Tuesday, December 22, 2009

சினிமா - வரலாற்றின் சுந்தரகாண்டம் - கவிதை

இருட்டுக்குள் இருப்பது இருள் அல்ல
இது ஒலியின் ராஜாங்கம்,
ஒளியின் நட்டுவாங்கம்
சினிமா - இதுவும் வினைதொகைதான்
மூன்று காலங்களையும் உணர்த்தும்

கடந்த நூற்றாண்டின் அழகிய தேடல்
கண்டுபிடிப்புகளுக்கும், கலைக்கும்
நடந்த கலப்பு திருமணம்.
குஞ்சு மீன் தின்று வாழுமாம் சில வகை தாய் மீன்கள்
நாடகத் தாயெய் உண்டு
வாழ்கிறது இந்த குஞ்சு மீன்


இந்த திரைச்சீலை மாராப்பை,
விலை பேசுவதாக மானப்படுவோரே
நிர்வாணப் பட்டு கிடந்த சில சமுகதிர்ற்கு
தன்னையே கிழித்து
தாவணியாய் ஈந்தது இந்தப் பேகன் தான்

வெளிச்சமும், விளக்கும் புனிதமான போக்கில்
இருளுக்கும் சுயமரியாதை தந்தது - சினிமா
எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசும்,,
இது உருவம் இல்லாத பாரதி



நம்மை ஒரு நாற்காலியில் கட்டிப் போட்டு
நமது உடன்பாடு இல்லாமலே
அழவும் வைக்கிறது,
சிரிக்கவும் வைக்கிறது



முன்னங்காலை மட்டும் தூக்கி
உண்ணப் பழகினோம்
காலூணாமல் நடக்கப்
பழக்கியது தாய்திரை சீலை

வரலாறு வேகம் பிடித்து
ஓட காலம் குடுத்த
கையூட்டு

இது கனவுக் கம்பளி
மூடி உறங்கி எழும் பொழுது
உயிர் சோம்பல் முறித்து
விழிக்கிறது

கடவுள் அறிவித்துக் கொல்லாத மதம்
தெரிந்தும் கையில் படுவதில்லை
எனினும் நாத்திகறில்லை இதற்க்கு


பக்தன் வேடத்தில் பாதகர் மட்டும்
இந்த திருட்டு வி சி டி;
ஐயோ மலினம்
மலிவாய் கிடைக்கிறது என்பதால்
மலம் உண்பது போல்.
தன் மனைவியுடனே , என்ன கள்ள உறவு

No comments:

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )