வாருங்கள் அழைத்து செல்கிறேன்
இன்று ‘ கலாம் ’ தீவாக உங்களுக்கு தெரியும்.
காலம் எங்களை
கண்டு கொல்லாத நாட்கள் எனக்கும் கலாமுக்கும் தான் தெரியும்
முதுகுப் புறமாய்
ஓடிப் பார்த்தால்
மூச்சு திணறுகிறது
இந்தத் தீவின் கருப்பு நாட்கள்.
ஒரு இருபது ஆண்டுகள் முன் வரை
உலகம் இவர்களை
தொடர்பு கொள்வது
நாளைக்கு இரண்டே முறை . . . அந்த காலம் கடந்த பாலம்,
கடக்கும் இரயில் வண்டிகள்
அது தபாலோ , பசும் பாலோ அந்த இரயில் நின்றால்,
இந்தத் தீவு
மணிக்கட்டு அறுத்துக் கொள்ளும்.
எடிசன் கண்டுபிடிக்கும் பொழுது குறிப்பில்
இவர்களுக்கு வேண்டாம்
என்று எழுதினான் போழும். . .
சுய அறிவோடு மின்சாரம்
தன் பனி நேரங்களை
தானே நியமித்து கொள்ளும்
இந்த தீவு மக்களின்
விரல்களை எண்ணினால்
இந்த இருள் விழுங்கிய
கலாம்கள் எண்ணிக்கை தெரியும் . .
கழிப்போடு கடல் பார்க்க செல்வோருக்கு,
இந்த தீவு மக்களை
கடல், தான் வந்து பார்க்கும்
ஈரப் பொழுதுகள்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இவைதாண்டி
சிலரிடம் ஓட காலணிகள் இல்லை,
சிலருக்கு கால்களே இல்லை
இருந்தும் ஓடினோம் . . .
அன்று வரலாற்றின்
ஓட்ட பந்தயத்தில்
நாங்களும் கலந்து கொண்டோம்,
இல்லை
வீர வணக்கம்
அதனால்த் தானோ
அன்று அந்த வீரத்துறவி
முழக்கமிட்டுத் திரும்பி
கால்பதிக்க எங்கள் நிலம் தேர்வு செய்தான்
No comments:
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )