா டிவி காரங்களையும் கூப்ட்டு சொல்லிட்டார். எதிர்கட்சிகளும் மக்கள் மேல் பயாஆஆஆஆஅந்கர அக்கறையுடன் போராட்டங்கள் பண்ணின.

விளம்பர இடைவெளி - எங்கயோ நமக்கு தெரியாம ஒரு கூட்டம் போடுறாங்க, அதுல ஒரு முடிவு எடுக்குறாங்க. இதுக்கு மேல இதப்பத்தி பேசினா மக்கள் முளிச்சுகுவாங்க. நம்ம எல்லாருக்குமே கஷ்டம். அதானலே வேற படத்த போடுங்கப்பா என்றனர். ஆனாலும் பிரணாப், சிக்கன் குனியா வராமலே குளிரில் நடுங்கினார்.

01, MAR - தெற்கில் நித்யானந்த, வடக்கில் பாம்பு சாமியார் செய்திகள் பல தெர்மா மீட்டர்களை வெடிக்க செய்தன. கண்டிப்பாக இவர்கள் இருவரும் செய்தது கேவலமான விஷயம்தான். தனி மனித ஒழுக்க மீறல்கள், நம்பிக்கை கொலை, ஊருக்கு உபதேசம். தனிமனித ஒழுக்கம், நம்மில் எல்லாரும் மற்றவர்களிடம், அதாவது நமக்கு வலப்பக்கம், இடப்பக்கம், எதிர்புறம், பின்புறம், பக்கத்து வீட்ல உள்ளவுங்ககிட்ட, அடுத்த தெருவுல உள்ளவுங்ககிட்ட, நமக்கு கீழ வேல பாக்குறவுங்ககிட்ட, நமக்கு மேல நின்னு வேல வாங்குறவர்கிட்ட அதாவது நமக்கு வெளில எல்லார் கிட்டயும், நம்ம எதிர்பார்க்கும் ஒரு விஷயம். மீடியாக்களின் எஞ்சிய நேரங்களையும், பக்கங்களையும், நம்ம இந்தியாவின் புராதான உப்மா - பாகிஸ்தான், ஹபிஸ் சயத், தீவிரவாதம், போன்றவை நிறைவு செய்தன.

02, MAR - மேல் சொன்ன செய்திகள்தான். இன்னும் அதிகமாய் பெருங்காயம், வெங்காயம், தேவைக்கேற்ப உப்பு புலி மிளகாய் கூட்டப் பட்டன. உலகமே பொருளாதாரம் சீர்குலைந்த நேரத்தில் இந்தியாவை காத்ததாக போற்றப் படும், இதற்க்கு முந்தைய  RBI GOVERNOR Y.V ரெட்டி இந்த பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவிக்கிறார். ஒரு துண்டு செய்தி கூட வரவில்லை. எங்கிருந்தோ ஒரு செய்தி ஊடகத்திற்கு (TV)  மனசாட்சி போதை தெளிய ஒரே ஒரு வரி செய்தியாக வெளியிடுகிறது. திருப்பி பாம்பு சாமியார் டான்ஸ்தான்.

03 MAR அதே பிரியாணி வேற தாழ்ச்ச, பாகிஸ்தான் 'வெளிஉறவு துறை அமைச்சர் பொய் சொல்றார்' செய்தி வெளியிடப்படுகிறது. அது கரெக்ட் இது வரைக்கும் அவுங்க உண்மையே பேசிகிட்டு இருந்தாங்கல்ல !!!!. இன்னும் பிரணாப் கால் முட்டி மோதிகிட்டு இருந்தன.

05 MAR வரை மேல சொன்ன மட்டேற வச்சே தீத்தாச்சு. CD - நெறையா கீறல் விழுந்துருச்சு. புது நிகழ்ச்சி 12 வர்சமா தூங்கிகிட்டு இருந்த `33% பெண்கள் இட ஒதுக்கீடு`, 'காந்தகண் அழகி START the MUSIC' . ஏதோ இந்த மகளிர் தினத்தன்று இத நிறைவேற்றியே தீருவது போல்.

06, 07 MAR - மேல் சொன்ன எல்லாம்.

08, MAR - மகளிர் தின நல்வாழ்த்துக்கள் , முதல் பெண் ஆஸ்கார், அப்பறம் மீத நேரம் பெண் மசோதா.

09, 10, 11,MAR  அதேதான்...

12, MAR - IPL ஆரம்பிச்சுது......பிரணாப் மகிழ்ச்சி பெருமூச்சு...... இனிமேல் பட்ஜெட் துண்டை மறைக்க வேற எதுவும் தேட வேண்டியதில்லை. IPL முடியுறதுக்கு முன்னாடி இத மறந்துருவாங்க. அப்படியே ஞாபகம்வரும் சூழ்நிலை வந்தா வேற நியூஸ் தயாரிப்போம்ல......கத்தி போய் வாழு வந்துது டும் டும் டும் .. நித்தி போய் ரஞ்சி வந்துது டும் டும் டும் , ரஞ்சி போய் பாம்பு வந்துது டும் டும் டும் பாம்பு போய் மசோதா வந்துச்சு டும் டும் டும். மசோதா போய் IPL வந்துச்சு டும் டும் டும்......

6 comments:

Sundaralakshmi said...

hi,

Very nice. Romba azhaga ezhudiyirukka.

Namma eppadi ellam budgeta marappomnnu konjam komedyoda sollirukka. Good.

வரதராஜலு .பூ said...

நித்தி மேட்டர் வந்தப்பவே நெனைச்சேன், எல்லாத்தையும் டைவர்ட் பண்ணவே இந்த நியூஸ ரிலீஸ் பண்ணாங்கன்னு. கம்மநாட்டிங்க ஆட்சி பண்ணா இப்படிதான் ஆவும். எல்லாம் நம்ம தலையெழுத்து. என்ன சொல்றிங்க?

raj velur said...

too good analysis..

raj velur said...

too good analysis. These media guys are craps and they'll do anything for money...

மரா said...

//.கத்தி போய் வாழு வந்துது டும் டும் டும் .. நித்தி போய் ரஞ்சி வந்துது டும் டும் டும் , ரஞ்சி போய் பாம்பு வந்துது டும் டும் டும் பாம்பு போய் மசோதா வந்துச்சு டும் டும் டும். மசோதா போய் IPL வந்துச்சு டும் டும் டும்..//

ஏன் ராசா.........ஏன் இந்த கொலவெறி.....பாவம் அவரு வயசான காலத்தில பெரியம்மா என்ன சொல்லதோ அத்த கேட்டுக்கினு பொழப்ப ஓட்டுறாரு....உமக்கு பிடிக்கலையா? இங்க தாத்தா 500 கோடிக்கு ஒரு வரலாற்று சாதனை புரிஞ்சிருக்காரே......அதையும் எழ்தவும்.....இல்லையா இந்திராவின் மருமகளப் பற்றி விலாவரியா ஒரு பதிவு உங்ககிட்ட எதிர்பாக்கிறோம்.....

hayyram said...

//தெற்கில் நித்யானந்த, வடக்கில் பாம்பு சாமியார் செய்திகள் பல தெர்மா மீட்டர்களை வெடிக்க செய்தன. கண்டிப்பாக இவர்கள் இருவரும் செய்தது கேவலமான விஷயம்தான்/// இந்த விஷயத்தில் மீடியா ரொம்பதான் ஆட்டம் போட்டிருச்சி. போதாக்குறைக்கு எவனெவனெல்லாம் நித்தியையும் மத்த சாமியார்ங்கள திட்டறதுன்னு விவஸ்தையே இல்லாம போய்டிச்சு. (நான் உங்கள சொல்லல). இந்த விஷயத்துல நான் ஏசுநாதர ரெஃபர் பன்றேன். "உங்களில் யார் பாவம் செய்யாதவரோ அவர் சாமியார்கள் மீது முதல் கல்லை எரியுங்கள்"! என்ன நான் சொல்றது.

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )