நீங்கள் தேவையான அளவு இந்நேரம் அவதார் படத்தின் கதையை, அதன் கோப்பு, சிறப்பம்சங்கள் பற்றி எல்லாம் படித்திருப்பீர்கள் அனால் இது வேறு ஒரு சிந்தனையை உங்களுக்கு அறிமுகம் செய்யும் ஒரு சிறு முயற்சி
அமெரிக்க மற்றும் சில முதல் நிலை நாடுகள் தங்களுடைய பொருளியில் நோக்குகளுக்காக , வளர்ந்து வரும் நாடுகளுடன் செய்யும் முறைகேடுகள் பற்றிய கருத்துப் பதிவு - - அவதார் ( பெயர் மாற்றம் செய்யப் பெற்ற PROJECT 880 ) திரைப்படம்.
இந்த கதை உறவான காலகட்டத்தை( 12 வருடம் முன்பு ) பார்த்தால் அமெரிக்க உலகப் பெறுநாடுகளின் துணையுடன் அல்லது ஒப்புதலுடன் ஆப்கான், ஈராக் போன்ற நாடுகளிலும் ஆப்ரிக்கா வில் உள்ள சில பகுதிகளிலும் தன்னுடைய உள்ள நோக்குக்காக செய்த வெளி வராத தவறுகளின் பதிவு ஒரு கனிம வளத்துக்காக( எரிநெய் - பெட்ரோல் - மற்றும் ஏனைய கனிமங்கள் ) un obtained – unobatanium ( dictionary பார்க்க ) இன்னொரு நாட்டிற்க்குள் அராய்ச்சி எனும் பெயரில் புகுந்து பின் அங்குள்ள மக்களின் குடயுரிமைக்கு வேட்டு வைக்கும் ஒரு கூட்டம் - இதுதான் அவதாரில் நாம் காணும் காட்சிகள்.
மேற் கூறிய நாடுகளில் இன்று வரை அமெரிக்காவும் துணை சக்திகளும் புகுந்து கொண்டு செய்யும் அழி செயல் எல்லோர்க்கும் வெளிச்சம். அதே போல் அந்த இடங்களில் அராய்ச்சி செய்யும் பேர்வழி என்று இந்த சக்திகள் நடத்தும் ஊடுருவல் பற்றி இந்த திரைப்படம் வெட்டவெளிச்சம் ஆக்குகிறது. இது மட்டுமல்லாமல் அந்த நாடுகளின் கலாச்சார சீரழிவுக்கும் திட்டம் தீட்டும் இந்த கூட்டத்தை வெளிப்படையாக நாம் பார்க்க முடிகிறது
தனக்கு உடன்பாடில்லாமல் இன்றும் ஈராக் போரில் இடுபடுத்த பட்டிருக்கும் போர்விரர்களின் மன நிலை கதாநாயகனின் தினசரி ஒலியுட்டப் பதிவுகள் ( Daily Video recording ) தெள்ள தெளிவாக்கி விடுங்கின்றன
அங்கு சென்று கல்விப் பணி நடத்துவது போன்ற உள்ள நோக்குடைய காட்சிகள் இதில் சொல்லப்படுகிறது . 'நாவிகளில்' ஒருவராக மாறி அவர்களை அடிமை படுத்த நினைப்பது, என்பதெல்லாம் தெளிவாய் இந்த ஊடுருவலை காட்டி இருக்கிறது. அமெரிக்கர்களை விட உடல் வனப்பில் உயரமான ஆப்ரிக்கர்கள்,ஆப்கானியர்கள் இந்த படத்தில் நாவிகள் உடல் கூறு எடுத்துக்காட்டுகள்.
மிகச் சிறப்பாக நாவிகளுக்கு வால் இருப்பது, இந்த மேல் ஆதிக்க சிந்தனைகளின் படி இன்னும் குரங்காய் வாழ்பவர்கள் ஆப்ரிக்கா மக்கள் என்று பொருள் படுகிறது
இந்த சிந்தனைக்கு இன்று நமது தேசமும் விதி விலக்கல்ல. இதற்குத் துணையாக சீனா போன்ற நாடுகள் இருக்கின்றன . எடுத்துக்காட்டாக இந்த திரைபடத்தில் விமானங்கள் எல்லாமே தாங்கி செல்லும் குறி DRAGON - சீனா .
இவர்கள் இறுதிக் காட்சியில் நின்று தாக்கும் விமானமும் DRAGON என்ற பெயருடன்தான் இயங்கும். ஒரு முறை அல்ல இரண்டு முறையும் தாக்க செல்லும் விமானம் முதலில் அதன் குறி DRAGON லிருந்துதான் பதிவு செய்யப் படுகிறது. சும்மா ஒரு 3D பதிவு என்றால் அமெரிக்காவின் சின்னமான கழுகை ( THE ROYAL EAGLE ) தாங்கி வந்திருக்கும் ( மற்ற அமெரிக்க படங்களை பார்க்க. . . . . )
இவ்வாறாக இந்த காரியங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது என்று நேரடியாக கூறாமல் 3D இல் கூறி தன்னுடைய அவதார் மூலம் ஒரு இரட்டுறமொழிதல் பதிவு நடத்தி இருக்கிறார் கமேரோன். இதற்க்கு முன்னர் வந்த 300 திரைப்படத்தின் ரெட்டை அர்த்த பதிவுக்கு இந்தப் படம் ஒரு நல்ல பதில் என்றால் அது மிகை அல்ல
இந்த படத்தில் சரியாக கட்ட படாத முனைகள் பற்றி இன்னொரு பதிவில் சந்திக்கிறேன்
15 comments:
super vikram ..... sariyaana research on movie !!! james cameron told the real in the way of fantasy !!!!
wishes for ur research !
ஹா.. ஹா.. ஹா.. இது கலக்கல்!!! :) :)
எப்பிடியெல்லாம்... மாற்றுப் பார்வை பார்க்கறாங்கப்பா..! உங்க கிட்ட இருந்து ட்யூஷன் எடுத்துக்கனும்!! :)
ஆமா.. இந்த மேட்டர்.. ஜேம்ஸுக்கு தெரியுமா?? :)
நண்பரே, வித்தியாசமான பதிவு, பாராட்டுகள்.
நண்பரே, வித்தியாசமான பதிவு, பாராட்டுகள்.
நண்பரே, வித்தியாசமான பதிவு, பாராட்டுகள்.
:-) . . . மிகச்சரி. உண்மையில், அவங்க ஸ்கூல் பத்தி பேசும்போது, எனக்கு, நம்மள வெள்ளைக்காரன் டிவைட் அண்ட் ரூல் பண்ணானே.. அது நினைவு வந்தது.. :) . . .நல்ல பதிவு..
பி.கு - ஆமா, பாலா கேட்டமாதிரி, இது கேமரூனுக்குத் தெரியுமா? :-)
எப்படி பாஸ்? காமெடியா சீரியஸான்னே தெரியவிடாமலே எழுதுறீங்களே?
நல்ல மாற்றுப்பார்வை...ஏற்கும்படியான கருத்துக்கள் தான்...நன்றி ஸ்ரீநி...
This is a correct review.
Some commenters have mentioned that this is an alternate view. But actually the auther has shown the very correct view by which the global politics to be noticed in Avatar.
Pls also read http://palindia.wordpress.com/2009/12/19/avatar-hollywood-has-taked-a-new-avatar/
சில சமயம் இந்த மாதிரி சிலேடை வந்துடும் ஆனா இது அவங்களுக்கு புரியுறது இல்லைன்றதுதான் கொஞ்சம் இடிக்குது. கதை உருவான காலகட்டத்தில் மட்டுமல்ல படமாய் வெளிவந்த காலத்திலும் இதுதானே நிலைமை.
மாற்று பார்வை அருமை ஸ்ரீநி,
எழுத்துப்பிழைகளை தவிர்த்து எழுதவும், நல்ல சொல்லாடல் உள்ளது
நீங்கள் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியாது.. ஆனால் அதுதான் ஜேம்ஸ் கேமரூனின் நோக்கு என்றால் அவருக்கு எனது கோடி ஆதரவுகள்!!
arumaiyaana padhippu..
அட நம்ம ஆளு!!!!!!
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )