Tuesday, March 16, 2010

ENGLISH IS A FUNNY LANGUAGE - எப்படி ?? பகுதி - 3

நான் சொல்றத நம்பலேன்ன பரவா இல்லைங்க பெர்னாட் ஷா( GEORGE BERNARD SHAW ), மிகப் பிரபலமான நாடக ஆசிரியர், மற்றும் மிகச் சிறப்பான பேச்சாளர். இன்று வரை இலக்கியத்திற்கான நோபெல் பரிசும்( 1925 ) பெற்று, ஆஸ்காரும் ( 1938 ) பெற்ற ஒரே மனிதர்.  இவர் தன்னுடைய சொத்துப் பத்திரத்தில், தன்னுடைய செல்வங்களில் இருந்து ஒரு பகுதியை, இன்றைய மதிப்பிற்கு - 3,67,233.13 பவுண்ட்களை ஆங்கிலத்தின் மேம்பாட்டிற்கு குறிப்பாக, தரமான ஆங்கில எழுத்துக்களை கண்டுபிடிக்க செலவிடும் படி ஒதுக்கி இருந்தார். ஆனால் அதிலிருந்து வெறும் 8600.00 பவுண்ட்கள் மட்டுமே இந்த பணிக்கு செலவிடப் பட்டது என்பது வருத்தமே. இவர் ஆங்கிலத்தைப் பற்றி சொன்ன ஒரு நகைசுவையான விஷயம். ஆங்கிலத்தில் FISH வார்த்தையை GHOTI உச்சரிக்க முடியுமா ?? . முடியும் எப்படி.

ENOUGH -  இல் 'GH' என்பது 'F' உச்சரிப்பைத் தரும்.
WOMEN -   இல் 'O என்பது 'I' உச்சரிப்பைத் தரும்.
NATION - இல் 'TI' என்பது 'SH' உச்சரிப்பைத் தரும்.  என்று நகைசுவையாக தன்னுடைய ஆங்கில மொழிக்கான காதலை நொந்து கொண்டார்.

என்ன கொடுமை சார் இது. ஏன் இப்படி ??? என்று நீங்கள் கேட்பவரானால். அதற்க்கு பதில் வரலாறில் உள்ளது. இன்று உலகிற்கு " ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழிக்கு உதாரனமாக படிக்கப் படும் ஆங்கிலேய வரலாற்றின் உண்மையான முகத்தை காட்டும் பழமொழி என்னவோ " சிவன் சொத்து குல நாசம்" ( சிவன் என்ற இடத்தில நீங்கள் எந்த கடவுளின் பெயரை வேண்டுமானாலும் போட்டுக்குங்க, அப்படியே நீங்க நாத்திகர் என்றாலும் உங்க பெயரையும் போட்டுங்க ) என்பதுதான். வெவரமா சொல்லு நைனா....

ENGLISH IS A BORROWED LANGUAGE.
எந்த மொழியாயினும் சரி பிற மொழி சொற்களின் கடவுகளை அது தவிர்க்கவே முடியாது. பண்பாட்டு மாற்றங்கள் இதை தவிர்க்க முடியாதவைகளாக மாற்றி விடுகின்றன. நான் முன்னமே கூறியது போல் நச் என்பது தமிழ் சொல் அல்ல, இதே போல் 'ஓசி' போன்ற வழக்கிலுள்ள சொற்கள் நல்ல உதாரணம்.  'த்ராட்ட்ல விட்டான்யா' என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறோம் , அதுவும் 'THWART' என்ற ஆங்கில சொல்லின் மருவல்தான். எல்லா மொழிகளிலும் இந்த வகை சொற்கள் இருக்கும், - மிகக் குறைவாக. இந்த வகை வார்த்தைகளும் மாற்றங்களும் நிகழும் பொழுது அந்த மொழிகள் சுயத்தை இழந்து விடுவதில்லை.   ஆனால் அங்கிலதிர்க்கு இவை பொருந்தாது. உலக வரை படத்தின் பெருவாரியான பகுதிகளில் கொலனிய அமர்க்களம் செய்த ஆங்கிலேயர்,  சென்ற ( வென்ற அல்ல) இடத்தில் எல்லாம் அங்குள்ள சில வார்த்தைகளை தனதாக்கி கொள்வர்,

காசு - CASH ஆனது;  கட்டுமரம் - CATTAMARAN; சுருட்டு - CHEEROOT ; கறி - CURRY ஆனது இதில் இன்றுவரை எனக்கு தெரிந்து ஆங்கிலத்தில் மட்டும் 164 மொழிகளில் இருந்து கடவு சொற்கள் இருக்கின்றன. இன்னும் சில வார்த்தைகளை ஏன் இப்படி உச்சரிக்கிறார்கள் என்று விளங்கவே முடியாத அளவிற்கு சிதைத்தே விட்டனர்,  - இந்து சமவெளி நாகரிகர்கள் என்பதைக் குறிக்க HINDOOவாகி அது இன்று HINDUவாக நிற்கிறது. 

இன்னும் இந்த MATTERல வசதிக்கேற்ப விம், சபீனா போட்டு விளக்கினால், இன்றைய தேவாலயங்களில் படிக்கப் படும் திருமண வாசங்களில்( MARRIAGE SERMON ) ஒரு எடுத்துக்காட்டு கிடைக்கும் கிறிஸ்தவ முறை படி மணப்பெண்ணும் மணமகனும் மோதிரம் மாற்றிய பின் அந்த பேராயர் (ஆங்கிலத்தில்) " I NOW PRONOUNCE YOU AS A MAN AND WIFE " என்பார் மீண்டும் படியுங்கள் HUSBAND and WIFE அல்ல MAN and WIFE . HUSBAND என்ற வார்த்தை HUSEBAND  என்ற MIDDLE ENGLISH பழக்கத்தில் இருந்தும், HUSBANDA என்ற OLD ENGLISH பழக்கத்தில் இருந்தும், HUSBONDI - OLD NORSE என்ற ஜெர்மானிய மொழி வழக்கு என்றும் கூறி சமாளித்து வருகிறார்கள்.

மெய்யாலுமே இந்த வார்த்தைகளுக்கு பொருள் மேலாளர் - மேனேஜர் என்ற அடிப்படையில் இருக்கும். அன்றைய கால ஆணாதிக்க சிந்தனை என்று இவற்றை ஒப்புக் கொண்டாலும் இதன் உண்மை இது இரண்டு சமஸ்க்ரித்த வார்த்தைகளின் ஒன்றைந்த பொருள் ஹஸ்த - கை;  பந்தன் - உறவு - பொருள் படும் வார்த்தைகள் HUS BAND`H ஆயின. அட நம்ம தலைவர் படம் " கை கொடுக்கும் கை'தாங்க ".  இந்த வகை வார்த்தைகளை பற்றி பேசுகையில் முதல் பகுதியில் நாம் பேசிய உச்சரிப்பு சுதந்திரம் பற்றிய கருத்தை மறந்து விடக் கூடாது. எழுத்துக்களுக்கு வேண்டிய படி உச்சரிக்கும் சுதந்திரம் வழங்கிய பின்னரும் ஆங்கிலத்தில் போதிய வார்த்தைகள் இன்மையால், இந்த மொழி சென்ற இடத்தில் உள்ள வார்த்தைகளை தனதாக்கும் நிலைக்கு தள்ளப் பட்டது. நாளடைவில் இந்த முறையை நம்பியே ஆங்கிலம் வளரத் தொடங்கி வளர்ச்சி என்ற OPTIMUM நிலை தாண்டி ஆங்கிலம், அழிவை நோக்கி பயணப் படுகிறது என்பது உண்மை.

இந்த தலைப்பில் பகிர்வதற்கு இன்னும் ஒரு பதிவு அளவேனும் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் படிக்கும் நீங்கள்( யாரவது ஒருவர்) வேண்டும் என்று COMMENTs சொல்லும் தருவாயில் அவற்றை பதிய தயாராய் இருக்கிறேன்.

6 comments:

Unknown said...

vendum

Anonymous said...

vendum

hayyram said...

//ஆங்கிலம், அழிவை நோக்கி பயணப் படுகிறது என்பது உண்மை.//

சீக்கிரம் அழிஞ்சா தேவலை. சனியன் இங்க்லீஷ்ல மார்க் வாங்க முடியாமலேயே பலபேர் பத்தாங்கிளாஸைத் தாண்டரதே இல்லை. பலபேர் வாழ்க்கையை பாழடிக்கும் இந்த பாழாப்போன இங்கிலீஷு அழிய என் வாழ்த்துக்கள்.

நல்ல நகைச்சுவை உணர்வுடன் நன்றாக எழுதுகிறீர்கள். இன்னும் பல பதிவுகள் தொடர்ந்தாலும் நன்றாகத்தான் இருக்கும். வார்த்தைகள் பற்றிய சில விஷயங்களை எங்கிருந்து பிடிக்கிறீர்களோ! வெரி குட்.

Karthiga said...

ENGLISH IS A FUNNY LANGUAGE - பகுதி 4 எப்போ போடுவீங்க?

சாமக்கோடங்கி said...

அடங்கொக்கமக்கா...

இவ்ளோ விஷயமா இருக்குதா...

தொடர்ந்து எழுதுங்க ஸ்ரீநிதி.. ஒரு ஜெர்மன் கலீக் எங்கிட்ட கேட்டாங்க.. "சார்" அப்டீன்கர வார்த்தைய இன்னுமா உபயோகப் படுத்துரீங்கன்னு..

எனக்கு அப்ப தான் விவரமே புரிஞ்சுது... ஆனா சின்ன வயசிலிருந்தே கையைக் கட்ட வெச்சு.. யாரைப் பார்த்தாலும் சார் போட வெச்சு அதை ஒரு மரியாதைக் குரிய சொல்லாகவே மாற்றி விட்டார்கள்.. ஐயா என்பது தற்போது பிச்சை எடுக்கக் கூட உபயோகப் படுவதில்லை போலும்..

சார் என்ற சொல்லுக்கான காரணத்தையும் கொஞ்சம் கிழியுங்கள்.. அனைவருக்கும் தெரியட்டும்..

நன்றி..

சாமக்கோடங்கி said...

ஸ்ரீ.. இங்கிலீஷ் பத்திய அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்..

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )