Sunday, December 13, 2009

அது ஆரோவா ????? அஞ்சலியா




நிச்சயமாக இந்த வருடத்தில் வந்த திரைப்படங்களில் அருமையான படம் என்ற இலக்கணங்கள் பா ( ஹிந்தி ) க்கு உண்டு.
அமிதாப்பை காண முடியாத அளுவுக்கு கதை நயம், ஒப்பனை,
மெருகேறிய அபிஷேக் இன் நடிப்பு,
காட்சியின் அழுத்தங்களில் தொய்ந்து விடாத பால்கியின் இயக்கம்,
Old wine in a new Bottle என்றாலும் இன்றும் கேட்க தமிழ் போல் அழகாய் இசயராஜ,



சுட்டிடத் தேர்வுகள், பி.சி யின் காட்சிக்கோப்பு என்று முழுக்க முழுக்க பணம் வசூல்.



ஆணால் இந்த ஆரோவுக்குள் எங்கோ நமது அஞ்சலி ஒளிந்திருப்பது போல் ஒரு நெருடல். ஒப்பிடுகையில்
1. அஞ்சலி ஆரோ இருவருமே மனக்கோளாறு உள்ள பிள்ளைகள்
2. அஞ்சலியின் மனவளர்ச்சி குறைவு, = ஆரோவின் மனவளர்ச்சி அவனுடைய வளர்ச்சியை விட அதிகம்.
3. அஞ்சலி தன்னுடைய கடைசி நாட்கள் வரை தாய்க்கு
தெரியாமல் தந்தையால் வளர்க்க படுகிறாள் = ஆரோ தன்னுடைய கடைசி நாட்கள் வரை தந்தைக்கு தெரியாமல் தாயால் வளர்க்கப் படுகிறான்
4. இரண்டு கதை காலங்களும் பிள்ளைகளின் இறுதி நாட்களைப் பற்றியும்,
5. மிக குறைவாய் மருத்துவ ரீதியாக அணுகிய திரைப் படங்களாம்
6. பி. சி + இசயராஜ
7. தாய், தந்தைக்கு இடையே நெருடலான பிரச்சனைகள்

இப்படி சில இடங்களில் ஆரோவுக்குள் எங்கோ அஞ்சலி ஒளிந்திருப்பது போல் எனக்கு ஒரு மாயை

நீங்க என்ன சொல்றீங்க ????


ஜொள்ளன் : ஏம்பா இது ரெண்டுலயும் அம்மாக்கள் டக்கர் அத விட்டுட்ட ........

6 comments:

Anonymous said...

yes ur comparisons are right.........anyway amithab rocks in the movie...

Anonymous said...

hey tat was really a superb description
go ahead rock on !!!! :)

கருந்தேள் கண்ணாயிரம் said...

எனக்குமே இந்த எண்ணம், படம் பார்க்கும்போது வந்தது. ஆனால், அது ஒரு தற்செயல் என்றும் நாம் அனுமானிக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஒரு கனமான திரைப்படம் எடுக்க நேர்ந்தால், அதில் இவ்வாறுதான் காட்சிகள் வர வேண்டும் என்ற சர்வதேச இலக்கணம் ஒன்று உண்டு. மணிரத்னத்தின் படங்கள், அந்த சர்வதேச இலக்கண விதிகள் இம்மிகூட பிசகாமல் எடுக்கப்படுவன. இப்பொழுது, இந்த திரைக்கதை அமைப்பை, பல இயக்குநர்கள் இங்கும் நல்ல முறையில் உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர். அந்தப்படி பார்த்தால், இதைப்போல் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை வைத்து எடுக்கப்படும் ஒரு படத்தில், சில காட்சிகள், வேறு படங்களோடு ஒத்துப்போவது , எதிர்பார்க்கத்தக்கது தான்.

உங்கள் பதிவு நல்ல முயற்சி. தொடருங்கள். வாழ்த்துகள்.

Cable சங்கர் said...

உங்கள் ரிலேட்டிவிட்டி சரிதான். ஆனால் இம்மாதிரியான படங்களூக்கு சில டெம்ப்ளேட் திரைகதைகள்தான் பொருந்தும். அதனால் அதையெல்லாம் பெரிசு ப்டுத்தப்படாது..

இந்த வேர்ட் வெரிபிகேஷனை தூக்கிருங்க..

kalisudhan sakthibala said...

nice comparison. but, i have to wait for the pirated dvd to come to my place.

அ.ஜீவதர்ஷன் said...

நீங்கள் சொல்வதுபோல பல இடங்களில் ஒத்துப்போயிருக்கலாம் ஆனால் அஞ்சலியாக ஒருசிறுமி நடித்திருப்பார், ஆனால் ஆரோவாக அமிதாப் நடித்திருப்பார், இது பெரிய விடயம் தானே ?

படத்தையும் தாண்டி அமிதாப் போற்றப்படவேண்டியவர்தானே?

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )