Thursday, December 31, 2009

நாத்திகம், பகுத்தறிவு, - போலிகள் ஜாக்கிரதை [ பகுதி - 1 ]

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


என்னுள்ளும் எனக்கு வெளியிலும் இயற்கையாக, இயக்க சக்தியாக, உண்மையாக, உறுதுணையாக இருக்கும் கடவுளை வணங்கி இந்த பதிப்பை துவங்குகிறேன். இந்த பதிப்புக்கு முழு தலைப்பென்றால் அது நாத்திகம், நாத்திகர்கள், பகுத்தறிவு, பகுத்தறிவுவாதிகள், கடவுள், நம்பிக்கை, Communism, கட்டுடைத்தல், இன்று, போலிகள், இன்ன பிற என்பது மட்டும்தான்.
மேல் குறிப்பிடப் பட்ட கடவுள் என்னும் சக்தி கோயிலுக்குள் இல்லை. இதை வணங்கும் சடங்குகளில் உடன்பாடு இல்லாமை நாத்திகம் என்பதாம். இது தவறா ? இந்த சிந்தனை திராவிடம் சார்ந்ததா? இதக்கு பதில் இல்லை. -  இது கடுவுளுக்கோ, அவனை வணங்குபவர்கு எதிரானது கூட இல்லை. தீ என்னும் கடவுள் சுடும் என்பது சொல்லப் படுகையில் அதை சோதித்துப் பார்க்கும் தன்மை நாத்திகம். 
கடவுள் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள் நாத்திகர்கள் என்றால், அதில் நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்கள் இன்று கோயிலுக்குள் உண்டு ( அதிகம் ) என்பது இன்றைய சூழ்நிலை. கடவுள் என்பதில் நம்பிக்கை இருந்திருந்தால் கோயில் கருவறைக்குள் அந்த காமுகன் ஒரு இழி செயலை செய்திருக்க மாட்டான். அவனை நாத்திகர்களோடு ஒப்பிடுவது கூட மடமையே. நிலையும் இடமும் புரியாமல் தன்னுடைய உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தவனை நாய் என்பேன், அதனினும் கீழ் அற்றினை. இதில் கடவுளையும், அதன் நம்பிக்கையை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தம், மடாதிபதிகள், குருக்கள் முதல் சரக்கு அடித்து விட்டு சாமி ஆடும் பெண்கள் வரை அனைவரும் அடங்குவர்.
நன்மை தீமைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கருத்தும், நிலைப்பாடும் நாத்திகம். நம்பிக்கை உள்ளவன் தேடும் பொருளை இல்லை என்று மறுத்து விட்டு அந்த தேடலை செய்யும் இன்னொரு சாரர் நாத்திகரென்றால் அது மிகை அல்ல.
இன்றைய சூழலில் நாத்திகம் தேடல் என்ற நிலையிலிருந்து வழுவிழந்து ஒரு அவநம்பிக்கையாக, ஒரு வகுப்புவாத சிந்தனையாக, குறிப்பாக வெறும் தொழ்பொருள் ஆராய்ச்சியாக கிடக்கிறது . என்னுடைய நண்பன் கொஞ்சம் கோவக்காரர், வாழ்கை போராட்டங்களில் வ்ரக்தியின் காரணமாக தன்னுடைய போராடும் துணிவோடு, கடவுள் நம்பிக்கையும் கை விட்டார். இன்னொரு பெண் தொடர் போராட்டங்களுக்கு இடையில் தன்னுடைய கணவனை இழந்தார் கடவுள் இல்லையென்று வீட்டில் உள்ள எல்லா சாமி படங்களையும் எரித்தார். இருவருமே தன்னை நாத்திகர்கள் என்று அடையாளப் படுத்துகின்றனர். இவர்கள் நாத்திகர்கள் இல்லை - அவ நம்பிக்கையாளர்கள். 
இப்படி பட்ட அவநம்பிக்கயாலர்களம், மற்றும் ஒரு வகுப்பினரையோ , ஒரே வகுப்பினரையோ எதிர்த்து திராவிட கழகத்தில் சேர்ந்தவர்கள் அதிகம், அது மட்டுமில்லாத அரசியலை உட்காரனியாய் வைத்து சேர்ந்தவர்கள் அதிகமென்பதை, தி. மு. க தெளிவாக பறைசாற்றியது.  இன்று சட்டப் பேரவையில் பெரியாரின் சில நல்ல சிந்தனைகளை அடகு வைக்கும் நிலைக்கு தி. கா தள்ளப்பட்டதற்கு இவர்கள்தான் காரணம். தன்னை மற்றவர்களை விட தனி என்று காட்டிக் கொள்வதற்காக, சமகாலத்துடன் தான் உடன்படாதவன் என்பது போன்ற மாய தோற்றத்தில் (SHAKESPEARE தன்னுடைய ALL THE WORLD IS STAGE கவிதையில் கூறும் )  BUBBLE REPUTATION - ஒரு தற்காலிக புரட்டான புகழுக்குகாக, ஒரு இருத்தல் இயலுக்குகாக, நொடிந்த தமிழில் வெட்டி பந்தாவுக்காக தன்னை நாத்திகரென்று சொல்லி கொள்வது 50களின் ஆரம்பத்திலிறிந்து BLOGகிலக்கணம் வரை நமது சகிப்புத் தன்மையை தினமும் அதிகரிக்கிறது.

சமுகத்தில் மண்டிக் கிடக்கும் மூடன்களை சுட்டிகாட்டுவது, சீர்திருத்துவது அவசியம் என்று தந்தை பெரியார் கூறினார், இன்று அவர் இருந்திருந்தால் முதலில் சுத்தம் செய்யப் பட வேண்டிய இடமாக தனது கழகமும் கட்சியாகிப் போன அவலத்தில் வருந்துவார். ஒரு வகுப்புவாத சிந்தயாலர்களின் கூடாரமாக இருப்பதைக் கண்டு நிச்சயமாக மனமுடைவார். சமுக நல்லினக்கத்திர்க்காக நெய்த நல்ல ஆடையை இந்த போலிகள் சுயநலத்திற்கு அணிவதை வன்மையாக கண்டிப்பார்.
இன்றைய கூற்றின் படி நீ நாத்திகனா அப்படியானால் அந்தணர்களை மட்டும் திட்டு, அவர்களின் சடங்குகளை மட்டும் சாடு, அவர்களின் அடையாளங்களை எதிர். ஏனென்றால் மொத்த சமுதாயத்தில் இந்த நம்பிக்கை அடிப்படையில் உள்ளவர்களை பற்றி பேசுகையில் எதிர்பதற்கு ஆல் இல்லை இன்னொன்று தனது சட்டசபை கனவுகளில் எந்த பாதிப்பும் இருக்கப் போவதில்லை அது தி. மு. க அல்லது ஆ, தி, மு க வாக இருந்தாலும் சரி.
இந்த போலிகள் பற்றியும், பகுத்தறிவு, அதற்க்கும் இவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்.
இந்த பதிவு உங்களை சுட்டுவது போல் தெரிந்தால் ஆம் இது உங்களைப் பற்றிதான் கீழே பின்னூடங்கள் போட்டு உங்கள் பெயர்களை பதிவு செய்வது தங்களின் முடிவு. அவற்றில் நாகரிக குறைவிருப்பின் அவற்றை வெளியிடும் முடிவு என்னுடையது. முதுகெலும்பு (பெயர்) இல்லாதவர்கள் முதலில் தைரியம் தேடுங்கள்.

19 comments:

Anonymous said...

நான் முதுகெலும்பில்லாதவன். தைரியம் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் பின்னூட்டம் போடுகிறேன்.

Sundaralakshmi said...

Iniya putthaandu Nalvaazhthukkal

Unnudaya varum paghuthikalukku vaazhthukkal.

Indha paghudi naathigam patri ennudaya comments onnum illai - Yenaendral naan naathigavadhi illai. Aanal naathigam patri sonna unnudaya padhippu nandragavae ullathu.

Chitha said...

உங்கள் கோபம் நியாயமானதே. நாத்திகன் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதத்தையும், இனத்தையும் மட்டும் குறிப்பிட்டு தாக்குவது முட்டாள்தனம். என்னை பொறுத்தவரையில் கடவுள் என்பது விவாதிக்க கூடாத விசயம். அது அவரவர் அனுபவத்தை பொருத்தது.

Chithambaram

Chitha said...

உங்கள் கோபம் நியாயமானதே. நாத்திகன் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதத்தையும், இனத்தையும் மட்டும் குறிப்பிட்டு தாக்குவது முட்டாள்தனம். என்னை பொறுத்தவரையில் கடவுள் என்பது விவாதிக்க கூடாத விசயம். அது அவரவர் அனுபவத்தை பொருத்தது.

Thamizhan said...

இன்றைய போராட்டம் நாத்திகம்-ஆத்திகம்-நாத்திக எதிர்ப்பு என்பதல்ல!
மனித நேயத்திற்கும்- சுய நலத்திற்கும் நடக்கும் போராட்டம்.தமிழகத்தில் மட்டுமல்ல.உலகெங்கும் இது நடக்கின்றது.சுய நலம் வென்று கொண்டுள்ளது தான் அப்பட்டம்.
ஆத்திகம் ,பக்தி எல்லாம் அப்பட்டமான சுய நலமாகி விட்டது.பணம் பறிக்கும் திருட்டுத் தொழில் பகல் கொள்ளையாகி விட்டது.
காந்தியார் (நான் மகாத்மாவைச் சொல்கின்றேன்) சொன்னதையும், ஏன் நேரு சொன்னவற்றையும் எந்தக் காங்கிரசுக்காரன் கேட்கின்றான.
பெருந்தலைவர் காமராசரிடம் பயின்றவர்களுக்கும் இன்றைய தமிழகக் காங்கிரசிற்கும் சம்பந்தம் உண்டா?
அறிஞர் அண்ணா தன் குடும்பத்திற்கு என்ன விட்டுச் சென்றார்?
இன்றும் பெரியார் தொண்டர்கள்தான் அவர்களது பணத்தைச் செலவழித்துப் பொது வாழ்வில் ஈடு படுகின்றனர்.
காஞ்சி சங்கராச்சாரி மீட்டெடுப்பும்,தேவநாதன் படலமும் பக்திமான்களிடம் என்ன செய்தி சொல்கிறது?பெண்கள் கல்லூரிகளில் அழைத்துப் பிறந்தநாள் விழா எடுக்கும் நாடகம் நடக்கின்றதே.

ந்ம்முடைய வாழ்வில் நாம் எப்படியிருக்கின்றோம் என்று நாம் நம்மையேக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
மக்கள் மன்றங்கள் ஊர் தோறும் ஆரம்பித்து அங்கே மக்கள் கலந்துறையாடிப்,படித்துப் பேசி,ஆடிப் பாடி,குழந்தைகள் நிகழ்ச்சிகள் நடத்தி,வாழ்வில் முன்னேறும் வழிகள் ஆங்காங்கே காண வேண்டும்.
மனித நேயம் பெருகி சுய நலம் குறைய வழிமுறைகள் உண்மை மகிழ்ச்சியை அனைவர்க்கும் தரும்.
எங்கள் ஊரிலே சிறிய அளவிலே நடத்திய திருக்குறள் போட்டியும்,மருத்துவ முகாமும் தந்த மனமகிழ்ச்சிக்கும், நிறைவிற்கும் ஈடு இல்லை.
இதைச் செய்து உணர்ந்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.
தொடரட்டும் ஆக்க பூர்வம், குறையட்டும் சுய நலம்.

geethappriyan said...

அருமை நண்பரே
இன மத ஜாதி வெறி களைவோம்,அனைவரிடமும் நட்பு வளர்ப்போம்,கருத்து சுதந்திரம் அடுத்தவரை புண்படுத்தாமல் பேணிக்காப்போம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

kanchipura paarpaan vaazhga, antha karuvaraiyil oosiyil padam paartha kadavul vaazhka.....

ungal matham vaazhga .....

கோவி.கண்ணன் said...

தேவநாதன் செயல்களினால் மனம் வெறுத்தவர் போல நாய் பேய் அதிலும் கீழானவன் என்று சொல்வதால் அவன் பார்பான் இல்லை என்பதை சுலமாக மறுத்துவிடாலாம் என்கிற கட்டுமானத்தை ஆத்திக நாத்திக விவாதம் போல் எழுதி இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்டுரையின் மையக்கருத்தாக பகுத்தறிவாளர்கள் அல்லது நாத்திகர்கள் என்பவர்கள் பார்பனர்களை தூற்றுவதாக எழுதி இருக்கிறீர்கள். ஞானி போன்ற எழுத்தாளார்கள், கமல் போன்ற நடிகர்கள் இன்னும் ஏனையோரின் நாத்திக சிந்தனையாளர்கள் யாருக்கும் பார்பனர்கள் எதிரிகிடையாது. நாத்திகம் பார்பனர்களுக்கு எதிரானது என்பது உங்கள் ஊகமாகத்தான் எடுத்துக் கொள்கிறது, பகத்சிங் போன்ற நாத்திகர்கள் பார்பனர்களுக்கு எதிரி கிடையாது. தமிழ்நாட்டைத் தாண்டி அல்லது உலகளாவிய நாத்திகத்திற்கும் தி.கவும், பார்பனர்களுக்கும் தொடர்புகள் கிடையாது. நாத்திகம் என்பதன் தேவை தன்னால் ஏற்படும் ஒன்று தான். மதவாதம் சாதியம் கடவுள் பெயரால் கட்டமைக்கப்பட்டு பலர் அதனால் பாதிக்கப்படும் போது மதவாதம், சாதியம் ஆகியவற்றை கடவுள் ஆதரிப்பதாகச் சொல்வதால் அப்படி கட்டமைக்கப்படுவதை மறுப்பதே நாத்திகம். கடவுள் "நம்பிக்கை" என்பது பல்வேறு கட்டுமானங்கள் தானே. எது உண்மை என்று எவருக்குமே தெரியாதபோது மறுப்பவரும் ஏற்பவரும் அதை ஏன் செய்கிறார்கள் என்று ஆராய்ந்தால் அதன் சமூக நோக்குகள் தெரியவரும். மேம்போக்காக, பக்க சார்பாகப் பார்த்தால் எதிர்தரப்பு தவறு செய்கிறது என்று குற்றச்சாட்டை போகிற போக்கில் எவரும் சொல்லிவிட முடியும். உங்கள் கட்டுரை ஆத்திக அபிமானம் மற்றும் நாத்திக வெறுப்பு கொண்ட எந்த ஒருவரின் பொது புத்தியும் எப்படி இருக்கும் என்பதன் வெளிப்பாடு தான்.

shaan said...

நண்பர் கோவி.கண்ணன் அவர்களுக்கு,

நீங்கள் சொல்வது பாதி உண்மையானாலும் கட்டுரையாளர் தமிழகத்தில் உலவும் நாத்திகத்தைப் பற்றியே எழுதியிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விட்டு மறுப்பு எழுதியிருக்கிறீர்கள். மேலை நாடுகளிலும் இந்தியாவிலும் கூட சில நாத்திகர்கள் அதை தங்கள் நம்பிக்கையாகவே கொண்டிருக்கிறார்களே தவிர பிறரை கேலி செய்யவோ அவமானப்படுத்தவோ நசுக்கவோ பயன்படுத்துவதில்லை.ஆனால் தமிழ் நாட்டில் நாத்திகம் என்பது இன்று இந்து மத பார்ப்பன எதிர்ப்புக் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா? நாத்திகம் பேசுபவர்கள் அதை தங்களுடைய நம்பிக்கையாக வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை நசுக்குவதற்கு பயன்படுத்தக்கூடாது. பூணூல் அறுப்பவர்களுக்கும் சாதியம் பேசுபவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? பூணூல் அறுப்பது ஒரு புனிதச் செயல், பெரியாருக்கு சிலை வைத்து மாலையிடுவது ஒரு பகுத்தறிவுச் செயல், ஆனால் பிள்ளையார் சிலைக்கு மாலையணிவித்து பூசை செய்தால் அது அறிவீனம். இதுதான் தமிழகத்து நாத்திகம். திருமூலரது திருமந்திரத்தை எடுத்து படித்துப் பார்த்தால் தெரியும் அதில் எத்தனை முற்போக்கு மற்றும் சாதி மத எதிர்ப்புக் கருத்துக்கள் உள்ளன எனபது. அதுவும் ஒரு இந்து மத நூல் தான். அதெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? ஆதிசங்கரர், கடவுள் என்பதே நீ தான் உன்னை உணர்ந்தாலே நீ முக்தி அடையலாம் என்று கூறியுள்ளார், இது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? சாதியத்தை ஊக்குவிக்கும் இந்துமத நூல்களைப் பற்றி தெரிந்த உங்களுக்கு சாதிக்கு எதிராக உள்ள நூல்களை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதானே நியாயம்?

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே"

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலர்;
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர்;
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்,
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.""

"உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே."

(கடவுள் உள்ளத்தின் உள்ளேயும் இருக்கிறான்; புறத்தேயும் இருக்கிறான் என்று நம்புகிறவர்களுக்கு அவன் உள்ளத்தின் உள்ளும் இருக்கிறான்; புறத்திலும் நிறைந்து நிற்கிறான். இறைவன் என்ற ஒன்று உள்ளத்திலும் கிடையாது, புறத்திலும் கிடையாது என இறை மறுப்புக் கொள்கை கொண்டவர்களுக்கு இறைவன் உள்ளத்திலும் இல்லை; புறத்திலும் இல்லை)
- திருமூலரின் திருமந்திரம்

"சிதானந்த ரூபம் சிவோகம் சிவோகம்"
(ஞான வடிவான சிவம் நான், சிவம் நான்)
- ஆதிசங்கரரின் ஆத்மபோதம்

கோவி.கண்ணன் said...

//"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே"
//

கேட்க எல்லாமும் நன்றாகவே இருக்கும், சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்று திருவள்ளுவர் மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்.

எல்லோரும் ஒன்றே என்று கூறினார் திருமூலர் என்று கூறுகிறீர்கள், ஆனால் எல்லோரும் ஒன்றென்றால் அந்தணன் என்பவன் எங்கிருந்து வந்தான் ?

அந்தணர் ஒழுக்கம் என்ற பிரிவில் திருமூலர் எழுதியது, கீழ்க்கண்டது,

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண் சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண் சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

அந்தணர் என்பவர்கள் பூணூலும் உச்சிக்குடுமியும் வைத்திருப்பார்களாம். எல்லோரும் ஒன்றே, ஒன்றே குலம் என்று சொல்லும் திருமூலருக்கு அந்தணர் என்போர் மேலான(குலம்) என்று சொல்ல வேண்டியதன் தேவை என்ன ?

ஒன்றே குலத்தில் அந்தணர் குலம் என்பது அதிலெதிலும் சேராத தனிக்குலமா ?

திருமூலரை நீங்கள் மெச்சிக் கொள்ளலாம் நான் தவறு என்று சொல்லமாட்டேன், ஆனால் அதை அளவு கோளாக்கிக் கொள்ள வேண்டும் என்று என்னை நீங்கள் வற்புறுத்த முடியாது ஏனெனில் நான் திருமூலரின் யோக்கிதையையும் அவரது திருமந்திரத்தில் இருந்தே படித்து தெரிந்து கொண்டவன்.

Anonymous said...

Backboneless anonymous writes..

Shan

Thirumoolar speaks about One God. But that God is none but Sivan to him. All his look inside tc. is in the context of his God only.

Similarly, Sankarar's, If God is one and he is inside you, etc. then why did he write only Baja Govindam, Lalitha etc.

Therefore, the so-called அதில் எத்தனை முற்போக்கு மற்றும் சாதி மத எதிர்ப்புக் கருத்துக்கள் உள்ளன எனபது books were written by men whose intention was to propogate their God only.

If I am correct, why not Hindus like you accept One God and there is no other God principle of Islam?

You wont.

Religion is politics. Thirumoolar, Sankarar were religio-politicians and they use different and subtle ways to propogate their religion.

கோவி.கண்ணன் said...

//சாதியத்தை ஊக்குவிக்கும் இந்துமத நூல்களைப் பற்றி தெரிந்த உங்களுக்கு சாதிக்கு எதிராக உள்ள நூல்களை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதானே நியாயம்?
//

நீங்கள் சுட்டிக்காட்டிய அதே திருமந்திரம் தான் அந்தணராக அறிவித்துக் கொள்ளும் சாதி பற்றிய சிறப்புகளைக் கூறும் பாடலையும் அமைத்துள்ளது,

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண் சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண் சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

உங்களுக்கு திருமந்திரத்தின் பாசிடிவ் பக்கங்கள் மட்டுமே தெரிந்திருந்தால் நான் என்ன செய்ய முடியும்

Unknown said...

நண்பா..,
//மேல் குறிப்பிடப் பட்ட கடவுள் என்னும் சக்தி கோயிலுக்குள் இல்லை. இதை வணங்கும் சடங்குகளில் உடன்பாடு இல்லாமை நாத்திகம் //

மேல் குறிப்பிடப் பட்ட கடவுள் என்று ஏதும் இல்லை. இதை வணங்கும் சடங்குகளில் உடன்பாடு இல்லாமை நாத்திகம் இதுவே சரி...

கடவுளின் பெயரால் ஏமாற்றுபவர்கள் எப்படி ஆத்திகர்கள் இல்லையோ...அப்படியே வோட்டுக்காக கொள்கைகளை அடகு வைப்பவர்கள் நாத்திகர்கள் இல்லை...

vijayan said...

naathigamum poli suya mariyadhaiyum pesiyadhal than 67kku mun thundu beedi porikiyavan ellam asiyaavin top 10-il vandhuvittaargal.VIZZY.

shaan said...

பிராமணர்கள் நூலும் குடுமியும் வைத்திருப்பார்கள் என்பது திருமூலர் சொல்லிதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இல்லை. அந்த திருமந்திரத்தின் உண்மையான விளக்கம் இது தான் -
"நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ" - பூணூலும் குடுமியும் பிரமமென விளக்கப்படலாமோ?
"நூலது கார்ப்பாச நுண் சிகை கேசமாம்" - நூலானது பருத்தி, குடுமியோ வெறும் கேசம்
"நூலது வேதாந்தம் நுண் சிகை ஞானமாம்" - நூலானது வேதாந்தத்தையும் குடுமியானது ஞானத்தையும் குறிக்கவே
"நூலுடை அந்தணர் காணும் நுவலிலே" - என்று நூலணிந்த அந்தணர் விளக்குவர்.

இது கீழ்கண்ட உவமைக்கு ஒப்பானது.
தமிழ்நாட்டு பகுத்தறிவுவாதிகள் ஏன் கருப்புச்சட்டை அணிகிறார்கள்? கருப்புச்சட்டை உயர்வானது என்றா? பகுத்தறிவுவாதிகளைக் கேட்டால் சமூகத்தில் உள்ள ஏற்றதாழ்வுகள் நீக்கப்படும் வரை அதற்கு எதிர்ப்பைக் காட்டவும் சுயமரியாதையின் சின்னமாகவும் என்று கூறுவர்.

நீங்கள் திருமூலரின் யோக்கியதையைப் பற்றி தெரிந்துக் கொண்ட உத்தமராக இருக்கலாம். ஆனால் தமிழகம் 50 வருடகாலமாக நாத்திகம் பேசிக் கொண்டு முடிவில் மஞ்சள் துண்டு அணியும் பகுத்தறிவுப் பகல்வர்களையும், பெரியாரின் நூல்களை வைத்து காசு பார்ப்பது நீயா நானா என நீதிமன்றம் வரை செல்லும் சுயமரியாதைச் செல்வங்களையும் நிறையவே பார்த்தாகிவிட்டது.

அனாமதேய அன்பருக்கு,
You are saying that they were politicians, but it is the atheists of TN who are really in politics today. By talking atheism they have become one of the richest in Asia. You are saying that they were propagating their religion. What is the difference between them propagating their religion and atheists propagating their religion(atheism)?
Before 50 years it may have been easier for atheists to attack other religions saying that they are power hungry and evil, but today after being in power since 1967, they are in a glass house.

Finally, as Thirumoolar said it is up to the individual to believe in God or not. Atheists were always there throughout the history of India and they will always be there, but atheism cannot be used as a cover to attack a particular religion or community. I finish it here, this is an endless fruitless debate because neither I am going to accept your ideology nor you are going to accept my ideology. This is what is called 'Matham' - sticking to ideology.

அ.ஜீவதர்ஷன் said...

ஆத்திகனா நாத்திகனா என்பதல்ல முக்கியம் , ஒவ்வொருவரும் நாம் நல்ல மனிதனா என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். மற்றும் இது ஒருவரின் நம்பிக்கை சம்பத்தப்பட்ட விடயம் இதனை பற்றி நான் அதிகம் கூற விரும்பவில்லை, இருந்தாலும் உங்களது மனதில் உங்கள் எண்ணத்தை எழுதுவதில் தப்பேதும் இல்லை, ஆனால் நண்பனாக சொல்கிறேன் தயவுசெய்து முடியுமானவரை உணர்வுகளை காயப்படுத்தாமல் எழுதப்பாருங்கள். இது உங்களிடம் நான் வைக்கும் சிறிய வேண்டுகோள்

வால்பையன் said...

எல்லா மதத்தையும் ,கடவுளையும் எதிர்ப்பது என்ன பெயரில் சேர்க்கலாம்! புது பேர் வையுங்க!

hayyram said...

//எல்லா மதத்தையும் ,கடவுளையும் எதிர்ப்பது என்ன பெயரில் சேர்க்கலாம்! புது பேர் வையுங்க//

நாத்திக மதம். இல்லன்னா பெரியார் மதம், இல்லன்னா பெரியார் மார்கம், இப்படி ஏதாவது வெச்சி அந்த நாயக்கரை கும்பிட வேண்டியது தானே!

hayyram said...

//சுய நலம் வென்று கொண்டுள்ளது தான் அப்பட்டம்.//

ஓ, கருணாநிதியைச் சொல்றீங்களா?

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )