இன்னும் சில தினங்களில் புது பத்து ரூபாய் நாணயம் ஒன்றை ரிசெர்வ் வங்கி புழக்கப் படுத்தவிருக்கிறது
நாணயக் குறிப்புகள்
தேசிய வடிவியல் மற்றும் வடிவமைப்பு படிப்பகதினால்( NATIONAL INSTITUTE OF DESIGN, AHMEDABAD ) வடிவமைக்கப் பட்டு, இந்திய நாணய சட்டம் ( COINAGE ACT ) 1906, இன் படி இந்த நாணயம் ரிசெர்வ் வங்கியால் வெளியிடப்படும். இந்த சட்டத்தின் படி, இது வரை 10, 20, 25, 50 பைசாக்களும், 1, 2, 5 ரூபாய்களும் அழகுவரிசை நாணயங்கள் வெளியிடப் பட்டு வருகின்றன. இந்த 10 ருபாய் நாணயமும் இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே வெளியிடப் படுகிறது. இந்த சட்டத்தின் படி, 1000 ரூபாய் வரை புழக்கத்தில் உள்ள எந்த அழகுவரிசை ( DENOMINATION )நோட்டுகளுக்கும் மாற்றாக, நிதித் துறை வழிநடத்துதலின் பெயரில், ரிசெர்வ் வங்கியின் வேண்டுகோளில், நாணயம் வெளியிட முடியும். இந்த 10ருபாய் இந்த வகை நாணயங்களுக்காக அமைக்கப் பட்ட 5 வடிவங்களில்( DESIGN ) இருந்து தேர்வு செய்யப் பட்ட ஒன்று. இந்தியாவின் 5 நாணய அச்சு பட்டறைகளில் ( மும்பை, அளிபர, ஸைப்பாத் , செலபல்லி, நொய்டா ) அச்சடிக்கப் பட்டு நாடெங்கிலும் உள்ள 3784 நாணயக் கலன்களுக்கு ( COIN DEPOT ) அனுப்பப் படுகிறது. செம்பு மற்றும் வெள்ளி ஒரே நாணயத்தில் தனித் தனியாக வடிவமைப்பில் இருக்க வெளியிடப் படும் முதல் நாணயம் இதுவாகும். இந்த நாணயத்தின் முகப்பு பாரத் என்று ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப் பட்டு, நமது சின்னமான மூன்று சிங்கங்கள் ( ஆய்த எழுத்து படத்தின் போஸ்டர் ஒரிஜினல் ) மற்றும் 10 என்ற அழகுவரிசைக் குறிப்பும், கீழே வடிவமைக்கப் பட்ட 2006 ஆண்டும் பொறித்து இருக்கும்.
வடிவமைத்தவர்கள் மற்றும் ரிசெர்வ் வங்கியின் விளக்கங்கள்
இந்த நாணயத்தின் பின்புறத்தில் உள்ள வடிவத்தை வேற்றுமையில் ஒற்றுமைக்காக வடிவமைத்தோம், என்றும் இந்தியாவின் நான்கு பகுதிகளும் ஒரே முனைப்பில் செயல் படுவதாக, ஒரே தலையின் கீழ் செயல் படுவதாக இந்த சின்னம் வலியுறுத்துகிறது என்றும், இந்த நாணயம் பார்வை அற்றோர்க்கு புழங்க ஏதுவாய் இருக்கும் என்றும் விளக்கங்கள் கூறி உள்ளனர். இந்த ( MY DADDY குதுர்க்குள் இல்ல ) விளக்கங்கள் பின்வரும் கேள்விகளை நமக்கும் தூண்டுவதாக இருக்கும்.
1. மற்ற நாணயங்கள் பார்வை அற்றோர்க்கு புழங்க ஏதுவாய் வடிவமைக்கப் படவில்லையா ? . இல்லை இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்தில் வடிவமைக்கப் படும் எல்லா நாணயங்களும், ஏன் எல்லா நோட்டுகளும் கூட, இன்னும் ஒரு படி மேல் நாம் பயன்படுத்தும், அனைத்து படுபொருள்களும் ( TANGIBLE ARTICLES ) பார்வை அற்றோரை கருத்தில் கொண்டே வடிவமைக்கப் படுகின்றன. ருபாய் நோட்டில் இருக்கும் கறுப்புப் புள்ளியும், நமது தொலை மற்றும் அலைபேசி பொத்தான்களில் என் ஐந்தின் மேல் உள்ள சிறப்புக் குறியீட்டை கவனிக்க. இன்னும் விவரமாய் விரும்புவோர் பேரழகன் பட சின்னா சூர்யாவை அணுகவும். லிப்ட் பொத்தான்கள் கூட BRAILEY ( பார்வை அற்றோர்கான எழுத்து முறை) எண் குறியீடுகளுடன்தான் தயாரிக்கப் படுகின்றன.
2. இந்தியாவை மாகாணங்களாக பிரித்தால் அவை ஐந்தாகப் பிரிக்கப் படும் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய ( DECCAN or CENTRAL ) என்று ஐந்து- நான்காக அல்ல. இந்த குறியீட்டில் விட்டுப் போன மாகாணம் எது ? . ஏன் அப்படி ஒரு மாகாணத்தை விட வேண்டும் ?.
3. இந்த நான்கு கோடுகளின் கூட்டமைப்பை வேண்டுமானால் வேற்றுமையில் ஒற்றுமையின் சின்னமாக ( கைப்புள்ளையின் ஒப்புதலுடன் ) ஏற்றுக் கொள்ளலாம். கோடுகளைச் சுற்றி உள்ள புள்ளிகளையும் அதே நான்கு மாகான கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்க வேண்டுமா ? நான்கு மாகனன்களைப் நான்கு கோடுகள் குறிக்கும் பொழுது தனியாக நான்கு புள்ளிகள் எதற்க்காக ?
முதல்வன் ரகுவரன் குறுக்கிட்டு " தம்பி கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி.......; ஒரு நாள்...... ஒரே நாள்...... " என்கிறார்.
ஆம் சிலுவைதான்.
இந்த நாணயம் தன்னுடைய பின் புறத்தில் சிலுவையைதான் வெளியிட்டு இருக்கிறது. வெறும் கூட்டல் குறி போல் இருந்தால் இதற்கு வேறு அர்த்தங்கள் சொல்லிவிட முடியும். ஆனால், நான்கு கோஸ்பெல்களின் - GOSPEL - இறைவனின் வாக்குத் தத்தம் ( மார்க்`இன் கோஸ்பெல், லுக்`இன் கோஸ்பெல், மத்தேயுவின் கோஸ்பெல், ஜான்`இன் கோஸ்பெல் ) குறியீடான நான்கு புள்ளிகளும் இந்த குறியீடு, சிலுவைதான் என்று உறுதி செய்கிறது இந்த வடிவத்தை ரிசெர்வ் வங்கி வேற்றுமையில் ஒற்றுமை சின்னம் என்று சப்பைக் கட்டு கட்டிவருகிறது எதற்காக என்று தெரியவில்லை. இந்த வகையில் இது முதல் முயற்சி கூட இல்லை, இது நாணயங்களில் மூன்றாவது முறையாக வெளியிடப் படுகிறது முதல் முறை 2005 / 2006ஆம் ஆண்டின் 1 ரூபாய் நாணயத்திலும், 2006 ஆம் ஆண்டு இரண்டு ருபாய் நாணயத்திலும் இந்தக் குறியீடு வெளியிடப் பட்டு இருக்கிறது.
க்ருசாட் கிராஸ் - CRUSADE CROSS. www.crivoice.org/symbols/ornaments.html கிறிஸ்தவ ஊடங்களும் இதையே உறுதி செய்கின்றன. இது போன்று நான்கு புள்ளிகளுடன் கூடிய சிலுவை க்ருசாட் கிராஸ் குறி அல்லது ஜெருசலத்தின் சிலுவை. இது எங்கெங்கிலும் ( நான்கு திசையிலும் ) கிறிஸ்தவத்தை பரப்பும் நோக்கத்தின் அடிப்பையில் வடிவமைக்கப்பட்டது.
ஏற்கனவே வாய்க்கா தகராறு ... என்று சமயத்தின் பேரில் அரசியல் செய்பவர்களுக்கு ரிசெர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும் நல்ல தீனி போடுகின்றன. இவ்வளவு அப்பட்டமான ஒரு விஷயத்தை பூசி மொழுகி மறைப்பது இந்த சர்ச்சையின் வீர்யத்தை இன்னும் அதிகரிக்கும். இந்த காரியங்கள் சிலுவை என்ற புனிதத்தை வணிகப் படுத்தி விட்டார்கள் என்ற சிந்தனையில், நாணயங்கள் பற்றிய போதிய சிந்தனை இல்லாத கிறிஸ்தவ பழமைவாதிகளை பாதிக்கக்கூடும். அடுத்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை நேரடியாக மற்ற சமய நம்பிக்கயாளர்களை.
இந்த வகை செயல்கள் செய்வது ரிசெர்வ் வங்கி என்று பதிவு முழுவதும் எழுதி முடித்து விட்டால் தண்ணி குடிச்சா கூட செமிக்காது. இதை சொல்லத் தேவை இல்லை. இது போன்ற காரியங்கள்
அது மட்டும் இல்லை இந்த நாணயத்தின் இரண்டு தனித்தனி உலோக பாகங்கள் உடைந்து பிரிந்து விடும் வாய்புகள் அதிகமாம். ஒரு நோட்டுல பின் அடிச்ச ஓட்டை இருந்தாலே நம்ம கடைக்காரர் அவரோட ரெண்டு கிட்னிய கடனா கேட்ட மாதிரி பாப்பாரு இதுல ஒடஞ்ச நாணயம் கொண்டு போனா ...............
இந்த வடிவத்தில் வேற்றுமையில் ஒற்றுமை எங்கு புலப்படுகிறது என்று படிக்கும் நண்பர்கள் கூறினாலும் ஏற்கத் தயார்.
சரி...... பிள்ளையார் படம் போட்ட கரென்சி நோட்டு பாத்து இருக்கீங்களா ?? இந்தோனேசியா போங்க
அனானியாய் வருபவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை மொட்டை கமெண்ட்ஸ் எழுதி வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
அனானியாய் வருபவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை மொட்டை கமெண்ட்ஸ் எழுதி வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
13 comments:
உங்கள் பக்கத்தை திறக்கவும், கமெண்ட் போடுவதற்கும் மிகுந்த சிறம்மமாக உள்ளது
திறந்தவுடனே இந்த
http://www.findtsee.com/myport.php?ref=fxlayer---
பக்கத்திற்கு திருப்பிவிடப்படுகிறது ஏதோ ஒரு நிரலி உங்கள் பக்கத்தில் விளையாடுகிறது. அதைக் கண்டு நீக்கிவிடுங்கள்
--
நீச்சல்காரன்
I think you are a Bramin. They have only this kind of idea. Usually they wont come out from their chair and ask others like us to quarrel with each other. Poda poi pozhappa paru. In India we have Hindu,Christian, Muslim and etc... If they put the cross mean we have to accept it. Like we give the award for bravery as ARJUNA AWARD.
அன்புள்ள அனானி,
சிந்திப்பதை வைத்து brahmin என்று நீங்கள் முடிவு செய்தால்,நீங்கள் எந்த அளவுக்கு ஜாதி வெறியர் நீங்கள் என்று நீங்களே சொல்லுங்கள்
இதில் நான் எற்பதர்க்கோ மறுப்பதற்கோ ஏதும் இல்லை.
அடுத்து சரியான வார்த்தை (QUARELL - சண்டை) அல்ல DEBATE - விவாதம், DISCUSS - பகிர்வு ஆகும்.
அதற்க்கு நான் தயார் என்று பதிவிலும் கூறி இருக்கிறேன் அதற்க்கு மேல் எனக்கு முதுகெலும்பு ( பெயர் ) உண்டு.
தன்னுடைய கருத்தை பெயரோடு வெளியிடும் தைரியம் என்னிடம் உண்டு. அதையே செய்திருக்கிறேன் - ஆதாரங்களோடு.
உங்கள் வலைப்பூவில் ஏதோ ஒரு விட்ஜெட் செயல்பட்டு, இல்லப் பக்கம் தவிர வேறு எந்த குறிப்பிட்ட பதிவை திறந்தாலும் உடனே டைவர்ட் ஆகி வேறு ஒரு தளத்துக்கு செல்கிறது.
கவனிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
good catch
இது ரிசர்வ் பேங்க் மத்திய அரசின் அனுமதியோடு செய்திருந்தால் அதற்கு தேவையில்லாத சப்பைக்கட்டு காரணங்கள் எதற்கு
மிக முக்கியமான தகவல் தந்தமைக்கு 'ஸ்ரீநி'க்கு பாராட்டுக்கள்.
சாதி இரண்டொழிய வேறில்லை பாப்பா
I think Anony wrote about your idea is to say that not you are brilliant but crooked. Anyway good to know about your angle and details.
Anandh
நல்ல நாணயமான ஆராய்ச்சி.....
கலக்கல் எல்லாம் சோனியா அம்மியாரை திருப்தி படுத்த தானாஇ இருக்கும் நண்பா,நல்ல ஆராய்ச்சி
இப்போது இந்தியாவில் உபயோகத்துக்கு வரும் ஆறே மாதத்தில் நாணயங்கள் துரு பிடிக்கின்றன,சில உதிர்கின்றன,அவை சீனாவில் விலை குறைந்த டெண்டரில் தயாரிக்கப்படுகின்றதா? அல்லது அரசியல்வாதிகள் ரோடு காண்ட்ராக்ட் எடுப்பது போல விஷமத்தனமா?என ஆராய்ந்து சொல்லுங்கள் பாஸ்
//ஒரு நோட்டுல பின் அடிச்ச ஓட்டை இருந்தாலே நம்ம கடைக்காரர் அவரோட ரெண்டு கிட்னிய கடனா கேட்ட மாதிரி பாப்பாரு//
நான் ரசித்த வரிகள்
இந்து மதத்திற்கு ஆதரவாக பேசினாலே ப்ராமனனாகத்தான் இருக்க வேண்டும் என்பது இந்த கிறுக்கர்களின் நினைப்பு. விட்டுத்தள்ளுங்கள்.
நல்ல உழைப்பு அருமையான பதிவு
அதிர்ச்சியாகதான் இருக்கிறது. யாரை திருப்திபடுத்த இப்படி செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது, புரிகிறது. என்னவோ போங்க.
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )