Sunday, December 27, 2009

சிற்றின்ப மருத்துவச்சியின் முனங்கள்

அன்றைய முழு இருட்டுக்
காலம் வாழ்கையை
விட்டு விட்டு
என் வயதை சரியாய்
செப்பனிட்டது

ஒரு நாற்றம் பிடித்த
சடங்குடன் பெண்ணென்று
பிரகடனப் பட்டேன்

கழுத்துக்கு கீழ்
கறை ஒதுங்கும் கண்களில்
அப்பன் கண்ணும் ஒரு ஜோடி

மண்ணீரல் விற்றும்
மயக்கம் அருந்தும்
மலங்காட்டு மனிதனவன்

உயிர் முரண்டும்
உடல் செய்ய ஏதுமில்லை
சாராய சிந்தைக்கு
ஊருகையாய் என் உடலளிதான்

சடலத் தீயில்
தீக்குளிக்கும் சீதைப்
பட்டியலில் இன்றெல்லாம்
என் பெயரும்

இருட்டின் முனைபிடித்து வரும்
குருட்டு உயிர்கள்
ஒரு உறைக்குப் பின்னால்
ஒளிந்து உமிழ்ந்து தள்ளும்

கொடுமை மூண்டுவரும்
அழுக்கு மேகங்கள்
சில குட்டை நிமிடத்தில்
அரை மழை பொழிந்து செல்லும்

இன்னும் வலிக்கிறது
மறுப்புடைத்து நுழையும்
கருப்பு உறுப்புகளின்
நெருப்பு நிகழ்வுகள்

செண்பகப் பரப்பில்
கூட்டங்கூட்டமாய் கோடுகள்போடும்
வெட்டாத விரல்களின்
கூரிய முனைகள்

காலிடையில் ஒரு கதகதப்பு
வானம் பார்க்க
சமுதாயம் உமிழ்ந்த
சளைவா சூட்டின் மதமதப்பு
 
பத்தினிகளே நீங்கள் காக்கும்
கற்பு பூதத்தின் உயிர் மந்திரங்கள்
எங்கள் கூடுப்புறாக்களின்
இதயங்களில் காக்கப்படுகின்றன

அமிலம் அரைத்து
வீசும் உங்கள் உடைந்த
பார்வைகளை இழையிடுங்கள்
எங்களுக்கும் பெயர் பெண்தான்

எங்களை அடைப்புக் குறிகளில்
                          மட்டும் திணிக்கும் வரிகளில்
               சுத்தமான சமுகம் - ஒரு சுய இன்பக் கனவுதான்

நண்பர் பேனாமூடியின் ஒரு பதிவில் உயிர்த்த அரக்க வரிகளிவை

9 comments:

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பா... என்னுடைய வலைப்போவின் சுட்டியை கொடுத்ததற்கு நன்றி...

ஞானப்பழம் said...

நல்ல சிந்தனை.. ஆனால் இது விலை மாதர்கள் பற்றிதானே என உறுதிப்படுத்த அவா..

ஸ்ரீநி said...

@ PENAA MOODI
ADHU YEN KADAMAI
@ GNANAPPAZHAM
AAM.. aana avungala appadi azhaippadhil yenakku udanbadu illai

ஞானப்பழம் said...

விலைமாதரை நான் இகழ்வாக நினைப்பதே இல்லை..
இது எப்புடி?

அவர்கள் இல்லாமல் உலகம் இயங்கிவிடுமா என்ன? ஆனால் nam குழுமத்தில் எல்லோருக்கும் கிடைக்கும் உரிமைகளும் சுதந்திரமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் பரிதாபம்..

அ.ஜீவதர்ஷன் said...

இந்த ஏரியாவுக்க நான் வரல.... நான் வரல.....

Mehanathan said...

உன் சிந்தனைக்கு வாழ்த்துகள் நண்பா

Mehanathan said...

வாழ்த்துகள் நண்பா

ஞானப்பழம் said...

இந்த ஏரியாவுக்க நான் வரல.... நான் வரல....///

அதான் சொல்லீட்டார்ல்ல... "அரசியல்ல இதெல்லா சாதாரணமப்பா.."

வால்பையன் said...

நல்லா வந்துருக்கு!

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )