Sunday, December 20, 2009

நச் - இது தமிழ் வார்த்தையா ? ? ?


நச்சுனு இருக்கு ன்னு ஓர் பின்னோட்டம் ( கண்டிப்பா என்னோட பதிவுல இல்ல ) படித்தேன். சிறு பொறி

நச் - இது வெறும் சத்தமா?  இல்லை வார்த்தையா ? .
உம்மா. . . . . இச்சு. . . . இச்சு. . . .சதக். . . சதக். .. . போன்ற சத்தங்களை இன்றெல்லாம் நல்ல சொல் வழக்கில் பயன்படுத்தி வருகிறோம், இவை அனைத்தும் ஒரு செயல்பாட்டின் சார் சத்தங்கள் என்று எளிதில் கூறிவிடலாம் . அப்படி இந்த ‘நச்’உம் ஒரு சார்ந்த சத்தமென்றால் எந்த செயலை சார்ந்தது ??
ஒரே கன்பூசன் - வேல இல்லேன்னா இப்படிதான்

இல்ல தேங்காய் ஸ்ரீனிவாசன் ( சிலுக்கு சிக்கன் ஜிக்கு ) , சின்னி ஜெயந்த் ( கில்பான்ஸ், சில்பான்ஸ் ) போன்ற பண்டிதர்களின் தமிழ் கொடையில் இதுவும் ஒன்றா ?? என்று இந்த ‘நச்’சுக்கு பின்னாடி கிளம்பினேன் ( தம்பி மேட்டருக்கு வாப்பா ).

நச் ஒரு தமிழ் வார்த்தை அல்ல . நச் இது செயல் சார்ந்த ஒரு சத்தமும் அல்ல. வழக்கிலுள்ள ஒரு தூய சொல் அனால் தமிழ் சொல் அல்ல

இது ஒரு ஆங்கில வார்த்தை. NACH ( இது ஜெர்மானிய வார்த்தை ன்னு நெனைக்கிறேன் ) இல்ல . . . . NUDGE என்பதுதான்அந்த வேர் வார்த்தை ( அட கொக்கமக்க !!!!!!!! ).
Nudge ஒரு வினைச்சொல் இதன் அர்த்தம் ,ஒன்றை புகுத்துதல் ( மென்மையாய் ) அல்லது இடித்தல் போன்ற பொருளில் இந்த சொல் ஆங்கிலத்தில் ( இது தமிழ் சொல்லா ??) இன்றும் பயன்படுத்தபடுகிறது. மிகக் குறிப்பாக மற்றவருடைய கவனத்தை கவரும்விதமாக செய்யும் ஒரு செயலை உரைக்கும் ஒரு வார்த்தை.

இதே வழக்கில் தான நாமளும் பயன் படுத்துரோம். . . . .

இத இப்போ தமிழ் படுத்தி எழுதுனா நஜ்ஜுனு இருக்குப்பா(இப்படிலாம் எழுதுனா நாமளே சொல்லிக்க வேண்டிதான் )

இது சரியில்ல . . உண்மை என்னன்னா. . . . . . அப்படீன்னு யாராவது பின்னூட்டம் போட்ட நிச்சயமா இத நான் மாத்திக்க தயார்

வெறுமன. . . . . . இது சரியல்ல ன்னு சொல்றவங்க என்ன மன்னிக்காம திட்டி பின்னூடமும் போடலாம் ,உங்களுக்கும் நன்றி
மண்டையன் சொல்: - ஆமா இந்த கில்மா எப்பூடி வந்துச்சு ? ? ?

11 comments:

aazhimazhai said...

ஹம்மன் முடியலை !!! எப்படி இப்படி எல்லாம் !!! நச் என்பது ஒரு ஒலியை குறிக்கும் சொல் என்று நினைக்கறேன் !!!! பாருங்க " டமால்னு கீழே விழுந்தது" " நச்சுனு இடித்தான் " "சர்ருன்னு பறந்தது".... இப்படியும் இருக்குமோ !!!! ஹி ஹி

கள்ளபிரான் said...

’நச்’னு எழுதியிருக்கிறீங்க என்று நான் சொன்னால், உங்களுக்கு குஷியாக இருக்கும். ஆனால் அதே கருத்தைத் தரும் பிரென்சு சொல்லான TOUCHE என்று நான் பின்னூட்டம் போட்டால் புரியுமா?

இப்படிப்பட்ட பரவலான சொற்களை ஆங்கிலத்தில் vogue words என்பார்கள். அவை சிலகாலம் நிற்பன. பின்னர் தானாகவே மறைந்தொழிவன. அப்படி ஆகவில்லையெனில், அவை அகராதியில் இடம்பிடித்து பழகு தமிழ் ஆகிவிடும்.

நச், பலான, போன்ற சொற்கள் வோக் வர்ட்ஸ். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் அவை வாழுமா, மறையுமா என்பதை.

பழகுதமிழ் பேச்சுவழக்கிலிருந்து உருவெடுத்துப் பின்னர் எழுத்துத்தமிழாகும்.

கள்ளபிரான் said...

ஆங்கில nudge வேறு பொருளத்தரும்,

பிறர் ஒன்றைச்செய்ய நான் விரும்புகிறோம். ஆனால் அவரோ அதைக்கண்டும் காணாமல் இருக்கிறார். அவரின் கவனத்தை நாம் திருப்புவதுதான் நஜ்.

ஆனால், இங்கே நச் என்பது, அவர் எழுதியது நன்றாக கவனத்தை ஈர்த்தது என்பது பொருள். The French word Touche is its equivalent.

அன்புடன் மலிக்கா said...

ஜல்ஜல்ன்னு சலங்கை ஒலி கேட்டது, நச்ன்னு தமிழில் என்ன செய்ய தமிழுக்குள் எல்லாம் புகுந்துகொண்டு உன்னோடு என்னையும் சேர்க்கோன்னு நச்சரிப்பு செய்கிறது இல்ல ஸ்ரீநி..

நல்ல இடுகை நச்சின்னு..

Anonymous said...

appaa:::::kanna kadduthu/////////

Ravichandran said...

neenga oru news paper ad (ippo varutha nu theriyalai) pottavanga kitte kelunga, summa nachchunu irukku t.... .....u endru antha ad le solluvaanga

Chitra said...

நச் - என்பது தமிழ் வார்த்தையா இல்லையா என்பது மட்டும் இல்லை, வேறு எந்த மொழியிலும் உள்ள வார்த்தையாக கூட இல்லமால் இருக்கலாம். (nach in German does not come as a lone word to give a meaning most of the time). வார்த்தையில் மட்டும் communication அடங்கி இருப்பதில்லை. ஒலிகளில் கூட communicate செய்கிறோம். நச் என்று எந்த அர்த்தத்தில் சொல்கிறோம் என்று பின்னூட்டம் இட்டவருக்கும், இட்டவர் எந்த விதமாக நம்மை பாராட்டி இருக்கிறார் என்று பதிவருக்கும் நிச்சயம் புரிந்து இருக்கும்.

tamiluthayam said...

தமிழில் தவிர்க்க வேண்டிய, அவலட்சணமான வார்த்தைகள் நிறைய இருக்கு. சமிபத்திய வார்த்தை... மொக்கை.

ஹாலிவுட் பாலா said...

வாவ்..!!! என்னைத்தான்.. வெட்டிப் பையன்னு சொல்லுவாங்க. நீங்க... கூட சேர்ந்துக்குவீஙக போல இருக்கே! :) :)

கள்ளபிரான் வேற க்ளாஸ் எடுக்கறார்! :) :) சூப்பருங்க! :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

வாவ்..!!! நச்ச் என்னும் சொல்லில் இவ்வளவு இருக்கா?
நச்சுன்னு ஒரு பதிவு

SELVA PUDUPALLI said...

ஒருமுறை கமல்ஹாசன் அவர்களிடம் பத்திரிகை நண்பர் ஒருவர்
"நச்"என்று ஒரு கவிதை ப்ளீஸ் என்கிறார்.கவிதை சொன்னார் பாருங்கள்
அசந்துபோவீர்கள்...!

நாகத்தின் நச்சதனை தூற்றுவோர் தூற்ரிடினும் நச்சதற்கு கேடயம்போல்
பட்சியின் அலகுபோல்
பசுவின் கொம்புபோல்
நமக்கெல்லாம் பொய்யைப்போல்
தப்பிக்க ஓர்வழிதான்
நாகத்தின் நச்சென்பேன்...!"

(selva pudupalli (பத்மஸ்ரீ கமல்)

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )