இமயம் குன்றாகும்,
மாறாய் அன்று, கடல் உங்களைக் காணவரும்
எல்லா வரலாறும் சுழியம் ஆகும்
சாதனைகள் எல்லாம் சாம்பலாகும்
சேகரித்த எல்லாமே தீர்ந்து போகும்
எல்லைகள் பொய்த்து போகும்
எல்லோரும் தீர்ந்து போவோம்
பூமி அழியும்
சரியாய் சொல்
பூமி அழிவதாய்த் தகவல் இல்லை
நரக்களிவுகளை, - பூமி
வெட்டித் தீர்க்கும், மென்று செரிக்கும்
மானிடம் அழியும்,
மனிதன் தான் அழிவான்
பூமி பரிணமிக்கும்,
தன்னை புதுபித்துக் கொள்ளும்.
மீண்டும் பசுமையாய்,
சுத்தமாய் தன்னை ஸ்ரிச்டிக்கும்
மீண்டும் சுழலும்
பரிணாம வட்டம்
கால்தடம் இல்லாத பாக்டீரியாக்கள்
கால சுழற்சியை கருத்தரிக்கும்
குரங்குகள் வரை அது நாகரிக்கும்
இது போதுமென்று
பரிணாமம் கனவுகளை
மறுதலிக்கும்
வளர்ச்சிப் பசியில் இந்தமுறை
அஜீரணம் வேண்டாமென்று
அறைவயிற்றிலேயே பந்திமுறிக்கும்
கன்னித்தன்மை அடையாமல்
குட்டைப்பாவாடை நாட்களிலேயே
நிறுத்திகொள்ளும்
மனிதக் கனவு மட்டும்
மறந்தும் காணாது
8 comments:
நல்லா இருக்கு தல ...
//வளர்ச்சிப் பசியில் இந்தமுறை
அஜீரணம் வேண்டாமென்று
அறைவயிற்றிலேயே பந்திமுறிக்கும் //
அற்புதம் நண்பா ஆழமான பதிவு
//உண்மையிலேய உலகம் அழிகிறதா ??//
ஆம்... இயற்கைப் பேரிடர், போர் போன்ற உருவங்களில்... :(
hey climax'la nethi adi ponga..
/எல்லா வரலாறும் சுழியம் ஆகும்//
சுழியம் என்றால் என்ன? அது தமிழின் எத்தனையாவது எழுத்து ?
உங்களை சோதிக்க அல்ல இந்த கேள்வி, நான் அறிந்தது சரியா என்று என்னை சோதித்து பார்க்கவே.
நல்லா எழுதியிருக்கறீங்க.... வாழ்த்துக்கள்..........
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............
ரொம்ப நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்...
""அஜீரணம் வேண்டாமென்று
அறைவயிற்றிலேயே பந்திமுறிக்கும்...""
நல்லா எழுதி இருக்குறீங்க. இன்னைக்கு தான் முதல் தடவயாக உங்க பிளாக் வர்றேன். ரீடெர்லா ஆட் பண்ணிட்டேன். இனிமே அடிக்கடி சந்திப்போம்.
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )