Wednesday, December 16, 2009

இன்றுகூட முடிந்துபோன இலையுதிர் காலம்

காலியாய் கிடந்த
கடற்கரை மணல் நிமிடங்களில்
கால்தடம் பதித்து நடந்துவிட்டாய்.            
                                                               அழியாமல் அடம்பிடிக்கும்
                                                                அவை,   சில நேரங்களில்
                                                                 என் நினைவலைகளை
                                                                     அரித்து விடுகின்றன


நடந்து செல்லும் பொழுகளில்
தடை செய்து போனாய்
என்வரிகளில் நிறுத்தர் குறியீடுகளை             
                                                                  நிறுத்தங்கள் இல்லாத
                                                                 ரயில்வண்டி பயணமாக
                                                                               இன்றும்
                                                              உன் நினைவுக் காட்டாறு

எங்கோ. . . . . என்றோ. . . . . . .
என் உள்ளுயிர் கிணறுகளில்
நின்று கதறிய காதல் கடிதங்கள்
நீ செவிடாய் இருந்தால் கூட
கேட்டிருக்கும்                                   பின்னால் வருபவன்
                                                நானென்பதால் உண்கால்களுக்கு
                                                               உடனே நீ நத்தைகளை
                                                          அறிமுகம் செய்த உண்மை
                                                               எனக்கும் தெரியும்

எதிரில் அமர்ந்து,
ஏதோ இதற்காகவே வந்தவள் போல்,
ஆண் அகலிகையை என்னை
உறைவித்துப் போவாய்                       ஒரு ராமன் கூட
                                                                 அந்த வழியில் வராத
                                                                 நாட்களின் பதிவுகள்
                                                             உனக்கென்ன தெரியும்
நிமிடத்தில் பூக்கும்
குறிஞ்சிப் பூ சிரிப்பில்
எனகென்று நேர்ந்து நீ
உதிர்த்த கொசுறு முத்துக்களை
கோர்காமல் வைத்திருக்கிறேன்                  
                                                    மாற்றானின் உரிமைக் கயிறு
                                                     சுமக்கும் உன் தோள்களுக்கு
                                                  அந்த முத்துமாலைகளை இனி
                                       அணியும் திராணி இல்லை என்பதனால்

நினைவுகளின் நித்திலம் நீ
என் கவிதைகளை எனக்காய்
பிரசவித்தவள் நீ
உன்னை எப்படி வெறுக்க முடியும்


மறந்தும் கூட என்னை
நினைத்து என்றாவது நீ
கண்ணீர் சொறியாதே             இன்றுகூட முடிந்துபோன
                                                             இலையுதிர் காலம்
                                         உன் சாயலில் இன்றும் முளைக்கும்
                                                       என் வார்த்தை இலைகளை
                               உதிர்க்க தவறி விட்டன. - இந்த வருடமும்

4 comments:

அன்புடன் மலிக்கா said...

/மாற்றானின் உரிமைக் கயிறு
சுமக்கும் உன் தோள்களுக்கு
அந்த முத்துமாலைகளை இனி
அணியும் திராணி இல்லை என்பதனால்


நினைவுகளின் நித்திலம் நீ

என் கவிதைகளை எனக்காய்

பிரசவித்தவள் நீ

உன்னை எப்படி வெறுக்க முடியும்/

வரிகளில் வேதனையின் வலி தெறிக்கிறது.
நிஜமோ கவியோ வலி வலிதானே.. மிக்கவும் நன்று..

http://niroodai.blogspost.com

aazhimazhai said...

மறந்தும் கூட என்னை
நினைத்து என்றாவது நீ
கண்ணீர் சொறியாதே

ரொம்ப அருமையா இருக்கு ... ஏனோ தெரியலை படிக்கும் போது மனது கனத்தது !!!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அழகு கவிதை!

அண்ணாமலையான் said...

congrats

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )